சனி, 25 ஜூன், 2011

ராஜபக்சேவுக்கு ஆயுள் தண்டனை உறுதி .


Pauline Nyiramasuhuko இவர் ருவாண்டா நாட்டின் முன்னாள் குடும்ப நலத்துறை அமைச்சர். 1994ம் ஆண்டு ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் 100 நாட்கள்  போராட்டம் நடத்தினர்.அப்போதைய  ருவாண்டா அரசு டுட்சி இன மக்களை படுகொலை செய்தது .அதில் பல லட்சம் பேர் மாண்டனர்.இதில்  Pauline Nyiramasuhuko ம் அவரது மகனும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஐ.நா.சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக்குமுறை, மக்களின் கண்ணியத்தின் மீது அட்டூழியம், வன்முறை போன்ற பிரிவுகளின் கீழ்  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு Pauline Nyiramasuhuko மற்றும் அவரது மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

10 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பின் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது .
கொடூர இனப் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் Pauline Nyiramasuhuko மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாகும் .பெண் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்றம் இனப் படுகொலைக்காக ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது  இதுவே முதல் தடவை .

அடுத்தாக இந்த தண்டனையை அனுபவிக்கப்போகும் நபர்களில் ராஜபக்சேவே முதலிடத்தில்  இருப்பதாக உலக அரசியல் அறிஞர்கள் அவையத்தின்  கருத்தாகும்.

அதனால் இத்தீர்ப்பு ராஜபக்சேவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சேவுக்கு  ஆயுள் தண்டனை உறுதி .






.
Download As PDF

8 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

காலம் பதில் சொல்லட்டும்..

Sathish சொன்னது…

hmmm.. waiting for that moment sir...when'll that happen?

test சொன்னது…

பத்துவருஷ விசாரணையில் ஏழு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை! ஆனால் இங்கு விசாரணை நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளதே! :-(

ஹேமா சொன்னது…

கள்ளன் கையிலேயே சாவி குடுத்திருக்கு.பிறகென்ன !

உலக சினிமா ரசிகன் சொன்னது…

ராஜபக்சேவுக்கு மட்டும் தண்டனையா?
இது அநியாயம்...
இந்தியக்கூட்டுக்களவாணிகளை விட்டு விடுவதா?

Mahan.Thamesh சொன்னது…

உலக தமிழர்களின் எதிர்பார்ப்பும் வேண்டுதலும் அதுவே

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - காலம் பதில் சொல்லும் - பொறுமையுடன் இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாரி சார்.. நேத்து வர முடியல..

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "