ஞாயிறு, 16 மார்ச், 2014

மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை 2014 .



india political leaders faces












தேசிய கட்சிகளில் முதன்மையான கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ள நிலையில் , மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் ,எப்படி இருக்கவேண்டும் என நினைத்துப்பார்த்து தெடுக்கப்பட்ட தான் இந்த அறிக்கை.இதில் கூறியுள்ளவைகளை நிறைவேற்றுவது சாத்தியமா என்றால் 100 சாத்தியமே.மேலும்,இந்த அறிக்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் மக்களுக்கு முன்பே சென்றடைந்திருக்கவேண்டும்.மேலும்,மக்களும் அதன் பயனையும் தற்பொழுது  அனுபவித்து கொண்டிருக்கவேண்டும்.


....



 மிகச்சிறந்த தேர்தல் அறிக்கை 2014  





 1 ரூபாய்க்கு   1 யூனிட்   வீட்டு உபயோக மின்சாரம் .











1ரூபாய்க்கு   3 நிமிடம்  என தனி நபர் பயன்பாட்டிற்கு  மொபைல் சர்வீஸ்  .







 
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூபாய் 100க்கு .











பொட்ரோல் 1 லிட்டர் ரூபாய் 25 , 
டீசல் 1 லிட்டர் ரூபாய்  18 ,
மண்ணென்ணை   1 லிட்டர் ரூபாய் 5 என தனி நபர் பயன்பாட்டிற்கு  .





பெட்ரோல்,டீசல் மற்றும் சமயல் எரிவாயு விலைகளை இனி அரசே  .









ரூபாய்  10 லட்சம் வரை வருமான வரிவிலக்கு.









குடும்பத்திற்கு  ரூபாய் 10 லட்சம் மருத்துவ காப்பீடு















குழந்தைகள்,பெண்கள் மற்றும்  முதியோர் பாதுகாப்பு.










அனைத்து மொழிகளும் அரசு மொழி,
அனைத்து மொழிகளும் ஆட்சி  மொழி,
அனைத்து மொழிகளும் அலுவலக  மொழி .





(இதன் மூலம் இனி அனைவரும் அவர்அவர் மொழிகளில் பாராளுமனறத்திலும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும்  தங்களின் கருத்துக்களையும்,வாதங்களையும் முன்வைக்கலாம்.
இதன் மூலம் தமிழிலே  தமிழர்கள் பாராளுமனறத்திலும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும்  தங்களின் கருத்துக்களையும், வாதங்களையும்  இனி முன்வைக்கலாம் )






குழந்தைகளுக்கு மிகத்தரமான உயர்தரக்கல்வி,

இளைஞர்களுக்கு மதிப்புமிக்க வேலைவாய்ப்பு,

சுகாதாரமான பாதுகாப்பான நிம்மதியான குடும்பவாழ்வு,

முதியோருக்கு மன நிறைவான ஓய்வு,

சுரண்டல் அற்ற சமூதாயம்     ...



என  ...இப்படி இருக்க வேண்டும்... என்ற எதிர்பார்ப்புடன்.                                                   

    



படங்கள் உதவி நன்றி இணையபக்கங்கள் மற்றும் கூகுள்
Download As PDF

14 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! சொர்க்கம்...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தேர்தல் அறிக்கை நன்று. சாத்தியமானால் மகிழ்ச்சி.யாராவது சொல்கிறார்களா பார்ப்போம்

G.M Balasubramaniam சொன்னது…

அறிக்கைகள் வெளியிடுவது எளிது. பெர்ம்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செயல்பாடுகள் குறித்து ஏதும் சொல்லாதவரை. எத்தனையொ நல முன்னேற்றங்கள் செயல்பாடுகளில் குறையுடையதாகவே காண்கிறோம். “அத்தனைக்கும் ஆசைப்படு. பலகணி திறந்திருக்கட்டும் சுத்தமாக காற்று வரட்டும் ”

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இது சாத்தியமானால் இந்தியா சொர்கம்தான்! நன்றி!

Unknown சொன்னது…

முதல் 4 அயிட்டம் 1990 ல் இருந்தது. அடுத்த அயிட்டம் 1930 ல் வரும். நடந்தது மேலும் நடக்கும்.

ஜோதிஜி சொன்னது…

பயந்தே போயிட்டேன். நமக்குத் தெரியாமல் யாராவது கொடுத்து இருப்பார்களோ என்று? நம்பிக்கை நிஜமாகட்டும்.

Lakshmanan17 சொன்னது…

இது சாத்தியமானதுதான் அதுவும் வெரி வெரி சிம்பிள் - தட்ட வேண்டியதைத் தட்டி ஒடுக்க வேண்டியதை ஒடுக்கி - இது எனக்கு தெரியவே தெரியாதே என்றால் உதைத்து அடக்கி மடக்கி - இதில் வன்முறையே இல்லை - எல்லாமே சட்டப்படிதான் - நீதியும் பரிபாலனமும் - கடமையும் உரிமையும் இதுதான் இதுவன்றி வேறில்லை என இடித்துக் காட்ட முடியும் - முடியாதென்று யாரேனும் சொல்லுங்கள் பார்க்கலாம் - அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்ற வேத வாக்கே நம்மிடாம் உள்ளது. முடியும் நிச்சயமாக முடியும்

Unknown சொன்னது…

பாமரனின் கண்ணோட்டத்தில் உள்ளது தேர்தல் அறிக்கை ,நடந்தால் நன்றுதான் !ஆனால் எந்த அரசியல்வாதியின் கண்ணோட்டம் இப்படி இருக்கும் ?
த ம +1

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சரியான கோரிக்கைகள்
பதிவாக்கித் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 6

Unknown சொன்னது…

நியாமான கோரிக்கைகள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹலோ! சார்! இது கண்டிப்பாக சாத்தியப்படுமா? சத்தியாமாக இது யாராவது கொடுத்திருக்கின்றார்களா? நினைத்தாலே இனிக்கும் போல உள்ளது! இப்படியெல்லாம் போட்டு எங்களை கனவு காண வைத்துவிட்டீர்களே!!!!

கொஞ்ச நேரமாவது சந்தோஷமாக இருக்க வைத்தீர்களே அதற்கு மிக்க நன்றி!

G.M Balasubramaniam சொன்னது…

இது கோரிக்கையா தேர்தல் அறிக்கையா. ?

shreeni சொன்னது…

தமிழ் நாட்டில் வீட்டு உபயோக மின்சாரக்கட்டணம் 100 யூனிட் வரை ரூபாய் 1 தான் என்பதை தாங்கள் மறந்துவிட்டீர்களா. அம்மா மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால் ம்ற்றவையும் கிடைத்திருக்கும்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "