வியாழன், 16 ஜனவரி, 2014

ராகுல் பிரதமர் ஆவாரா ?.காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்துள்ள  தவறுகளுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை .இந்நிலையில் தாங்கள் செய்த அனைத்து தவறானவைகளையும்  ராகுல்  என்ற பிம்பத்தை வைத்து மறைக்கப்பார்க்கின்றனர் காங்கிரஸார்.அதனால் ,காங்கிரஸ் கட்சியின்
கடந்த காலம் அனைத்தும் ராகுலின் தலையில் தான் விழுகிறது.
இது மிகப்பெரிய சுமை. இதனை கட்டாயம்  எளிமை ஆக்கினால் மட்டுமே ராகுலால் சுறுசுறுப்புடன் கட்சியுல் இயங்க முடியும்.இல்லையென்றால் கட்சியை பலப்படுத்துவது  என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அதற்கு இரண்டே வழிகள் தான் உண்டு.

 1.காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்துள்ள  தவறுகளுக்கு யார் யார் பொறுப்போ அவர்அவர்கள் கட்டாயம் அவர்அவர் செயலுக்கு பொறுப்பேற்கவேண்டும்.

2.ராகுல் பிரதமராக வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இதற்காண ஏற்பாடுகளை செய்கின்றார்களா என்று பார்ப்போம்.
( இக்கட்டுரை ஒரு அரசியல் பார்வை கொண்ட அலசல் மட்டுமே )
படங்கள் : நன்றி குகூள் மற்றும் இணையம்
Download As PDF

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அலசல் சரி... ஆனாலும் சந்தேகம் தான்...!

Manickam sattanathan சொன்னது…

இதில் சிக்கல்கள் நிறைய,அவர்கள் ஆட்சியில் நடத்தப்பட்ட அணைத்து ஊழல்களுக்கும் அந்தந்த துறை சார்ந்தவர்கள் பொறுப்பேற்று கொள்வதாக வைத்துக்கொண்டாலும், அவரின் மைத்துனர் ராபர்ட் வதேர மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எவருமே இன்று வரை பதில் சொல்லவில்லை . வழக்கம்போல மறுப்புகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. இவைகளை விசாரிக்க, இது கிணறு வெட்ட பூதம் வெளிவந்த கதையாகிவிடும். ராகுலால் மட்டும் என்ன செய்துவிட இயலும்? மொத்தத்தில் இந்த நாட்டு மக்களை பற்றி அவர்கள் கொண்ட அலட்சியம், பொறுப்பற்ற தன்மையே அவர்களை வீழ்த்துவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

naveen kumar duraisamy சொன்னது…

ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராகுல் ஊழலை கண்டு கொள்ளவில்லை வெளி படையாக கேள்வி கேட்கவுமில்லை.
தற்போது தோல்வி பயத்தில் பழி ஏற்று கொள்ளுமாறு கெஞ்சி கொண்டு இருக்கின்றார்.
விளம்பரத்திற்கு 500கோடி செலவு வேறு.
பிரதமர் பதவிக்கு தகுதியில்லாத அனைத்து தகுதியும் ராகுலுக்கு உண்டு

s suresh சொன்னது…

இனியாவது இந்த குடும்ப அரசியல் ஒழியட்டும்! காங்கிரஸ் தலைமைக்கு யார் வந்தாலும் அது உருப்படும் என்று தோன்ற வில்லை!

அ. பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரர்
மிக தெளிவாக தங்கள் கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிலேயே ராகுல் மீது கொஞ்சம் நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் பிரதமர் ஆக அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவே கருதுகிறேன். எது எப்படி இருந்தாலும் நம்ம தற்போது பிரதமருக்கு வேறு யாரு பிரதமரா வந்தாலும் மேல் தான்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "