வெள்ளி, 21 மார்ச், 2014

மோடி அலையால் தமிழகத்தில் எழுந்த மேருமலை.




இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக
பலிகடாக்களாக ...
கம்யூனிஸ்டுகள், உடன் பிறப்பு... என
தமிழக அரசியலில் நடந்த நாடகங்கள்
எத்தனை ? ... எத்தனை ? ...

இதற்கு சாத்தியமே கிடையாது,
இப்படி ஒன்றும்  ஏற்படவே ஏற்படாது
என்றெண்ணி
தங்களின் பிரச்சாரத்தை தொடங்கி
அவரவர் பவனி வந்து கொண்டிருக்கும் வேலையில்

அனைத்து கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தி

பாஜக,
தேமுதிக,
பாமக,
மதிமுக,
கொமதேக,
ஐஜேகே
என ஒன்றிணைத்து
ஒரு மகத்தான வெற்றிக்கூட்டணியை
தேசிய ஜனநாயக கூட்டணி
தமிழகத்தில் பெற்றுள்ளது.

இந்தியாவெங்கும்
மோடி அலை விசிக்கொண்டிருக்கும் வேலையில் ,

அது தமிழகத்தில்
ஒருபடி மேலே சென்று ,
மோடி அலை  மலையாகி ,
அமைதியாக தேர்தலை எதிர்கொண்டு காத்திருக்கிறது.

மோடி அலையில்
எழுந்த இந்த மலை
மேருமலைக்கு ஒப்பாகும்
என தேர்தல் ஆய்வர்கள் கருதுகின்றனர்.


வாழ்க பாரத மாதா.
.

Download As PDF

13 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தேர்தல் முடிவு அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் நண்பரே

Unknown சொன்னது…

இதற்கு சாத்தியமே கிடையாது,
இப்படி ஒன்றும் ஏற்படவே ஏற்படாது
என்றெண்ணி
தங்களின் பிரச்சாரத்தை தொடங்கி
அவரவர் பவனி வந்து கொண்டிருக்கும் வேலையில்
.................................
really?

Unknown சொன்னது…

நேரு சகாப்தம் முடிந்து மேரு சகாப்தம் தொடங்குமா ?பொறுத்திருந்து பார்ப்போம் !
த ம 2

பொன் மாலை பொழுது சொன்னது…

உங்களிடமிருந்தே இவ்வாறான கருத்துக்கள்தான் மிக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்திகிறது. . இதே கருத்துக்களை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பிளாக்கில் பகிரும்போது கிண்டலடித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனாலும் உங்களின் நேர்மையான அணுகுமுறைகளுக்கு பாராட்டுக்கள் தோழரே!

Unknown சொன்னது…

இந்த தெருதலில் மோடி யின் ஆட்சி த்தான் வரவேண்டுமென்ற ஆவல் நாடெல்லாம் பரவி இருக்கிறது . மோடி பாரத நாட்டை வுலக அளவிலே நேம். 1 நாடாக ஆக்கவேண்டுமென்ற ஆவல் அவருக்கும் இருக்கிறது ; மக்களுக்கும் யிருக்கிறது . துரத்ரிஷ்டமாக மற்ற எந்த கட்சி தலைவருக்கும் இந்த ஆவல் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது .= விஜயமோகன்

bandhu சொன்னது…

தமிழகத்தில் இருக்கும் உங்களால் இதை சரியாக கணிக்க முடியும் என நினைக்கிறேன். இணையத்தின் வழியே தமிழகத்தை பார்க்கையில் திமுக / அதிமுக இடையே மட்டுமே போட்டி என்ற தோற்றம் தெரிகிறது. நீங்கள் சொல்வது நடப்பதே நல்லது. அதையே நானும் வேண்டுகிறேன். பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்ப்போம்...!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Lakshmanan17 சொன்னது…

பி ஜெ பி தமிழக கூட்டணி ஓர் அலசல்
தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் காலம் காலமாக – நான் சொல்வது ஓர் ஐம்பது ஆண்டு காலமாக – திமுக அதிமுக என்ற ஊழல் குட்டையில் ஊறிய பழம் பெருச்சாளிகளாகத்தான் இன்று வரை இருக்கிறார்கள். பெரிய அரசியல் விழிப்புணர்வு எல்லாம் எப்பவுமே இருந்ததில்லை. திருமங்கலம் ஃபார்முலா போன்ற அவமான அடையாளங்களைப்பற்றி துளியேனும் வெட்கப்பட்டதில்லை மாறாக அவை கிடைக்காமல் போனபோது வெறுப்படைந்து இருக்கிறார்கள். இலவசங்க்களுக்கு ஆளைய்ப் பறந்திருக்கிறார்கள். அதீத தூண்டல் பெற்ற 2 ஜி மற்ற கொள்ளைகளைக் கண்டு கோபமுற்று கருணாநிதியைத் துரத்திவிட்டு அதிமுகவைத்தான் பட்டமேற்று வைத்தார்கள். தமிழருமணியன் போன்ற நல்ல உள்ளங்கள் “wishful thinking” என்ற வகைக் கருத்தில் இந்த 4 அல்லது ஐந்து பேர் கூட்டணியை ஏற்படுத்தினார். அதுவும் இழுபறியில் சென்று ஓர் உணர்வில் ஒன்ருபட்டது போலத்தெரிகிறது. கண்ணுக்குத் தெரிந்த / தெரியாத எதிர்ப்புணர்வு விஜயகாந்த் மற்றும் ராமதாஸிடையே நீறு பூத்த நெருப்பாகக்கூட இல்லாமல் தெளிவாகவேத் தெரிகிறது. இன்று வரைகூட புதுச்சேரியில் நான் நின்றே தீருவேன் என ராமதாஸ் அறிவிக்கிறார். இவற்றைப்பார்க்கும் போது முடிவு நன்றாகவே தெரிகிறது. இதற்குமேல் இதில் விளக்க ஒன்றுமே இல்லை

G.M Balasubramaniam சொன்னது…

இந்தக் கூட்டணி வெற்றி பெருமானால் கடவுள்தான் இந்த நாட்டைக் காக்க வேண்டும். கூட்டணி சேர்ந்தவர்கள் எந்த ஒத்தக் கருத்தின் அடிப்படையில் சேர்ந்தார்கள். எல்லாமே அரசியல் ஆதாயம் தேடி. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்

குலவுசனப்பிரியன் சொன்னது…

நண்டுவின் பகடி அவர் காவி ஏற்றிய மேருமலையில் புதைந்து இருக்கிறது.

விளக்கம்:
தாமரைப் போல பரந்து விரிந்த பூமியின் நடுவே மேருமலை உள்ளது
அதனைச் சூழ்ந்து இரசம், அமிர்தம், பால், நெய், தயிர் முதலான ஏழு கடல்கள் உள்ளன.

சுட்டி:
//http://nirmukta.com/2012/09/05/hall-of-shame-on-a-hindutva-apologists-recent-lectures-at-iit-madras/

”தளிர் சுரேஷ்” சொன்னது…

முரண்பட்ட கூட்டணி முந்தி வருமா? காலம் பதில் சொல்லும்! பார்க்கலாம்!

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா வின் எதிர்பார்ப்பு உண்மையாகுமா? பார்ப்போம்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "