திங்கள், 19 டிசம்பர், 2011

ஆணவத்தினால் அழியப்போகின்றீர்கள் மடப்பதர்களே ஆணவத்தினால் அழியப்போகின்றீர்கள் .எச்சரிக்கிறேன்.

என்னை அவமதிப்பதன் மூலம் அவமானப்படுத்திவிட்டதாக எண்ணி மகிழும் மூடர்களே.என் அறிவின் மேன்மையால்  எச்சரிக்கிறேன்,நீங்கள் முற்றாக அழியப்போகின்றீர்கள் மடப்பதர்களே,முற்றாக அழியப்போகின்றீர்கள் .

நீங்கள் என்னை மதிக்கவில்லை,என்னை அவமதித்துவிட்டீர்கள் என்ற காழ்புணர்வில் இதை நான் சொல்கிறேன் என தவறாக  எண்ணிவிடவேண்டாம்.

நீங்கள் என்னை அவமதித்ததற்கு நான் ஒருபொழுதும் வருத்தப்படப்போவது இல்லை.

உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் அறிவற்ற மடப்பதர்கள்.இது உங்களுக்கே தெரியாது .இப்படிப்பட்ட உங்களிடம் நான் மரியாதையையும்,உயர்ந்த தன்மையையும் எப்படி எதிர்ப்பார்ப்பேன்.அதைவிட ஒரு முட்டாள்தனம் இவ்வுலகில் வேறு ஒன்றும் இருக்கமுடியுமா என்ன ?.

அறிவற்ற மடப்பதர்களே, நீங்கள் முற்றாக முழுவதும் அழிந்து போகப்போகின்றீர்கள்.இது உண்மையிலும் உண்மை.

நீங்கள் என்னை காயப்படுத்துவிட்டதாக நினைத்து மகிழும் உங்களின் மகிழ்ச்சி அர்த்தமற்றது.பிணங்கள் மகிழ பூமி செழிப்பதில்லை.எனக்கு நீங்கள்  கொடுத்ததாக நினைக்கும் அவமானத்தின் மூலம் எதையோ சாதித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்களின் அழிவைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதனை உங்களிடம் கூறிக்கொள்கிறேன்.

நீங்கள் அழிவதற்கு முன் எனக்கு நீங்கள் செய்த தவற்றை எண்ணி  வருந்தப்போகின்றீர்கள்.

காலம் என்றும் எப்பொழுதும் அறிவின் பக்கம் என்பதனை உங்களுக்கு கடவுள் உணர்த்துவார்.

நான் உங்களை காப்பாற்ற நினைத்தேன்,ஆனால்,நீங்களோ உங்களின் ஆணவத்தினால் என்னை தனிமைப்படுத்தி  அழியப்போகின்றீர்.

என் அறிவிற்கு மேல் தான் இனி உலகம் இயங்கப்போகிறது என்பதனை கூறிக்கொள்வதில் பொருமைப்படுகிறேன்.என் உன்னதம் தெரியாமல் என்னுடன் போட்டிபோடும் மடப்பதர்களே . உங்களின் அறியாமையை எண்ணி எனக்கு நகைப்புதான் வருகிறது.

உங்களின் தயவு என்றும் எனக்கு தேவைப்பட்டதும் இல்லை.உங்களிடம் நான் யாசகம் கேட்டது இல்லை.நீங்கள் தான் என்னை நாடினீர்கள்.பயனும் அனுபவித்தீர்கள்.இன்னும் அதன் சுகத்தில் வாழ்ந்துவருகின்றீர்கள்.

உங்களின் அழிவில் எனக்கு மகிழ்ச்சியில்லை தான் .இருத்தாலும் இது நீங்கள் தேடிக்கொண்டது.இனியும் சந்தர்ப்பம் உண்டு.திருந்துங்கள்.இல்லையேல் உங்களின் அழிவினை யாராலும் தடுக்கமுடியாது.உங்களுக்கு நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு இது தான் உணர்ந்துகொள்ளுங்கள்.

த்ராஸிகம் கொண்டும் அசியஷ்டி கொண்டும் உம்மால் என்னை  ஒன்றும் செய்யமுடியாது.


உங்கள் தலைவனுக்கு அறிவும் இல்லை,தகுதியும் இல்லை .அவன் ஒரு பேராசைக்காரன் .அவனால் உங்களை இனி ஒருபொழுதும் காக்க முடியாது ....


ராக்ஞோ ஹி வ்ரதமுத்தாநம் யக்ஞ : கார்யாநுஷாஸயம்  |

தக்ஷிணா வ்ருத்திஸாம்யம் ச தீக்ஷிதாஸ்யாயி ஷேசநம் ||  

அநுத்தாநே த்ருவோநாஷ : ப்ராப்தஸ்யா நாக தஸ்ய ச  |
ப்ராப்யதே பல முத்தாநால்லப தே சார்த்தஸம் பதம்  ||    ...உங்களின் நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்.

உங்களின் தலைவனை புறக்கணித்தால்  நீங்கள் வாழ்வீர்கள்.

.....


நகரவீதியில் சிவஅதிதி ஒருவர், ஆணவத்தினால் அழியப்போகின்றீர்கள் மடப்பதர்களே ஆணவத்தினால் அழியப்போகின்றீர்கள்.தென்னவன் சொல்லிவிட்டான் .தென்னவன் சொல்லிவிட்டான் .ஆணவத்தினால் அழியப்போகின்றீர்கள் மடப்பதர்களே ஆணவத்தினால் அழியப்போகின்றீர்கள் என கூப்பாடு போடுவது கண்டு நகர மக்கள் ஏதுமறியாது பயத்துடன் அவரை பார்த்துக்கொண்டிருந்த நேரம் ... குதிரை ஒன்று மிகமிக வேகமாக ரத்தம் சொட்டும் உடலுடன் நகரை கடந்து சென்றுகொண்டிருந்தது .

.....


(அதிதி - தெய்வச்சிலைகளை எடுத்துக்கொண்டு போய் பிச்சை எடுப்பவர்)தொடரும் ....

'....மறுபக்கம்' என்னும் எனது வரலாற்று புதினத்தின் இரண்டாம்  அத்தியாயம் .


.....
Download As PDF

43 கருத்துகள் :

Rathnavel சொன்னது…

அருமை.

shanmugavel சொன்னது…

வித்தியாசமாக செல்கிறது அய்யா!தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.

Jeyamaran $Nila Rasigan$ சொன்னது…

anna adutha pathivu eppothu........

GOVINDARAJ,MADURAI. சொன்னது…

தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE

தங்கம் பழனி சொன்னது…

தலைப்பிலேயே எங்களை இங்கு வரவழைத்துவிட்டீர்கள்..!!! அடுத்த பகுதியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்...

பகிர்வுக்கு நன்றி !!!

மதுமதி சொன்னது…

ரத்தம் சொட்டும் உடலோடு ஒரு குதிரை..அடடா முடிந்துவிட்டது..அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்..

V.Radhakrishnan சொன்னது…

:) வரலாற்று புதினம் எழுதுகிறீர்களா? வாழ்த்துகள். நன்று.

ராஜ நடராஜன் சொன்னது…

பொன்னியின் செல்வன் பாதிப்புங்களாண்ணா!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஏன் இந்த சாணக்கிய கோபம்? என்னவோ ஏதோ என்று நினைக்கத்தோன்றியது .[ உங்க அளவிற்கு இல்லை அல்லவா :))) ]
புதிய கோணத்தில் சொல்ல விழைவது புரிகிறது. தொடரட்டும்.

துரைடேனியல் சொன்னது…

Arumai. Thodarkiren.
TM vote potachi.

கோகுல் சொன்னது…

நின்று நிதானித்து படிக்க வைக்கும் நடை,

கதைக்களம்,நகரும் விதம அருமை.

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

கதைக்களமும் நடையும் புதுமையாக ஈர்ப்புடன் அமைந்துள்ளது! நன்று!

ஹேமா சொன்னது…

சாபம் போடுவதும் பாவம்தானே !

அதிதி....பொருள் உணர்ந்தேன்.சில இடங்களில் சிலர் ஈழத்தவர்களைச் சொல்லியிருப்பது பிழையென்றே நினைக்கிறேன் !

மகேந்திரன் சொன்னது…

ஆழத் தோண்டி அழகான முட்டைஎடுக்கும்
அற்புதமான களம்.
தொடருங்கள்.

துஷ்யந்தன் சொன்னது…

அட இப்போதுதான் முதல் முதல் படிக்கிறேன்... தொடரட்டும் முன்பு வந்த பகுதிகளையும் படித்து விட்டு கருத்து இடுகிறேன் பாஸ்

cheena (சீனா) சொன்னது…

எல்லாப் பகுதிகளையும் சேர்த்து ஒன்றாகப் படிக்கிறேன் - பிறகு மறு மொழிகள் - சரியா

கணேஷ் சொன்னது…

எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. நல்ல எழுத்து நடை. மிக ரசித்தேன். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!

K.s.s.Rajh சொன்னது…

பாஸ் உங்கள் பதிவின் ஊடாக பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.தொடர் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள்

விக்கியுலகம் சொன்னது…

சாணக்கிய கோபம் இப்போது யார் மீதோ மாப்ள!

Lakshmi சொன்னது…

இந்த் வித்யாசமான எழுத்து படிக்கும் போது ஒரு வித்யாசமான படிப்பு அனுபவம் கிடைச்சுது.

சின்னப்பயல் சொன்னது…

காத்திருக்கிறேன். நன்றி!

ராஜி சொன்னது…

வித்தியாசமான தொசர். பகிர்வுக்கு நன்றி சகோ

சசிகுமார் சொன்னது…

பதிவில் கோப தீ பறக்கிறது....

Kanchana Radhakrishnan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

ananthu சொன்னது…

இங்கு யார் யாரையோ அரசியலில் சாணக்கியன் என்று விவரம் தெரியாதவர்கள் சொல்லிக்கொண்டிருக்க உண்மையான சாணக்கியனின் கூற்றுக்களை மொழிபெயர்ப்போடு தரும் உங்கள் சேவை தொடரட்டும் ... அரசியல் மட்டுமல்ல கம்பெனி நிர்வாகம் பற்றி கூட அர்த்தசாஸ்திரத்தில் கற்றுக்கொள்ளலாம் ...!

N.H.பிரசாத் சொன்னது…

இந்த பதிவு சத்தியமாக எனக்கு புரியவில்லை. ஒரு வேளை இது 'முல்லை பெரியாறு' பிரச்சனை பற்றி எழுதப்பட்டதா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாணக்கியர் கூற்று குட்

அப்பு சொன்னது…

எதோ ஒன்றை நினைத்து யாருக்கோ விடப் படகிற சாபமா?

KARUPPANNAGOUNDERPALANISWAMY சொன்னது…

A very good presentation.

KARUPPANNAGOUNDERPALANISWAMY சொன்னது…

A very good presentation my friend.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அப்பாப்பா என்ன கோபம்..

வித்தியாசமான கதை.. தொடருங்கள்..

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணே.
அச்சமூட்டும் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
பகிர்விற்கு நன்றி!

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

அவர் சொன்னது நான்கு வரிகள்தான் ...அதை நாற்பதாக விளக்கி இருப்பது அருமை..
ஏன் ஈரோடு வலைப்பதிவின் சங்கமத்திற்கு வரவில்லை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட முற்றிலும் வித்தியாசமா எழுதி இருக்கீங்க நண்பரே சூப்பரா இருக்கு எழுத்து நடை, வாழ்த்துக்கள்...!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை! தொடருங்கள் சார்!

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா வித்யாசமான பதிவு, தொடருங்கள்.

Advocate P.R.Jayarajan சொன்னது…

சார் ... இது எபோத்லேயிருந்து ? சொல்லவே இல்லே.. ! பட்டையே கிளப்புறீங்க.. தொடருங்கள்..

M.R சொன்னது…

அருமை நண்பரே தொடருங்கள் தொடர்கிறேன்

மாலதி சொன்னது…

மாறுபட்ட கோணம் ம் தொடருங்கள் ..........

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//உங்களின் அழிவில் எனக்கு மகிழ்ச்சியில்லை தான். இருந்தாலும் இது நீங்கள் தேடிக்கொண்டது.இனியும் சந்தர்ப்பம் உண்டு.திருந்துங்கள்.இல்லையேல் உங்களின் அழிவினை யாராலும் தடுக்கமுடியாது.உங்களுக்கு நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு இது தான் உணர்ந்துகொள்ளுங்கள்.//

சுவாரஸ்யமான ஆரம்பமாக உள்ளது. தொடருங்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

கலைஞர் கருணாநிதி எழுதிய சாக்ரடிஸ் நாடகம் நினைவுக்கு வருகிறது.அவர் ஏற்றமிகு ஏதென்ஸ் நகர மக்களை சாக்ரடிஸ் அறைகூவி அழைப்பது போல் எழுதியிருந்தார். இது சாபமிடும் தென்னவன் சாணக்கியன் கதையின் துவக்கமா.?வாழ்த்துக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

தொடரட்டும்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

படித்து கருத்துகளை சொல்லுங்கள்


2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "