வெள்ளி, 3 டிசம்பர், 2010

மருத்துவர்களே குற்றவாளிகள்



அறுவைச்சிகிச்சை செய்யும்போது நோயாளி் பிழைக்காவிட்டாலும் அல்லது நோயாளிக்கு வேறு தீங்கு ஏற்பட்டாலும் மருத்துவர் தூக்கிலிடப்படுவர் அல்லது தண்டிக்கப்படுவர் என்ற அவலம்  இருந்து வந்ததால் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்துவத்தினின்று விலகினர் 16 ம் நூற்றாண்டு வரை. மேலும் மிரட்டல் ,தாக்குதல் , கொன்றுவிடும் வழக்கங்கள்இருந்ததாலும் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்தும் செய்ய பயந்தனர் . மேலும் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் அரசாங்கத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு முடிவெட்டல் மற்றும் முகச்சவரம் செய்தல் போன்ற பணிகளும் செய்யவேண்டும் என்ற கட்டளைக்கும் பணியவேண்டியிருந்தது.இதன் விளைவாக இத்துறை இழிவான செயல் என்று கருதவேண்டிய சூழ்நிலை ஏற்படவே இக்கலை அழிய நேரிட்டது . வேறு வேலை செய்யும் நாவிதர்கள் ,செருப்புத்தொழில்செய்பவர் தான் இந்தத் தொழிலை செய்தனர் .16ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது .


பிரான்சில் ஏழை நாவிதக்குடும்பத்தில் 1510 ல் பிறந்த
ஆம்ரோஸ் பாரி என்பவரின் அயராத முயற்சியினால் அறுவைச்சிகிச்சை மருத்துவம் உயிர் பெற்று உயர்வு பெற்றது .

அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் குற்றவாளிகள்  அல்ல ,
அவர்கள் மக்களின் சேவகர்கள் என்ற உணர்வினை தனது அயராத நிகரில்லாத சேவையின் முலம்  உலகிற்கு உணர்த்தினார் .

ஆதலால்
ஆம்ரோஸ் பாரி அவர்கள்
அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்படுகிறார் .





இன்றைய மருத்துவத்துறையையும் ,மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும்
நினைத்துப் பார்க்கையில்...




. Download As PDF

8 கருத்துகள் :

அருண் பிரசாத் சொன்னது…

இண்ட்ரஸ்டிங்...

goma சொன்னது…

இன்றைய அறுவை சிகிச்சை நிபுணர்களில் பெரும்பாலோர் [.அதாவது 85%]..நோயாளியிடமிருந்து எவ்வளவு அறுவடை செய்யலாம் என்பதில்தான் நிபுணர்களாகத்தான் இருக்கின்றனர்.

வார்த்தை சொன்னது…

ஆம்ரோஸ் பாரி அவர்கள் "நவீன" அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை என கருதப்படுகிறார்.

பொதுவாக அறுவை சிகிச்சை என சொல்லமுடியாது.
ஏன்னா நம்ம பாட்டன் சுஸ்ருதா இருக்காப்ல, இல்லையா...

cheena (சீனா) சொன்னது…

தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தகவலுக்கு நன்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நல்ல தகவல்

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி! :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "