செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழில் தமிழர்கள் கற்றது

நொரண்டு  :
''எனக்குத்தெரிந்து தமிழில் ஒன்னும் இல்லை '' என என் நண்பன் சொன்னான் ...

நண்டு : எதுக்கு இதப்பேசினிங்க ...

நொரண்டு  :ஏன்?

நண்டு : அப்பத்தான் அதுக்குத்தகுந்த விளக்கம் கொடுக்க முடியும் .

நொரண்டு  : தமிழ் மொழியின் சிறப்பு பத்தி நான் சொன்னதுக்கு ...அறிவார்ந்த விசயங்கள் தமிழில் இல்லை,அறிவை தமிழ் பிரதிபலிக்கவில்லை . தமிழில் அறிவியல் பார்வையில்லை ....

நண்டு : அப்படியில்லை , உண்மையும் அதுவல்ல . அப்படி ஆக்கப்பட்டு விட்டது பக்தி இயக்கங்களால் . தமிழ் மொழியே பக்தி இயக்கமாக ஆக்கிவிடப்பட்டுவிட்டபடியால் . அப்படி ஒரு மொழி பக்தி இயக்கமாகும் பொழுது அந்த மொழியில் பக்திப்பரவசம் மட்டுமே இருக்கும் .

நொரண்டு  : அப்படியா ?

நண்டு : இதைத்தான் வள்ளுவர்

> அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
> பிறவாழி நீந்தல் அரிது.

என்றார் .

நொரண்டு  :அப்படினா?

நண்டு :
''அறவாழி அந்தணன் என்பவனால் பிறவாழி நீந்தல் முடியாது
அவன்தாள் சேராமல் ''


நொரண்டு  : புரியல ...

நண்டு : அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால்  அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .


நொரண்டு  : இதிலிருந்து அவர் கூறும் செய்தி .

நண்டு : பிறவற்றையும் கற்கவேண்டும் .


நொரண்டு  : ஓ,
தமிழன் தமிழை இப்படித்தான் கற்றானா?. மற்றவற்றை கற்காமல் .


நண்டு : இப்படித்தான் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது .

நொரண்டு  : இப்பத்தான் எல்லாத்தையும் கற்கின்றானோ? .


நண்டு : இது   ஆங்கிலேயர்கள்    தந்தது .

நொரண்டு :  ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு...

நண்டு : அதனால் தான் ஆங்கிலத்தின் மீது தமிழனுக்கு அவ்வளவு ஆர்வம் .

நொரண்டு : ஆங்கிலேயர்கள் நமக்கு உருவாக்கிய கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறைனு சொல்றாங்களே ...

நண்டு :
இப்பவும் அப்படித்தான் கற்றுவருகின்றான் தமிழன் தமிழை .


நொரண்டு : அதனால் ?

நண்டு :நாம் உருவாக்குவோம் அறிஞர்கள்  கல்வி முறையை தமிழில்  .







.





.




. Download As PDF

8 கருத்துகள் :

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால் அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .
-----------

:) சரியே.

-------------


நாம் உருவாக்குவோம் அறிஞர்கள் கல்வி முறையை தமிழில் .

----------

எப்படி?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தொடருங்கள் ...

Chitra சொன்னது…

நாம் உருவாக்குவோம் அறிஞர்கள் கல்வி முறையை தமிழில் .

....அறிஞர்கள் கல்வி முறையை, நாம் தமிழில் உருவாக்குவோம்.
:-)

சௌந்தர் சொன்னது…

நொரண்டு : ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு...////

ஆமா ஆமா அறிவுப்பசி....!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு ,குறளுக்குப் புதுப் புதுப் பொருள் விளக்கம் கொடுப்பது சரியாகுமா ? கால காலமாக பல்வேறு உரை ஆசிரியர்கள் எழுதிய உரைகளைப் புறந்தள்ளி - புது உரை - எழுதுவது சரியா ? சிந்திக்க வேண்டும் நண்டு - அந்தணன் என்பவன் பார்ப்பனன் அல்ல - குற்றமற்றவன் என்வனே பொருள் - பிறவித் துன்பத்தில் இருந்து வெளியேற - விடுபட - ஆண்டவர்களை நம்பையவர்களைத் தவிர மற்றவர்களால் முடியாதென்பதே இக்குறளின் பொருள் - இங்கு கல்வி கற்பதோ - கற்பிக்கப்படுவதோ பேசப்படவே இல்லை. அந்தணர்கள் அற்க்கருத்துகளைப் போதிப்பது பற்றி இக்குறள் பேசவே இல்லை. நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//cheena (சீனா) said.. அந்தணன் என்பவன் பார்ப்பனன் அல்ல//
நான் அப்படி இங்கு எங்கும் கூறவில்லை .
அந்த பொருளிலும் கையாளவில்லை .
அப்படியிருக்க ,இங்கு பார்ப்பனர் எங்கு வந்தனர் ஐயா ?
புரியவில்லை .
குற்றமற்றவன் ??? .

Jeyamaran சொன்னது…

***/பிறவற்றையும் கற்கவேண்டும் ./****

hmmmm ithu nalla thagaval
kadaisila இப்பவும் அப்படித்தான் கற்றுவருகின்றான் தமிழன் தமிழை .

ithu than toppana thagaval

Jerry Eshananda சொன்னது…

ஜான் மெக்காலே வீசிய சுருக்கு கயிற்றில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "