நண்டு : இன்று சுதந்திர தினம் .
நொரண்டு : ஆம் ,மிகச்சிறந்த ஜனநாயக நாடான இந்தியா, உலகிலே மிகச்சிறந்த மக்காளாட்சிக்கு எடுத்துக்காட்டாய் ,மணி மகுடமாய் திகழ நாமெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் .
நண்டு : எப்படி எவ்வாறு ?
நொரண்டு : நாம் நமது தலைவர்களின் எண்ணங்களை நிறைவு செய்யவேண்டும் .
நண்டு : புரியவில்லை உதாரணத்திற்கு எதாவது ....?
நொரண்டு : ஐயா , நண்டு நான் எதச்சென்னாலும் நீ ஏத்துக்கப்போறதில்லை .நான் ஒருவரைப்பத்தி ஒன்றைச்சொல்ல அவரைப்பத்தி ஏதோ எங்கொங்கோ அவ்வப்போது படித்ததைவைத்து. அய்யகோ அவர் அப்படிச்சொல்லவில்லை , அதற்காக அவர்அப்படிச்செய்யவில்லை .அவர்அப்படிப்பட்டவரும் இல்லை . எனக்கு நல்லா தெரியும் . ஏன்னா எனது அறிவுக்கு இன்றுவரை நீங்கள் கூறும் விசயம் எட்டாமலே இருக்குது . அது எப்படி எனக்கே தோன்ற நல்ல
சிந்தனைகள் வரமுடியும். அப்படியே வந்தாலும் அதை எப்படி ஏத்துக்கறது
என உம்மைப்போன்றவர்கள் திரிகின்றீர் .உங்க புத்தி ஏந்தான் இப்படி ஆகிவிட்டதோ தெரியவில்லை .
நண்டு : நான் எதச்சொல்லவர்றேன் கூட தெரியாம ,நீங்க எதயோ நெனச்சுக்கரீங்க ,மெத சொல்லவந்ததை கேளுங்க .அப்படி என்னை உண்மை தெரியாமல் பேசினால்,அது சுயநலம்.அதுவும் உண்மையை மறைத்து பேசும் சுயநலம்.
நொரண்டு : சுயநலம்னு ஏன் பேசிக்கிட்டு இருக்கே . செல்லவர்ரத சொல்லுப்பா ...கேக்கிறேன் .
நண்டு : காந்தியடிகளை ''அரைநிர்வாணப்பக்கிரி '' னு யார் கீண்டல் செய்தார்கள் தெரியுமா ?
நொரண்டு : சர்ச்சில் தானே .
நண்டு : .ம்...
நொரண்டு : ஏன் அரைநிர்வாணப்பக்கிரியானார்னு சொல்லு ...
நண்டு : தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காதன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற துடித்து க்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் , உண்மை,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார். இது அவரை மிகவும் கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும். அவரின் போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும் இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும் சக்தியாகவும் ஆனது .
பிறகு, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுமையான ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள் இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார்.
தமிழர்கள் தென்னாப்பிரிக்காவிலேயே அப்படியெனில் ,தாயகத்தில் சிறப்புடன் மிகுந்த வேட்கையுடன் இருப்பர் என்று ,தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக இருந்தார்களே .அது போலவே இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த காந்தி தமிழகம் வருகின்றார் .
இங்கு அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .( சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும் இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்கமுடியும்).தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார் ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .
கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .
இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .
நொரண்டு : அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற
நண்டு : நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .
முடிவுக :தமிழன் ,இந்தியன் தன்மானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை .
.
Tweet |
|
12 கருத்துகள் :
வரலாற்றை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி... (TM 2)
பகிர்வுக்கு நன்றி சகோ
நான் சற்று துணுக்குற்றே வாசிக்க வந்தேன்! நல்லவேளை நான் நினைத்தது போல் ஏதும் இல்லை!
நல்ல எழுத்து நடை ராஜா சார்! வாழ்த்துக்கள்!
ஆனால் அந்த அரை நிர்வாணப் பக்கிரியை, மிகச் சிறந்த நடிகன் என்று செஞ்சட்டை புண்ணியவான்கள் பிரச்சாரத்தை செய்து கொண்டுள்ளனர்! வாழ்க அவர்தம் கொற்றம்!
இந்த நாளில் மகாத்மாவை நினைவு படுத்தும் பதிவு அருமை. காந்தியைப் பற்றி ஆல்பர்ட ஐன்ஸ்டீன் சொன்னது நினவுக்கு வருகிறது.
“Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth.”
இன்று பகிர்ந்தமைக்கு நன்றி
காந்திஜி நிர்வாணப்பக்கிரியான தகவல் நன்று..
இன்றைய தினத்துக்கான நினைவு மீட்டல் அருமை.அறிந்துகொண்டேன்.சுதந்திரதின வாழ்த்துகள் !
தாங்கள் சொன்னது வலாற்று உண்மையே!அவர் தமிழ் நாட்டுக்கு வநத போது சிறுவனாய் இருந்த எனக்குக்
அவரை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது
மீண்டும் ஒரு காந்தியை மனம் தேடுகிறது. சுதந்திர இந்தியாவின் மக்களின் விடுதலைக்காக.
நல்லதொரு வரலாற்றுப் பதிவு! சிறப்பு! நன்றி!
இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
அன்பின் நண்டு - மகாத்மா காந்தி தமிழகத்தில் அதுவும் மதுரையில் தான் ஆடைகளைக் குறைத்து - இடுப்பில் ஒரு அரை வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக உடுத்தத் துவங்கினார். இது வரலாறு தான். ஆனால் சர்ச்சிலால் அரை நிர்வானப் பக்கிரி என பேசப்பட்டதற்கும் தமிழனுக்கும் எவ்விவிதத் தொடர்புமில்லை. கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். வரலாறு பகிர்வினிற்கு நன்றி நண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "