திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பட்டுப்பூச்சியாக .

அதி தொலைவை நோக்கிய கண்கள் எதுவும் காணாமல் .எவ்வளவு நேரம் ,தூரம் இப்படியே என கணக்கிட என் குடுவையை முடிந்த அளவு திருகப்பட்ட நிலையில் .எப்பக்கத்திலிருந்தும் எனக்கான பதில் ஒலி இல்லாத சூனியத்தில் .என்னால் எதையும் யூகிக்க முடியவில்லை .இனி ஒன்றும் இல்லை, நாம் நமக்கான ஒதுக்கீட்டில் இருப்பது என்ற நிலையில் ...
என்னை மட்டும் விட்டுவிட்டு எப்படி எல்லோரும் என் குடுவைமொழிக்கு அப்பாற்பட்ட தூரத்திற்கு சென்றுவிட்டனர் ? .அப்படியெனில் என் குடுவைமொழிக்கான சமன்பாடு தீர்வு காணப்பட்டு விட்டதா ?.எப்படியிருந்தாலும் எங்கோ ஓரிடத்திற்கு சென்றிருக்க வேண்டும் அது மற்றவர்களா , நானா? . இங்கு எப்படி ஒதுக்கப்பட்டேன் அல்லது ஒதுங்கியிருக்கின்றேன் ? .குடுவை
வரைமுறையினின்று அவர்கள் விலகியவர்களாகவே இருக்கவேண்டும் .இன்னிலையில் எம் இருப்பிடத்திற்கான அபாயம் இன்னும் சில காலத்திற்கு தென்படாவிட்டாலும் அவை கண்ணில் படும் கணத்தினின்று அழிவு நிச்சயிக்கப்பட்டுவிடலாம் .அதற்காக , முன்னேற்பாடாக ,அனைவரும் வேறு
இடம் நோக்கி பயணப்பட்டுவிட்டனரா? .என்னால் மட்டும் ஏன் முடியவில்லை? மற்றவர்களைப்போல ஓடிவிட ? மனம் வராதது எதனால் , தனிமை கவ்வும் இக்கணம் வரை ? .
ஆபத்து ,ஆபத்து என பீதியுடன் அவர்கள் கூறும்பொழுது நான் மட்டும் பைத்தியக்காரத்தனம் என கூறியதான நினைவிலிருந்து போக உத்தேசித்தேன் .இருப்பினும் அவ்வாறு கூறியதற்கு எனது இயலாமையும் அதில் உண்டு .எனது மூதாதையர்கள் எமக்கு அதிக தூரம் பயணப்படும்படி எதையும் செய்யவில்லை என்பதுவே முழு உண்மை .எப்படி அவர்கள் மற்றவர்கள் போலில்லாமல் இப்படி ஒரு ஒன்றுக்கும் ஆகாத வழிமுறைகளை தங்களின் ஜீன்களுக்கு பழக்கப்படுத்தினர் என தெரியவில்லை.
தூரத்தே தெரியும் ஒரு உரு ஆங்காங்கே அமர்ந்து அமர்ந்து மெதுவாகவந்துகொண்டிருக்கிறது .அதன் நகர்வு மட்டும் மிகவும் மெதுவாக மெதுவாக நளினமான .மிக நீண்ட தேடலுக்குப்பின் என் கண்ணில் படும் கணம் வரை எனக்குள் எரிமலை என்னை எரித்துக்கொண்டு .
ஓ , மலர்களில் அமர்ந்து அமர்த்து அது . உடனே நான் எனது தோட்டத்தை என் அருகில் அமைத்துக்கொண்டேன் ஆயிரம் கோடி மலர்களுடன் .அதன் பாதையில் என் தோட்டமிருந்தால் அது என் அருகில் வரும் என்ற நம்பிக்கையில் .அதனை என் கண்கள் உருப்பெருக்கிக்கொண்டிருந்தன .அது என்னவாக இருக்கும் என என்னால் உறுதியாக யூகிக்கமுடியவில்லை .அது மட்டும் எனக்கு இப்பொழுது ஆதரவாக இருந்தாலும் அதன் இயக்கம் மட்டும் மிகவும் அதிசயமாகவும் ,அதிர்ச்சியாகவும் இருந்தது .ஒருவேளை என் அழிவிற்கு நெருங்கிவரும் ஆபத்தாக நினைத்த மாத்திரம் இதயம் அதிகம் துடிப்பதாக குடுவையினின்று ஒளி வந்தது.கட்டுப்படுத்த கட்டளையிட்டுவிட்டு எனது மூதாதையர்களின் பழம்பெரும் பொருளங்காடிக்குச்சென்றேன் .

அவ்வுருவைப்பற்றி ஏதாவது சிறிய சமிக்சை கிடைக்கின்றதா என்பதே எனது இப்பொழுதைய வேலை .அவ்வுருவின் பிம்பத்தை எனது மூதாதையரின் நிகழ் பிம்பத்தில் பதித்துவிட்டு அதுபற்றிய விவரங்கள் கேட்டேன் .ஆரம்பத்தில் அதன் பெயர் வண்ண ஒலி வடிவத்திலிருந்து இருக்கின்றது என்ற உண்மை எனக்குப்பட்டது .ஒலி வடிவத்திலும் அதற்கு பிறகு வந்தவர்கள் ஒளி வடிவத்திலும் ,வரிவடிவத்திலும் எழுதிச்சென்றிருக்கின்றனர் .அப்படியென்றால் அவ்வுரு ஒரு ஆதி கால உரு . அதனால் நமக்கு ஆபத்தில்லை .

நமது மூதாதையர்கள் அதைப்பற்றி நல்ல விசயங்களே கூறிவிட்டிருக்கின்றனர்
.ஆனால்,மூதாதையர்களின் நிகழ் பதிவேட்டில் விலங்குகள்,பறவைகள் பற்றி மட்டுமே அதிகப்படியாக இருந்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது . எனது வளர்ச்சிக்கும் என் போன்ற என்பிறரின் வளர்ச்சிக்கும் உள்ள அதீத வித்தியாசம் பற்றி இப்பொழுது எனக்கு அதிகமாக கவலை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஏன் எனது மூதாதையர்கள் மட்டும் பிறர் போல் இல்லாமல் தாங்கள் மட்டும் தனிப்பாணியில் பயணம் செய்திருக்கின்றனர் ? .
எது எப்படி இருப்பினும் என் கண்களுக்கு மட்டும் அவர்கள் அளித்த தொலைதூரம் பார்க்கும் சக்திமட்டும் ஏதோ ஒன்றை இனம் காண உதவியிருக்கின்றது. அதனுடன் எப்படியும் தொடர்புகொள்ளவேண்டும் என எண்ணி அதன் இயங்கும் பக்கம் எனது பார்வையை அதிகம் கூர்மையாக்கினேன் .

சரி,அது நம் இனம் அல்ல .நம்மை தொந்தரவு செய்யும் இனம் இல்லை .பயப்படத்தேவையில்லை என்றிருந்த நிலையில் அட அருகில் வந்துவிட்டது .அழகாக தனது இறக்கைகளை விரித்து விரித்து பூவிற்குள் பூவாய் தாவி எதையோ நினைத்தபடி என்னை நோக்கி .எனது குடுவை தோல்வியை கொடுத்த பொழுதும் அதன் தொடர்பு பாதை இறக்கையை அசைப்பதில் இருக்கலாம் என என் மனம் சொல்லியது .தவறு செய்துவிட்டோம் அதன் பெயரை தெரித்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே ? அதற்குள் அருகில் வந்துவிட்டதே .
மெல்லிய இழைகள் பிரித்து, அழகிய மலர்களின் அடியினின்று ,மெல்லமெல்ல கைகளை விரித்து, செவ்வாய் கிரகத்தினின்று கொட்டப்படும் மஞ்சள் மக்குகளை கடக்க ,புவியினை தாண்ட, சன்னல் ஒளியின் வழியே பயணப்பட ,எத்தனிக்கும் ஏதுமற்ற எனக்கு, துணை பட்டுப்பூச்சியாக அது .நான் யார் ,அது என்ன என அறிய .

.

.

.
Download As PDF

9 கருத்துகள் :

Unknown சொன்னது…

அற்புதமான நடையுடன் வித்தியாசமான பார்வையில் பட்டுப்பூச்சி...

ரோகிணிசிவா சொன்னது…

alagha irukunga unga varnanai ,thodarungal

பனித்துளி சங்கர் சொன்னது…

கவித்துவமான எழுத்து நடையில் சிறந்த புனைவு அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

மதுரை சரவணன் சொன்னது…

//.அதன் பாதையில் என் தோட்டமிருந்தால் அது என் அருகில் வரும் என்ற நம்பிக்கையில் .அதனை என் கண்கள் உருப்பெருக்கிக்கொண்டிருந்தன//


எப்படி ஒரு நடை ..நல்ல புனைவு..வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

குடுவை மொழிக்குள் கூடு கட்டி கவிதையாய்ப் பட்டுப்பூச்சிகள்.மெருதுவாய் மிக மிக அழகு.

சௌந்தர் சொன்னது…

கட்டுரை..... கவிதையாக....பட்டுப்பூச்சி....

தேவன் மாயம் சொன்னது…

அசத்துகிறீர்களே!நல்ல கட்டுரை!

சசிகுமார் சொன்னது…

கலக்கிட்ட நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
கே.ஆர்.பி.செந்தில்@
ரோகிணிசிவா@
பனித்துளி சங்கர் @
மதுரை சரவணன்@
ஹேமா@
சௌந்தர் @
தேவன் மாயம் @
சசிகுமார் @
sweatha அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "