சனி, 23 ஏப்ரல், 2016

அழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை? எவை? எப்படி? எப்படி?


 “அரசியல் அறிவு பெற முயலாதவன் சமுதாய விலங்காவான்”"அரசியலை சாக்கடையாக்கி விட்டார்களே ஒழிய அரசியல் சாக்கடை அன்று"


நண்டு : தேர்தல்  சூடு பிடித்து ???

 நொரண்டு : மக்களின் கைமையில் ஆட்சியைப் பிடிக்க அனைத்து யுத்திகளையம் மேற்கொள்ள வேண்டும்தானே. அப்பொழுதுதானே கட்சி அதன் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த முடியும். அது தானே ஒவ்வொரு கட்சித்தலைவரும் விரும்புவர்.

நண்டு :  அப்போ, மக்களை ஏமாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்

 நொரண்டு : மக்களை ஏமாற்றுவது என்பது வேறு,  ஒரு கட்சி தனது ஸ்திரத் தன்மையை நிலை நாட்டுவது என்பது வேறு. பொதுவாகவே ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றி ஓடடுகளை வாங்குகின்றனர் என்பது பழுத்த ஜனநாயக நாட்டில் நடக்க முடியாத ஒன்றாகும். ஆனால் மக்களை,தங்களின் வாக்காளர்களாக தங்களின் கட்சியின் தொண்டர்களாக வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு யுத்தியை தன்னுள்ளே வைத்திருக்கும்.
ஏமாற்றுகின்றனர், ஏமாற்றிவிட்டனர் , ஏமாற்றப்படுவது என்பதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த மக்களின் மீது குவியும் கருத்து.ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தொண்டர்களை ஏமாற்ற விரும்புவது கிடையாது.ஏமாற்றவும் செய்யாது.சூழல் சரியில்லாமல் போகலாம்.

நண்டு : அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே வருகின்றதே.

 நொரண்டு : ஜனநாயகத்தின் படிநிலை வளர்ச்சியில் இது ஒரு அத்தியாயமாகும்.மக்களாட்சி தத்துவம் இன்னும் சோதனை முயற்சியாலேயே இருக்கிறது.சாக்ரடீஸூக்கு முந்திய கால கட்டத்தில் தான் அனைவரும் உள்ளனர்.ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள, வழப்படுத்திக்கொள்ள, நிருவனமாகிப்போவதால் தங்களின்  நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகின்றது.

இன்று
தற்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் சிறந்த நிர்வாகிகளை நாடுகின்றன.
நிர்வாகிகளாக இருக்க அக்கட்சியும், அரசியல் தளத்திலிருந்து நிருவாகத்தளத்திற்கு இடம் பெயர்கின்றது.இப்படிப்பட்ட  நிர்வாகிகளைக் கொண்டவைகளாக  அரசியல் கட்சின் இருக்கின்றது.
எனவே,
சிறந்த  நிர்வாகிகள் கொண்ட அமைப்பு சிறந்த அரசியல் கட்சியாக தெரிகிறது.
நிர்வாகிகள்  மேல் மட்டத்திலிருந்து அடித்தட்டு தொண்டர்வரை பல தட்டுகளில் இருக்கின்றனர். நிர்வாகிகளில் சிறந்த நிர்வாகி சர்வதிகாரிக்கு ஒப்பான செயல்களையே கட்சிக்குள் மேற்கொள்வார்.இதுசர்வாதிகார கொடுங்கோல் அரசை வீழ்த்த ஏற்பட்ட ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட முதல் அடியாகும்.

நல்ல நிர்வாகியால் நல்ல செயல்கள் நடப்பதுபோல் தோன்றினாலும்
 ஜனநாயகத்திற்கு பின்னடைவே பின்னிட்டு ஏற்படும். இப்படிப்பட்ட நிர்வாகிகள் மூலம்தான் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபித்துக் கொண்டு வருகின்றன.இப்படிப்பட்ட நிர்வாகிகள்தான் தங்களின் அதிகாரத்தை பிரயோகம் செய்து தங்களின் ஸ்தானத்தை நிலைப்படுத்திக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்கின்றனர். 

அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் தான் அட்டூழியங்களும், அட்டகாசங்களும், சாகசங்களும், வித்தைகளும்,குரங்கு மாதிரி அந்தர் பல்டிகளும், அரசியல் கலத்தில்.

சிறந்த அரசியல் தலைவர்களால் தான் சிறந்த அரசியல் கட்சிகளை நிலைநிறுத்த முடியும்.

நண்டு :  சிறந்த அரசியல் தலைவர்கள் என்றால் ...

 நொரண்டு : அரசை,அரசியல் கட்சியை தலைவராக இருந்து ஒருவர் வழி நடத்த வேண்டும். நிர்வாகியாக இருந்து நிர்வகிக்கக்கூடாது.நல்ல நிர்வாகிகள் மக்களைப் பார்க்க மாட்டார்கள்.இத்தகைய  நிர்வாகம் சார்புடையது.தலைவர்களிடம் சர்வாதிகாரப் போக்கு காணப்படாக்கூடாது சிறந்த அரசியல்  தலைவர் மக்களை மட்டுமே பார்ப்பார் . 

நண்டு : புதுப்புது அரசியல் கட்சிகள் தோன்றிக்கொண்டே உள்ளதே ......

 நொரண்டு : “அரசியல் என்பது வாழும் முறை” என்றாகிவிட்ட சமூகத்தில்
அரசியல் என்பது வாழ்வாகி விடுகின்றது.நாம் அனைவரும ஒட்டுமொத்தமாக அரசியல் அடித்தளத்தில் இருக்கின்றோம்.தனிமனிதன் தொட்டு ,அனைத்தையும் அரசியல் பதம் பார்த்துக் கொண்டுள்ள நிலையில் ,அது தவிர்த்த ஒரு நிலையை மனிதன் சிந்தித்துப்பார்க்கக்கூட முடியாதபடி அவனுடன்  ஜக்கியப்படுத்திக்  கொண்டுவிட்டாது அரசியல்.

இப்படிப்பட்ட சூழலில் ,அரசியல் என்னும் மையம் ,மெல்லமெல்ல பற்றியபொழுது ,மேலும் மனிதன் தன்னுடைய மையத்தை அரசியலின்பால் நகர்த்தி ,முடித்த அளவு தன்னை முன்நிறுத்தி  ,தனது வாழ்வை வளப்படுத்தி, நலப்படுத்தி, சுகப்படுத்திக் கொண்டு ,பின் தனது வம்சத்தையும், அதன் வழியிலே அமர்த்தி, தனது வாழ்வையும், வம்சத்தையும் வடம்பிடிக்க வைத்தான். தன்னை முன்நிறுத்த அவனுக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது, கிடைத்தது, பயன்படுத்திக் கொள்கின்றான்.

தான் முன்நிறுத்த ஏதுவாக ,தனக்கு பின் பல கைகள் தேவை என்பதனையும் ,அவைகள் அசையா கைகளாக இருக்க ,தன்னிடம் நிலையாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்த அவன், அதனை ,தனது பயணத்தில் தொடர்ந்து பெற்றுக்கொண்டே வந்த அனுபவத்தின் மூலம் ,பெற்ற அறிவின் துணையுடன், கண்டுகொண்டு, அதன்மூலம் ஒரு முடிச்சைப் போடுகிறான். அந்த முடிச்சுதான் அவனைத் தலைவனாக்குகிறது. மற்றவர்களை அவனின் தொண்டர்களாக்குகிறது. அந்த முடிச்சுதான் அவனின் உயிர்மூச்சாகின்றது, பேச்சாகின்றது. அவனின் கொள்கையாகிறது ,அந்த கொள்கைகளை முந்நிறுத்த ,அவனால் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.  அப்படிப்பட்ட முடிச்சு யாராலும் அவிழாத படி இருக்கும்படியும், தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கும்படியும், விடைகாணா தேடுதல் வேட்டையிலேயே , போடும் கேள்விகளிலே ,திக்குமுக்காட வைத்து ,தொண்டர்களை தூங்க வைத்து ,வேட்டையாடி வித்தைகள் பல கற்றுக் கொள்கின்றான். வசீகரத்திலே (அது பேச்சாக இருக்கலாம், தோற்றமாகவும் இருக்கலாம், கருத்தாகவும் இருக்கலாம்),மயக்கி, மயங்கி விழுந்த மனிதன் , தொண்டராகவே தொடரும் அவலம் தொடர, தலைவன் மட்டும் ,வடத்தை தனது பகுதிக்குள் இழுத்துக்கொண்டே ,விடை காணா முடிச்சுடன் ப,ல மட்டங்கள் குட்டி, குட்டி தலைவர்களை உருவாக்கிக்கொண்டே ,சுழல்கின்றான். அவன் ,தான்தலைவாகவும், மற்றவர்கள் தொண்டனாகவும் ,சிம்மாசன போட்டியை அடைகிறான். இப்படிப்பட்ட சிம்மாசன போட்டியில்தான் ,முடிச்சுகளின் ஆழங்கள் பார்க்கப்படுகிறது. அப்பொழுது ஏற்படும் கருத்து மோதலின்போது ,வெடித்து சிதறுவதுதான் ,அவன் போட்ட முடிச்சு .முடிச்சு அவிழ்ந்தால் கட்சி என்னவாகும்.தொண்டர்கள் அவிழ்ந்து போவார்கள். அப்படியெனில், முடிச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும். எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கவேண்டும். எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு ஆதாயம் அதிகம். ஆனால் , தொண்டர்கள்  கொள்கைக்காகவே வாழ வேண்டும். ஆனால் ,கொள்கைப் பற்றி முழு அறிவும் பெற்றுவிடக்கூடாது. பெற்றுவிட்டால் ,தலைவன் தலைவனாக இருக்கமாட்டான். அந்த அளவு கொள்கை இருக்க வேண்டும். 

இப்படிப்பட்ட நெருக்கடியில் ,அரசியல் வாழ்வாகிவிட்ட சமுதாயத்தில் தானும் ஏதாவது ஒரு கட்சியை  அரசியல் சமூக மனிதன் தொடுகின்றான் .
சமூக மனிதன் தொண்டனானால் ,தொண்டன் என்பவன் முடிச்சுக்குள் வரவேண்டும்.முடிச்சே உயிர் மூச்சாக நினைக்க வேண்டும்.ஆனால் ,உயிடன் இருந்து என்ன பயன் என்ற கேள்வியை மட்டும் கேட்கக்கூடாது. இப்படியாகத்தான் சமுதாயத்தில் அரசியல் கட்சி உருவாகிக்கொண்டே இருக்கிறது.

நண்டு :  இப்படி உருவாகும் கட்சியின் ஆயுட்காலம் எதைப்பற்றி அமையும்?.

 நொரண்டு : முடிச்சுக்கு ஆதாராமான கருத்தில் உள்ளது அதன் ஆயுட்காலம். அந்த கருத்து தொடர்ந்து அக்கட்சியை வழிநடத்தி செல்லும் .அவையே அக்கட்சியின் ஆணிவேர் ,ஒரு கட்சி தொடர்ந்து, அதன் வேராகிய கருத்தை தழுவியே செல்ல வேண்டும்.எவ்வளவுக்கெவ்வளவு கருத்து ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதே , கருத்தை பின்பற்றுகிறதே, அவ்வளவுக்கவ்வளவு அக்கட்சியும் வேறுன்றி பரவி செழிக்கும்.

ஆழமான ,அழுத்தமான, மனித நேயம் கொண்ட சிறந்த கொள்கை ,கோட்பாடுகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட இயக்கங்களின் கருத்திலிருந்து தோன்றும் அரசியல் கட்சிகள்தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயம் என்பதில் ,அரசு என்ற கட்டமைப்பில் ,அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் , சமுதாயத்தையும், அரசையும் தாண்டி இருக்கும்பட்சத்தில் ,அக்கட்சி அந்த சமுதாயத்தில், அரசியல் நிலையான இடத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும். அது தொடர்ந்து தனது ஆளுகையை செலுத்திக் கொண்டே இருக்கும். அதன் செயல்பாடுகள் ,அந்த அமைப்பைத் தாண்டி பயனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது விரிவடையும் விதியாகும். இவ்வாறு விரிவடையும் தன்மையுடையவைகள் தான்  காலத்தால் தொடர்ந்து மக்களுக்கு பயனடையும் அமைப்பாக இருக்கும்.


Download As PDF

18 கருத்துகள் :

sury Siva சொன்னது…

a good analysis on political science.

subbu thatha.

தங்கம் பழனி சொன்னது…

அருமை

GOVINDARAJU ARUNACHALAM சொன்னது…

loud thinking

GOVINDARAJU ARUNACHALAM சொன்னது…

loud thinking

S.Arunkumar சொன்னது…

Too good sir

சோலச்சி சொன்னது…

அருமையானதொரு பதிவு

KILLERGEE Devakottai சொன்னது…

சரியானபடி அலசல் பேட்டி நண்பரே மிகவும் ரசித்தேன்
எனது தளத்தையும் இணைத்து வைத்து இருக்கின்றீர்களே.... நன்றி
த.ம. 2

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

மிகவும் ஆழமான அருமையான பதிவு! எத்தனை பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. ஆனால், எளிமையாகத் தொடங்கி போகப் போகக் கட்டுரையின் கனம் கூடி வந்ததை ரசித்தேன். "தொண்டர்கள் கொள்கைக்காகவே வாழ வேண்டும். ஆனால் ,கொள்கைப் பற்றி முழு அறிவும் பெற்றுவிடக்கூடாது. பெற்றுவிட்டால் ,தலைவன் தலைவனாக இருக்கமாட்டான்" என்ற வரிகள் நறுக்குத் தெறித்தன!

//ஒரு கட்சி தொடர்ந்து, அதன் வேராகிய கருத்தை தழுவியே செல்ல வேண்டும்.எவ்வளவுக்கெவ்வளவு கருத்து ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதே , கருத்தை பின்பற்றுகிறதே, அவ்வளவுக்கவ்வளவு அக்கட்சியும் வேறுன்றி பரவி செழிக்கும்// - கோடிப் பொன் பெறும் வார்த்தைகள்! இன்றைக்கு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு ஆகிய கட்சிகள் தாங்கள் எதற்காகத் தோன்றினோமோ அந்த மையக் கொள்கையிலிருந்தே விட்டுவிலகி வெகு தொலைவு போய்விட்டன. அதனால்தான், மக்களின் வெறுப்பை ஈட்டியுள்ளன.

நீங்கள் கூறுபவை அத்தனையும் உண்மைதான். ஆனால், இப்படியெல்லாம் திட்டமிட்டுத் திட்டமிட்டுத் தன்னலத்தோடு கட்சியை நடத்தாமல் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக வைத்து நடத்தினால்தான் அரசியலும் சமூகமும் உருப்படும்.

வலிப்போக்கன் - சொன்னது…

“அரசியல் என்பது வாழும் முறை” என்றாகிவிட்ட சமூகத்தில்
அரசியல் என்பது வாழ்வாகி விடுகின்றது.--- சரிதான்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஞானப் பிராகசன் அவர்கள் குறிப்பிட்டது போல ஆழமான பதிவுதான்

the poles "colonelpaaganesanvsm.blogspot.com" சொன்னது…

நல்ல சிந்தனை.தொண்டர்கள் கடைசிவரைத் தொண்டனாகவே இருக்க, தலைவன் கொழுத்துக்கொண்டே போவதுதான் இன்றய நமது நாட்டு அரசியல்.

Bagawanjee KA சொன்னது…

மதம் சார்ந்த அரசியல் கட்சிகள் அழியும் என்பதை ,படத்தின் மூலமாய் நீங்கள் சொல்வதாக எடுத்துக்கலாமா ஜி ?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நல்ல அலசல்

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

மிகச்சிறப்பான அரசியல் அறிவியல்! எளிமையாக புரியவைத்தமை சிறப்பு! பாராட்டுக்கள்!

Dr B Jambulingam சொன்னது…

யதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை.

M. KANNAN சொன்னது…

good

super deal சொன்னது…

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல அலசல்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "