செவ்வாய், 6 டிசம்பர், 2011

உலகை புரட்டிப்போடும் புத்தகம் - ஒரு அறிமுகம்.'ஈரோட்ல,நம்ம ஊருல நடக்கும் மிகச்சிறந்த உலகத்தரமான புத்தகத்தின் புத்தகவெளியீட்டிற்கு நீ கட்டாயம் வரனும்.இந்த புத்தகம் உலகை புரட்டிப்போட போகுது ,நீயே சொல்லுவ பாரு. அதனால எப்பவும்போல வராம இருந்தராத.மறந்தறாத, வந்திரு,நான் ஞாபகம்படுத்தறேன்'என இளங்கோ அழுத்தமாக அழைத்தான்.படிக்காமலே எப்படி உலகை புரட்டும் நெம்புகோல் இது னு சொல்ற என கேட்டதற்கு ,மதிப்புரை நான் தான் எழுத இருந்துச்சு,என்னால முடியாததால நான் புத்தகவெளியீட்ல இது பற்றி அறிமுகம் மட்டும் செய்யரேன்.இங்க இலக்கியமும் இல்லை,ஒன்னும் இல்லை அத்தனையும் சொத்தை சொதப்பலுக  என பேசிக்கிட்டிருக்கிற உன்னமாதிரி ஆளுகளுக்கு அறிவுப்பசி தீர்க்கும் அற்புத கலசம் இது.நீ வாங்கப்போறதும் இல்ல,படிக்கப்போறதும் இல்லை.எதுக்குடா வருவீங்க நீங்க ...சரி வா .அங்க வந்தீனா தான் இது பற்றி பேச கேட்கவாவது செய்வ.அப்புறம் தெரிஞ்சுக்குவ இது பத்தி.அதுக்காகவாது வா.புதியதை தெரிச்சுக்க என்று சொல்லி நிறைய வேலையிருக்குனு சொல்லீட்டு கட்டாயம் வா னு மீண்டும் சொல்லீட்டு பறந்தான்.


ஏன் இப்படி கட்டாயப்படுத்தரான்.இவன் அறிமுகப்படுத்தரதால இருக்கமா ? .அப்படி அது மட்டுமே காரணமாய் இருந்தால்.டே ,நான் அறிமுகப்படுத்தறேன் ,வாடானு தானே கூப்பிட்டிருப்பான்.அது ஏன் இது உலகை புரட்டிப்போடும் புத்தகம்னு இவ்வளவு அழுத்தம் திருத்தமாக ?.அப்படி ஒரு புத்தகம் உலகை புரட்டிப்போட்டு விடுமா ?.அது ரொம்ப ஓவர் என நினைத்து பின் அவனின் அழைப்பையே மறந்துவிட்டேன்.நேற்றிரவு நாளை மாலை 7 மணிக்கு ரெடியா இரு புத்தக நிகழ்ச்சிக்கு போகலாம் என்று ரகு போனில் கூப்பிட்டபொழுது தான் அவன் கூறியது ஞாபகம் வந்தது.அட விடமாட்டான் போல என்று நினைத்து நீ போ நான் வரேன் என்றேன்.திருந்தவே மாட்ட  ஒரு பதிவர் நீயல்லாம் சொல்லாத னு சலிச்சிக்கிட்டான்.


'கூடல் அரங்கை 'அடைந்தபொழுது மணி 8.அங்கிருந்த தெரிந்த பதிவுலக நண்பர்களைப்பார்த்து புன்னகைத்து ஒரு ஓரத்தில் அமர்ந்தேன். சிறப்புரை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறி நிகழ்ச்சி அமைப்பாளர் மைக்கைவிட்டு அகன்றார்.

....இது உண்மையில் உலகை புரட்டிப்போட்டுவிடவுள்ள புத்தகம் ,இல்லையில்லை உலகை புரட்டி போட்டுவிட்ட புத்தகம் என்று சொன்னால் அது மிகையாகாது
என்ற சிறப்புரையாளரின் வார்த்தைகளினால் அவரின் பேச்சின் மீது கவனம் திரும்பியது.இளங்கோ சொன்னதையே சொல்றாரே  எல்லாம் ஒரு செட்டப் என்ற ஏளனத்துடன் .

...நாத்திகர்களும் ,ஆத்திகர்களும் ஏன் நாம் அனைவருமே படிக்கவேண்டிய ,பாதுகாக்கவேண்டிய புத்தகம் இது.குறிப்பாக இன்றைய அறிவுஜிவிகளுக்கு இது ஒரு மரண சாசனம்.இந்த நூலைப்பற்றி விமரிசிக்க யாருக்கும் அருகதை கிடையா.....

நான் புத்தகம் விற்பனை செய்யும் இடத்தைப்பார்த்தேன்.புத்தகம் மிகப்பெரிய சைசில் இருந்தது.சரி,ஒரு பெரிய நோட்டு விலையிருக்கும் என்றெண்ணிக்கொண்டிருக்கையில்,

...இனி உலக வரலாறு கி.மு,கி.பி  என்று பார்க்கப்படமாட்டாது இ.மு,இ.பி எனத்தான் பார்க்கப்பட உள்ளது என்பது திண்ணம் .நான் சொல்லுவது மிகையல்ல உண்மையிலும் உண்மை.இது தமிழர்களுக்கும்,தமிழ் இனத்திற்கும் மிகப்பெரிய பெருமை.இ.மு என்றால் இந்த புத்தகத்திற்கு முன் ,இ.பி என்றால் இந்த புத்தகத்திற்கு பின்.நான் கூறுவது எவ்வளவு உண்மை என்று இப்புத்தகத்தின் முதல் இரு அத்தியாயங்களை வாசித்துப்பார்த்தாலே உணர்வீர்கள் .முழுதும் படித்துப்பார்த்தால் ....சொல்லவும் வேண்டுமோ....

இளங்கோவை பார்த்தேன் அவன் கூட்டத்தில் கரைந்திருந்தான்.நான் புத்தகத்தை பார்த்தேன் .அது என்னை வரவேற்பதாக உணர்ந்தேன்.புத்தகம் விற்பவர் நிகழ்ச்சி உரையில் ஆழ்ந்திருந்தார்.அங்கே மாட்டப்பட்டிருந்த கடிகாரம் 9.30 ஐ காட்டியது.மருந்துண்ணவேண்டும் என்ற பதற்றத்தில் புத்தகம் விற்பவரை அணுகினேன்.ஏன்டா இப்ப தொந்தரவு  செய்யர பேச்ச கேக்க விடுடா என்ற வெளிப்பாட்டு உடலியக்கத்துடன்  40% கழிவு,ஆசிரியரின் கையெத்துடன் என்றார்.

தூங்குமுன் அப்படி என்னதான் இதில் இருக்கிறது ஏமாந்திருப்போமா ? என்ற நச்சரிக்கும் சந்தேகத்தால்  புத்தகத்தை எடுத்தேன்....    
   

தொடரும் ....
Download As PDF

40 கருத்துகள் :

விக்கியுலகம் சொன்னது…

தொருகிறேன்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா புத்தக அறிமுகமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாரு எக்ஸைல்!!!

M.R சொன்னது…

வாசித்துக் கொண்டே வந்தேன் ,திடீரென்று சஸ்பென்ஸ்

மறுபக்கத்தை உடனே எதிர்பார்க்கும்
நண்பன்

ramesh

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

RAMVI சொன்னது…

என்ன சார், இப்படி சஸ்பென்ஸ்ல நிறுத்திட்டீங்க? அடுத்த பகுதியை விரைவில் எதிப்பார்க்கிறேன்.

மகேந்திரன் சொன்னது…

அப்படியா...
அப்படி ஒரு புத்தகத்தை பார்க்கனும்னு
மிகவும் ஆசை நண்பரே...
ஆவலுடன் எதிர்நோக்கி...

கும்மாச்சி சொன்னது…

எஸ்ரா இது உங்களுக்கே நியாயமா? இப்படி சட்டுன்னு நிறுத்திட்டீங்களே, அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க ஸார்.

சசிகுமார் சொன்னது…

ஹலோ என்ன சார் இப்படி பண்றீங்க... மிகுந்த ஏமாற்றம் ... சீக்கிரம் போடுங்க சார்....

கணேஷ் சொன்னது…

அப்படி என்னதான் புத்தகம் அது? இப்படி ஆவலைத் தூண்டி விட்டுட்டு தொடரும்னுட்டிங்களே... வெயிட்டிங்!

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அப்படி என்ன புக் கா இருக்கும்?

இங்கேயுமா மெகா சீரியலா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னைய்யா திரில் திகில் படம் கணக்கா பில்டப்பு பயங்கரமா இருக்கு, பூதம் கீதம் கிளம்பி வந்துராம புத்தகத்துல இருந்து ஹி ஹி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஆவலுடன்...

MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

Hi Ezra Sir, Nice write-up and interesting read. Waiting eagerly for the next post.Summa Athiruthu Ungal Tamizh Ezhuthu.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - ஆவலுடன் அடுத்த பகுதியினை எதிர் நோக்கி ......... நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

என்னாச்சு....சொல்லுங்க !

துரைடேனியல் சொன்னது…

Sago.
Seekkiram thodaravum.

துரைடேனியல் சொன்னது…

TM 14.

shanmugavel சொன்னது…

ஆவலைத்தூண்டுகிறது.தொடருங்கள்.

மதுமதி சொன்னது…

அடடா..அடுத்த பதிவுல அந்த புத்தகத்தைப் பத்தி சொல்லிருவீங்கல்ல..ஆவலாய் உள்ளேன்..

சென்னை பித்தன் சொன்னது…

என்ன இப்படிப் பண்ணிட்டீங்க?சஸ்பென்ஸ் தாங்கலை!

Rishvan சொன்னது…

ஆவலைத்தூண்டுகிறது... www.rishvan.com

கோகுல் சொன்னது…

டாப் கியர்ல போய்க்கிட்டு இருந்த வண்டிய சடன் பிரேக் போட்டு நிறுத்துன மாதிரி இருக்கு.

பக்கத்தை திறக்க ஆவலாய்...........

Rathnavel சொன்னது…

பதிவை தொடருங்கள்.
வாழ்த்துகள்.

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் பாஸ் நேற்றே உங்கள் பதிவை படிச்சுவிட்டேன் அருமை சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சிருக்கீங்க அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

த.ம.18

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

முழுமையா எழுதியிருக்கலாமே?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

புத்தகம் பில்டப் ரொம்ப அதிகமா இருக்கே.... என்ன புத்தகம் அது? சஸ்பென்ஸா

தங்கம்பழனி சொன்னது…

அட.. இப்படியுமா பண்ணுவீங்க..? நல்லா இருக்கே..!!! (இத்தனை பேரும் சொன்னதையே சொன்னா ஒரே மாதிரியா இருக்கும்னு நெனச்சேன். அதான் வித்தியாசமான கமெண்ட்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சீக்கிரம் தொடருங்கள் சார்!

சிவகிரி செந்தில் சொன்னது…

அடுத்த பகுதியை விரைவில் எதிப்பார்க்கிறேன்.

நல்ல நேரம் சதீஷ்குமார் சொன்னது…

எக்ஸைல் தவிர வேறு எந்த புத்தகத்தையும் ஏத்துக்க மாட்டோம்;-))

Lakshmi சொன்னது…

அப்படி என்னதான் புஸ்தகம் அது சீக்கிரமா சொல்லுங்க.

நேசமித்ரன் சொன்னது…

தொடருங்கள் தோழர் :)

veedu சொன்னது…

ஹஹஹ....அந்த புத்தகமா? சார்...நார்நாரா கிழிக்க போறிங்கன்னு நினைக்கிக்றேன்.

Ramani சொன்னது…

என்ன இப்படி சரியான இடத்தில் நிறுத்திவிட்டுப்
போய்வீட்டீர்களே
உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
சீக்கிரம் வரவும் த.ம 23

ஜீ... சொன்னது…

ம்ம்...அடுத்த பகுதிலதான் ஆரம்பமா? :-)

அப்பு சொன்னது…

என்னங்க சடன் ப்ரேக்?

Kanchana Radhakrishnan சொன்னது…

ஆவலுடன்....

PUTHIYATHENRAL சொன்னது…

nalla pathivu vaalththukkal

மாலதி சொன்னது…

அருமை.....தொடருங்கள்.....

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "