திங்கள், 13 டிசம்பர், 2010

புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா ? .


வரலாற்றில் என்றும் புறக்கணிக்கப்பட்டதாகவே தமிழனின் அனைத்து நிகழ்வுகளும் இருந்துவந்துள்ளன.இன்றும் கூட தமிழன் தன் அடையாளங்களை கண்டு பதிந்து தெளிவுகொள்ளாமல் ,ஏதோ யாருக்கோ ,எதுக்கோ எதுவும் நடந்துமுடிந்தது போல கண்டும்காணாததுமாய் வாய்கிழிய  பேசிவருகிறான் .இனி ஒவ்வொன்றின் தன்மையையும் உண்மையையும் பதிந்து இனிவரும் சந்ததிக்கோனும் உருப்படியான வரலாற்றைக்கொடுக்கும் முயற்சியாக வேலூரிலிருந்து ஆரம்பிக்கின்றேன் .

நான் இதனை புலிக்கொடிகளின் விடுதலைப்போர் எனக்கொள்கிறேன் .அதற்கு காரணம் வெற்றிபெற்ற தமிழ்வேங்கைகள் வேலூரில் புலிக்கோடியேற்றி தங்களின் வெற்றியை அறிவித்ததுவே .

இந்தியவின் வரலாற்றுப்பக்கங்களில் மறுக்கப்பட்ட பல தமிழரின் போராட்டங்களில் வேலூர் புரட்சியும் ஒன்று .

ஆங்கிலேயர்களுக்கு முதன்முதலாக மிகப்பெரிய பாடத்தை கற்பித்த நிகழ்வு இது .

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒன்றுமையான இருப்பது கண்டு தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டதற்கு அட்சாரமான சம்பவம் இது .

இது நடந்தது 1806 ஜூலை 10 .இதற்குப்பிறகு தான் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ல் நடந்தது .


இது நடந்ததற்கான காரணம் .சுருக்கமாக ,இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு  “தோலினால் செய்யப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்களுக்கும் மற்றும் திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகளை இந்து சிப்பாய்களுக்கும்,அனைவரும் மார்பில் சிலுவை போன்ற ஒன்றை தொங்கவிடவேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.இது சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது மட்டும் காரணம் அல்ல என்றாலும் ஆங்கிலேய தரப்பால் இதுவே கூறப்பட்டது .

வெகுண்ட சிப்பாய்கள் பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட தீர்மானித்தனர் .திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.அதனால் அங்கிருந்து ஆரம்பிப்பதுடன் அவர்களை மீட்டதாகவும் அமையும் என்பதால்  வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக தேர்வானது .

அதனால் 1806 ஜூலை மாதம் 9 ஆம் தேதி  அங்கு நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் புரட்சிப் படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் தேதி காலை 2 மணிக்கு ஆரம்பமானது  தாக்குதல் .வலுவான இந்தியச் சிப்பாய்களினால்  மூன்றே மணிநேரத்தில் வேலூர் கோட்டை மீட்கப்பட்டது .ஆங்கிலேய தளபதிகள் கொல்லப்பட்டனர் .அங்கிருந்த வெள்ளையர்களில் 100 க்கும் அதிகமானேர் கொல்லப்பட்டனர்.திப்புவின் புலிக்கொடியை வெற்றியாளர்கள் வேலூர் கோட்டையில் ஏற்றினர் .

மிகவும் கடினமான அமைப்பாக திப்புவின் குடும்பத்தினர் வைக்கப்பட்டிருந்த இடம் அமைக்கப்பட்டிருந்ததால் அவர்களை மீட்பதில் கவனமாக புரட்சியாளர்கள் இருந்தனர் .அதற்கு நீண்ட நேரமும் ஆயிற்று .அதோடு ஆங்கிலேயர்கள் திருப்பித் தாக்கலாம் ஆதலால்  திப்புவின் குடும்பத்தினரை விடுவித்த உடன் கோட்டையைவிட்டு உடனே வெளியேற்றவேண்டும் என்ற  எண்ணத்தினால் கோட்டையின் கதவை தாழிடாவில்லை .

ஆற்காட்டிலிருந்து வந்த ரோந்து படையினர் கோட்டையில்  புலிக்கொடி கண்டு அதிர்ந்தனர் . பின் குதிரைப்படையுடன் மதியம் வத்து கோட்டைக்குள் திறந்திருந்த கதவின் வழியாக புகுந்து கோட்டையை கைப்பற்றியது .இதில் சுமார் 3000க்கும் மேலான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர் .பிடிபட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
புரட்சியை தூண்டியதாகக்கூறி திப்புவின் வாரிசுகளை கல்கத்தாவிற்கு இடம் மாற்றியது .
கல்கத்தாவில் திப்புவின் வாரிசுகள் இன்று வறுமையில் வாடுகின்றனர் .

சரி இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா ?  என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும் .சிலர் இது தோல்வியில் முடிந்தது என்று கூறுவதுடன் அதற்காக கூறும் காரணங்கள் தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .முதலாவது தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படவில்லை.இரண்டாவது கோட்டை கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த கஜானாவை உடைத்த சிப்பாய்கள் அதிலிருந்த பொருட்களை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பது .இரண்டும் தவறு திட்டமிடே நடத்தப்பட்டதால் எளிதில் சில மணி நேரத்தில் கோட்டையை மீட்டனர் .ஆனால் ஆங்கிலேயர்கள் பெரிய படையுடன் வந்து நீண்ட நேரம் போராடியே பெற்றனர் . கஜானாவை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பதுவெல்லாம் பொய் ஆங்கிலேயர்கள் இந்த புரட்சியை கொள்ளை என அரசியாருக்கு தெரிவுத்து  புரட்சியாளர்களை கேவலமாக சித்தரித்ததுடன் .கஜானாவில் இருந்ததை இங்கிருந்த ஆங்கிலேயர்களே பங்கிட்டு பகிர்ந்துகொண்டார்கள் என்பதுவே உண்மை .

இது நடந்து 51 ஆண்டுகள் கழித்து 1857ல்  நடந்த இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சிக்கும் இதே காரணம் சற்று வித்தியாசமாக கூறினர் ஆங்கிலேயர்கள் .

வேலூர் புரட்சியில் பங்குபெற்ற யாவரும் இன்றுவரை நினைத்துப்பார்க்கப்படவில்லை . இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி 1857 க்கு கொடுக்கப்பட்ட அளவு அங்கீகாரம் இதற்கு கொடுக்கப்படவில்லை .

வேலூர் புரட்சியின் நாயகர்களான ஷேக் காசிம், சுபேதார் ஷேக் காதம் ,ஜமேதார் ஷேக் ஹூசைன்  ஆகியோருக்கு உரிய மரியாதை  இதுவரை கொடுக்கப்படவில்லை .  அவர்கள் யாரேன்றே பலருக்குத்தெரியாது .  என்ன சொல்ல ?.

இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர்  இட்ட கனலும் மெல்லமெல்ல ஆங்கிலேயன் வெல்லமுடியாதவன் அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயன் மேல் இருந்த பயத்தை போக்கச்செய்து விடுதலைப்போராட்டத்தில்  மக்களை பயமின்றி ஈடுபடவைத்தது .

அதனால் நாம் இன்று மகிழ்வாக இருக்கின்றோம் .அனைத்தையும் பெற்று .அனைத்தையும் மறந்து .ஆனந்தமாக .







. Download As PDF

17 கருத்துகள் :

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

வேலூர் புரட்சியின் நாயகர்களான ஷேக் காசிம், சுபேதார் ஷேக் காதம் ,ஜமேதார் ஷேக் ஹூசைன் ஆகியோருக்கு உரிய மரியாதை இதுவரை கொடுக்கப்படவில்லை . அவர்கள் யாரேன்றே பலருக்குத்தெரியாது .//

ஆம். புது தகவல்தான்..:(

nis சொன்னது…

நல்ல வரலாற்று தகவலை அறிய முடிந்ததது

தமிழ்போராளி சொன்னது…

அறியாத சில தகவல்களை அறிய வைத்த தோழமைக்கு நன்றி..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:))

cheena (சீனா) சொன்னது…

வரலாறு - படிக்க வேண்டும் - அப்பொழுது தான் முழுவதும் புரியும். இது போல வரலாற்றினை பற்றிய சிறு சிறு தகவல்கள் படித்தல மட்டும் போதாது. மென் மேலும் அதன் விளைவுகளையும் ஆதாரங்களையும் ஆராய வேண்டும். நன்று நண்டு நல்வாழ்த்துகள்

sakthi சொன்னது…

வரலாற்று பதிவு ::))

நன்று தொடருங்கள்

hiuhiuw சொன்னது…

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது '!!!!!

Arun Prasath சொன்னது…

சிப்பாய் கழகம் பத்தி தெரியும், ஆரம்பிச்ச இடம் இங்க தான்ன்னு தெரியும்... ஆனா இவ்ளோ தகவல் தெரியாது... மிக்க நன்றி சார்

மாணவன் சொன்னது…

வரலாற்றுத் தகவல்களை தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சார்
இன்னும் பல வரலாற்றுத் தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சார்..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

மாணவன் சொன்னது…

//'ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது '//

அருமை அருமை
முற்றிலும் உண்மையான கருத்து

தொடருங்கள்....

செல்வா சொன்னது…

உண்மையான கருத்து அண்ணா .!

Unknown சொன்னது…

நன்றாக உள்ளது.

தேவன் மாயம் சொன்னது…

வேலூர் புரட்சியின் நாயகர்களான ஷேக் காசிம், சுபேதார் ஷேக் காதம் ,ஜமேதார் ஷேக் ஹூசைன் ஆகியோருக்கு உரிய மரியாதை இதுவரை கொடுக்கப்படவில்லை . அவர்கள் யாரேன்றே பலருக்குத்தெரியாது . என்ன சொல்ல ?.//

நாம் வரலாறு தெரியாதவர்களாக இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை!

ஹேமா சொன்னது…

புதிதான் ஒரு தகவல்.நன்றி.
இன்னும் விளக்கமாகத் தொடருங்கள்.

vidya pathi சொன்னது…

நண்பரே இது நமது அடிப்படையில் உள்ள பிரச்சனை நாம் நமக்குள் ஒருவனை நம்புவதில்லை நம்மில் ஒருவனை பிறர் அடையலாம் காட்டும் வரை அவனை அங்கிகரிபதில்லை. நம் நமது வளர்ப்பில் வுள்ளது பிரச்னை நாம் நமது குழந்தைகளை அவர்களது சுயசிந்தனையில் வளர்பதிலை நாம் ஜாதியில் மதத்தில் இடத்தால் பிரிந்து கிடக்கின்றோம் நீ எந்த மதமாக இருந்தாலும் நீ தமிழனாக தான் பர்க்கபடுகிறாய் சகோதரா ..........!சொந்த நிலத்தில் இருந்து விரட்ட பட்ட யூத இனம் எப்படி ஒற்றுமையால் வென்றது என்பது கண்டு நாம் படிக்க வேண்டும். ஏன் அவளவு தூரம் போவானேன் நம் பாக்குது வீட்டுகாரன் மலையாளிகளை கண்டு படியுங்கள். யூதன் எந்த தேசத்தில் இருந்தாலும் தன்னை ஒரு யூதன் என்றே சொல்லுவான் என்று தமிழன் தன் நிலையை அறிகிறானோ அப்போது தான் தழைப்பான்..........................!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

ceekee சொன்னது…

The Thamizh people are hardly conscious of their history or common heritage and civilization. Contra, they are divided amongst themselves on all the pretexts in the world including caste, religion, place of birth etc. They are also misled into believing they are "Indians" and "Srilankans". No such category exists. The history of the Thamizhs remains largely undocumented and wantonly kept dark.The supine indifference and scant respect of the Archeological Departments and the Central Government of India towards new and fresh research in Thamizh Nadu has to be experienced to be believed ( e.g.Poompuhar).
This article is wake up call to all Thamizhs to learn more about their history and to learn lessons from it. This is also an invitation to all scholars, teachers and Professors of History and Archeology including Thamizh-speaking ones to take an active interest in bringing to light the history of Thamizhs.
The Tiger flag,like Phoenix, will resurrect itself soon ...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "