கல்வி என்ற விசயத்தில் நாம் அனைவரும் இன்றும் ஒன்றும் அறியாத அறிவற்றவர்களாகவே இருக்கின்றோம் .இதுவே எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது.
சட்டம் என்ன சொல்கிறது ,நடைமுறை எப்படி இருக்கிறது என்பதனை கல்வியாளர்கள் என்று கூறித்திரிபவர்களும்,கல்வியாளர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்களும், இன்னும் இது விசயமாக அலட்டிக்கொள்பவர்களும், ஆதங்கப்படுபவர்களும் சிறிதும் சிந்தித்து செயல்பட்டது போல் தெரியவில்லை
அனைவரும் இந்த விசயத்தில் படிப்பறிவில்லாதவர்களாகவா உள்ளனர் என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கிறது .
முதலில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் .
அது நமது அரசியல் அமைப்புச்சட்டம் .
இந்திய அரசியல் சாசனம் என்பது
இந்தியர்களாகிய நாம் ,நாம் பெற்ற விடுதலையை பேணிக்காக்கவும் ,
நமக்காக நம் உரிமைகளை வலியுறுத்து நிலைநாட்டிக்கொள்வதற்கும் வழங்கிக்கொண்ட உரிமை சாசனம் .
இது நமது உயிர்.
இதனை மீறிய சட்டங்கள் எதுவும் இல்லவே இல்லை.
நமது அரசியல் சாசனத்தின் 86 வது திருத்த சட்டம்
THE CONSTITUTION (EIGHTY-SIXTH AMENDMENT) ACT, 2002
[12th December, 2002.]
An Act further to amend the Constitution of India. .
BE it enacted by Parliament in the Fifty-third Year of the Republic of India as follows:-
1. Short title and commencement.- (1) This Act may be called the Constitution (Eighty-sixth Amendment) Act, 2002.
(2) It shall come into force on such date as the Central Government may, by notification in the Official Gazette, appoint.
2. Insertion of new article 21A.- After article 21 of the Constitution, the following article shall be inserted, namely:-
Right to education.-"21A. The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such manner as the State may, by law, determine.".
3. Substitution of new article for article 45.- For article 45 of the Constitution,the following article shall be
substituted, namely:- . Provision for early childhood care and education to children below the age of six years.
"45. The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the age of six years.".
4. Amendment of article 51A.- In article 51A of the Constitution, after clause (J), the following clause shall be added, namely:-
"(k) who is a parent or guardian to provide opportunities for education to his child or, as the case may be, ward between the age of six and fourteen years.".
இது ஆகும் .
new article 21A ''The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such manner as the State may, by law, determine'' என கூறுகிறது .
இதன் படி அரசு கட்டாயம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும் .
இதன் படி free and compulsory education to all children of the age of six to fourteen years அரசு மட்டுமே தரவேண்டும்.
அரசுக்கு மட்டுமே அதனை செய்யவேண்டும் .
மேலும்
new article "45. The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the age of six years.".ஆனது
''இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டுப் பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவரும் பதினான்கு வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெற்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்'' என்பதற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு new article 21A வழி வகை செய்துவிட்டபடியால் இங்கு இவ்வாறு வகைமை செய்யப்பட்டுள்ளது .
இப்படி அரசியல் அமைப்புச்சட்டத்தில் வகைமை செய்த பின் அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல அமைப்புகள் எப்படி இருக்க முடியும் ? .அரசு அனுமதிப்பது முறையா ?.எதன் அடிப்படையில் அனுமதிக்கிறது ?.
.
மேலும் கல்வி ஒரு அடிப்படை உரிமையான பிறகு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதாரக்கல்வியை போதிக்க எதன் அடிப்படையில் அரசு அனுமதிக்கிறது ?.அரசு அனுமதிப்பது முறையா ?.
இவைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்றல்லவா ? .
new article 21A ன் படி நமது நாட்டில் ஒரு மூலையில் உள்ள மாணவர் என்ன படிக்கின்றாரோ அதனையே எங்கும் உள்ள அனைத்து மாணவர்களும் படிப்பார்கள். அதுவும் அவர்வர் தாய்மொழியில் .அவ்வளவே.இதில் குழப்பம் எதுவும் இல்லை.இதனால் மொழி,இனம்,பண்பாடு பாதிக்கும் என்ற அச்சத்திற்கு இடமில்லை.உலகிலே மிகச்சிறந்த கல்வியை ,மற்ற நாடுகளுக்கு முன்னுதரமாண கல்வியை அளிக்கமுடியும்.
அரசியலமைப்பு சட்டம் இப்படி கூறும் சூழலில் சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் ஆகும் , அல்லவா ?.
ஏன் இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை ?
1970 ஆம் ஆண்டை சர்வதேச கல்வி ஆண்டாக ஐ.நா அங்கீகரித்தது.அதிலிருந்து ஆதாரக்கல்வியை உலகிலுள்ள அனைத்து குழந்தைகளும் பெற எண்ணிலடங்கா நிதிகளை அளித்துவருகிறது .நாம் தான் ஆதார கல்விக்கு சரியாக,சரியான நிதிகளை ஒதுக்க முடியாவிட்டாலும் .ஐ.நா வின் நிதியையாவது முறையாக பயன் படுத்தியுள்ளோமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது .
ஆதாரக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் 8 ஆண்டுகள் என்பது காந்தியின் கனவு.
காந்தியின் கனவு நனவாகும் காலத்தை எதிர்பார்த்து.
.
Tweet |
|
6 கருத்துகள் :
நியாயமான கேள்விகள் -- அப்படி என்றால் நம் அரசு இவ்வளவுக் காலம் மக்களை முட்டாளாக ஆக்கி உள்ளது .. எப்படி தனியார் பள்ளிகளை சட்டத்துக்கு புறம்பாக அனுமதி தந்தது ?
நல்ல ஆய்வு... ஆரோக்கியமான தேவையான பதிவு
விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு நன்றி சார்.
/// இப்படி அரசியல் அமைப்புச்சட்டத்தில் வகைமை செய்த பின் அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல அமைப்புகள் எப்படி இருக்க முடியும் ? .அரசு அனுமதிப்பது முறையா ?.எதன் அடிப்படையில் அனுமதிக்கிறது ?.////
இந்த குழப்பம் எனக்கும் ரொம்ப நாட்களாக உண்டுதான். பதில் சொல்வார்தான் இல்லை. நாட்டில் உள்ள மத, ஜாதி ,அந்தஸ்து இவைகளை மனதில் கொண்டு பிள்ளைகளின் கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகளை உண்டாகி வைத்திருப்பதும் அதனையே இன்றும் அனைவரும் கண்டும் காணாமல் இருப்பதும் மகா அயோக்கியத்தனம். அனைவருக்கும் சமமான கல்வியை தராத போது எங்கிருந்து சமத்துவம் மட்டும் இங்கு வந்துவிடும்? கல்வி கொள்கையை இப்படி கேவலமாக்கி இருகின்றனர் மகா அயோக்கியர்கள் அனைவரும் சேர்ந்து.
கேட்டால் நொண்டிசமாதனமும் பொருளாதார விளக்கங்களும் வந்து விழும். நாடு முழுவதும் அவரவர் தாய் மொழியில் ஒரே கல்விக்கொள்கை என்ற விழிப்புணர்வு வரவேண்டும்.
நீங்கள் இதுவரை தந்த பதிவுகளில் இந்த பதிவு மிக அருமையான ஒன்று. வாழ்த்துக்கள்.
சமச்சீர் கல்வி வந்தா மட்டும்..குழப்பம் தான் எப்பவுமே
சகோ.இராஜசேகரன்,
மிக நல்ல கேள்வி ஒன்றை எடுத்து வைத்து விழிப்புப்ணர்வை ஊட்டியுள்ளீர்கள். அருமையான பதிவு. மிக்க நன்றி.
ஒரு நாட்டில் கல்வியும் மருத்துவமும் இலவசமாக தரப்பட்டால்தான் அது தன்னிறைவு பெற்ற நாடு. நம்மால் அது முடிந்தும் தர மனது இல்லை. இதுவே நிதர்சனம்.
காரணம்...
நீங்கள் சொன்ன சட்டத்தில் உள்ளது ஓட்டை. அது என்னவென்றால்...
"...கட்டாயமாக அரசு மட்டுமே..." ...அதாவது... "...state govt only must give..." என்று வாசகம் இல்லை..!!
முதலில் சட்டத்திருத்தம் இப்படி வேண்டும். பிறகுதான்... 'எப்படி தனியார் கட்டண கல்வி வரமுடியும்' என்று கேள்வி வைக்க முடியும் அல்லவா..?
தாங்கள் ஒரு வழக்கறிஞர் என்பதால்... இதில் நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் பொறுத்தருள்க, சகோ.இராஜசேகரன்.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "