சனி, 23 ஜூலை, 2011

ஒரு இணைய தமிழ் புரட்சி தேவை ...ஒன்று சேருங்கள் ...தமிழ் இணைய உலகில் ஒரு நல்ல முயற்சி...
அனைவரும் அவரவர் நிலையில் தங்களின் பங்களிப்பை செய்யலாமே  .

............................................

எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள் ..

இந்த பதிவை எவளவு தூரம் கவனிக்கக் போகிறீர்களோ அல்லது  அனைவரிடமும் சேர்க்க போகிறீர்கள் என்று தெரியவில்லை .எத்தனை பேர் இதில் இணைய முன் வந்து நிற்க்க போகிறீர்களோ தெரியவில்லை .ஆனால் தயவுசெய்து ஒரு 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் .  http://www.ewow.lk/ தளம் பற்றியது .
கல்வி ,வேறு தொழில் நடவடிக்கைகளுடன் இதையும் இயக்குவதால் எம்மால் முழுநேரமாக தனியாக செய்ய முடியாது . ஆனால் அனைவரும் நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் முடியும் .

ஒரு சமூகத்தின்/மொழியின் வளர்ச்சி அதன் பரிணாம வளர்ச்சியில் தான் இருக்கிறது . அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வளர்ச்சியடையவேண்டும் .இணையத்தில் தமிழை தொகுப்போம் .

ஒரு சமூகம் வளர்ச்சி அடைய அந்த சமூகத்திலேயே இருந்து நன்றாக வந்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு மிக மிக முக்கியமானது .ஆனால் எம் சமூகத்தில் உள்ளவர்கள் வளர்ந்தவுடன் தன் சமூகத்தை திரும்பி பார்ப்பதில்லை என்ற எண்ணமே நிலவுகிறது . முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் .மிகவும் பின் தங்கி இருக்கிறோம் .நிச்சயம் ஒரு இணைய தமிழ் புரட்சி தேவைப்படுகிறது. அதற்கான வேண்டுகோள் பதிவு இது .ஒன்று சேருங்கள் .

இணையம் என்பது எதிர்காலத்தில் ஏழை ,பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க போகும் ஒன்று . உலக விடயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலமும் பகுத்தறிவை வளர்ப்பதன் மூலமுமே எமது சமூகத்தை வளர்க்க முடியும் . அனைவருக்கும் அனைத்திலும் அடிபப்டை அறிவு இருக்க வேண்டும் .கல்வித்தளம் /விழிப்புணர்வு தளம் என்று எந்த வகையிலும் வைத்திருக்கலாம் .

முதலில் வெறுமனே அறிவியல் கட்டுரைகளை மட்டுமே நானும் எனது நண்பன் பிரபுவும் எமது வலைப்பதிவுகளில் கிடைக்கும் நேரங்களில் படித்தவற்றை பகிர்ந்து /எழுதி வந்தோம் . அறிவியல் விடயங்கள் தமிழில் இணையத்தில் தேடினால் கிடைக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்காக இருந்தது .இருவரும் எழுதியதை இணைத்து ஒரு தளமாக்கி தொடர்ந்து எழுவது தான் நோக்காக இருந்தது .

ஆனால் பொதுவாக பார்த்தபோது அறிவியல் விடயம் மட்டுமன்றி கல்வி தொடர்பான எதுவுமே இணையத்தில் தமிழில் இருக்கவில்லை .வளர்ச்சி என்றால் அது அறிவியலில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றியது .

அதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது :: http://www.ewow.lk/

இந்த தளத்தில் இணைந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய  விரும்புவர்கள் info@ewow.lk தொடர்புகொள்ளவும் .

இதன் உள்ளடக்கங்கள்::எந்த பகுதிக்கும் பங்களிப்பு செய்யலாம் .

கல்விப்பகுதி : இரசாயனவியல் ,பௌதீகவியல்  பாட பகுதிகள் வீடியோ வடிவில் விளங்கப்படுத்தபட்டுள்ளன .: இவை இன்னும் சேர்க்க வேண்டும் .எங்கிருப்பவர்களும் இவற்றை படித்துக்கொள்ளலாம் .

தமிழில் இயங்கவில் ஆவர்த்தன அட்டவணை 

ஏன்? எதற்கு ? : ஏன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது .இந்த பகுதியை தொகுத்து வருகிறோம் .உங்களுக்கு தெரிந்தவற்றை மூலத்தை குறிப்பிட்டு பகிரலாம்.

சுகாதார கல்விகளையும் வீடியோ வடிவில் தொகுத்துள்ளோம் .வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகிறது ?அதை தடுப்பது பற்றி சுகாதார விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது .ஆக்கங்கள் கேள்வி பதில்களாக உள்ளது .
  
அனைவரும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருக்கக் வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் பற்றிய விடயங்களை தொகுக்கிறோம் .மனித உரிமை சட்டங்களையும் தொகுக்கலாம் .

தமிழ் ஆவணப்படங்களும் செய்து வருகிறோம் .

அது தவிர வரலாறு ,தொழிநுட்பம் ,நாகரிகம் என பல விடயங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது .ஆனால் நாம் அவற்றை வழங்கு விதமும் தொகுக்கும் விதமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் .

எமக்கு தெரிந்தவற்றை மற்றயவர்களுக்கு தமிழில் கற்பிப்போம்,மற்றவர்களுக்கு தெரிந்ததை நாம் தெரிந்துகொள்வோம். தானாக இணையத்தில் தமிழ் சேர்ந்துகொண்டிருக்கும் .

நண்பர்களுடன் ,சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலே உதவியாக இருக்கும் .. இப்படியான பணிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை இந்த செய்தி போய் எட்டினால் போதுமானது .
..................................

மிக நல்ல முயற்சி சுதர்சன்

தொடரட்டும் உங்களின் இந்த நற்பணி .

வாழ்த்துக்கள்.
அனைவரும்  பங்களிப்பை தருவீர்கள் என நம்புகிறேன்.  

நன்றி

என
அன்புடன்
நண்டு@நொரண்டு .


.Download As PDF

வெள்ளி, 22 ஜூலை, 2011

கடவுளர்களை பற்றி இங்கு சென்று படிக்கவும் .
கடவுளர்களை பற்றிஇங்கு சென்று படிக்கவும் 


.நன்றி : YouTube  &  OpenLlibrary.org
Download As PDF

செவ்வாய், 19 ஜூலை, 2011

குட்டிமணியின் கண்கள்

.


சிங்கள இனவாத அரசு நம் தமிழ் சொந்தங்களின் மேல் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்த நாள் தான்  1983 ஜூலை 23...

இது ஈழத்தமிழர்களின் கருப்பு நாள்...

சிங்கள இனவாத அரசின் மனித உரிமை மீறலால்
மறைந்த நம் உறவுகளை வணங்கி...

அன்றைய தினம் அவர்அவர்களின் நிலைகளில் இருந்து  

நினைவேந்தல் செய்வோமாக ."நான் இறந்த பிறகு 
என் கண்களை இரண்டு தமிழர்களுக்குப்பொருத்திவிடுங்கள். 
  மலரப்போகும் தமிழ் ஈழத்தை என் கண்கள் காணட்டும்''
  குட்டிமணி.
.
நன்றி : You Tube Download As PDF

ஞாயிறு, 17 ஜூலை, 2011

நன்றி , நன்றி , நன்றி
கடந்த 11.07.2011 முதல் இன்று வரை
எம்மை
தங்களின்  திரட்டியின் நட்சத்திரமாக ஜொலிக்க  வைத்து
அழகு பார்த்த
தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் ,
எமக்கு ஒத்துழைப்பு நல்கிய
அனைத்து நல் இதயங்களுக்கும் 
எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

என
அன்புடன்
நண்டு@நொரண்டுDownload As PDF

சனி, 16 ஜூலை, 2011

பத்மநாபஸ்வாமி கோவில் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் , அதனை என்ன செய்யலாம் ? -1நொரண்டு  : வணக்கம் நண்டு

நண்டு  : வாங்க நொரண்டு  ,என்ன செய்தி  ?

நொரண்டு  : கேரள வரலாற்றைப்பற்றி

நண்டு  : எதுக்குவரேனு தெரியுது . முதலில் நமது வரலாறுகள்  நமக்கு  நமது  உண்மை வரலாற்றை உரைப்பதில்லை என்பதனை புரிந்துகொள்.இங்கு நமக்கு கற்பிக்கப்பட்டுவரும் வரலாறுகள் அனைத்தும் சார்புடையவையாகவே உள்ளன.மறைக்கப்பட்ட வரலாறு என்பதனை விட சொல்லமறுத்த ,மறுக்கடிக்கப்பட்ட  மறைக்கப்பட்ட வரலாறுகள் தான் இங்கு உள்ளன . ஆனால்  வரலாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது .அவ்வாறு அது தன்னை வெளிப்படுத்தும் ஒவ்வொரு பொழுதும் அதனை புரிந்து கொள்ளமுடியாத மூடர்களாக முட்டாள்களாக வரலாற்று மூட்டைகட்டிகளும், இலக்கிய வியாதிகளும் இருப்பதையும் ,அவர்களை  நம்பும் மனிதர்களையும் பார்த்து வரலாறு சிரிப்பதையும் யாவரும் அறிவர்.அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக கேரளம் பற்றி அதிகம் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக எழுதி தங்களை அதிமேதாவிகளாக காட்டிக்கொண்ட வரலாற்று புரட்டர்களை நான் உனக்கு இனம் காட்டத்தேவையில்லை.அதனை இனி மார்க்ஸ்  பார்த்துக்கொள்வார்.

நொரண்டு  :  ஓ....

நண்டு  : இதுபோன்று தான்  ....வரலாறு தன்னை சிந்துவில் வெளிப்படுத்தியபொழுதும்  அதனை கண்டு உலகம் வியத்தது.புரட்டர்களின் புரட்டு புரண்டது .

நொரண்டு  :  என்ன பிரயோஜனம்  ,இன்னும் ...?

நண்டு  :   இன்னும் உண்மையை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வருவதற்கு முழுக்க முழுக்க அறியாமையே காரணம்.நானும்,நீயும் ,நம்முடன் கைகோர்க்கும் நல்லவர்களும் தான் விடைகாண வேண்டும் .

நொரண்டு  :  உண்மை தான் ...செய்யலாம் ...

நண்டு  : மகிழ்ச்சி .அதோடு அப்பொழுது நமது ஆட்சி இல்லை .அதோடு அந்த அளவிற்கு நம்மிடையே படிப்பறிவும் இல்லை .

நொரண்டு  :  ஆம்,உண்மைதான்.  சரி இப்ப விசயத்துக்கு வரேன் ,ஒன்னுமில்லை பத்மநாபஸ்வாமி கோவில் சொத்து யாருக்கு சொந்தம்? .அதனை என்ன செய்யலாம் ? .

நண்டு  :  நீ என்ன நினைக்கற ?

நொரண்டு  :  ரோடு போட, குளம் வெட்ட, மின்சாரம் தர  இப்படி மக்கள் நலத்திட்டங்களை ...

நண்டு  : கிண்டலா ... சிரிப்பு தான் வருது

நொரண்டு  :  ஏன் ,இது மக்கள் பணம் தானே .

நண்டு  : அதுவல்ல இப்பொழுது முக்கியம் .

நொரண்டு  :  அப்புறம் ,அத அரசியல்வாதிக கிட்ட கொடுத்தரலாமா ?...இல்ல

நண்டு  : இப்படியே அறிவுகெட்ட தனமாக பேசி பேசியே நாம் நமது தன்மையை,உண்மையை இழந்தது போதும் உருப்படியா சிந்தி

நொரண்டு  : என்ன சொல்ல வர்ற

நண்டு  :  பத்மநாபஸ்வாமி கோவில் சொத்துக்களை பணத்தின் அளவாலே மட்டுமே  அளவிடுவது  எவ்வளவு முட்டாள் தனமானது தெரியுமா ? .

நொரண்டு  :  ஓ.... ம் ....

நண்டு  :அந்த சொத்துக்கள் கூறும் வரலாற்று உண்மைகளின் மதிப்பு அதன் பணத்தின் மதிப்பை விட மிகவும் அதிகமானது ,மதிப்பிட முடியாதது என்பதனை முதலில் தெரிந்துகொள் .

நொரண்டு  :  ஓ...

நண்டு  :  :
பணத்தினால் அளவிட்டு  அதன் முக்கியத்துவத்தையும் , அதுகூறும் உண்மைகளையும்,வரலாற்றையும் மறைக்கப்பார்ப்பது என்பது வரலாற்றை திரித்துவிட்டவர்களுக்கு தான் ஆதாயமே ஒழிய .உண்மையான வரலாற்றை நோக்கி  பயணப்படும் நம்மைப் போன்றவர்களுக்கு அது கூறும் வரலாறு மற்றும் அங்கிருந்து கிடைத்த ஆதாரங்கள் முலம் வெளிப்படும் உண்மைகள் ,உண்மையில் ஒரு புது சரித்திரத்தை உரைக்கும் என நம்புகிறேன் .அவ்வாறு அது உரைத்தால் அதைவைத்து நாம் நமது முன் உள்ள வரலாற்றை உரைத்துப்பார்க்கும் ஒரு உரைகல்லாகவே அது  இருக்குமல்லவா ?.

நொரண்டு  :  ஆமா ...மில்ல ...

நண்டு  :  அந்த வரலாறு கேரளத்து வரலாறு மட்டுமல்ல தமிழின் வரலாற்றையும் தமிழர்களின் வரலாற்றையும் வெளிப்படுத்தும் ஒரு வெளிப்பாடாக இருக்கும் . அதனால் பயனடையப்போவது நாம் தானே ..

நொரண்டு  : உண்மை தான் . சரி  என்ன செய்யலாம் .

நண்டு  : முதலில் நமக்கு தேவையான சிலவற்றை கூறுகிறேன் .

நொரண்டு  :  எத கேட்டா என்னவோ சொல்ர,சரி  ...அத ...சொல்லு ...

நண்டு  : நம்ம வீட்டுக்கு வெளியூரிலிருந்து  2 நாள் தங்கரதா  ஒரு விருந்தினரோ இல்ல உறவினரோ வந்தா என்ன செய்வோம் .

நொரண்டு  :  நம்ம ஊர் ஸ்பெசல் சமயலை சமைப்போன்

 நண்டு  : அட திங்கர   ...

நொரண்டு  :  இல்ல ...வந்து ....ஊர சுத்தி காமிப்பேன் .

நண்டு  : என்ன  காமிப்ப .

நொரண்டு  : கோயில்குலங்களை தான்.

நண்டு  :   அப்ப

நொரண்டு  : அப்ப ,நான்  அத காண்பித்து ,இது இவங்க காலத்துல  கட்டுனது,இங்குள்ள சிலைகளில் இருப்பவங்க இவங்க இவங்க ,இது இவங்ங இவங்க வங்க பாடிய ஸ்தலம் , இந்த இடம் இதற்கு பிரசித்தம் ,இங்க வந்தா இது கிடைக்குமுனு இந்த புராணம் கூறுது ,இவங்க இத செஞ்சாங்க ,இவங்க இத்தனை மானியம் கொடுத்தாங்க என...

நண்டு  : ம் ...

நொரண்டு  : அதத்தானே சொல்லமுடியும்

நண்டு  : உண்மை தான் .அதில் தவறில்லைதான் .என்றாலும் ...

நொரண்டு  : என்ன இழுக்கிற ...
தொடரும் .... Download As PDF

முகவரிகள் தான் இல்லையே

..
.                                                  ஓ...அஞ்சல் அட்டைகள்  ...
.                                                  கவிதைகளாவது எழுதுவோம்
.                                                  முகவரிகள் தான் இல்லையே

...............................
.


.                                                      கோழிச் சண்டை
.                                                      ஞாபகத்திற்கு வருகிறது
.                                                      அண்டை வீடு

....................................                                                   உயர்ந்த இடம் தான்
.                                                   அமர்ந்தது மட்டும்
.                                                   சற்றே சாய்வாக.
..

நன்றி : படங்கள் உதவி கூகுள் 

Download As PDF

வியாழன், 14 ஜூலை, 2011

தலைச்சுமைகள்


.

.                                               வெட்டப்படும்
.                                               காடுகள்
.                                               தலைச்சுமைகள்
.........................................

 

.                                       விதைகளுக்கு அல்ல
.                                       மரத்திற்கு
.                                       இலையுதிர் காலம் 


 .....................................

      .                                        வெளிச்சம்
.                                        விதை
.                                        ஓ !!! பெரிய ஆலமரம் !!!.


.....................................
.                                                       மனித
.                                                      அறியாமை
.                                                      மனிதஅறியாமை....................................
 .                                             அழகிய வயல் வெளிகள்
.                                             பருவ மழை
.                                             விதைதேடும் மனிதன்


................................

 


 2011ம் ஆண்டு  சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

 .                                                நாம்


.


. Download As PDF

புதன், 13 ஜூலை, 2011

ஜாதி , தீண்டாமை X சமச்சீர்கல்வி .


இன்று சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று ஓரளவிற்கு தெரியவந்துவிட்டது .ஆனால்,இன்னும் கல்வி சம்பந்தமாக விழிப்பு வரவில்லை.அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் எத்தகைய கல்வி இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு அரசியல் தளத்தில் முதலில் இருக்கவேண்டும் என்பதுவே முக்கிமான ஒன்றாகும் .

இன்றைக்கு நமக்கு சமச்சீர் கல்வி என்பதை விட பொதுக்கல்வியே மிகவும் அவசியமான கட்டாயமான ஒன்று.  ஆனால்,இதன் தேவை மற்றும் அவசியம் பற்றி எந்தவித கவலையும்,பார்வையும் இல்லாமல் மக்களும், சமத்துவம் ,சகோதரத்துவம்,பகுத்தறிவு ,முதலாளி,தொழிலாளி ,ஒடுக்கப்பட்டவர் என எதையாவது கூறிக்கொண்டு அனுதினம் போராட்டத்தில் குதித்து தாங்களை மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் அனைத்து கட்சிகளும் இருப்பது அறியாமையிலா இல்லை அனைத்திலும் பாசிச குணம் புகுந்துவிட்டதாலா என்பது ஆராயக்கூடிய விசயமாக உள்ளது .
அறியாமையில் என்றால் உணர்த்தலாம்,பாசிசம் என்றால் துரத்தி துடைப்பதைத்தவிர்த்து வேறு வழியே கிடையாது .

தீண்டாமை ஒழிப்புக்காக காந்தி,பெரியார்,அம்போத்கார் மற்றும் பல பெயர் தெரிந்த தெரியாத தலைவர்கள் மற்றும் முகம் தெரியாத பாதிக்கப்பட்ட அனைவரின் உயிர்,உழைப்பு ,கஷ்டம் மற்றும் கனவிற்கு மருந்தாக உள்ளது தான் நமது அரசியலமைப்பு கூறும் கல்வி என்ற அடிப்படை உரிமை. அப்படிப்பட்ட அடிப்படை உரிமையான கல்வியில் பொதுக்கல்வி முக்கியமான காரணியாக இருந்து நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயர்வு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது .

அடிப்படை உரிமை கல்வி என்னும் பொழுது அனைத்து கல்வி நிலையங்களையும் அரசே நடத்த வேண்டும்.அது தான் சரி,அது தான் சட்டமும் கூறுகிறது.அப்படி அரசே ஏற்று நடத்தும் பொழுது ,அண்மைப்பள்ளியில் தான் அனைவரும் படிக்கவேண்டும் .அப்பொழுது அனைவரும் ஒரே குடையின் கீழ் தான் படிப்பர். அப்படி குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கும் பொழுது ,குழந்தைகளின் மனதில் எத்தகைய ஜாதிபோதங்களும் இல்லாத  காரணத்தினால் அவர்கள் இயல்பாகவே தாங்கள் எந்தவித ஜாதி ,தீண்டாமை இன்றி ஒருவருடன் ஒருவர் நன்றாக பழகி ஒரே தன்மையினராக வளர்வர்.இவ்வாறு ஜாதி போதமின்றி தங்களுக்கிடையே தீண்டாமை என்னும் பாவங்கள் இன்றி ஒத்த மாணாக்கர்களாய் வளர்வர். அவ்வறு அவர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் ஜாதி ,தீண்டாமை என்னும் கொடுமைகளை  சமுதாயத்திலிருந்து மாய்க்கமுடியும்.

அதை விடுத்து நாம் ஜாதியை மரமாக பள்ளியில் வளரவிட்டு பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது முட்டாள் தனமாகும் ,5 ல் வளையாதது 50 ல் வளையாது .

ஜாதி ஒழியவேண்டும்  தீண்டாமை மறையவேண்டும் என நினைக்கும் மக்களின் காவலர்கள் இதனை  உணர்ந்து உடனே பொதுக்கல்வி என்னும் அனைவருக்குமான தரமான ஒரே கல்வியை அமுல்படுத்த இணைந்து போராட வேண்டும் .

ஜாதி ஒழிந்தால்
வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்
தீண்டாமை  என்ற அறியாமை அகன்றுவிடும் .


குழந்தைகளை பாருங்கள் .....

அவர்களிடம் அன்பு என்ற ஒன்றைத்தவிர்த்து வேறு எதுவும் இருப்பது இல்லை .

நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை  குழந்தைகளாக வளர்ப்போமாக .
. Download As PDF

செவ்வாய், 12 ஜூலை, 2011

மொழியை ,நாட்டை ஏன் நேசிக்கவேண்டும் ?.விடுதலை,விடுதலை,விடுதலை ,இதற்காக இதுவரை எத்தனையோ உன்னதமானவர்கள் போராடினார்கள்.அதில் பலர் வெற்றியும் எய்தினர்.அவர்கள் அனைவரும் போராட காரணமாக இருந்த உந்து சக்தி எது என பார்த்தால் அது அவர்களின் நேசிப்பு தான் என்பது புலப்படும் .ஆம்,ஒன்று அவர்கள் அவர்களின் நாட்டை நேசித்திருப்பர் அல்லது அவர்களின் இனத்தை நேசித்திருப்பர் அல்லது அவர்களின் மொழியை நேசித்திருப்பர். இந்த நேசிப்பு தான் அவர்களுக்கு விடுதலையைகொடுத்தது. நாட்டை கொடுத்தது.இனத்தை காத்தது,மொழியை வளப்படுத்தியது.

இந்த உலகின் தாரக வார்த்தையே நேசிப்பு என்பது தான் . 

ஒன்றைப்பற்றிய நேசிப்பு அதனைப்பற்றிய அதிகப்படியாக கவனப்படச்செய்கிறது .கவனப்படல் அதனை அணுகச்செய்கிறது .அணுகுமுறையில் புதுப்புது அனுபவங்களும்,அறிவும் பெறப்பெற ,அதன் ஆர்வம் நேசிப்பதில் அதிகரித்து அதிகரித்து அதன் மீது ஒரு தனி பிடிப்பு ஏற்படுத்துகிறது .அதனால் கிடைக்கும் உயர் அழுத்தம் அதனில் வயப்பட வைக்கிறது .இவ்வாறு வயப்படுவது காதலாகிறது. இத்தகைய காதல் அறிவுத்தளத்தில் நிகழும் பொழுது அறிவு தளமொன்றை பெறுகிறது .இத்தகைய தளம் உயர்வைத்தருகிறது .இந்த உயர்வு சமுதாயத்திற்கு நன்மை பயக்கின்றது.
 
இப்படிப்பட்ட நேசிப்பு எனக்கு என் தாய் மொழியின் மீதும் ,என் தாய்த்திருநாட்டின் மீதும் ஏற்பட்டு அது என் அறிவை விசாலப்படுத்தி விசாலப்படுத்தி உயர்கிறது .மேலும்,எனக்கு என் தாய் மொழி எனது தாய்நாடு மீதான காதலால் இன்னும் ,இன்னும் அதிகப்படியான உண்மைகள் என்னுள்ளும் எனக்கு வெளியேயும் அடையாளம் காணமுடிகிறது .மேலும்,அது எனக்கு புதிய பார்வையையும் ,பரிமாணத்தையும் என்னுள் அள்ளித் தெளிக்கிறது .அதனால் தான் என்னால் புதியன பேச முடிகிறது ,புதியன எழுதமுடிகிறது,புதியன சிந்திக்கமுடிகிறது ,மொத்தத்தில் புதியவனாக தினம்தினம் பிறக்கமுடிகிறது .என் நேசிப்பினால் என்னால் அனுதினம் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இல்லையில்லை என் மொழி என்னை அனுதினம் சிந்திக்க வைக்கிறது.என்று நான் சிந்திக்கவில்லையோ அன்று  நான் கட்டாயம் இறந்திருப்பேன். இதையே வேறு மாதிரி கூறவேண்டும் என்றால் என்று என் மொழி என்னில் இயங்கவில்லையோ அன்று தான் எனது இறுதி நாள்.

எனக்கு தெரிந்த சிலரை பார்த்து அவர்களிடன் ஏன் முன்பு போல நீங்கள் செயல்படுவதில்லை ? எழுதுவதில்லை?, பேசுவதில்லை ? என கேட்டதற்கு . அவர்கள் அதுக்கெல்லாம் முன்பு போல நேரம் கிடைப்பதில்லை,வேலைகள் அதிகம்,.ம்..ம்... என்ன செய்ய வாழ்க்கைய பாக்கவேண்டியுள்ளதே என எதையாவதை சாக்குபோக்கு சொல்வதையே கேட்டிருக்கேன் .ஆனால் அவர்கள் கூறும் காரணத்தை சாதாரணமாக கேட்கும் பாமரனுக்கு அல்லது அவர்களின் பக்தர்களுக்கு சரியாகத்தெரியும் . ஆனால், அவர்கள் அவர்களின் செயலால் தான்,எழுத்தால் தான் ,பேச்சால் தான் உயர்ந்தனர் ,புகழ் பெற்றனர் என்பதையும்,அவர்களுக்கு சகலத்தையும் அவர்களின் மொழிதான் தான் கொடுத்தது என்பதனை மறைத்து பேசுகின்றனர் என்பது தான் உண்மை . இதற்கு காரணம் அவர்கள் அனைவரும் தனது மொழியை விட்டு வெகுதூரத்திற்கு சென்றுவிட்டபடியால் அவர்களிடம் இருந்து மொழியும் அன்னியப்பட்டுவிட்டது என்பதுவே. மொழி அன்னியப்பட அன்னியப்பட நாடும் அன்னியப்பட்டுக் கொண்டே போகும் .

பொதுவாக மொழியால் அன்னியப்பட்டவர்களுக்கு மொழியும்,நாடும்  தூரத்தில் தெரியும் ஏதோ ஒன்றாக தெரிய ஆரம்பித்து.பின் மொழியின் மீதும்,நாட்டின் மீதும் துளியும் நேசிப்பு இல்லாமல் போய்விடும்,அதன் காரணமாக அவர்கள் எவ்வளவு வல்லவர்களாக முன்பு தெரியவந்திருந்தாலும் அவர்களிடம் மொழியாலும்,நாட்டாலும் புதியன பிறப்பிக்கும் பிம்பம் கழன்று அவர்கள் வெறும் நடமாடும் எழுத்து தின்னும் மனிதர்களாகிவிடுவார்கள்.

தாய்மொழியும்,தாய் நாடும் வேறு வேறல்ல.ஒன்றை  ஒன்று  பின்னிப் பிணைந்த உயிர்.ஒன்றில்லாமல் ஒன்று இயங்கமுடியாது .டோடோ என்ற பறவை ஒன்று இருந்தது கேள்விப்பட்டதுண்டா ?.அந்த பறவை மிகவும் சாதுவானது மொரீசியஸ் தீவில் நிம்மதியாக வாழ்ந்தது.அதனை மனிதன் தன் வயிற்றுக்கு பலியாக்கினான் .அந்த இனத்தின் கடைசிப் பறவையும் 1681 ல் பூமியில் தங்களின் வாழ்ந்ததற்கான எந்த அடிச்சுவட்டை ' அப்பாவியாக  இருகாகாதே ,டோடோவைப்போல சாகாதே ' என்ற சொலவடையை மட்டும் விட்டுச்சென்றது .சரி அது மட்டும் தான் அழிந்ததா என்றால் இல்லை ?.அதனோடு சேர்ந்து கல்வாரி என்ற மர இனமும் காணாமல் போய்விட்டது .டோடோ கல்வாரி மர பழங்களைத்தின்று போடும் கொட்டைகள் தான் முளைக்கும் என்பது இயற்கை வைத்திருந்த பிணைப்பு.டோடோ அழிந்தது கல்வாரியும் அழிந்தது .எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் கல்வாரி மரத்தை உருவாக்க முடியவில்லை .அதன் விதைகளை முளைக்கவைக்க  டோடோவின் வயிற்றில் சுரக்கும் ஒரு அமிலத்தால் தான் சாத்தியமாம்.அது கூறும் செய்தி என்ன ? .ஒரு நிலத்தில் தோன்றும் ஒன்றை ஒன்று சார்புடையது .ஒன்று அழிந்தால் மற்றதும் அழியும் .அது போலத்தான் இங்கு தமிழனாக இருப்பதால் தமிழர்களையே எடுத்துக்கொள்வோம் .தமிழன்,தமிழ்மொழி,தமிழினம்,தாய் நாடு  இவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது .ஒன்று ஒன்றிற்கு ஆதாரம் ,ஒன்றில்லாமல் ஒன்றால் இயங்கமுடியாது .இன்னும் ஆழமாக சொல்லப்போனால் புலிகள் இருக்கின்றன அல்லவா ,அவைகள் தமிழனின் அடைவு,தமிழ் தோன்றிய பொழுதே அதுவும் தோன்றியது .புலியும் தமிழும் இயற்கை ரீதியில் இரண்டறக்கலந்தவை.அது போலத்தான் இயற்கையாகவே ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு நாட்டுடன் பின்னிப்பிணைந்துள்ளது .ஒரு மொழி தோன்றிய பொழுதே இங்கு ஒரு நாடும் இனமும் உயிர்பித்திருந்தது என்பதும் அதனுடன் இயற்கை சூழ்ந்து புதுமைகள் மலர ஆரம்பித்தது என்பதுவுமே வரலாறு.      

தாய்மொழியை ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு நேசிக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு மொழிகளின் புதிய புதிய சித்தாந்தம் புலப்படும் . தாய்நாட்டை ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு நேசிக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு சுதந்திர வாழ்வு கிட்டும்.

ஓடும் வரை தான் ஆறு.
அதனால் தாய்மொழியுடனும்,தாய்த்திருநாட்டுடனும் ஓடிக்கொண்டே இரு.மொழியை நேசி ,நாட்டை நேசி அறிவும்,சுதந்திரமும் சுவாசமாகும்.

அதனால் நாட்டை,மொழியை நேசி .
அனைத்தும் உன்னை நேசிக்கும் .

. Download As PDF

திங்கள், 11 ஜூலை, 2011

மகாத்மா காந்தி என்னும் மாயையை தகர்ப்போம் .


ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம் - விஞ்ஞானி ஐன்ஸ்டீன்

நொரண்டு   :  வணக்கம் நண்டு .

நண்டு      :  வாங்க நொரண்டு .

நொரண்டு   : தமிழ்மணத்தில இந்த வார நட்சத்திரம் . 

நண்டு      : ஆமாம் .

நொரண்டு   :  ம் ... நல்லது .

நண்டு      : என்ன செய்தி ?

நொரண்டு   : ஒன்னுமில்ல காந்தியப்பத்தி கேக்கலாம்னு வந்தேன் .

நண்டு      :  என்ன தெரிஞ்சுக்கணும் .

நொரண்டு   : மகாத்மா காந்தி இறந்த பின் இந்தியாவில் காந்தியம் என்ன ஆனது?. காந்தியம் இன்னும் இருக்கிறதா ,தொடர்கிறதா ? இல்லை, அவருடன் சேர்ந்து விட்டதா ? .

நண்டு      : மிக நல்ல கேள்விகள் . காந்தியம் தொடர்கிறது என்பதுவே உண்மையும் நடப்பும் கூட.

நொரண்டு   : தொடர்கிறதா !!!!!!

நண்டு      : ஆம் .

நொரண்டு   : எவ்வாறு ?

நண்டு      : உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களின் இதயத்திலும் மலர்ந்து மலர்ந்து மிகப்பெரிய மிகப்பெரிய சக்தியாக ...

நொரண்டு   : உலகில் உள்ள ஒவ்வொரு  இதயத்திலும் ... புரியல ?

நண்டு      : காந்தியம் இந்தியாவைத்தாண்டியும் பயணித்துக்கொண்டு ,பயனடையவைக்கின்றது உலக சமுதாயத்தை .

நொரண்டு   : புரியல ?.

நண்டு      : ஒபாமா தெரியுமா .

நொரண்டு   : என்ன கிண்டலா ...அவரை தெரியாதவங்க உலகத்தில் இருக்கமுடியுமா...

நண்டு      : காந்தியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மிகச்சிறந்த காந்தியவாதியாகவும் உருவெடுப்பார் என்பது எனது கருத்து  .

நொரண்டு   : மகாத்மா காந்தி சமாதியை பார்வையிட்ட அவர் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் “அன்பு, சகிப்புத் தன்மை, அமைதி மூலம் இந்த உலகையே மாற்றிய மகாத்மாவை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்துள்ளோம். அவர் மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் ஏற்றி வைத்த ஒளி, இந்த உலகுக்கே இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பு எழுதினார்.

நண்டு       : ஆம்,அந்தளவிற்கு காந்தியின் மீது பற்றுக்கொண்டவராக திகழ்கின்றார் .

நொரண்டு   : நல்லது .

நண்டு      : மார்ட்டின் லூதர் கிங்  ...

நொரண்டு   : " Why We Can't Wait " என கூவியவர்.

நண்டு      : நெல்சன் மண்டேலா ....

நொரண்டு   : '' Only free men can negotiate; prisoners cannot enter into contracts. Your freedom and mine cannot be separated '' என்றவர்.

நண்டு      : சுந்தர்லால் பகுகுணா

நொரண்டு   : "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசைப் பசியால் உருவானது. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." என்ற  "பசுமை போராட்ட வீரர்'

நண்டு      : சிவராம் காரந்த் .

நொரண்டு   : 93 வயது வரை ஊர் ஊரா சமுதாயப் பணிகள் செய்த சமுதாயப் பணிகள் செய்த கன்னட நாவாலாசிரியர்.

நண்டு      : Harivallabh Parikh .

நொரண்டு   : மக்கள் நீதிமன்றம் இவரை அடையாளப்படுத்தும் .

நண்டு      : பிரேம் பாய்

நொரண்டு   : 1971-72 இல் 5 லட்சம் வங்காளம் அகதிகள் மத்தியில் இவர் ஆற்றிய பணியை மறக்கமுடியுமா ?.

நண்டு      : "மரங்களை கட்டிபிடித்துகொள்!"

நொரண்டு   : சாந்தி பிரசாத் பட், கௌர தேவி என்ற இயற்கை மனிதங்கள்.

நண்டு      : Narayan Desai

நொரண்டு   : அகிம்சை படையின் அமைதிப்போராளியாயிற்றே.

நண்டு      : ஜெயப்பிரகாஷ் நாராயண்

நொரண்டு   : Emergency யை உடைத்து காந்தி தேசத்தை காத்த வித்தகர்.இவரை மறந்தவர் ஜனநாயகத்தை அறியாத மூடராவார்.


நண்டு      : வினோபா பாவே

நொரண்டு   : காந்தியின் ஆன்மீக வாரிசு, ஏழைகளுக்கு நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை சேகரித்து தானமாக தந்த துறவி .

நண்டு      : பாபா ஆம்தே

நொரண்டு   : பூவுக்குள் மலரை வைத்தவர் .நண்டு      : அன்னா ஹசாரே

நொரண்டு   : சொல்லவும் வேண்டுமோ ????
 
நண்டு      : கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜகன்னாதன்

நொரண்டு   : காந்திய கொள்கைகளுக்காகவும், நிலமற்ற தலித்துகளுக்காகவும் சேவை செய்யும் நாகப்பட்டினத்து காந்தியவாதி.

நண்டு      : ஈரோட்டைச்சேர்ந்த ...

நொரண்டு   : இரு ....இவர்களை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றாய் ?.

நண்டு      : இவர்களின் வாழ்க்கைப்பாயணத்தை படித்தைப்பார்த்தாலே நன்கு புரியும் . இவர்களின் சேவைகள் அனைத்தும் காந்தியத்தின் நன்மைகள் அனைத்தும் மக்கள் பூரணமாக அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே என்பதனை ,அதனால்...

நொரண்டு   :ஓ...அப்படியா ....இப்படிப்பட்ட பல உன்னதர்கள் தோன்றிக்கொண்டே இருந்தாலும் காந்தியைப்பற்றிய பார்வை மங்கலாகவே இருக்கிறதே ,காந்தீயம் பரவாமல் இருக்க எது தடையாக உள்ளது ,அதற்கான காரணங்கள் என்ன ?.

நண்டு      : மூன்று விசயங்கள் தடையாக உள்ளது .

நொரண்டு   : எவை அவை ?.

நண்டு      : முதலாவதாக  காந்தியைப்பற்றியும்,காந்தியத்தைப்பற்றியுமான அறியாமை ,இரண்டாவதாக  காந்தியத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கும் அரசியல் கேட்பாட்டு அபத்தங்கள் ,மூன்றாவதாக மகாத்மா காந்தி என்னும் மாயை.

நொரண்டு   : ம் ...இந்த மூன்றுமே அறியாமை தானே ?

நண்டு      : முதலாவது ஆழ்ந்த அறிவும்,பார்வையும் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவது , இரண்டாவது கற்பிக்கப்பட்ட கற்பிதம் .முதலாவதான அறியாமையை அகற்றிவிட முடியும் .இரண்டாவதின் வாழ்வு சார்ந்த முரட்டு மூடத்தை காலம் தான் படிப்படியாக உணர்த்தும்.

நொரண்டு   : அவர்கள் அவர்களுக்குள்ளே திருத்தப்பட வேண்டியவர்கள் அப்படித்தானே .ஆமாம் .அப்படிப்பட்ட அவர்கள் யார் ?.

நண்டு      : ஏன் கேட்கிறாய்?

நொரண்டு   : அடையாளப்படுத்தப்பட்டால் திருத்தப்படுதல் எளிதாகும் அல்லவா அதற்காக ?


நண்டு      : அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு ஆதரவுதவர்களில் முதன்மையானவர்கள் யாரென்று சொல்லமுடியுமா ?

நொரண்டு   : ம் ....

நண்டு      : காந்தியை பனியாவிற்கு ஆதரவாளராக பார்ப்பவர்கள் யாரென்று உன்னால் கூறமுடியுமா ?.

நொரண்டு   : தெரியல ?.

நண்டு      : ம் ....

நொரண்டு   : குழப்பாதே.எனக்கு காந்தியைப்பற்றியும், காந்தியத்தைப் பற்றியுமான  அறியாமை பற்றி  முதல்ல சொல்லு.அத புரிஞ்சுட்டு ,பிறகு அடுத்தத புரிய முயற்சிக்கின்றேன் .


நண்டு      : நமக்கு சுதந்திரம்  கிடைத்ததற்கு முழுக்கமுழுக்க காந்தியாரே உரிமை கொண்டாட முடியும் என்பதனையும்,அதற்கு பல ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கு வலுச்சேர்க்கும்  முக்கிய நிகழ்வுகள் தற்பொழுது நடந்து வருகிறது என்பதனையும் ,அதனால் உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப்பற்றியும் அதிலிருந்து காந்தியின் அணுகுமுறை எத்தகையது என்பதனையும் அதுதான்  அவரின் மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது  என்பதனையும் அது எது என்பதனையும் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும் .


நொரண்டு   : ஓ ...அப்படி என்ன நிகழ்வுகள் ...எனக்கு தெரியவில்லை  ...யாரும் எனக்கு சொல்லவில்லையே ...நீயாவது சொல் ... தெரிஞ்சுக்கறேன் ....


தொடரும் ...... மாயை தகரும் வரை ...


. Download As PDF

ஞாயிறு, 10 ஜூலை, 2011

எலுப்புகளை கணக்கிடாதே ..
எண்ணப்படுகின்றன
எலும்புகள்
மக்கள்  தொகையாய்.


நாளை   உலக மக்கள் தொகை நாள்


.

Download As PDF

நமக்கு அரசாங்கமும் ,சட்டங்களும் எதற்கு ?
எல்லாவிதமான ஆதாரங்களும் கடவுளிடமிருந்து தான் வருகிறது என்று சொல்லுகின்றார்கள்;இது உண்மையானால் அவரிடமிருந்து தான் எல்லா  வியாதிகளும் வருகின்றன.


எல்லாவிதமான நீதிகளும் கடவுளிடமிருந்து வருகின்றன என்று கூறுகிறார்கள்;அவர் தான் நீதீகளின் மூலம் என்றும் சொல்லுகிறார்கள் ;அப்படியானால்,அவ்வளவு மேன்மைதாங்கிய இட்த்திலிருந்து நமக்கு நீதி வருகையில் நமக்கு அரசாங்கமும் ,சட்டங்களும் எதற்கு ? .பல கடவுள்களும்,பல மதங்களும் உலகத்தில் துன்பத்தைப் புகுத்தியுள்ளது .

மனிதர்கள் தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களின் தவறுகள் அவர்களுக்கே தெரிவதில்லை.தங்களின் தவறுகளை வெறுத்து ஒதுக்காமல் அவைகளை நேசித்து வருகின்றனர் .தீமைகளுக்களுக்கொல்லாம் காரணம் ?.மனிதர்கள் .திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஒழுக்கத்தை மலிவுபடுத்திவிட்டதுதான்.சாதாரணமாக இப்பொழுது ஜனங்கள் ஒருவனைப் பார்த்து 'அவன் ஒழுக்கமுள்ளவனா ' என்று கேட்கிறார்களில்லை ; 'அவன் புத்திசாலியா ? ' என்றுதான் கேட்கிறார்கள் .ஒரு புத்தகத்தைப் பார்த்து ' அது உபயோகமுள்ள புத்தகமா ? ' என்று கேட்கிறார்களில்லை. ' அது நன்றாக எழுதப்பட்டுள்ளதா ' என்று கேட்கிறார்கள்.இறுதியாக பார்க்கப்போனால் இந்த தத்துவ ஞானம் என்பது என்ன ?.இதனால் நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?.சாசுவதமான புகழை அளிக்கக்கூடிய பெருமை இதில் என்ன இருக்கிறது ?.எல்லாம் வெறும் ஏமாற்றம் தான் .தத்துவஞானிகள் என்று புகழப்படுகிறவர்கள் அனைவரும் ,கடைத்தெருவில் உட்கார்ந்து கொண்டு 'என்னிடம் வாருங்கள்; நான் உங்களை ஏமாற்றமாட்டேன் ;சரியான சாமான்களை ஒழுங்காக அளந்து உங்களுக்கு கொடுப்பேன் ' என்று கூவிகிற வியாரிகளைப் போன்டவர்களே.ஒருவர் சித்து பெரிதென்கிறார்;இன்னொருவர் ஜடம் பெரிதென்கிறார்.இப்படி பலரும் பலவிதமாகச்சொல்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை உலகம் புகழ்கிறத்.இவர்களுடைய உபதேசங்களைச் சாசுவதமாக்கி வைக்க அச்சடிக்கிற முறையும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.


- - - ஜான் ஜாக் ரூசோDownload As PDF

சனி, 9 ஜூலை, 2011

தெற்கு சூடானிற்கு ஒரு சிறுவிண்ணப்பம்


இன்று முதல்
தனது உதயத்தைத்தொடரும்
எனதருமை
தெற்கு சூடானே
நீர்
நீடூழி வளமுடனும் நலமுடனும்  வாழ்க .

இந்த இனிய நாளில் நான் உம்மிடம் வைக்கும் ஒரு சிறுவிண்ணப்பம்  யாவெனில் இனி வரும் காலங்களில் ஐ.நா மற்றும் பிற உலக அவையங்களில் நீங்கள் புகழும்படி சிறப்புடன் செயல்படவேண்டும் என்றும் , அத்தகைய அவையங்களில் உலகில் உள்ள  உங்களைப்போல் பாதிக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக  முதற்குரல் கொடுக்கவேண்டும் என்றும் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
மீண்டும் ஒருமுறை
தெரிவித்துக்கொள்கிறேன்,
வாழ்த்துக்கள் .

வாழ்க   தெற்கு சூடான்  வாழ்க .
தெற்கு சூடனைப்பற்றி சில துளி தகவல்கள் :

இதற்காக 48 ஆண்டுகளுக்‍கு மேலாக போராடியுள்ளனர் .

இதன் விடுதலைக்கு 20 லட்சம் பேர் தங்களின் இன்னுயிரை அர்பணித்துள்ளனர் .

இங்கு கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் கல்வியறிவு அற்றவர்கள்,40 சதவீதம் பேர் உணவின்றி வாழ்கின்றனர்.

இது உலகின் 193வது நாடாகவும் , ஆப்பிரிக்‍க கண்டத்தின் 54-வது நாடாகவும் உதயமாகிறது.

சுதந்திரத்தை "We will never, never, never surrender." என ஆடிபாடி கொண்டாடி மக்கள் மகிழ்கின்றனர் .

"ஆ, நான் சுதந்திரமாக இருக்கிறேன்," என 27 வயது போலீஸ் அதிகாரியும் முன்னாள் ராணுவ விரருமான டேனியல் டெங் தனது  துப்பாக்கியை வெடித்து மகிழ்ந்தார்.
..

Download As PDF

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com