.
நொரண்டு :வணக்கம் ,நண்டு .
நண்டு :வாங்க நொரண்டு
நொரண்டு :என்ன ரொம்ப நாளா ஆளை பாக்க முடியல ?
நண்டு :ம் ..இங்க தான் இருக்கேன் ஈரோட்ல .
நொரண்டு :ம் .என்ன சிறப்புச்செய்திகள் ஏதாவது உண்டா?
நண்டு :தெரிஞ்சுக்கிட்டே கேக்கிறயா ?
நொரண்டு : அப்ப சிறப்புச்செய்தி இருக்கா ? சொல்லு ...சொல்லு ரொம்ப நாளாச்சு .
நண்டு : இன்று நான் மக்களின் ஒற்றுமையைக்கண்டு மிகவும் மகிழ்ந்த நாள் .
நொரண்டு :என்ன ?
நண்டு :ஆம் ,இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்தியின் இறப்பிற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை இன்று என் வாழ்நாளில் நேரடியாக பார்த்து மிகவும் அகம் மகிழ்ந்தேன் .அதுவும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அனைவரும் ஒரே கூறையில் இருந்து அரசுக்கு தங்களின் எதிர்ப்பை மிகவும் நாகரிகமாக மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளதை நினைக்கும் பொழுது .மக்கள் விழிப்புணர்வுடன் தான் உள்ளனர் என்பதனை உணரமுடிந்தது .
நொரண்டு :விளக்கமாகச்சொல் .
நண்டு :ஈரோட்டில் இரண்டு மேம்பாலங்கள் கட்ட அரசு முடிவு செய்த்து .
நொரண்டு :அது நல்லது தானே .
நண்டு : ஈரோடு மிகவும் சிறிய ஊர் .இதற்குள் இரண்டு மேம்பாலங்கள் தேவையோ இல்லை .
நொரண்டு :அப்படியா .
நண்டு :ஆம் ,யாரோ கொடுத்த தவறான யோசனைகளினால் மேம்பாலங்கள் கட்ட 100 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கப்பட்டது .மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :ஏன்?
நண்டு :இலவசங்களில் மக்கள் மயங்கி இருக்கின்றனர் என்ற மமதை மக்களின் உணர்வினை கேட்கத்தேவையில்லை என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச்சென்றிருக்கலாம் .
நொரண்டு : ம் ..
நண்டு : அதனால் இவனுங்க கிட்ட என்ன கேக்கறது .நாம என்ன செஞ்சாலும் இவனுகளுக்கு கவலையில்ல .நாம அதச்செஞ்சேம் ,இதச்செஞ்சேம்னும் சொல்லி ஓட்டு வாங்கிறலாமுனு ஆரம்பிச்சாங்க மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :இப்ப என்னாச்சு .
நண்டு :ஈரோட்ல இருக்கற அத்தன பேரும் ஒன்னாசேந்து முழுக்கதவடைப்பு நடத்தி மிகவும் வெற்றிகரமா முடித்துள்ளனர் .
நொரண்டு :ம்..
நண்டு :ஆமா ,ஒரு சிங்கில் டீக்கடை கூட இன்னைக்கு திறக்கல . அனைத்துக்கட்சி ப்ந்தின் போது கூட அங்கொன்னும் ,இங்கொன்னுமா கடைகள் இருக்கும் .ஆனால் ,இன்னைக்கு ஈரோடு முழுக்கவும் கிட்டத்தட்ட 10 கிலோமிட்டர் சுற்றளவுக்கு ஒரு கடை கூட திறக்கப்படவில்லை.சூப்பர்.
நொரண்டு : அப்படியா ?
நண்டு :ஆமாம் .
நொரண்டு :அவ்வளவு ஒற்றுமைக்குக்காரணம் .
நண்டு :மக்களின் விருப்பங்களை கேட்காமலே தான் தோன்றித்தனமாக செயல்படுவதால் .
நொரண்டு :சரி ,பாலவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது அரசு கதவடைப்பு தானே செய்வ செஞ்சுட்டுப்போனு ,அவர்கள் பாலத்தை கட்டினார்கள் எனில் .
நண்டு :வரும் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது .
நொரண்டு :அப்ப போக்குவரத்து நெரிசலில மக்கள் அவஸ்தைப்படவேண்டியது தானா ?.
நண்டு :அட நீ ஒன்னு .ரிங் ரோடு போட்டு பஸ்டாண்ட தூக்கி அவுட்டர்ல போட்டாலே 50% டிராபிக் குறஞ்சிரும் .அப்புறம் டிராபிக்கோ யில்ல என்ற நிலை ஏற்பட்டுவிடும் .அதவிட்டுட்ட தேவையில்லாத வேலை .கெட்ட பேர் .மேலும் செலவும் கம்மி .
நொரண்டு :மாரியம்மன் கோயில் தான் பிரச்சனைக்கு காரணங்கராங்க ?.
நண்டு :பாலம் வேண்டாங்கரது தான் மெயின் பிரச்சனை .
நொரண்டு :அப்ப ...?
நண்டு :பாலங்கட்டறத விட்டுட்டு .மாற்று யோசனைகள் செஞ்சாலே பல பிரச்சனைகள் தானே அமிழ்ந்துவிடும் .
நொரண்டு :இல்லனா .
நண்டு :மதவாதிக மாரியம்மன எடுத்துக்குவாங்க .
நொரண்டு :ம் ..
நண்டு :மத்தவங்க MGR யை எடுத்துக்குவாங்க .
நொரண்டு :MGR ஆ?
நண்டு :ஆமாம்பா ஆமாம் ,இது புரியரவங்களுக்கு புரியும் .உனக்கு புரியாது .ஏன்ன இது அரசியல் .
நொரண்டு :என்னமே போப்பா .என்னமே சொல்ர .நான் டீக்குடிச்சுட்டு வரேன் .வரயா .
நண்டு :ம் ,,,போலாம் .
.
.
.
.
. Download As PDF
Tweet |
|
19 கருத்துகள் :
//ஒரு சிங்கில் டீக்கடை கூட இன்னைக்கு திறக்கல . அனைத்துக்கட்சி ப்ந்தின் போது கூட அங்கொன்னும் ,இங்கொன்னுமா கடைகள் இருக்கும் .ஆனால் ,இன்னைக்கு ஈரோடு முழுக்கவும் கிட்டத்தட்ட 10 கிலோமிட்டர் சுற்றளவுக்கு ஒரு கடை கூட திறக்கப்படவில்லை.சூப்பர்.//
super .,,,,,, atleast ippavaathu namba power kammichangalae makkal
//அரசு கதவடைப்பு தானே செய்வ செஞ்சுட்டுப்போனு ,அவர்கள் பாலத்தை கட்டினார்கள் எனில் .
வரும் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது .//
ithu innum superb
// ஈரோடு மிகவும் சிறிய ஊர் .இதற்குள் இரண்டு மேம்பாலங்கள் தேவை இல்லை //
சில முறை நான் ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன் ...
நானும் அப்படித் தான் நினைக்கிறேன் தோழர் நண்டு @நொரண்டு...
ithu maathiri oru nalla visayam nadukum pothu naan illathathu romba kastmaa iruku , i miss erode , i wish i was there
//நண்டு :இலவசங்களில் மக்கள் மயங்கி இருக்கின்றனர் என்ற மமதை மக்களின் உணர்வினை கேட்கத்தேவையில்லை என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச்சென்றிருக்கலாம் .
நொரண்டு : ம் ..
நண்டு : அதனால் இவனுங்க கிட்ட என்ன கேக்கறது .நாம என்ன செஞ்சாலும் இவனுகளுக்கு கவலையில்ல .நாம அதச்செஞ்சேம் ,இதச்செஞ்சேம்னும் சொல்லி ஓட்டு வாங்கிறலாமுனு ஆரம்பிச்சாங்க மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :இப்ப என்னாச்சு .
நண்டு :ஈரோட்ல இருக்கற அத்தன பேரும் ஒன்னாசேந்து முழுக்கதவடைப்பு நடத்தி மிகவும் வெற்றிகரமா முடித்துள்ளனர் //
ஆஹா! ஆனந்தம்! :)
எனக்கு மிகப்பெரிய வியப்பு .
எந்தவித அதிக ஆரவாரம் இல்லாமல் ஆரம்பித்தனர் அனைவரும் சொல்லிவைத்தமாதிரி . .மிகப்பெரிய ஒற்றுமை .ஆச்சரியப்படவைத்த ஒற்றுமை . ரோகிணிசிவா அவர்களே
அனைவரும் இந்த கதவடைப்பில் முழுமனதுடன் மிகவும் விரும்பி ஈடுபட்டனர் என்பதை கண்கூடாக கண்டேன் .அதனால் தான் //
வரும் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது .// என கூறும் அளவிற்கு என்னை இட்டுச்சென்றது அவர்களின் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமான அமைதியான இந்த ஒற்றுமை .ரோகிணிசிவா அவர்களே
ஆம் , தோழர் நியோ அவர்களே உண்மை தான் .மிகச்சிறிய ஊர் .
ஆடிப்போய்ட்டேன் ,ஆடி .எதிர்பார்க்கவேயில்லை .【♫ஷங்கர்..】 அவர்களே
அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தியது கேட்கக் கேட்க ஆனந்தமான ஒன்று...
தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டி அரசு காமெடி செய்வதால்,அந்த பாலத்துக்கு எங்க ஏரியா ஆளுங்க வச்சிருக்கிற பெயர் "காமெடிப் பாலம்"... :-)
நன்று!
காந்தியால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னிருத்தி வெற்றிபெற முடியும் என்பதனை ஈரோட்டு மக்கள் முறியடித்து விட்டனர் இன்று அகல்விளக்கு அவர்களே .
மிக்க மகிழ்ச்சி சிவாஜி அவர்களே .
அன்பின் நண்டு
மக்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்க இயலும் - ஒற்றுமையே வெற்றிக்கு வழி வகுக்கும்
நல்வாழ்த்துக்ள் நண்டு
நட்புடன் சீனா
ஆம்
அன்பின் சீனா அவர்களே .
மிக்க நன்றி .
விட்டா ,இனிமேல் வீட்டுக்குள்ளே கூட மேம்பாலம் கட்டணும்னு சொல்லுவாங்க போலிருக்கே...அதுக்குக் காசையும் நாமதான் தரணும்......
//:ஆம் ,இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்தியின் இறப்பிற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை இன்று என் வாழ்நாளில் நேரடியாக பார்த்து மிகவும் அகம் மகிழ்ந்தேன்..//
காந்தி நடத்திய போராட்டத்த கூட பார்த்தவறா நீங்க ....தாத்தா உங்க சமூக அக்கறை எனக்கு பிடிச்சிருக்கு ..
உங்க profile -ல இருக்கறது சின்ன வயசு போட்டவா ....அப்படினா recent - ஆ எடுத்த போட்டவ போடுங்க தாத்தா...
தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
goma
@ தனி காட்டு ராஜா
அவர்களே .
மிக்க நன்றி .
//காந்தியால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னிருத்தி வெற்றிபெற முடியும் என்பதனை ஈரோட்டு மக்கள் முறியடித்து விட்டனர் இன்று அகல்விளக்கு அவர்களே . //
காந்தி இதே போராட்டத்தை அம்பேத்கர், நேதாஜிக்கும் எதிராக செய்தவர் தானே.. காந்திய விடுங்க.. மக்களின் விழிப்புணர்வு வரவேற்க தக்கது..
www.narumugai.com
நமக்கான ஓரிடம்
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "