வெள்ளி, 19 நவம்பர், 2010

நீ ஏன் கவிதை எழுதுகின்றாய் ?



நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க

ஊறு செய்யும்
மரப்பதரை
உணர்ச்சியூட்ட

காயம்பட்ட
கண்ணிமைகளுக்கு
களிம்பாக

உதிர்ந்த
உயர் வித்துகளுக்கு
உரமாக

குருதியில் துடிக்கும்
இனமானத்திற்கு
தோள் கொடுக்க

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெரிய

நான்
எழுதுகின்றேன்  கவிதை

நான்
எழுதுகின்றேன்  கவிதை

இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்

இது நமக்கான
எழுத்தன்று
நம் எழுத்து

என
எழுச்சி யூட்ட

நான்
கவிதை எழுதுகின்றேன்

நான்
கவிதை எழுதுகின்றேன்








. Download As PDF

12 கருத்துகள் :

சௌந்தர் சொன்னது…

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?/////

விடுங்க நான் தெரியாம எழுதிட்டேன்..... :)

nis சொன்னது…

///இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்///


super

VELU.G சொன்னது…

very nice நண்பரே

Jeyamaran சொன்னது…

*/நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?/*

anna soundar sonna mathiri naanum theriyamal eluthiten mannichirunga

பித்தனின் வாக்கு சொன்னது…

அட கவிதை என்பது இதுதானா, சரிங்க, நல்லா எழுதுங்க. அப்பவாது யாருக்காது எதாவது உரைக்கின்றதா பார்ப்ப்போம்.
நல்ல நடை, உணர்வுகளை கொட்டும் இயல்பு. நன்றி.

நிலாமதி சொன்னது…

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெரிய.....

........நான்
கவிதை எழுதுகின்றேன்..........

....super

ஹேமா சொன்னது…

ஏதோ ஒரு காரணம் இருக்கும் கட்டாயமா !

பத்மா சொன்னது…

சரிங்க

Chittoor Murugesan சொன்னது…

//வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க//

வீழ்த்திட்டானுவளே.. வீழ்த்திட்டானுவளே

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

மிகச் சரியான காரணங்கள்....நீங்கள் கவிதை எழுதுவதற்கு. வாழ்த்துக்கள்......நிறைய எழுத,

அ.சின்னதுரை சொன்னது…

super

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "