குன்னுமாயம்
என்ன ஒரு அடர்வான வார்த்தை .
எனது வழக்கறிஞர் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது
அவர் தான் இதனை எனக்கு முதன்முறையாக உச்சரித்துக்காட்டினார் .
என் மனைவியிடம் 'குன்னுமாயம்' என்றால் என்னனு கேட்டேன் .
அவர் சரியான அர்த்தத்தைச்சொன்னத்தோடு
இது காளிங்கரையான் பாசனப்பகுதியில் பேசப்படும் வார்த்தை என்று கூறியதினின்று எனக்கு இது வட்டார வழக்குச்சொல் என்றும் அதுவும் குறுகிய பகுதியில் மட்டும் பேசப்படும் சொல் என்றும் அறிந்துகொண்டேன் .
உன்னுடைய குன்னுமாயம் எல்லாம் தெரியும் ? என்று இயல்பாக பேசுவார்களாம் இப்பகுதி கிராமத்தினர் .
கிராமத்து மக்களுக்கு குறைந்த சொற்களே தெரியும்.
அதனால் ,அதில் அடர்த்தியான அர்த்தங்களும் ,அதிக உள்ளீடுகளையும் வைத்து பொருள்கொள்ளுதல் வேண்டப்படுவதாக உள்ளது .
அப்படித்தான் இதுவும் .
இவ்வார்த்தைக்கு அர்த்தம் .
நல்லவன் போல் நடிக்கும் காரியவாதி .
நடிப்பு ,நெளிவு ,பல்லிளிப்பு ,பாசாங்கு ,மற்றும் இவற்றின் மூலம் பிறரை ஏமாற்றுபவன் .
சுயநலவாதி ,ஆனால் அதிக பொது நல அக்கரைவாதியாக காட்டிக்கொள்ளுபவன் .
இப்படி பல அர்த்தங்கள் நீண்டுகொண்டே செல்கிறது .
குசலம்
இதுவும் அதிகமாக கிராமத்தினரால் பேசப்படும் சொல் .
அகராதிகள் நலம் என பொருள்கூறினாலும் .
ஒருவரைப்பற்றி பிறரிடம் குறைகூறிவதை இவ்வாறு அழைக்கின்றனர் கிராமத்தில் .
இவ்வாறு பல வார்த்தைகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளன .
உ.வே.சா போல முடியாவிட்டாலும் ,
நம்மால் முடிந்தவரை சேகரித்து பாதுகாப்போமே .
பதிவுலகிற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் .
இங்க அதிகம் பயன்படும் என நினைக்கின்றேன் ,சரியா ?
. Download As PDF
Tweet |
|
13 கருத்துகள் :
குசலம் கேள்வி பட்டு இருக்கேன், குன்னுமாயம் இப்பதான் கேள்வி படுறேன். பகிர்வுக்கு நன்றி பாஸ்
வட்டாரவழக்கை உபயோகிப்பதும், அதில் எழுதுவதும் எனக்கு ப்ரியமான விஷயங்கள்... எங்கள் கீழத்தஞ்சையில் புழங்கும் பழமொழிகளை என் பதிவில் பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை எனக்கு கொஞ்ச நாளாகவே அதிகமாக இருக்கிறது... நல்ல பதிவு... நல்ல நோக்கம்... நல்ல தூண்டுதல்!
என் தாத்தா தமிழ்நாட்டவர்.குன்னுமாயம் ,குசலம் என் தாத்தா பேசக் கேட்டிருக்கிறேன்.ஆனால் என்னவென்று அறிந்துகொண்டேன்.நன்றி.
puthiya varththai.
அன்பின் நண்டு
வட்டார வழக்கில் உள்ள சொற்களை - அழியும் முன் ஆவணப்படுத்துதல் நன்று - ந்ல்ல செயல். செய்க
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
கொங்கு வட்டார வழக்கு அகராதி என்ற புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னமே வெளி வந்து விட்டது நண்பா.
நம் எழுத்துக்களிலும் பேச்சிலும் நாம் பயன்படுத்துவதில்லை.
கிராமத்தான் என்ற பெயர் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில் தான் நாம் அவற்றை தவிர்த்து வருகிறோம்.
ஏனுங்......வாங்க....போயிட்டு வாரனுங்....இப்படி எல்லா வார்த்தைகளின் இறுதியிலும் மரியாதைக்குரிய ”ங்க” என்ற எழுத்துக்களைச் சேர்த்து பேசுவது கொங்கு மரபு. அதையே நாம் மறந்து போய்விட்டோம்.
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பா
குசலம் விசாரிக்கிறது... இன்னும் நெறய இடங்களில் பயன்பாட்டில் உள்ளது.
குன்னுமாயம் - புதிதாகக் கேள்விப் படுகிறேன்.
நன்றி.
//இங்க அதிகம் பயன்படும் என நினைக்கின்றேன் ,சரியா ?
//
மிகச் சரி
நல்ல பதிவு நண்டு
குன்னு மயம்....புதிய வார்த்தை பாஸ்.....! வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
அருண் பிரசாத் @
விந்தைமனிதன் @
ஹேமா @
வானம்பாடிகள் @
cheena (சீனா) @
arutchudar @
Jey @
VELU.G @
dheva @
பிரியமுடன் பிரபு
அவர்களே
மிக்க நன்றி.
IN MADURAI AREA KUNNU MAYAM PRONOUNCED AS MAAIMAALAM OR MAYAA JALAM
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
krishnamoorthy s p
அவர்களே
மிக்க நன்றி.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "