சனி, 23 ஏப்ரல், 2011

பாடப்புத்தகங்கள் பாசிசத்தை பரப்புகின்றன இலக்கியங்கள் பாதுகாக்கின்றன .


புதிதாய் ஒரு காகம் கிளம்பியிருக்கிறது. உங்களில் சிறந்தவர்களில் ஒருவரைப் போல தனக்கும் திறனுண்டு என்பதைப் போல வெற்று செய்யுளைக் கொண்டு அது பகட்டு செய்கிறது. முழுக்க எல்லாம் தெரிந்த ஆசாமியாக இது அலட்டிக் கொள்கிறது ...என கேலிக்கு ஆட்பட்ட ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த Miguel de Cervantes ,Inca Garcilaso de la Vega,Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejia Vallejo போன்ற படைப்பாளிகளின் பிறந்த தினம், நினைவு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தாங்கள் இவ்வளவு தெளிவான சிந்தனைகளுடன் செரிவான கருத்துக்களை எழுதுகின்றீர்களே அதற்கான மூலம் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கின்றது என தனது கடிதத்தில் காந்தியடிகள் வினாவிய பொழுது அதற்கு டால்ஸ்டாய் அவர்கள் திருக்குறள் என்னும் நூலில் இருந்து நான் பெறுகிறேன் என பதிலலித்தது கண்டு ஆச்சரியப்பட்ட காந்தியடிகள் திருக்குறளை மூலத்திலேயே படித்தால் தான் முழுச்சாரமும் உணரமுடியும் என்பதற்காக தமிழ் படித்தாராம் .அப்படிப்பட்ட திருக்குறள் இன்றைக்கு எத்தனை தமிழர்கள் வீட்டில் இருக்கின்றது ? .

உலகை புரட்டிப்போட்ட புத்தகம், மாற்றியமைத்த புத்தகம் என பலவற்றை பலர் கூறினாலும் அவைகள் அனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்கான மாற்றங்களைக் கொண்டு வரும் ஓர் உந்து சக்தியாக இருக்கவில்லை என்பதுவே இது வரை இருந்துவரும் ஒரு பேருண்மையாகும் .இதனை மறுப்பவர் கட்டாயம் ஒரு பாசிச பாதுகாவலனே  .

இன்று உலகம் முழுவதும் உள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் பாசிசத்தை பரப்புகின்றன .இலக்கியங்கள் அதனை பாதுகாக்கின்றன .அதனால் தான் இன்று சமூகம் இத்தனை சரிவுகளை சந்தித்துக்கொண்டுள்ளது .மனித நேயம் சிறிதும் இல்லாமல் சுயநலத்துடன்  மனிதர்கள் வாழ்வதற்கும் இதுவே காரணம் ஆகும்.

தன் நிலை பற்றி கவனம்கொள்ளாமல் அறிவியல் பார்வையில்லாமல் சுயநலத்துடன்  வாழ்ந்ததால் தான் ஜப்பான் இன்று இவ்வளவு துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .அறிவியலை குறுகிய கண்ணோட்டத்தில் மட்டுமே பயன்படுத்தும் எந்த நாடும் அழிவிலிருந்து தப்பமுடியாது என்பதற்கு ஜப்பானிய அழிவுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

இயற்கையை கற்காத சமூகமும் ,கற்பிக்காத இலக்கியமும் இயற்கையாகவே அழிந்துவிடும் .







பார்க்க :

அணு சக்தி வேண்டவே வேண்டாம் :நோபல் அறிஞர்கள்


ஜப்பானில் தாய்ப்பாலிலும் கதிர்வீச்சு பரவியது; கர்ப்பிணி பெண்கள் பீதி








.
Download As PDF

11 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சிறப்பான பதிவு.... வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்று சர்வதேச புத்தக தினம்..
புத்தகம் உலகை மாற்றட்டும்...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு ஒரு புத்தக பதிவா?

--

பொன் மாலை பொழுது சொன்னது…

/// தன் நிலை பற்றி கவனம்கொள்ளாமல் அறிவியல் பார்வையில்லாமல் சுயநலத்துடன் வாழ்ந்ததால் தான் ஜப்பான் இன்று இவ்வளவு துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .//

இன்னமும் இதனை எத்தனை நாடுகள், தனிமனிதர்கள் புரிந்துகொண்டுள்ளனர் ?

///உலகை புரட்டிப்போட்ட புத்தகம்///

அப்படியெல்லாம் எந்த புத்தகமும் இன்னும் புரட்டி போடவில்லை. பட்டியல் இடுவார்கள். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை.

சசிகுமார் சொன்னது…

//அப்படிப்பட்ட திருக்குறள் இன்றைக்கு எத்தனை தமிழர்கள் வீட்டில் இருக்கின்றது ?//

இதுவே ஒரு ஆங்கில கவிஞன் இந்த திருக்குறள் எழுதி இருந்தால் ஆகா ஓஹோ ன்னு பாராட்டி இருப்போம். ஆங்கிலம் படிப்பதையே ஒரு ஸ்டைலாக நெனக்குறாங்க

ஹேமா சொன்னது…

புத்தகங்கள் படிக்க ஆரோக்யமான பதிவு !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>

No Such Post

சன்னலை மூடு

thamizmanam வாட் பிராப்ளம்?

பனித்துளி சங்கர் சொன்னது…

//////திருக்குறளை மூலத்திலேயே படித்தால் தான் முழுச்சாரமும் உணரமுடியும் என்பதற்காக தமிழ் படித்தாராம் .அப்படிப்பட்ட திருக்குறள் இன்றைக்கு எத்தனை தமிழர்கள் வீட்டில் இருக்கின்றது ? .//////////

சிந்திக்கத் தூண்டும் சிறந்தப் பதிவு நண்பரே . பகிர்ந்தமைக்கு நன்றி . தமிழ் என்பதே பலருக்கு மறந்துவிட்டது இன்றைய நிலையில் எத்தனை பேருக்கு இந்த திருக்குறள் என்ற பொக்கிஷ நூல்பற்றி தெரியப்போகிறது 1????????. வருத்தம் நிறைந்த கேள்விதான் .

நிரூபன் சொன்னது…

சகோ, இலக்கியங்கள் மனித வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை, ஆனால் பாடப் புத்தகங்கள்.. இலக்கியங்களில் ஒரு சில துளிகளை எடுத்து, தர்க்க ரீதியில் எழுதப்பட்டவை,

பாடப் புத்தகங்களை விடவும் அனுபவ வெளிப்பாட்டின் குறியீடாக உள்ள இலக்கியங்களால் தான் மனித வாழ்க்கையினை நல் வழிப்படுத்த முடியும். முன்னுதாரணமாக விளங்க முடியும்.

எதிர்காலத்தில் இலக்கியங்களிற்கான கல்வி சார் முக்கியத்துவத்தை நாம் கொடுக்கவில்லை என்றால், ஒரு தலை முறையோடு அவை யாவும் அழிந்து விடும் சகோ. அருமையான அலசல்

குலவுசனப்பிரியன் சொன்னது…

//ஜப்பான் இன்று இவ்வளவு துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .//

ஜப்பான் மக்கள் இத்தனை துன்பங்களிடையேயும் கட்டுக்கோப்பாக நாகரிகமாகவே இருக்கிறார்கள். மனிதநேயம் சார்ந்த நல்லக் கல்வி/இலக்கியம்தான் அத்தகைய பண்பை கொடுத்து இருக்கிறது என்று நம்புகிறேன்.

கட்டத்திலிருப்பவனை நீ பாவி என்று தூற்றும் புனிதர்கள் போல பேசுகிறீர்கள். உங்கள் பழைய இடுகைகள் சிலவற்றை படித்திருப்பதால், இதில் ஏதோ உள்குத்து என்று தோன்றுகிறது

மனம் திறந்து... (மதி) சொன்னது…

//இயற்கையை கற்காத சமூகமும் ,கற்பிக்காத இலக்கியமும் இயற்கையாகவே அழிந்துவிடும்.//

உங்கள் ஆதங்கமும், அறிவிப்பும், அச்சுறுத்தலும் இயற்கையானதே! இயல்பானதே!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "