ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

விலங்குகளின் உலகம் .

தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை ,
ஏன் பாதியை என்றுகூட சொல்லலாம் ,
தன்னைவிட பெரிய விலங்குகளிடமிருந்து
தங்களை பாதுகாத்துக்கொள்வதிலேயே
சிறிய விலங்குகள் கழித்துவிடுகின்றன .

சில விலங்குகளின் உலகைப்பற்றி இங்கு பார்க்கலாம் .

யானை :

1.18 மணி நேரம் உணவு தேடும் .
2.பன்றியின் உறுமலுக்கு மட்டும் பயப்படும் .
3.2 ஆண்டிற்கு ஒரு முறை கூடும் .
4.களிமண்ணை பந்து போல் உருட்டி விளையாடும் .
பார்ப்பதற்கு கால்பந்து விளையாடுவது போல் இருக்கும் .
5.மனிதனை பார்க்குப் பொழுது
அதன் அளவு தடியாகவும் ,உயரமாகவும் தெரியும் .
அதனால் தான் மனிதன் யானையை எளிதாக அடக்க முடிந்தது.
6.வெண்மை நிறம் பிடிக்காது .


நாய் :

1.உலகம் முழுதும் இருக்கும் உயிர் .
2.கறுப்பு ,வெள்ளை நிறங்களை மட்டுமே வேறுபடுத்திப் பார்க்க முடியும் .
3.5 நாட்கள் தூங்காமல் இருந்தால் இறந்துவிடும் .
அன்பான எஜமானர்கள் இறந்த பின் பிரிவு தாங்காத அன்பான நாய்கள் இறந்து போவது இப்படித்தான்.


சிங்கம் :

1.இதன் கர்ஜனை 10 கிலோமீட்டர் வரைக்குக்கூட கேட்குமாம் .
2.ஆண் 20 மணி நேரம் தூங்கும் .
3.வேட்டையில் குரல் வளையை பதம்பார்க்கும் .
4.இதன் பால் தங்கக் கிண்ணத்தைத் தவிர வேறு எதில் வைத்தாலும் கெட்டுப்போகும் .
அதனாலும் காட்டுக்கு ராஜா .


சிம்பன்சி:

1.மெத்தை படுக்கை அமைக்கும் .
2.சிறிய ஆடுகளை வேட்டையாடும் .
3.4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கருத்தறிக்கும் .
4.தரையில் இலை,தழைகளால் இல்லம் அமைக்கும் .


கழுதைப்புலி :

1.பிணம் தின்னும் .இரவில் இரை தேடும் .
2.மனிதன் உள்ள இடங்களுக்கும் வந்து
ஆடு,மாடு முதலியவற்றை கொல்வதோடு ,
மனிதர்களைத் தாக்கவும் செய்யும் .
3.இதன் சப்தம் பயங்கரமாக இருக்கும் .
4.மனிதனின் இரவச்சம் இது .


கஸ்கஸ் :

1.மரத்தில் வாழும்.
2.இரவில் இரைதேடும் .
3.மிகவும் சாதுவானது .
4.இதனை தொந்தரவு செய்தால் தனது மொழியில் திட்டிக்கொண்டே செல்லும் .


ஒப்போஸம் :

1.முட்டைகள் ,பூச்சிகள் இதன் உணவு .
2.இரவில் இரைதேடும் .
3.சும்மா அலைந்து கொண்டே இருக்கும் .
அலைவதில் இதற்கு அவ்வளவு பிரியம் .
இரை பக்கத்தில் இருந்தாலும் வெகுதூரம் சுற்றித்திரிந்து பின் உண்ணும் .


பூமா:

மனிதர்களைக்கண்டால் ஒடாது .
என்ன செய்கிறார்கள் என தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆவல் கொண்டது .மனிதர்கள் தங்கியுள்ள
இடத்திற்கு வந்து எட்டிப்பார்க்குமாம் .ஒன்றும் செய்யாதாம்.


வீஸல்:

1.சுத்தமான விலங்கு .
2.குளிர்காலத்தில் நிறம் மாறிவிடும்.
3.எதிரியின் கழுத்திலுள்ள இரத்தக்குழாயை கடித்து ,பீறிட்டெழும் இரத்தத்தை குடிப்பதில்
மகிழ்ச்சிகொள்ளும் .
4.தன்னைவிட 30 மடங்கு பெரிய விலங்குகளை கூட தாக்கி கொன்றுவிடும் .
5.முயல்கள் இதனைப்பார்த்த மாத்திரமே பயம்கொண்டு மடிந்துவிடும் .
6.உணர்ச்சிப்பெருக்கத்தை இதனால் தாங்கமுடியாது .போட்டோ எடுத்தால் இதற்கு ஏற்படும்
பரபரப்பையும்,மகிழ்ச்சியையும் தாங்கமுடியாமல் இது இறந்துவிடும் .
7.மிகக்கொடுமை மிகுந்த பாலூட்டி .


லிங்க்:

1.மலைப்பிரதேசத்தில் மிக உயரத்தில் வாழும் .
2.இரவில் நடமாட்டத்தை வைத்துக்கொள்ளும்.
3.முயலை மட்டுமே தின்னும் .
4.மனிதர்களை காரணமின்றி தாக்கும் .


ஸ்கங்க்:

1.பயமில்லாத விலங்கு .கரடிகூட பயப்படும்.
2.எதிரி மீது கோபம் வந்தால் ,எதிரியின் கண்ணில் குறிவைத்து மஞ்சள் நிற எண்ணெய் போன்ற
திரவத்தை பீச்சியடித்துவிடும் .
அது கண்ணில் பட்டால் பொறுக்கமுடியாத வலியும்,எரிச்சலும் ஏற்பட்டு கண்ணீர் கொட்ட
ஆரம்பித்துவிடும் .
அதன் நாற்றமும் தாங்கமுடியாதாம் .
மாதக்கணக்கிலும் போகாதாம் .
10முதல் 20 அடி தூரம் கூட பீய்ச்சியடிக்குமாம் .
இதப்பாத்துத்தான்
கூட்டத்த கலைக்க கண்ணீர் புகை வீச ஆரம்பித்தனர் போலும் .


படத்தில் எங்க பையன் டோமி .


.

Download As PDF

20 கருத்துகள் :

goma சொன்னது…

இவைகளில் ஒரு விலங்குக்குக் கூட

1அடுத்தவர் வளர்ச்சியில் பொறாமை கிடையாது.
2.தனக்கு தனக்கு என்று சேர்த்து வைக்கும் குணம் இல்லை
3.பேராசை கிடையாது.

விலங்குகளை வாழ்த்துவோம்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

விலங்குகளைப் பற்றிய பல அரிய தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//6.வெண்மை நிறம் பிடிக்காது .//

விலங்குகளுக்கு நிறம் அறியும் திறன் இல்லை என்று கேள்வி பட்டேன்...

Unknown சொன்னது…

இவற்றில் நிறைய விலங்குகளைப் பற்றி தெரியாது. அதனால் அடுத்த முறை எழுதும்போது படத்துடன் எழ வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்...

Unknown சொன்னது…

மன்னிக்கவும் "படத்துடன் எழுத வேண்டும் "

velusamymohan சொன்னது…

Very Nice info Nandu.

Tamil Virtual Forum சொன்னது…

சுவையான செய்திகள்.
தொடரட்டும்

ஹேமா சொன்னது…

செந்தில் சொன்னதுபோல சில விலங்குகளை விளங்கவில்லை.படத்தோடு தந்தால் நல்லது.

சென்ஷி சொன்னது…

நிறையப் புதிய தகவல்கள் நண்டுஜி... படிக்கவும் சுவாரஸ்யமா இருந்தது.

Jey சொன்னது…

அண்ணே, எனக்கு இந்த விலங்குகல்னா ரொம்ப பிடிக்கும். நம்மள விட நெறய நல்ல விசயங்கள் இதுக கிட்ட இருக்கு..., நாமதா அத அஞ்சறிவுன்னு சொல்லிகிட்டே, அதுக செய்யாத நெறய தப்புகள செஞ்சிகிட்டு இருக்கோம்..

இந்த ‘ஒப்போஸம்’ , ’பூமா’ & ‘வீஸல்’, சரிய எந்த விலஙுன்னு தெரியலை , படம் போட்ருக்கலாம், இல்லைனா அத ஆங்கிலத்துல டைப் அடிச்சி பிராக்கெட்டுக்குள்ள போட்ருக்கலாம், கூகுள்ல தேடி தெரிஞ்சிக்கவாவது உதவியா இருக்கும். தகவலுக்கு நன்றி.

சசிகுமார் சொன்னது…

அருமை நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றி

DIAMOND சொன்னது…

Very interesting news..

Thanks

M.S சொன்னது…

your son is cute than you...

தேவன் மாயம் சொன்னது…

நல்ல தகவல்கள்!

நேசமித்ரன். சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள் சார்

புகைப்படங்கள் இன்னும் தெளிவாக விளக்கலாம் கஸ்கஸ் எத்தனை பேருக்குத் தெரியக் கூடும் இல்லையா


நன்றி

Chitra சொன்னது…

நல்ல தகவல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
goma @
cheena (சீனா) @
ஆ.ஞானசேகரன்@
கே.ஆர்.பி.செந்தில்@
velusamymohan @
Tamil Virtual Forum @
ஹேமா @
சென்ஷி @
Jey @
சசிகுமார் @
T.V.ராதாகிருஷ்ணன் @
kolanchiyappan@
M.S @
தேவன் மாயம் @
NESAMITHRAN @
Chitra
அவர்களே
மிக்க நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...

//6.வெண்மை நிறம் பிடிக்காது .//

விலங்குகளுக்கு நிறம் அறியும் திறன் இல்லை என்று கேள்வி பட்டேன்... //

அவைகள் இன்னும் ஆய்விலே உள்ளது நண்பரே .


கே.ஆர்.பி.செந்தில் said...
//இவற்றில் நிறைய விலங்குகளைப் பற்றி தெரியாது. அதனால் அடுத்த முறை எழுதும்போது படத்துடன் எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்...//

ஹேமா said...
// செந்தில் சொன்னதுபோல சில விலங்குகளை விளங்கவில்லை.படத்தோடு தந்தால் நல்லது. //

Jey said...
//இந்த ‘ஒப்போஸம்’ , ’பூமா’ & ‘வீஸல்’, சரிய எந்த விலஙுன்னு தெரியலை , படம் போட்ருக்கலாம், இல்லைனா அத ஆங்கிலத்துல டைப் அடிச்சி பிராக்கெட்டுக்குள்ள போட்ருக்கலாம், கூகுள்ல தேடி தெரிஞ்சிக்கவாவது உதவியா இருக்கும். //

அப்படியே ஆகட்டும் .
இனி அடுத்த பதிவில் பின்பற்றுகிறேன் தோழர்களே.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//M.S said...

your son is cute than you... //

உண்மை,உண்மை .
அவன் எப்பவுமே எல்லார்த்தையும் விட அழகுதான் .
இயற்கையா இயல்பா இருக்கான்ல
அதனால் இரட்டிப்பு அழகு அவ்வளவே.
மிக்க மகிழ்ச்சி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "