வியாழன், 12 ஜூலை, 2012

சொர்கத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும்





இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் சொர்கத்தை அடைவதற்கு  ?

20 நதிகள்,46 பார்வதங்கள்,3மலைகள்,27 சாம்ராஜ்யங்களினூடே 600 திரணியங்களை  கடக்கவேண்டும்.

அவ்வளவு தானா ?.

ஹா...  ஹா...  ஹா...

ஏன் ?.

நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல ...அதலால் தான் .

ம் ...

இனி தான் கடினம் என்றால் என்னவென்பதனையே அறியப்போகிறோம்.

ஓ...எப்படி சொல்கின்றீர்?.

முதலாவதாக நாம் இது வரை கடந்த நதிகளை விட இனி நாம் கடக்க இருக்கும் நதிகள் மிகவும் பயங்கரமானவையாம்.

லிடல்,டலாடஸ்,டைகிரிசு  களை விடவா ?.

அப்படித்தானாம்.

ஓ ! ?  ஓ !?  ஓ !?. (சிந்தனையில்)

நாம் கடக்க இருக்கும் நதிகள் சொர்க்கத்திலிருந்து வரும் ஜலசமுத்திரங்களாம் .அதன் போக்கும் சொர்கத்திலேயே
நிச்சயிக்கப்படுகிறதாம்.


ம்..(பெருமூச்சுடன்).

அவைகளில் பாதம் படுவதையே புனிதமான கருதப்படுகிறதாம்.
அவைகளில் நீராடுதலை சொர்க்கத்தில் நீராடியதாகவும் ,அவைகள் செய்த பாவங்களை   கழுவுவதாகவும் எண்ணப்படுகிறதாம்.
அவைகள் பரிசுத்தமானவையாகவும்,தூய்மையானவையுமாக இருந்து  தாங்கள் பயணித்த இடங்களில் வழமையை கொடுத்து தொன்மையை நிரப்பி இயல்பினை  விதைத்துச்செல்கின்றதாம்.

ஆவலாக உள்ளது.


இருந்தாலும் ஆபத்துகள் அதிகம் இருக்கும் அதனால், அவைகளை மிகுந்த விழிப்புணர்வுடன் தான் அணுகவேண்டும்.இவைகள் பற்றி காணாமல் போன ஆடுகள் கூறியதை வைத்து கவனப்படுத்தப்பட்டவை.


ஓ...காணாமல் போன ஆடுகள் ,முழுவதையும் கூறவும்   .










தொடரும்....

இதன் முந்தைய பகுதியை இங்கே பார்க்கவும்







Download As PDF

9 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

சொர்கத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் //

Nice...அடுத்த பகுதியை விரைவில் எதிப்பார்க்கிறேன்.

MARI The Great சொன்னது…

சுவாரஸ்யம்..!

Shandhiya DineshKumar சொன்னது…

superb!!!!!! surprising....

சின்னப்பயல் சொன்னது…

அவைகள் பரிசுத்தமானவையாகவும்,தூய்மையானவையுமாக இருந்து தாங்கள் பயணித்த இடங்களில் வழமையை கொடுத்து தொன்மையை நிரப்பி இயல்பினை விதைத்துச்செல்கின்றதாம்...///

சசிகலா சொன்னது…

ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவாரஸ்மான பதிவு!

குறையொன்றுமில்லை. சொன்னது…

அடுத்த பதிவு எப்போ?

ராஜி சொன்னது…

அடுத்த பதிவிலயாவது சொர்க்கத்தை சீக்கிரம் அடைஞ்சுடுவோமா?

P.S.Narayanan சொன்னது…

ஈரோடு மாவட்ட வழக்கு மன்றத்தில் இருந்து அருகாமையில் உள்ள டாஸ்மாக் எவ்வளவு தூரத்தில் உள்ளது? அது தெரிந்தால்தானே சொர்கத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்று கூற இயலும்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "