பாபா ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரப்போராட்டத்தை போலீஸ் அராஜகத்தின் மூலம் கலைத்தது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும் .இது ஜனநாயகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகமாகும்.இது இன்று காந்திய தேசத்தில் காந்திய போராட்டத்திற்கு செய்யப்பட்ட கருக்கலைப்பு ஆகும் .
உண்ணாவிரதத்திற்கு அனுமதிவாங்கவில்லை என்று இப்பொழுது கூறுவது முற்றிலும் உண்மையை மறைக்கும் செயலாகும்.அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பதை அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தி வந்ததையும்,அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது என்பதையும் உலகம் நன்கறியும்.அப்படியிருக்க யோகா செய்யத்தான் அனுமதி வாங்கினார்,ஆனால் அதனை விடுத்து உண்ணாவிரதம் இருந்தார் என்று காதில் பூசுற்றும் வேலையை அரசு செய்கிறது. மக்கள் என்ன மடையர்களா?.
எது எப்படி இருப்பினும்,நம் சுதந்திர நாட்டில் ஒரு காந்திய போராட்டத்தை நிலைகுலையச்செய்ததன் மூலம் உலக அரங்கில் நம் இந்தியாவிற்கும் ,காந்தியத்திற்கும் மிகப்பெரிய தலைகுனிவையும் ,அவமரியாதையையும் அரசு ஏற்படுத்திவிட்டது.
காந்திய போராட்டத்தை மதிக்காத அரசின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதில் நாம் பகுத்தறிவுடன் ஆன்மீகம்,அரசியல் பார்க்காது நாட்டின் நலன் கருதி பாபா மீது என்றில்லாமல் ஒரு அறப்போராட்டத்தின் மீது மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான இந்த நடவடிக்கைக்கு நமது எதிர்ப்பை பதிவு செய்வோம்.ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக.ஜனநாயகத்தை மேம்படுத்த.
நான் எனது கடுமையான கண்டனத்தை இதன் மூலம் பதிவு செய்கிறேன்.
.
Tweet |
|
14 கருத்துகள் :
நக்லசைட் மாதிரி யாரயாவது போட்டு தள்ளினால்தான், இந்த அரசாங்க பயலுங்க வழிக்கு வருவானுங்க போலும்......
ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டிய அரசு இயந்திரமே ஊழல்களை,கறுப்பு பணத்தை பாதுகாப்பேன் என்று அடம் பிடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மத்தியிலும் காங்கிரஸ் ஊத்திக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
//மிகவும் கண்டிக்கத்தக்க செயல்//
பாபா திருவோடை மட்டும் சொத்தாக கொண்ட துறவி அல்ல.இவர் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகளாம்.ஊழல் குறித்து பேச தகுதியே இல்லாதவர். இவரை ஏதோ உலக மகா உத்தமர்போல் சிலர் மக்கள் மனதில் திணிக்க முயலுகிறார்கள்.இவர்கள் விளம்பரதுக்கு அலையும் கையாலாகாத காகித புலிகள்.
சாத்வி ரிதம்ப்ரா என்ற காந்தியவாதி!க்கு அங்கு என்ன வேலை.
நானும் தொலைக்காட்சில் பார்த்தேன். ரொம்ப அராஜகம் தான்..
அஹிம்சையை அடக்கும் ஒரு உத்தி தான் இது.....
இப்போதைய ஊழலுக்கு எதிரான புது ஹீரோ பாபா ராம் தேவ் குறித்து அறிவோம்:
1965ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் பிறந்த பாபா ராம்தேவ், உள்ளூர் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். பின்னர் சமஸ்கிருதத்தையும் யோகாவையும் கற்றுக் கொண்டார்.
"ராம் தேவின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் இருக்கிறது" என்று ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. இதனாலே மேதாபட்கர் போன்ற சமூகப் போராளிகள் இவரின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆஸ்தா தொலைக்காட்சியில் தோன்றி யோகா பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கியதால் பிரபலம் அடையத் தொடங்கினார். தொலைக்காட்சியில் தோன்றிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே, பதஞ்சலி யோக பீடம் என்ற பெயரில் டிரஸ்டு ஒன்றை ஏற்படுத்தினார். 2006ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராக இருந்த பைரோன் சிங் செகாவத் இந்த டிரஸ்டின் கட்டடத்தை ஹரித்வாரில் திறந்து வைத்தார்.
பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரி, பதஞ்சலி சிகித்சாலாயா, யோக் கிராம், கோ-சாலா, பதஞ்சலி ஹெர்பல் பொட்டானிகல் கார்டன், ஆர்கானிக் அக்ரிகல்சுரல் ஃபார்ம், பதஞ்சலி ஃபுட் அண்ட் ஹெர்பால் பார்க் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பாபா ராம்தேவின் நிறுவனங்களில் சில.
இவ்வளவு கோடிக்கணக்கான சொத்துக்களை மிகக் குறுகிய காலத்தில் சேர்த்துக்கொண்டுள்ள பாபா ராம் தேவ், இப்போது உண்ணாவிரதம் இருக்கப்போகும் அரங்கிற்கான செலவு மட்டுமே 18 கோடியைக் கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 18 கோடி பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? அது வருமான வரி கட்டப்பட்ட தொகையா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வார் யாருமில்லை!
"ராம் தேவின் பின்னணியில் ஆர் எஸ் எஸ் இருக்கிறது" என்று ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. இதனாலே மேதாபட்கர் போன்ற சமூகப் போராளிகள் இவரின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.
பாபா ராம்தேவின் கோரிக்கைகளில் ஒன்று, "பல்வேறு தொழிலாளர்களுக்கும் நாடு முழுவதும் ஒரே அளவில் கூலி கொடுக்க வகை செய்ய வேண்டும்". ஆனால், பாபா ராம்தேவ் நடத்திவரும் ஆசிரமத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்குப் போதிய ஊதியம் தரவில்லை என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆயுர்வேதத்தையும் இந்தியக் கலாச்சாரத்தையும் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்கள் மதிக்கப்படாமல் இருந்ததையும் நுகர்வோர் உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதையும் சுட்டிக் காட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போராட்டங்களையும் நடத்தி உள்ளது.
ராம்தேவுக்குச் சொந்தமான ஹரித்துவாரில் உள்ள திவ்ய யோக் மந்திர் டிரஸ்டின் 115 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் குதித்த பிருந்த கரத், ராம் தேவ் தயாரித்தளிக்கும் ஆயுர்வேத மருந்துகளில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இவரது ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக் கழிவுகள் சேர்க்கப்பட்டிருப்பதையும் பிருந்தா கரத் நிரூபித்து இருந்தார். இதில் மற்றொரு ஆச்சரியம் இதே பாபா ராம் தேவ், பசுவதைக்கு எதிராக மரணதண்டனை கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளதுதான். பாபாவின் மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக் கழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதை நிரூபித்த பிருந்தாவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பாஜக மற்றும் விசுவ இந்து பரிஷத்தினர் பிருந்தாவை வெளிநாட்டு ஏஜென்ட், யோகாவுக்கு எதிரானவர், ஆயுர்வேதத்திற்கு எதிரானவர், தேசவிரோதி என்றெல்லாம் வர்ணித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை பாபா ராம் தேவ் கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியது தொடர்பாக ஒரு வழக்கும் இவர் மீது உண்டு. இவ்வழக்கில், மாவட்ட நீதிபதியால் நேரடியாகவே கள ஆய்வுசெய்யப்பட்டு விவசாய நிலத்தைப் பாபா ராம்தேவ் களவாடியது நிரூபிக்கப்பட்ட உடன், இப்போது அந்த நிலத்திற்கு ஈடாக விவசாயிகளுக்கு வேறு நிலம் வழங்குவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இத்தகைய சிறப்புகளை உடைய பாபா ராம்தேவைத்தான் இன்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் தளபதியாக, அடுத்த ஹீரோவாக ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன.
Source: inneram.
திருடனே திருட்டை ஒழிக்கவேண்டும் என்று கூறுவது விந்தைதான்.
மிகவும் கண்டிக்கத்தக்க செயல்
//திருடனே திருட்டை ஒழிக்கவேண்டும் என்று கூறுவது விந்தைதான்.//
தப்பே இல்லை. தப்பை யாரும் தட்டி கேட்கலாம். ராம்தேவ் திருடர் , கருப்பு பணம் வைத்திருப்பவர் என்று நிரூபிக்க முடிந்தால், அவரையும் தண்டியுங்களேன், யார் வேண்டாம் என்று சொன்னது! இங்கு காங்கிரஸ் செய்வது தி மு க பலகாலமாக செய்வது தான். நேர்மையாக அவரை எதிர்க்க முடியாததால், அவர் சொத்து பற்றிய விவரங்களுக்கு திசை திருப்புகிறார்கள். ஏன், கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவித்து ராம்தேவின் சொத்தையும் பறிமுதல் செய்து கொள்வது தானே! அதற்க்கு துப்பு இல்லை! காங்கிரஸ் சேறு வாரி இறைக்கவென்றே வளர்த்து வரும் திக் விஜய் சிங் மூலம் சேறு வாரி இறைக்கிறார்கள்!
நானும் ஏன் வலிமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்!
நல்லது நடக்க நாட்டில விடமாட்டாங்களே
நானும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்..ஆனா இந்த சாமியார் சல்வார்கம்மீஸ் போட்டுகிட்டு பெண்கள் கூட்டத்தில் ஒளிஞ்சிகிட்டது ஏன்னுதான் இன்னும் புரியலை
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "