வியாழன், 14 ஏப்ரல், 2011

நண்டு செஞ்ச தொண்டு

 
ஊரை யடுத்த ஓடைக் கரையில்
ஓட்டை நிறைந்த ஒருசிறு குடிசை
நாள்புறம் வயல்கள் நல்ல விளைச்சல்
நாகனும் வள்ளியும் வசிக்கும் இடமிது

சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில்
வள்ளியுரைக் கின்றாள் மச்சா னிடத்தில்:
மச்சான் மச்சான் கதையைக் கேட்டியா?
வாரக் குத்தகை தர்ரதாச் சொல்லி
வாம்பலில் கொஞ்சம் நட்டுவச் சோமே!

ஆமா ஆமா அதுக்கென்ன இப்போ?
நேத்தைக்குத் தண்ணி நிறைய இருந்ததே
பின்னாடி நட்டதால் பிஞ்சா யிருக்கு இன்னும் பத்துநாள் எல்லாம் பழுத்திடும்

அதுக்கில்லே மச்சான் நான்சொல்ல வந்தது
அடுத்த வயல்லே நின்னாரு
ஆத்து வாய்க்காலை அடைச்சுத் திருப்பணும்
ஐம்பது காசுக்குத் தண்ணி பாய்ச்சணும்

ஆருவந் தாலும் அடிப்பேன் உதைப்பேன்!
அப்படி இப்படீன்னு அலறிக் குதிச்சாரு
இதுக்கும் நமக்கும் எட்டா துன்னு
இருட்டும் முன்னே வீட்டுக்கு வந்திட்டேன்.

பொழுது விடிஞ்சு போய்ப் பாத்தா
பொங்கித் ததும்புது நம்ம வயலும்
வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே
வழியும் அளவுக்குத் தண்ணி யேது?

நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில் போட்டது வளையைப் புரட்சி நண்டு,
பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே
காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின.

ஆகா ஆகா அருமை நண்டே
உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம்
உலக மனிதர்க்கு உண்டா நண்டே?
பெருநிலக் காரன் வரப்பைக் குடைந்து சிறுநிலங் காத்துச் சிறந்த நண்டே!

என்றுநாகன் நன்றி செலுத்து கையில் எதிருள வயல்களை இருவரும் நோக்கினர்
பச்சை மயில்போல் பயிர்கள் அசைந்தன
பழுத்த கதிர்கள் படுத்துக் கிடந்தன

படுத் திருந்த பசுந்தரை அடியில்
வெடித்த கிளையிலும் விஷய மிருந்தது
உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சி
ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின்

கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயல்களையும்
கொல்லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன
இந்தக் காட்சியில் இன்பம் கண்டனர்
இயற்கை ஆட்சியை இருவரும் வியந்தனர்
மடைதாண்டி விழுந்த வாளை மீன்போல்
வள்ளி துள்ளி வரப்பில் குந்தினள்!




மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தனிப்பாடல்கள் தொகுப்பிலிருந்து .



..........

எனக்குப்பிடித்த பட்டுக்கோட்டையாரின் திரைப்பாடல்கள் சில 



                             திருடாதே… 
படம்: திருடாதே | ஆண்டு: 1961
                                                                                     என்னருமை… 
படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் | ஆண்டு: 1960
                               தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: 1957
                                                                                              
குறுக்கு வழியில்… படம்: மகாதேவி | ஆண்டு: 1957
                                                                                 தூங்காதே.. தம்பி… படம்: நாடோடி மன்னன் | ஆண்டு: 1958
                                                                                           சின்னப் பயலே… படம்: அரசிளங்குமரி | ஆண்டு: 1961
                                                                         நன்றி : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இணை
தளம் .                                                                                                                                                                .                                                                           
Download As PDF

10 கருத்துகள் :

நிரூபன் சொன்னது…

பட்டுக் கோட்டையாரின் சந்தக் கவிக்குப் பக்க பலமாகப் பாடல்களும் அமைந்துள்ளன. காலத்தை வென்ற கவிஞர்கள் வரிசையிலும் கண்ணதாசனுக்கு முன்பதாக தமிழ் சினிமா வரலாற்றில் பாடல் வரிகளிலே இலக்கிய நயம் கலந்து இனிமையுடன் பாடல்களைத் தந்த பெருமையும் இவ் பட்டுக் கோட்டையருக்கு உண்டு.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்லதொரு நினைவூட்டல். எம் ஜி ஆரின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் இவரது பாடல்கள்

Jerry Eshananda சொன்னது…

super collection.

பொன் மாலை பொழுது சொன்னது…

பட்டுக்கோட்டயாரின் பாடல் வரிகளால் மிகவும் அரசியல் ஆதாயம் அடைந்தவர் எம்.ஜி.ஆர். என்ற ஒரு வேதனை எனக்குண்டு. அவரின் பாடல்கள் அணைத்து எம்.ஜி.ஆரின் பாடல்களாகவே இன்றும் கருதுகின்றனர் என்பது அந்த கவியை கேவலபடுத்துவது தானே! அதுதான் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.இதற்கு மாறாக 'கல்யாண பரிசு " என்ற திரைப்படத்தில் அமைந்த பட்டுக்கோட்டயாரின் பாடல்கள் அவரின் பிறிதொரு பரிமாணத்தை காட்டுமே? உங்களுக்கும் கூட அவைகள் தெரியவில்லை ??

ஹேமா சொன்னது…

நினவில் நிறுத்தவேண்டியவர்.நன்றி !

தாராபுரத்தான் சொன்னது…

அருமைங்க.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாட்டுக்கோட்டையான ப்ட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்திய தங்களுக்குப் பாராட்டுக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அருமையான பாடல்கள் . பகிர்வினிற்கு நன்றி. நண்டு என்றுமே நல்லதே செய்யும் என்பதினைச் சொல்லவோ இப்பாடல் ? வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

வின்சென்ட். சொன்னது…

சிறப்பான பதிவு. காலத்தை வென்ற கவிஞன். உங்கள் பாடல் தேர்வும் நன்றாக உள்ளது. நினைவுபடுத்திய உங்களுக்குப் பாராட்டுக்கள்.

சசிகுமார் சொன்னது…

பாடல்களின் வரிகள் மிகுந்த அர்த்தமுள்ளதாக உள்ளது. இப்பவும் எழுதுறாங்களே பாவி பசங்க கேட்கவே முடியல.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "