வியாழன், 19 மே, 2011

ஈழத்தின் ஒவ்வொரு பறவையும்


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல்   நேற்று மதியவேலையில் சுமார் 4 மணிநேரம்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் கண்டனப் பொதுக்கூட்டத்திற்காக ஈரோடு வந்திருந்தார் ஐயா காசி ஆனந்தன் அவர்கள்.

ஈழத்தின் அன்றைய மற்றும் இன்றைய நிலைகள் பற்றி மிகவும் தெளிவாக எடுத்துவைத்தார்.

நான் அவரை முதல் தடவையாக சந்தித்தாலும் மிக நீண்ட நாள் பழகியது போன்ற ஒரு உணர்வு.

"இந்து சமுத்திரத்தின் நித்திலம்"  பற்றி எனக்கு உள்ள வினாவே அவரிடமும் இருப்பது கண்டு வியந்தேன்.

தேர்தல் முடிவுகள்  மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இந்த தேர்தல் முடிவுகளில் ஒரு திருப்தி இருந்ததை உணர முடிந்தது.

தமிழர்களின் இந்த முடிவின் மூலம் அகில உலக அளவில் தலைநிமிர்த்துள்ளான் என்பதனை உணரமுடிந்தது.

‘‘ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது!’’ - என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

ஒன்றுபடு!  -காசி ஆனந்தன் 

சாதி மதமெனும் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!
ஆதி மகளெனும் தமிழை அரசியாய்
ஆக்கி வாழவிடு!

கந்தன் பறையனென் றுரைக்கும் கயவனைக்
கண்ணீர் வர வதைப்பாய்!
இந்துவும் இஸ்லா மியனும் பொருதினால்
இருவரையும் உதைப்பாய்!

ஊருக்கூர் சண்டை தெருத்தெரு சண்டை
உருப்படு வோமோடா?
பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே
பத்துப் பிரிவோடா?

தேசம் பலவினும் வாழும் காக்கைக்குலம்
சிதைந்து பிரிவதில்லை!
பேசும் மொழியால் அவை ஒன்றுகூடும்
பெருமை நமக்கில்லை!

ஒன்று படடா தமிழா! உறுதுயர்
ஓடப் படை நடத்து!
வென்று புகழ்கொண்டு வாடா! விடுதலை
வேண்டும் தமிழனுக்கு!


.






.

Download As PDF

16 கருத்துகள் :

நிரூபன் சொன்னது…

முதல் வருகை...

நிரூபன் சொன்னது…

காசியின் கவிதைகள், பாடல்கள் என்றால் சிறு வயது முதலே ஈர்ப்பு. அவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் எனும் ஆவல், ஆனால் எங்களின் போர்க்கால வாழ்வு காரணமாக நிறை வேறாமல் போய் விட்டது.

நிரூபன் சொன்னது…

நான் அவரை முதல் தடவையாக சந்தித்தாலும் மிக நீண்ட நாள் பழகியது போன்ற ஒரு உணர்வு//

அவரைச் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாளாய் நான் காத்திருக்கிறேன். ஒரே ஒரு தடவை, வன்னியில் இருக்கையில் வானொலி ஒன்றிற்கான பேட்டித் தயாரிப்பிற்காக அவருடன் அலை பேசி மூலமாக உரையாடும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

நிரூபன் சொன்னது…

ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது!//

ஆமாம், அவரது ஒரு பாடலும்
உலகின் திசை நாலும் அலைந்ததடா
தமிழ்.........பறவை என்று எழுதியுள்ளார்.

மதுரை சரவணன் சொன்னது…

காசி ஆனந்தனின் கவிதைகள் மிகவும் உணர்வு பூர்வமானவை மேலும் உண்மை தன்மை மிக்கவை.. நல்ல அருமையான பகிர்வு.. வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

காசியின் இக் கவிதை, தமிழனின் ஒற்றுமையினையும், தமிழ்த் தாயின் இன்றைய பரிதாப நிலையினையும் உரைக்கிறது..
பகிர்விற்கு நன்றிகள் சகோ.

பெயரில்லா சொன்னது…

உணர்வுகளை சுண்டி இழுக்கும் கவிதைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் எவர்....!!!

ஹேமா சொன்னது…

அழகாகச் சொல்லியிருக்கிறார்.ஈழத்தின் பறவைகள் இறகில்கூட விடுதலையின் பாடலைச் சுமக்கிறதென்று !

ம.தி.சுதா சொன்னது…

அவரது வரிகள் எப்போதும் ஒரு ஈர்ப்புடையவை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடடா ..என்னையும் கூப்பிட்டிருந்தா வந்திருப்பேனே?

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - உணர்ச்சி பொங்கும் கவிதை - கன்ணீர் வர வதைப்பாய் - இருவரையும் உதைப்பாய் - வரிகளீல் வலிமை அதிகம் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

பெயரில்லா சொன்னது…

வாழும் கவிஞர்களிலேயே ஒரு சக்திவாய்ந்த கவிஞர் கா.சி. ஆனந்தன்... நல்ல பதிவு சகோ.

ceekee சொன்னது…

What Bharathi is to the Freedom Struggle of India, Kasi Anandhan is to Eezham Freedom Struggle. And more. Much more....

He is a rich, mellow and refined amalgamation of the very best in Bharathi and Bharathidasan. A persistent and perseverant voice of the wronged, fettered and voiceless he is,reminding and recalling Pablo Neruda.Like Khalil Gibran, his poems shun hypocrisy, doublespeak, cant, meaningless and harmful practices, superstitious customs and abhor any and all forms of enslavement, degradation and exploitation upholding aloft and cherishing self respect, dignity and humane and humanistic values. In his penetrating portrayal of the intricacies and subtleties of Humanity, he is comparable to Rabindranth Tagore. In his piercing and revealing portrayal of Thamizhs with their strengths and weakness, majesty and foibles, practical and ideal, he is placing humanity under a microscope ! A gentle whiff of fresh air and kind breeze(thendral) at one moment and virile and violent tornado (puyal) at the very next ! What a breathtaking and mind boggling combination of fire and ice ...! If there is one poet I would consider as worthy of Nobel Prize for Literature, he is the one ...

With or without any awards and prizes, he is certainly and undoubtedly a poet of Humanity. Among the poets of the world,
he stands tall and high,lofty and unique...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

எனக்கும் எப்போதுமே காசி ஆனந்தனைப் பிடிக்கும்! அவரது வரிகள் ஒவ்வொன்றும் நச்சென, நறுக்கென இருக்கும்!!

சசிகுமார் சொன்னது…

மிக அழகான ஆழமான வரிகள்

தனிமரம் சொன்னது…

அவரின் கவிவரிகளில் எங்கள் உனர்வுகள் பிரதிபலிக்கிறது என்பதே உண்மை!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "