வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நகரிய பயணம் .
சத்திர உக்கிரத்தில் நட்சத்திர நாட்டியம்
சிறுசும் பெரிசுமாய் எதிர்மறையாய்
தெரித்தும் தெரியாமலும் தெரிய வைத்தும்
கூடவரும் முன் பின் கை நடுக்கத்தில்
உரசுமுன் மின்னல் மூளையில்
மழை முகத்தில் உடல் சிலிர்ப்பு.
பாடும் பொருள் தெரியாத பாம்பு
ஆட்டியின் காலசைவை நோக்கி
ஹெலிகாப்டருக்கு கை காட்டும்
எண்ணம் விரலில் சிக்கி.
நிற்பது பிரோ லெட்சுமி .. இரு கதவிடுக்கில்
திறந்து மூடப்பட்ட மூச்சுத் திணறல்
நேர்ந்துவிட்ட நிகழ்வுகள் சில இதயத்தில்
தடக் தடக் தடைகளின் மத்தியில்
அழுத்தி அழுத்தி உயிர் கொடுக்கும் மனம்
எரிமலை சிதறலூடே தகிக்கும் கண்கள்
கத்தும் பேய் கூவும் மனம்
கடிக்கப்பட்டு தடித்து குறையும் குரல்
ஆண்டனா பிம்பங்கள் ஏரியல்
அரட்டல்கள் அங்குமிங்கும் ஓடும்
கருவின் வளர்ச்சி பல ஓட்டத்தில் .
தொங்க, தொங்கி கொண்டிருக்கும்
மனித உறுப்புகள் கழற்றி வைக்கப்பட்ட
பிரிக்கப்பட்ட மூல , சேர்ம தொகுப்புகள்.
தெரிந்த முகங்கண்டு தெரிக்கும் புன்னகை.
கண் பார்த்து கை அசைக்கும் ஜாடைமொழி.
ஊடே ஏகும் கரிமச் சேர்க்கையின் பயணம் .
சூரிய முகத்தில் மஞ்சளுக்குள் கருப்பு
காக்கியின் கவனத்தில் கதவை தொடும்வரை
முன்னே பார்த்து பின்னே விடும்
கரிமச் சேர்மத்துடன் என் பயணம்.

இது  கணையாழி   ஜீலை 1993 இதழில் வெளியான என் கவிதை அவ்வளவே .Download As PDF

13 கருத்துகள் :

கும்மாச்சி சொன்னது…

கவிதை அருமை எஸ். ரா. ஸார்.

மதுமதி சொன்னது…

நகரிய பயணம் கவிதை பிடித்தது.நாளை நகரிய பயணம் என்றவுடன் கணையாழியில் வந்த உங்கள் கவிதையை பகிர்ந்துவிட்டீர்களா?

அப்பாதுரை சொன்னது…

கவிதை புரியவில்லை :-)

பெயரில்லா சொன்னது…

உங்களின் கவித்திறன் வியக்க வைக்கின்றது .. என்ன சாதரண வாசகர்களால் பல முறைப் படிக்க வேண்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை !!!

ஆனால் சொற்களும், சொல்லிய விதமும் அருமை !

தங்கம் பழனி சொன்னது…

அருமை.. வார்த்தைகளையும், வரிகளையும் சரியாகப் புரிந்து படித்தால் மட்டுமே விளங்கும் கவிதை.. சாதாரணமானவர்களால் இக்கவிதையை புரிந்துகொள்வது என்பது முடியாத காரியம்.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

கவிதை புரியவில்லை :-)" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

Sasi Kala சொன்னது…

வாழ்த்துக்கள் வரிகள் பிரமாண்டம்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

வாழ்த்துகள். ஆழ்ந்த கருத்துகள்.

அன்புடன்
பவள சங்கரி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வியக்க வைக்கும் வரிகள்... நன்றி சார்...

வாழ்த்துக்கள்... (TM 10)

சின்னப்பயல் சொன்னது…

வாழ்த்துகள்

s suresh சொன்னது…

சிறப்பு!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

வரலாற்று சுவடுகள் சொன்னது…

நல்ல வரிகள்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சத்தியமாகப் புரியவில்லை - 20 வயதில் எழுதிய கவிதையா ? பிரமிக்க வைக்கிறது - ஏன் தொடர்ந்து எழுத வில்லை ? 20 ஆண்டுகள் கடந்தும் கவிதைகள் புத்தக வடிவினில் வர வில்லையா ? வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு முழு நேர கவிஞர் ஆகலாமே ! பல மறுமொழிக்ள் ஆழ்ந்த பார்வை இல்லாத சாதாரண மக்களால் புரிந்து கொள்ள இய்லாத கவிதை எனக் கூறி உள்ளனரே ! உண்மையா ? நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "