வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

தாத்தாக்களை துரத்துவோம் .














வயதைக்கேட்டால் பெரும்பான்மையினர் சங்கடப்படுவதை பார்க்கலாம் . அந்தளவிற்கு இளமையாகவே எப்பொழுதும் இருக்க அனைவருக்கும் விரும்பம் . உடலால் இளமையாகவேயிருக்க விரும்பும் மனது சிந்தனையால் அவ்வாறு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்தையளிக்கிறது .

வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தபொழுது
என்னிடம் தொழில் பற்றி சக தோழர்கள் கூறிய ஒரு கதை .இந்தக்கதை பொதுவா வழக்கறிஞர்களை கேலி செய்வதற்காகவே கூறப்பட்டு வருகிறது .

அது ..

பிரசித்திபெற்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனது பேரனுக்கு ,அவன் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த முதல் நாள் ஆசி கூறி ஒரு வழக்கை ஒப்படைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார் .பேரனின் முதல் நாள் ,முதல் வழக்கு ,முதல் நீதிமன்ற அனுபவம் ஆகியவற்றைக்கேட்க ஆவலோடு அலுவலகத்தில் காத்திருந்தார் .மிக விரைவாகவே நீதிமன்றத்தினின்று திரும்பிய பேரனைப்பார்த்து துணுக்குற்றார் .எப்படி இருந்தது நீதிமன்ற அனுபவம் என வினாவினார் .தாத்தாவை பணிவுடன் நோக்கி நன்றாக இருந்தது தாத்தா .ஆனா ஏன் ஒன்னுமில்லாத இந்த வழக்கை 40 ஆண்டுகளா நடத்தீட்டு இருந்தீங்க .நான் இன்னைக்கு முடிவுக்கு கொண்டுவந்துட்டேன் . மகிழ்ச்சியா இருக்கு என்றான் . அதைக்கேட்ட தாத்தாவான பிரசித்திபெற்ற மூத்தவழக்கறிஞர் அட பிழைக்கத்தெரியாதவனா இருக்கியே ,அந்த வழக்கை வச்சுத்தான் நான் கல்யாணம் பண்ணினேன் ,வீடு கட்டினேன்,உங்கப்பன படிக்கவச்சேன் ,உன்ன படிக்க வச்சேன் ...கொடுத்தீட்டியே என மனம் நொந்துகொண்டார்.

இதை தாத்தாவின் கோணத்திலிருந்தே அனைவரும் பார்ப்பதால் வழக்கறிஞர் தொழிலை கேலி செய்வதற்காக கூறப்பட்ட கதையாகவே இன்னும் உழல்கிறது .

இந்த கதையை கேட்பவர்கள் அனைவரும்
அந்த இளம் வழக்கறிஞரின் கண்ணியத்தை,நேர்மையை,சுறுசுறுப்பை பார்த்தில்லை.
அது எனக்கு ஏனென்று புரியவில்லை .

இன்று புதிதாக வரும் அனைவரும் இப்படித்தான்
எல்லா விசயங்களிலும் மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்கின்றனர் .ஆனால் ,அவைகள் மறைக்கப்பட்டு விடுகிறது .

ஏனென்று யோசித்துப்பார்த்தால் அனைவரும் தாத்தாக்களையே பின்பற்றி வாழ நினைக்கும் பிற்போக்கு குணம் கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.
இங்கு தாத்தாவும் ,அவர் தொழிலும் ஒரு எடுத்துக்காட்டு தான் அவ்வளவே .அவரவர் பார்க்கும் தொழிலில் முன்னோர்களை மூடத்தனமாக பின்பற்றும் இந்த வழிமுறையைத்தான் நான் இங்கு கேள்விக்குறியதாக்குகிறேன் .
அது மாறுபட்ட எந்தத்துறை என்றாலும் இதே நிலைதான் .

மேற்கூறிய கதை
இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மூத்தவர்களின் தவறுகள் தங்களின் அறிவுக்கு எட்டிய உடனே திருத்தி மிக நல்ல மனிதர்களாக சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.கேலிக்காக அன்று இளைஞர்களின் எழுச்சிக்காக கூறப்பட்டது என்பது தான் உண்மை என நினைக்கிறேன்.

நாம் அனைவரும் தாத்தா மனப்பான்மை கொண்டவர்கள்
அதனால் நாம் அனைவரிடமும் ஒரு கர்வம் இருக்கிறது . வயதைக்கேட்டால் மறைப்பதினின்று ...நிஜத்தில் தாத்தாவகவே . இந்த தாத்தாக்களை துரத்தினால் தான் நம்மிடம் புதிய சிந்தனைகள் ஊறும் .நிஜத்தில் நிஜமான இளைஞனாக இருக்கமுடியும் .இல்லையெனில் மேலே கேட்ட கதை வழக்கறிஞர்களை கேலி செய்வதற்காகவே கூறப்பட்டதாகவே தொன்றும் .


(படம் உதவி Jeeves. அவர்களுக்கு நன்றி )






. Download As PDF

23 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

சிந்தனை அருமை - இளம் வழக்கறிஞரின் புரட்சி வாழ்க !

தாத்தாக்கள் துரத்தப்பட வேண்டியவர்களே !

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

Jey சொன்னது…

///இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மூத்தவர்களின் தவறுகள் தங்களின் அறிவுக்கு எட்டிய உடனே திருத்தி மிக நல்ல மனிதர்களாக சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.கேலிக்காக அன்று இளைஞர்களின் எழுச்சிக்காக கூறப்பட்டது என்பது தான் உண்மை என நினைக்கிறேன்.///

இதை எல்லா இளைஞர்களும் உணர்ந்து விட்டால், எல்லா துறைகளிலும் நேர்மை அதிகமாகும். நல்ல சிந்தனை சார்.

vasu balaji சொன்னது…

சரியாச் சொன்னீங்க.

தேவன் மாயம் சொன்னது…

ஓட்டுப்போட்டாச்சு!! பிறகு வருகிறேன்!!

பனித்துளி சங்கர் சொன்னது…

புதுமையான பதிவுதான் . சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை உள்ள சிறந்தப் பதிவு பகிர்வுக்கு நன்று . தொடர்ந்து எழுதுங்கள்

velusamymohan சொன்னது…

Sariyaaha sonneergal.

ஹேமா சொன்னது…

தாத்தா கதை நல்லாத்தான் இருக்கு.எல்லா வழக்கறிஞர்களும் இப்பிடித்தானா !

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்குங்க.
சும்மா தமாசுக்கு-தாத்தாக்களை எங்க தொரத்தலாமுன்னு இருக்கீங்க?

அம்பிகா சொன்னது…

நல்ல சிந்தனை. நல்ல பகிர்வு.

தமிழ்போராளி சொன்னது…

மிகச்சிறந்த ஒரு பகிர்வு தோழரே.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

priyamudanprabu சொன்னது…

இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மூத்தவர்களின் தவறுகள் தங்களின் அறிவுக்கு எட்டிய உடனே திருத்தி மிக நல்ல மனிதர்களாக சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.
///////
நல்ல சிந்தனை.

சௌந்தர் சொன்னது…

நல்ல கருத்து உள்ள பதிவு நல்ல சிந்தனை

Unknown சொன்னது…

nice. it's a different angle.

Katz சொன்னது…

நல்ல சிந்தனை.

க.பாலாசி சொன்னது…

ரொம்ப சரிங்க....

kannan sabapathy சொன்னது…

வக்கீல் சார்....!!!"சிந்தனை சிற்பி" என்ற பட்டத்தை பிடியுங்கள்.....!!!

கண்ணகி சொன்னது…

ஆகா.இப்ப்டியெல்லாம் கூட வக்கீல்கள் இருக்கிறார்களா..

தாத்தா சிந்தனையை துரத்திருவோம்...

Iyappan Krishnan சொன்னது…

வணக்கம்,

நான் எடுத்த புகைப்படத்தை உபயோகித்திருக்கிறீர்கள். குறைந்தபட்சம் படம் எடுத்தவருக்கு ஒரு நன்றியை குறிப்பிட்டு இருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வணக்கம்

உங்கள் சிந்தனை தொடரட்டும் நண்பரே...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) @
Jey @
வானம்பாடிகள் @
தேவன் மாயம் @
பனித்துளி சங்கர் @
velusamymohan @
ஹேமா @
DrPKandaswamyPhD @
அம்பிகா @
விடுத‌லைவீரா @
பிரியமுடன் பிரபு@
சௌந்தர் @
saravanasethukumar@
வழிப்போக்கன் @
க.பாலாசி @
kannan sabapathy @
கண்ணகி @
Jeeves @
ஆ.ஞானசேகரன்
அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வணக்கம் நண்பர் Jeeves தாங்களின் புகைப்படம் என தெரியவில்லை . தேடியும் அறியப்படமுடியவில்லை .தெரிந்திருந்தால் கட்டாயம் குறிப்பிட்டிருப்பேன் .இப்பொழுது குறிப்பிட்டுள்ளேன் .தகவல் தந்ததற்கு மிக்க நன்றி . ப்ளாக்கை நேரம் இருந்தால் பார்க்கவும் .தாங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் சொல்லுங்கள் .
மிக்க நன்றி .

/நாம் அனைவரும் தாத்தா மனப்பான்மை கொண்டவர்கள்
அதனால் நாம் அனைவரிடமும் ஒரு கர்வம் இருக்கிறது . வயதைக்கேட்டால் மறைப்பதினின்று ...நிஜத்தில் தாத்தாவகவே . இந்த தாத்தாக்களை துரத்தினால் தான் நம்மிடம் புதிய சிந்தனைகள் ஊறும் .நிஜத்தில் நிஜமான இளைஞனாக இருக்கமுடியும் .இல்லையெனில் மேலே கேட்ட கதை வழக்கறிஞர்களை கேலி செய்வதற்காகவே கூறப்பட்டதாகவே தொன்றும் .


(படம் உதவி Jeeves. அவர்களுக்கு நன்றி )//


என
அன்புடன்
இராஜசேகரன் .

Unknown சொன்னது…

//இந்த கதையை கேட்பவர்கள் அனைவரும்
அந்த இளம் வழக்கறிஞரின் கண்ணியத்தை,நேர்மையை,சுறுசுறுப்பை பார்த்தில்லை.
அது எனக்கு ஏனென்று புரியவில்லை .//

சாலை விதிகளை மதிக்கக்கூட நமக்கு பின்னால் இருக்கும் ஒட்டு மொத்த சமூகம் நம்மை விடுவதில்லை. சாலை விதிகளை மதிப்பவனை 'வந்துட்டான் பெருசா' என்று கேலி செய்கிறது சமூகம்....
பெரும்பான்மை சமூகம் தவறுகளின் பக்கமே இருப்பதால் நேர்மைகள் பாராட்டபடுவதில்லை...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

V.S.Kesavan, Advocate, High Court, Chennai. அவர்களே

மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "