செவ்வாய், 14 ஜனவரி, 2014

தமிழச்சி கண்ணீர்



தமிழச்சி வடித்த கண்ணீர்

தமிழச்சி வடிக்கும் கண்ணீர்

அன்றும்

இன்றும்

மண்ணில்

புதைக்கப்பட்டே

மறைக்கப்பட்டு

வரலாறாக .

இமைப்பொழுதும்

இனியும் அனுமதியோம்.

எங்கே வீழ்ந்தோமென

இனம் கண்டு

இனி

எங்கும் வீழா

உயர்தோராவோம்

என

இன்றைய நாளில்

உறுதியேற்போம் .


ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.









.
அனைவருக்கும் எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .














மீள்வு.
Download As PDF

9 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

Unknown சொன்னது…

எங்கும் ஊழல். எதிலும் ஊழல்.

எங்கும் இலவசம். எதிலும் இலவசம்.

இந்தியத் தலைநகரங்க்ளில் ஊழல் மிக்க நகரம் சென்னை என்று ஆங்கில சேனெல் ஒன்று கணித்து அறிவித்தது.

திரு சகாயம் ஐஏஎஸ் போன்றோர் தமிழக முதல்வராகும் நாள் வரும்வரை தமிழ்த்தாயின் கண்ணீர் தொடரும். நாம்தான் அதைத் துடைக்க முயற்சி செய்ய வெண்டும்.

எனது பொங்கல் வாழ்த்துக்கள்.

கே. கோபாலன்

அம்பாளடியாள் சொன்னது…

வீரியம் கொண்ட வரிகளைப் போல்
வீழ்ச்சியும் தகர்ந்து உயர்வு பெற
வாரியே வழங்கும் இவ் வாழ்த்தொலிகள்
வழி செய்ய வேண்டும் எந்நாளும் ....!!

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் ....

பொங்கித் ததும்பும் இதயங்களில்
மகிழ்வு பொங்கட்டும்
போகும் இடங்களில் செல்வாக்கு
விரைந்து பொங்கட்டும்
அங்கம் முழுவதும் நோயற்ற
வாழ்வு பொங்கட்டும்
அகத்தில் சூரிய ஒளி போலே
உணர்வு பொங்கட்டும்
தங்கத் தமிழைக் காக்கும் மன
வெள்ளம் பொங்கட்டும்
தமிழே தமிழே தமிழே வாழ்வெனத்
ததும்பிப் பொங்கட்டும் ....

அம்பாளடியாளின் அன்பில் விளைந்த வாழ்த்தொலிகள் இது தமிழ்த்தாய் பெற்றெடுத்த சொந்தங்கள் அனைவருக்கும் !

Unknown சொன்னது…

அன்பு நண்பரே
மாற்றுவோம் என்ற நம்பிக்கை உண்டு...

வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Manimaran சொன்னது…

செம.. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அ.பாண்டியன் சொன்னது…

அழகான வரிகள். நல்லதொரு சிந்தனைக்கு நன்றிகள்
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சிறப்பான வரிகள் ...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Vadivelan V சொன்னது…

இங்கு அனைவரும் அரசியல் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கும்போது தமிழச்சியின் கண்ணீரை துடைப்பவர் யார் நண்பரே ! ?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "