சனி, 21 மே, 2011

ஈழ பிரச்னைக்கு எதிர்ப்பு ! அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம்! எடுத்துரைப்பீர் ,உதவுவீர் .


கடந்த 12ம் தேதி   அய்ரோப்பிய  நாடாளுமன்றத்தில், இலங்கை குறித்த விவாதம் இடம் பெற்றது. அதில் கலந்துகொண்டு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி இருந்தனர். இதில் பேசிய பிரான்ஸ் நாட்டு அய்ரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் டெய்லி கரிமா, இலங்கையில் இன அழிப்பு நடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அதனை எதிர்த்த அயர்லாந்தின் உறுப்பினர், சார்லஸ், இன அழிப்பு என்ற வார்த்தையை திருப்பப் பெறவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அதனை மீளப்பெற பிரான்ஸ் நாட்டு அய்ரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் டெய்லி கரிமா மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய, மற்றுமொரு அயர்லாந்து உறுப்பினர் இலங்கை அரசைப் புகழ்ந்ததோடு டெய்லி கரிமாவுக்கு எதுவும் தெரியாது என்றும், அவர் கூறும் தகவல்கள்  ஆதாரங்கள் அற்றவை எனவும் வாதிட்டார். சிறையில் இருந்த 2 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு வெளியே விட்டதால் அங்கே இன அழிப்பு நடைபெறவில்லை என அவர் வாதிட்டார். இருப்பினும் டெய்லி கரிமா அவர்கள், அதற்கு சரியான பதிலைக் கொடுக்கவில்லை. அடிப்படையில் இலங்கையில் ஒரு இன அழிப்பு நடைபெற்றுள்ளது என அவர் அறிந்து வைத்திருந்தாலும், அவரிடம் அதற்கான சரியான சான்றுகள்  இருந்திருக்கவில்லை. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் டெய்லி கரிமா அவர்களை அணுகி பல செய்திகளை  எடுத்துச் சொல்லியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.





அவருடைய மின்னஞ்சல் மற்றும் தொடர்புகளுக்கான இணையப் பக்கம் என்பன இங்கே தரப்பட்டுள்ளது. பிரான்ஸ் அமைப்புகளும், உலக தமிழர்களும் நிச்சயம் அவரைத் தொடர்புகொள்வார்கள் என நம்புகிறோம்.

மின்னஞ்சல்: karima.delli@europarl.europa.eu

இணையம் : http://www.karimadelli.com/

Contacts :

Karima Delli
Parlement européen
Bât. Louise Weiss
T05065
1, avenue du Président Robert Schuman
CS 91024
F-67070 Strasbourg Cedex
Tél : +33 (0)3 88 1 75362
Fax : +33 (0)3 88 1 79362


நன்றி :  அதிர்வு.காம்  ,
நன்றி :  கோவை செய்திகள் .




.
Download As PDF

9 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

சரியான பாதையில் நீதி வெல்லட்டும்

Jerry Eshananda சொன்னது…

கட்டாயம் செய்வோம்.

ராஜ நடராஜன் சொன்னது…

பொது விவாதங்களில் புலம் பெயர் தமிழர்கள் இன்னும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

நிரூபன் சொன்னது…

சகோ நல்ல ஒரு தகவல். அத்தோடு அனைவரையும் இந்தச் செய்தி எட்டும் வண்ணம் வலையில் பதிந்துள்ளீர்கள் நன்றிகள் சகோ.

நிரூபன் சொன்னது…

நிச்சயம் உரியவர்கள் இவர்களைத் தொடர்பு கொண்டு, நற்காரியங்கள் நடக்க ஆவண செய்ய வேண்டும்,

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு தகவல் சகோ. நிச்சயம் செய்வோம். மாற்றுக்கருத்துக்கள் இருக்க வேண்டியது தான், ஆனால் அது சரியான இடம் நோக்கி நகர்தல் அவசியம் ....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரைட்டு

கவி அழகன் சொன்னது…

இனத்துக்கான நல்ல விடயம்
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - விவாதத்திற்கு வருபவர்கள் டிட்டமிட்டு முழுத் தகவல்களுடன் வர வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்ளைத் தொடர்பு கொண்டு தகவல சேகரிக்க வேண்டும். நல்ல இடுகை- பகிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "