புதன், 12 மார்ச், 2014

காந்தி விரும்பிகளின் வரலாற்றுத்தவறும் ,காந்தியின் படுகொலையும் .



இக்கட்டுரை யாரையும் குறைகூறவேண்டும் என்றோ  ,
யார் மனமும் புண்படவேண்டும் என்றோ  ,
யாரையோ பாதுகாக்க வேண்டும் என்றோ  எழுதப்பட்டது  அல்ல.
இந்தியர்களின் காந்தி மனேபாவத்தையும்,அதனால் இந்தியா அடைந்து வந்துள்ள பின்னடைவுகளையும் ஆய்ந்து எழுதப்பட்டது அவ்வளவே.

காங்கிரசின் வளர்ச்சி முழுக்க முழுக்க  காந்தி விரும்பிகளின் உழைப்பும் அதைத்தொடர்ந்து , அதனைத்தொடர்ந்த ஒன்றும் அறியாத சாமானியர்களின் நம்பிக்கையையிலுமே இன்றுவரை இருந்துவருகிறது.அதில் காந்தியவாதிகளும் அடங்குவர்.(காந்தி விரும்பி அனைவரும் காந்தியவாதிகள் அல்லர்).

சாமானியர்களுக்கு காந்தி விரும்பிகள் யார்?  காந்தியவாதிகள் யார்? என இனம்காண முடியாமலே,அனைவரையும்  காந்தியவாதிகளாக  என நினைத்து கண்மூடித்தனமாக அதனை பின்பற்றத்தொடங்கி,அதுவே  காங்கிரஸின் பலம் ஆகி,நாளடைவில் அதுவே காங்கிரஸ் ஆகி ...

காந்திக்கும் இன்றைய காங்கிரஸிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அனேகருக்கு இன்னமும் தெரிவதில்லை.தமிழகத்தை தவிர பிற மாநிலங்களின் பெரும்பான்மையினருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை.

சரி ,காந்தி கொலை பற்றி வருவோம்.

காந்தி பற்றி விமரிசிப்பவர்கள் அவரைப்பற்றியும்,அவரின் மரணத்தைப் பற்றியும் கூறுவது அனைத்தும் அறிவுஜிவி முகமூடிக்காக மட்டுமே தவிர அவைகளில் உண்மைத்தன்மைகளோ,ஆய்வின் கூறுகளோ,ஆய்வு காண்ணோட்டமோ சிறிது கைட இல்லாது இருப்பதை ஆய்வர்கள் நன்கு அறிவர்.

மேலும்,காந்தியின் கொலை பற்றி இன்றுவரை எந்த  காந்தியவாதியோ,காந்தி விரும்பிகளோ ஆய்வு செய்யவில்லை.அந்த எண்ணம் கூட அவர்களிடம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தான் விருப்பிய தலைவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதனை ஐயந்திரிபற அறிந்துகொள்ள விளைபவரே , உண்மையான தொண்டர்,பின்பற்றுபவர்,நேர்மையாளர் ஆவார்.
ஆனால் காந்தியவாதிகளோ,காந்தி விரும்பிகளோ இன்று வரை செய்து வருவதெல்லாம், காந்தியின் பெயரிலான விளம்பர விருவிருப்பு காந்திமோக சுவாசித்தலையே தவிர வேறு ஒன்றும்இல்லை.

இன்றும் கூட காந்தியவாதிகளில் அனேகர் காந்தியின் இறப்பிற்கு காரணம் என காங்கிரசு கூறுவதையே அழுத்தமாக நம்பிக்கொண்டும்,அதனையே கூறிக்கொண்டும் வருகின்றனர்.காந்தியவாதிகளே  நம்பும் இந்த விசயத்தை காந்தி விரும்பிகளும்,சாமானியர்களும்  கண்மூடித்தனமாக  நம்ப ஆரம்பித்து,
இன்று வரை அந்த பாரத்தை ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்தி ,உண்மை என்னவென்றே தெரியாமல் பயணிக்கின்றது இந்திய வரலாறு.இது ஒரு வரலாற்றுத் தவறு.

காங்கிரசின் மீதான சாமானிய மக்களின் எதிர்ப்பை  பாஜக அருவடை செய்யமுடியாமல்  போனதற்கான காரணம் ,காந்தியவாதிகள் மற்றும் காந்தி விரும்பிகளின் ,இந்த வரலாற்றுத்தவறே.இது தான் தற்கால இளைய சமுதாயத்தையும்,காந்தியவாதிகளையும் ,படித்த நடுத்தர மக்களையும், அகிம்சை விருமபிகளையும் ,சமூக ஆர்வளர்களையும் பாஜக பக்கம் சேரவிடாமல் தடுப்பதோடு.இது போன்ற வரலாற்றுத் தவறுகளினால் தான்  நாடு இப்படி ஆனது என்றும்,இப்படிப்பட்ட வரலாற்று தவறே,மேலும் மேலும் காங்கிரசை வளப்படுத்தி நாட்டை பலவீனப்படுத்தி இன்று நாடு ஊழல்,ஏழ்மை,சுரண்டலில் மூழ்கி  தவிக்கிறது என்பதனையும் இதனை ஒவ்வொரு இந்தியனும் உணரவேண்டியது ,தற்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக  உள்ளது என்பதனையும் ,உணர்த்தவேண்டிய கடமை நம்மைப் போன்ற ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது என்பதனையும் இங்கு பதிவு செய்கிறேன்.

காந்தியின் கொலை பற்றிய ஆய்வு நடந்து  வருகிறது என்பதனையும்,அது வெளிவரும்பொழுது முழுஉண்மையும் தெரியவரும் என்பதனையும், இந்தியாவின் வரலாற்றில் உயர்ந்த பீடத்தில் இருந்த உயர்ந்த மனிதர்கள் சிலர் அப்பொழுது கருப்பு ஆடுகளாக ஆக்கப்படுவார்கள் என்பதனையும் இங்கு பதிவு செய்கிறேன்.






தொடரும் ...




படங்கள் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உணர வேண்டியவர்கள் உணர்வார்களா என்பது சந்தேகம் தான்...

ஜீவ கரிகாலன் சொன்னது…

thought provoking post

- jeeva.karikalan

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சரியான கருத்துக்கள்! வரவேற்கிறேன்! நன்றி!

G.M Balasubramaniam சொன்னது…

வரலாற்றுத் தவறுகள் காந்தி விரும்பிகள் செய்வது மட்டுமல்ல. மதம் கலாச்சாரம் என்று கூறி அதன் போர்வையில் தவறுகள் மறைக்கப் படுகின்றன. அல்லது மறுக்கப் படுகின்றன. நான் முன்பு எழுதிய ஒரு பதிவு கலாச்சாரக் காரணங்கள் சுட்டி கீழே. படித்துப் பாருங்கள்
gmbat1649,blogspot.in/2011/07/blog-post_18.html wanRi

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "