புதன், 29 ஜூன், 2011

25 பைசா சில்லரைகள்



ஜூன் 30ம்தேதிக்கு பிறகு  அதாவது  நாளையிலிருந்து 25 பைசா செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக சொன்னவற்றில் முதன்மையானது 25 பைசா, 50 பைசாவுக்கு நாட்டில் எந்தப் பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது என்பது .ஆனால் இந்த நிலை உருவாக்க்காரணம் யார் ? அரசு தானே .அப்படியிருக்க என்னவோ அரசுக்கு மிக்க மக்களின் மீது கரிசனம் வந்த மாதிரி அறிக்கைவிடுவது கேலிக்குறியதாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லறை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது என்பதுவே உண்மை .விலைவாசி குறைந்தால் சில்லறை நாணயங்களின் புழக்கம் அதிகம் ஆகும் என்பதுவே இதன் உள்ளீடான உண்மை .

கார்ப்ரேட் நிறுவனங்களில் கார்டு போட்டு பொருள் வாங்கும் மக்களை இது பாதிக்காது .ஆனால்,சாமானியனை இது பாதிக்கும் ,அதோடு இது அவனை சுரண்டுவதும் ஆகும்.

நாம அன்றாடம் 25 பைசாவிற்கு பேருந்து நடத்துனரின் நடத்தை தவறு இனி இருக்காது என்ற நிம்மதியில் பயணித்தால் உங்களின் பயணத்தில் 2% த்தை சுரண்டுவதை உங்களின் அறியாமையாலே அனுமதிக்கின்றீர்கள் என்பதுவே உண்மை. ஆம் ,இனி 2.25 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தொலைவை 2.50 கொடுத்து பயணிக்கவேண்டும்.

மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்.
இனி ரூபாய்  4.01 அடக்கவிலையுள்ள ஒரு மாத்திரையை தனியாக வாங்கும்பொழுது ரூபாய் 4.50  கொடுத்து வாங்கவேண்டும்.

தபால் கார்டுகள் இனி காலாவதிதான் .அதோடு மட்டுமல்லாமல் இனி 75 பைசா ஆபீஸ் கவர் 1 ரூபாய்க்கு வாங்கவேண்டும். 3 பைசா AD கார்டு இனி 50 பைசாவிற்கு வாங்கவேண்டும் .

இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை சில எளிய உதாரணங்கள் மட்டுமே, முழுமையானவையல்ல.

இப்ப  25 பைசா என்பது பிரச்சனையில்லாத்தது மாதிரி தெரியலாம் .ஆனால் உண்மையில் இது  49 பைசா பிரச்சனை .1பைசாவில் தயாரித்த ஒரு பொருளை 50 பைசாவிற்கு விற்று 49 பைசா லாபம் காணலாம் .இதில் கவனிக்கவேண்டியது அடிப்படை அலகுகளில் சிறு உயர்வு முதலாளித்துவத்துக்கே ஆதாயம் என்பதே .

நுண் பொருளாதாரத்தை நோக்க இது எளிதில் புலப்படும்.

1000 ரூபாய் ,500 ரூபாய்  ஒழிப்பு எப்படி கருப்புபணத்தை வெளிக்கொணர்ந்து மட்டுப்படுத்துகிறதோ  அதே போலத்தான் சிறு தொகைகள் ஒழிப்பு ஏழ்மையை மேலும் மேலும் அதிகரித்து ,வறுமைக்கோட்டை மிகுபடுத்தும்.

அதோடு இதை ஒட்டி விலைவாசிகள் அமைவதால் விலைவாசிகள் நுண் அளவில் மாற்றம் பெற்று முதலாளிகளுக்கு லாபத்தை கொடுக்கும் .

முதலில் விலைவாசியை கட்டுப்படுத்துங்கப்பா .இப்படி ஏழை மக்களிடம் உள்ள சில்லறைகளை புடுங்கி பணக்காரர்களை காப்பாத்தாதீங்க .


சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது அதனை கொண்டுவாங்கப்பா 1 பைசாவின் தேவை எத்தகையதுனு அப்ப புரியும் . என்ன ...? அதவிட்டுட்டு ஏழைகளின் வயித்தில அடிக்காதீங்கப்பா.






.
Download As PDF

15 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவா 25 பைசாவில். உண்மை உண்மை - இதற்கெல்லாம் ஏதாவது வழி கண்டு பிடிக்க வேண்டும். ம்ம்ம்ம்ம் - ஒவ்வொருவரும் அவரவர் பிரச்னையை மட்டுமே பார்க்கின்றனர். இர்சர்வ் வங்கியோ - காசுகள் அடிப்பதிலும் - புழக்கத்தில் பயன் படுத்துவதிலும் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க வழி பார்க்கிறது. ம்ம்ம்ம் - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆஹா ,, அண்ணன் பி ஹெச் டி யே பண்ணிட்டார் போல

goma சொன்னது…

இத்தனை விஷயங்கள் இருக்கிறதா இந்த 25க்குள்

நிரூபன் சொன்னது…

பைசாவினை வைத்து, ஒரு காத்திரமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நீங்க சொல்வது சர்தான். அவதிப்படுவதோ நடுத்தர
மக்கள்தானே.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Very Good Information....

கூடல் பாலா சொன்னது…

அய்யயோ ....சரியான கிவன் டேக் பாலிசியால்ல இருந்திருக்குது ....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா...

அரசு எடுக்கும் முடிவுகள் ஏழைகள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு ... அரசாங்கம் செய்யும் பிழைகளை எல்லாம் மக்கள் தலையில் தானே சுமத்துவார்கள் ... இன்று இருபத்திஐந்து நாளை ஐம்பது என்று போய்க்கொண்டே இருந்தாலும் ஆச்சரியம் இல்லை ....

சசிகுமார் சொன்னது…

சுமார் ஒரு ஆண்டாகவே இந்த நாணயங்களை கொடுத்தால் எந்த கடைக்காரனும் வாங்கறது இல்ல

நட்புடன் ஜமால் சொன்னது…

அதென்னவோ 25 பைசா என்றவுடன் போஸ்ட்டல் கார்டு தான் ஞாபகம் வருது ...

Jeyamaran சொன்னது…

*/சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது அதனை கொண்டுவாங்கப்பா 1 பைசாவின் தேவை எத்தகையதுனு அப்ப புரியும் . என்ன ...? அதவிட்டுட்டு ஏழைகளின் வயித்தில அடிக்காதீங்கப்பா./*

nethi adi anna migavum arumai.............
Hi Friends

அம்பிகா சொன்னது…

25 பைசாவுக்குள் எத்தனை விஷயங்கள் உள்ளன. ஆனால் 25 பைசாவை ஏற்கனவே கடைக்காரர்கள் வாங்குவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் 50 பைசாவும் இதே போலாகிவிடும்.

Unknown சொன்னது…

அருமையான அலசல் நண்பரே!

நிர்வாக வசதிக்காக இனி 25 பைசா செல்லாது என்ற சாதாரணமான அறிவிப்புக்கு பின்னே இவ்வளவு சங்கதி இருக்குன்னு நீங்க சொல்லித்தான் என்னைப் போலவே பலருக்கும் புரியுதுன்னு வந்த பின்னூட்டங்களை பார்த்தாலே தெரியுது.

புரியவைத்தமைக்கு நன்றிகள்!

இதே போல அரசாங்கத்தோட ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னே ஒளிந்திருக்கும், மக்களை பாதிக்கும் விஷயங்களை, விஷயம் தெரிந்தவர்கள் சொன்னால் அனைவருக்கும் நலம்.

நன்றி நண்பரே!

VELU.G சொன்னது…

நல்ல கருத்து ஆதரிக்கிறேன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "