புதன், 4 ஜூலை, 2012

இந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?.



இவன்  எங்க வீட்ல வளர்ந்து வர பூனைப்பையன்.




உடம்பில் காதல் சின்னத்தை தாங்கி ஜொலிக்கும் இவனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கின்றேன்.

என்ன பெயர் வைக்கலாம் ?

நல்ல சுருசுருப்பானவன்.

இவங்க அம்மாவும்,தம்பியும் எங்க வீட்லதான்  வளர்ராங்க.

இவன் அம்மா பெயர் கருப்பி,தம்பி பெயர் ராஜா.



நம்மவர்,கருப்பி


இவங்க இங்க எவ்வளவு சுதந்திரமா இருக்காங்கனு  படத்த பார்த்து தெரிஞ்சுக்கங்க.

ராஜா,கருப்பி,நம்மவர்


சரி விசயத்திற்கு வருவோம்......

விலங்குகள் வாழ்கின்றன என்பதும் ,அவைகள் எவ்வாறு வாழ்கின்றன என்பதும் பற்றி மட்டுமே பழங்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை நாம் படித்துவந்துள்ளோம்.

விலங்குகளைப்பற்றியும் அதன் உலகம்  பற்றியும்  நாம் இதை வைத்துத்தான்  புரிந்தும்  வந்துள்ளோம்.
ஆனால், அவைகளின் வாழ்வின் ஊடாக என்ன செய்தியை,தத்துவத்தை நமக்கு சொல்கின்றன ,அவைகளுக்குள் கொண்டுசெல்கின்றன என்பதனை இது வரை நாம் அறிந்தோம் இல்லை. அறிய முயற்சிக்கவும்  இல்லை.

நமக்கு விலங்குகள் என்றால் விலங்குகள் தான்.இதை ஒரு மூடத்தனமாக நான் நினைக்கின்றேன்.

நீதிக்கதைகள் மற்றும் பிற கதைகளில்,விலங்குகளின் மேல் மனிதன் தனது கருத்தையும்,தன்மைகளையும்,அசைவையும் ஏற்றி மனிதனாக விலங்குகளை வெளிப்படுத்தினானே தவிர ,விலங்குகளின் இயல்பை இயல்பாக வெளிப்படுத்தவே இல்லை.

மனிதன் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் உலகை  அறியாமல் ,அவைகள் சொல்லும் செய்தியை உள்வாங்காமல் இவ்வுலகை தாண்ட நினைப்பதும்,பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது கேலிக்குறியதாகவே அமையும்.கடவுளின் துகள் ஹிக்ஸ் போசா( Higgs boson)னும்  மனித குல உயர்விற்கு பயனற்றுத்தான் போகும். 


கடைசியாக எங்க பூனப்பயனுக்கு ,அதனை அதன் தாய் என்ன பெயரிட்டு அழைக்கிறது என்பதனை அறியும் அறிவு வளராத காரணத்தினால்,மனிதனின் மொழியில்,பெயரில்   மதன் என பெயரிட்டுள்ளேன்.இது  சரியல்ல என்றாலும் இது அறியாமை உலகம் என்பதனை எனக்கு நானே உணர்த்த இப்பெயர்.மதனும் அந்த பெயரை எனது அறியாமையை கண்டு நகைத்து இணங்கமுடன் ஒத்துழைக்கிறது.  








.
Download As PDF

17 கருத்துகள் :

தனிமரம் சொன்னது…

Mme!

ADMIN சொன்னது…

////நீதிக்கதைகள் மற்றும் பிற கதைகளில்,விலங்குகளின் மேல் மனிதன் தனது கருத்தையும்,தன்மைகளையும்,அசைவையும் ஏற்றி மனிதனாக விலங்குகளை வெளிப்படுத்தினானே தவிர ,விலங்குகளின் இயல்பை இயல்பாக வெளிப்படுத்தவே இல்லை.////

ADMIN சொன்னது…

படங்கள் அருமை.. படத்தையொட்டிய கருத்துகளும் சிந்திக்க வைத்தன... பகிர்வுக்கு நன்றி ராஜசேகரன் அவர்களே..

MARI The Great சொன்னது…

சிந்திக்க வைக்கும் பதிவு!

cheena (சீனா) சொன்னது…

mmmmm அன்பின் நண்டு - மன்மதன் எனப் பெயர் வைக்கலாமே - சுருக்கமாக மன்ஸ் அல்லது மதன் என் அழைக்கலாமே ! கருப்பி ராஜா எனப் பெயர் வைத்ததும் ஏதோ ஒரு காரணப் பெயர்கள் தானே ! - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

துளசி கோபால் சொன்னது…

மனசில் நிற்கும் மதன் மன்மதன்!

பூனைக்கும் சரி மற்ற இனங்கள் எல்லாவற்றுக்கும் சரி நமக்கு விருப்பமான மனிதப்பெயரையே வைக்கலாம். கூப்பிடப்போறது நாம்தானே!

கற்பகம் என்ற கப்பு, கோபாலகிருஷ்ணன் என்ற கோகி, வரதன் என்னும் வர்து, ராஜலக்ஷ்மி என்னும் ரஜ்ஜூ எல்லாம் நம் வீட்டுப் பூனைகளே!

சின்னப்பயல் சொன்னது…

"காதல் பூனை" வருகுது ரெமோ :-)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனிதனிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளா விட்டாலும், விலங்குகளியிமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

மதன் ... பொருத்தமான பெயர் ! பகிர்வுக்கு நன்றி சார் !

கோவி.கண்ணன் சொன்னது…

// மதன் என பெயரிட்டுள்ளேன்.இது சரியல்ல என்றாலும் இது அறியாமை உலகம் என்பதனை எனக்கு நானே உணர்த்த இப்பெயர்.மதனும் அந்த பெயரை எனது அறியாமையை கண்டு நகைத்து இணங்கமுடன் ஒத்துழைக்கிறது. //

:)

எங்க வீட்டு பெட்டை நாய்க்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அழைத்தோம், அதுவும் ரொம்ப அழகான நாட்டு நாய்

P.S.Narayanan சொன்னது…

சுப்பிரமணி என்ற பெயர் மிகப் பொருந்தும்.

எட்டயபுர அய்யர் எழுதிய ''எங்கள் வீட்டில் வளருது'' பாட்டின் நினைவாக இருக்கும்.

மூன்றாம் பிறை (?) சிறுமி ஸ்ரீ தேவியின் நண்பனும் (நாய்) ச்சுப்பிரமணிதான்.

தனக்கு ஆறு அறிவு உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் மனிதரிடம் இந்த பிராணிகள் வந்து சொன்னனவா என்ன தங்களுக்கு ஐந்து அறிவுமட்டுமே உள்ளன என்று!

பெ ச

சசிகலா சொன்னது…

மனிதன் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் உலகை அறியாமல் ,அவைகள் சொல்லும் செய்தியை உள்வாங்காமல் இவ்வுலகை தாண்ட நினைப்பதும்,பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது கேலிக்குறியதாகவே அமையும்.
உண்மைதாங்க மதன் நல்ல பெயர்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

படங்களும் பதிவும் அருமை!

பெயரில்லா சொன்னது…

இது அறியாமை உலகம் என்பதனை எனக்கு நானே உணர்த்த இப்பெயர்.மதனும் அந்த பெயரை எனது அறியாமையை கண்டு நகைத்து இணங்கமுடன் ஒத்துழைக்கிறது //

-:) நல்வாழ்த்துகள்...

பெயரில்லா சொன்னது…

@ அறியாதக் கடவுளுக்கே பல பல பெயர் இருக்கும் போது , நம்மக் கூடவே வாழ்கின்ற ஜீவனுக்கு பெயர் வைப்பதில் என்ன தவறு .. மதன் நல்ல பெயர் .. மன்மதன்- எனக் கூட வைத்திருக்கலாம்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சஞ்சய்...

இது எங்க வீட்டு பூனைப் பெயருங்க...

நல்லது...

பட்டிகாட்டான் Jey சொன்னது…

இந்த பூனை, நாய் இதுகளோட நெருக்கமா இருக்குரதுல உள்ள ஆனந்தம் அனுபவிச்சாத்தானே தெரியும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வித்தியாசமான சிந்தனை

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "