செவ்வாய், 12 ஜூலை, 2011

மொழியை ,நாட்டை ஏன் நேசிக்கவேண்டும் ?.



விடுதலை,விடுதலை,விடுதலை ,இதற்காக இதுவரை எத்தனையோ உன்னதமானவர்கள் போராடினார்கள்.அதில் பலர் வெற்றியும் எய்தினர்.அவர்கள் அனைவரும் போராட காரணமாக இருந்த உந்து சக்தி எது என பார்த்தால் அது அவர்களின் நேசிப்பு தான் என்பது புலப்படும் .ஆம்,ஒன்று அவர்கள் அவர்களின் நாட்டை நேசித்திருப்பர் அல்லது அவர்களின் இனத்தை நேசித்திருப்பர் அல்லது அவர்களின் மொழியை நேசித்திருப்பர். இந்த நேசிப்பு தான் அவர்களுக்கு விடுதலையைகொடுத்தது. நாட்டை கொடுத்தது.இனத்தை காத்தது,மொழியை வளப்படுத்தியது.

இந்த உலகின் தாரக வார்த்தையே நேசிப்பு என்பது தான் . 

ஒன்றைப்பற்றிய நேசிப்பு அதனைப்பற்றிய அதிகப்படியாக கவனப்படச்செய்கிறது .கவனப்படல் அதனை அணுகச்செய்கிறது .அணுகுமுறையில் புதுப்புது அனுபவங்களும்,அறிவும் பெறப்பெற ,அதன் ஆர்வம் நேசிப்பதில் அதிகரித்து அதிகரித்து அதன் மீது ஒரு தனி பிடிப்பு ஏற்படுத்துகிறது .அதனால் கிடைக்கும் உயர் அழுத்தம் அதனில் வயப்பட வைக்கிறது .இவ்வாறு வயப்படுவது காதலாகிறது. இத்தகைய காதல் அறிவுத்தளத்தில் நிகழும் பொழுது அறிவு தளமொன்றை பெறுகிறது .இத்தகைய தளம் உயர்வைத்தருகிறது .இந்த உயர்வு சமுதாயத்திற்கு நன்மை பயக்கின்றது.
 
இப்படிப்பட்ட நேசிப்பு எனக்கு என் தாய் மொழியின் மீதும் ,என் தாய்த்திருநாட்டின் மீதும் ஏற்பட்டு அது என் அறிவை விசாலப்படுத்தி விசாலப்படுத்தி உயர்கிறது .மேலும்,எனக்கு என் தாய் மொழி எனது தாய்நாடு மீதான காதலால் இன்னும் ,இன்னும் அதிகப்படியான உண்மைகள் என்னுள்ளும் எனக்கு வெளியேயும் அடையாளம் காணமுடிகிறது .மேலும்,அது எனக்கு புதிய பார்வையையும் ,பரிமாணத்தையும் என்னுள் அள்ளித் தெளிக்கிறது .அதனால் தான் என்னால் புதியன பேச முடிகிறது ,புதியன எழுதமுடிகிறது,புதியன சிந்திக்கமுடிகிறது ,மொத்தத்தில் புதியவனாக தினம்தினம் பிறக்கமுடிகிறது .என் நேசிப்பினால் என்னால் அனுதினம் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இல்லையில்லை என் மொழி என்னை அனுதினம் சிந்திக்க வைக்கிறது.என்று நான் சிந்திக்கவில்லையோ அன்று  நான் கட்டாயம் இறந்திருப்பேன். இதையே வேறு மாதிரி கூறவேண்டும் என்றால் என்று என் மொழி என்னில் இயங்கவில்லையோ அன்று தான் எனது இறுதி நாள்.

எனக்கு தெரிந்த சிலரை பார்த்து அவர்களிடன் ஏன் முன்பு போல நீங்கள் செயல்படுவதில்லை ? எழுதுவதில்லை?, பேசுவதில்லை ? என கேட்டதற்கு . அவர்கள் அதுக்கெல்லாம் முன்பு போல நேரம் கிடைப்பதில்லை,வேலைகள் அதிகம்,.ம்..ம்... என்ன செய்ய வாழ்க்கைய பாக்கவேண்டியுள்ளதே என எதையாவதை சாக்குபோக்கு சொல்வதையே கேட்டிருக்கேன் .ஆனால் அவர்கள் கூறும் காரணத்தை சாதாரணமாக கேட்கும் பாமரனுக்கு அல்லது அவர்களின் பக்தர்களுக்கு சரியாகத்தெரியும் . ஆனால், அவர்கள் அவர்களின் செயலால் தான்,எழுத்தால் தான் ,பேச்சால் தான் உயர்ந்தனர் ,புகழ் பெற்றனர் என்பதையும்,அவர்களுக்கு சகலத்தையும் அவர்களின் மொழிதான் தான் கொடுத்தது என்பதனை மறைத்து பேசுகின்றனர் என்பது தான் உண்மை . இதற்கு காரணம் அவர்கள் அனைவரும் தனது மொழியை விட்டு வெகுதூரத்திற்கு சென்றுவிட்டபடியால் அவர்களிடம் இருந்து மொழியும் அன்னியப்பட்டுவிட்டது என்பதுவே. மொழி அன்னியப்பட அன்னியப்பட நாடும் அன்னியப்பட்டுக் கொண்டே போகும் .

பொதுவாக மொழியால் அன்னியப்பட்டவர்களுக்கு மொழியும்,நாடும்  தூரத்தில் தெரியும் ஏதோ ஒன்றாக தெரிய ஆரம்பித்து.பின் மொழியின் மீதும்,நாட்டின் மீதும் துளியும் நேசிப்பு இல்லாமல் போய்விடும்,அதன் காரணமாக அவர்கள் எவ்வளவு வல்லவர்களாக முன்பு தெரியவந்திருந்தாலும் அவர்களிடம் மொழியாலும்,நாட்டாலும் புதியன பிறப்பிக்கும் பிம்பம் கழன்று அவர்கள் வெறும் நடமாடும் எழுத்து தின்னும் மனிதர்களாகிவிடுவார்கள்.

தாய்மொழியும்,தாய் நாடும் வேறு வேறல்ல.ஒன்றை  ஒன்று  பின்னிப் பிணைந்த உயிர்.ஒன்றில்லாமல் ஒன்று இயங்கமுடியாது .டோடோ என்ற பறவை ஒன்று இருந்தது கேள்விப்பட்டதுண்டா ?.அந்த பறவை மிகவும் சாதுவானது மொரீசியஸ் தீவில் நிம்மதியாக வாழ்ந்தது.அதனை மனிதன் தன் வயிற்றுக்கு பலியாக்கினான் .அந்த இனத்தின் கடைசிப் பறவையும் 1681 ல் பூமியில் தங்களின் வாழ்ந்ததற்கான எந்த அடிச்சுவட்டை ' அப்பாவியாக  இருகாகாதே ,டோடோவைப்போல சாகாதே ' என்ற சொலவடையை மட்டும் விட்டுச்சென்றது .சரி அது மட்டும் தான் அழிந்ததா என்றால் இல்லை ?.அதனோடு சேர்ந்து கல்வாரி என்ற மர இனமும் காணாமல் போய்விட்டது .டோடோ கல்வாரி மர பழங்களைத்தின்று போடும் கொட்டைகள் தான் முளைக்கும் என்பது இயற்கை வைத்திருந்த பிணைப்பு.டோடோ அழிந்தது கல்வாரியும் அழிந்தது .எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் கல்வாரி மரத்தை உருவாக்க முடியவில்லை .அதன் விதைகளை முளைக்கவைக்க  டோடோவின் வயிற்றில் சுரக்கும் ஒரு அமிலத்தால் தான் சாத்தியமாம்.அது கூறும் செய்தி என்ன ? .ஒரு நிலத்தில் தோன்றும் ஒன்றை ஒன்று சார்புடையது .ஒன்று அழிந்தால் மற்றதும் அழியும் .அது போலத்தான் இங்கு தமிழனாக இருப்பதால் தமிழர்களையே எடுத்துக்கொள்வோம் .தமிழன்,தமிழ்மொழி,தமிழினம்,தாய் நாடு  இவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது .ஒன்று ஒன்றிற்கு ஆதாரம் ,ஒன்றில்லாமல் ஒன்றால் இயங்கமுடியாது .இன்னும் ஆழமாக சொல்லப்போனால் புலிகள் இருக்கின்றன அல்லவா ,அவைகள் தமிழனின் அடைவு,தமிழ் தோன்றிய பொழுதே அதுவும் தோன்றியது .புலியும் தமிழும் இயற்கை ரீதியில் இரண்டறக்கலந்தவை.அது போலத்தான் இயற்கையாகவே ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு நாட்டுடன் பின்னிப்பிணைந்துள்ளது .ஒரு மொழி தோன்றிய பொழுதே இங்கு ஒரு நாடும் இனமும் உயிர்பித்திருந்தது என்பதும் அதனுடன் இயற்கை சூழ்ந்து புதுமைகள் மலர ஆரம்பித்தது என்பதுவுமே வரலாறு.      

தாய்மொழியை ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு நேசிக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு மொழிகளின் புதிய புதிய சித்தாந்தம் புலப்படும் . தாய்நாட்டை ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு நேசிக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு சுதந்திர வாழ்வு கிட்டும்.

ஓடும் வரை தான் ஆறு.
அதனால் தாய்மொழியுடனும்,தாய்த்திருநாட்டுடனும் ஓடிக்கொண்டே இரு.மொழியை நேசி ,நாட்டை நேசி அறிவும்,சுதந்திரமும் சுவாசமாகும்.

அதனால் நாட்டை,மொழியை நேசி .
அனைத்தும் உன்னை நேசிக்கும் .









.
Download As PDF

13 கருத்துகள் :

Mohamed Faaique சொன்னது…

நாட்டை நேசிப்பவன் நாட்டை பிரித்துக் குடு என்று மக்களை கொன்று குவிப்பானா??? என்னை பொறுத்தவரை தலைமைக்கு ஆசைப் படுபவனே அது போல் வேலை செய்வான்.

அடுத்த நாட்டில் தன் இனம் தனி நாசு கேட்டு போராடினால் அவன் போராளியாக தெரிகிறான். அவனை எதிர்ர்க்கும் ராணுவமும் அநியாயம் செய்வதாக சொல்கிறோம்.
(இலங்கை)
தன் நாட்டில் தனி நாடு கேட்டு போராடினால் அவன் தீவிரவாதி ஆகிறான் (காஸ்மீர்) அங்கு நம் ராணுவம் எவ்வளவு அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டாலும் கண்டு கொள்ளாமல் சல்யூட் அடிக்கிறோம். இது எந்த விதத்தில் நியாயம்??

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அருமையான பதிவு..

//என் மொழி என்னை அனுதினம் சிந்திக்க வைக்கிறது.என்று நான் சிந்திக்கவில்லையோ அன்று நான் கட்டாயம் இறந்திருப்பேன். //

ஆழமான கருத்து..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சிந்திக்க வேண்டிய ஒன்று - மொழி அன்னியப் படும் போது - பேச்சுத்திறமையும் எழுத்துத் திறமையும் மங்குகிறது - உண்மை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

குணசேகரன்... சொன்னது…

நல்ல கருத்து

Bharathi Raja R சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சசிகுமார் சொன்னது…

சிறப்பான கருத்து சார் உங்களுடைய கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மொழியின் எல்லையே
சிந்தனையின் எல்லை என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பா.

சக்தி கல்வி மையம் சொன்னது…

சிந்திக்க வேண்டிய ஒன்று....
Thanks 4 sharing..

ஹேமா சொன்னது…

மனதை அழுத்திப் போகிறது ஒவ்வொரு வரியும் !

அமுதா கிருஷ்ணா சொன்னது…

அருமையான கட்டுரை.டோடோ பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்.

புகல் சொன்னது…

/*
தாய்மொழியும்,தாய் நாடும் வேறு வேறல்ல.ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்த உயிர்.ஒன்றில்லாமல் ஒன்று இயங்கமுடியாது
*/
ஒ அப்படியா,
என் தாய்மொழி தமிழ் ஆனால் என் நாடு என்று சொல்லபடும் இந்தியாவின் மொழியோ இந்தி, ஆங்கிலம். அப்ப தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் யார்? வந்தேறியவர்களா, இல்லை அடிமைகளா, அனாதைகளா.

ஆகா என்ன ஒரு குடிஉரிமை.
தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிட தடை ஆனால் வடநாட்டில் மட்டும் அவர்கள் தாய்மொழியான இந்தியில் வாதிடலாம்.
நடுவன தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் இந்தியில் மட்டுமே,ஆனால் தமிழன் தமிழில் எழுத போராடவேண்டும்,
அப்ப தமிழன் என்ன அனாதைகளா.ஏன் தமிழ்மொழியில் நடத்தினால் என்னவாம்.
இந்திய பாராளுமன்றம், தேசிய வங்கிகளில், ஆயில் துறைகளில், இரெயில்வே துறையில், இரெயில்வே நிலைங்களில்,
விமான துறையில், விமான நிலைங்களில், கடவுச்சீட்டு(Passport), நிர‌ந்த‌க் க‌ண‌க்கட்டை(PAN card),
அது தொடர்பான இனையதளம் என அனைத்திலும் இந்தியும் ஆங்கிலமுமே முதன்மையாக செயல்படுகிறது,
இன்னும் பல எ-டு சொல்லலாம்

வடநாட்டவர்கள் எந்த மாநிலத்துக்கு போனாலும் அந்த மாநிலத்து மொழியை படிக்க/தெரிந்து கொள்ள முயல்வதே கிடையாது,
மாறாக மற்றவர்கள்தான் இந்தி மொழியை கற்றுவைத்திருக்கவேண்டும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆதிக்க எண்ணம்.
இது எண்ணம் எவ்வாறு வருகிறது இந்த பாழாய் போன இந்திய அரசியல்அமைப்புதான், காரணம் இந்தி மொழியை அனைத்து மாநிலத்திலும் திணித்து இந்தியை ஒரு அத்தியாவாச மொழியாக மாற்ற முயற்சிக்கிறது, தமிழில் படித்தால் வேலை கிடைக்காது போன்ற மனநிலையை உண்டாக்கி இந்தியை தேவையான மொழியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
பல மொழிகள் வாழும் ஒரு நாட்டில் இந்தி மொழியை மட்டும் முதன்மைபடுத்துவது அப்பத்தமாகும்
அப்படியே அதை பரப்புவதாக இருந்தால் இந்தி மக்களின் வரிபணத்தில் இருந்து செய்ய வேண்டியதானே


மொழி மட்டும் அல்ல தமிழனின் உயிர்கூட மலிவாகிவிட்டது.
தமிழன் இலங்கையில் செத்துமடிந்தாலும், தமிழ் மீனவர்கள் செத்தாலும், தமிழ் விவசாயிகள் தண்ணிர் இல்லாமல் செத்துமடிந்தாலும் இந்த இந்திய அரசாங்கத்துக்கு கவலை இல்லை
இதுவெல்லாம் ஒரு நாடா?

புகல் சொன்னது…

இந்தியா விடுதலை அடைகின்ற நேரத்தில் நாட்டின் மொழியாக எது இருக்க வேண்டும் என்ற விவாதம் எழுகிறது
அப்பொழுது இந்தி என்று வடநாட்டவர்களும், உருது என்று இசுலாமியர்களும் அடித்துகொண்டிருக்கிறார்கள்
தெற்கே தமிழ் மற்றும் பல திராவிட மொழிகள் உள்ளதே என்ற உணர்வு துளிகூட இல்லை என்ன ஒரு கொடுமைடா.
அதுமட்டுமா "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்." என்று முழங்கினார்கள் */
தமிழர்கள் என்னமோ பிழப்பு தேடி இந்தியா வந்த மாதிரியும் இந்த இந்தி நாய்கள்தான் தமிழநாட்ட கொடுத்தமாதிரியும் கொக்கறிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள்

இந்தியை திணிக்க பலவகையை கையாண்டது,
மும்மொழித் திட்டம் தீட்டினார்கள், தட்சிண இந்தி பிரசார சபை நிறுவபட்டது, நவோதயா பள்ளிகள் etc
இதுமட்டுமா இதை எதிர்த்த தமிழர்களை கொன்று குவித்தது
ஆம் நூற்றுக்கும் மேலானோர் இறந்தார்கள், பல ஆயிரம் பேர்மேல் வன்முறை ஏவபட்டது.
இப்படியாக இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க பல வழியில் முயன்றார்கள்,
தமிழ்நாடு இந்தியா என்னும் ஆதிக்கத்தில் இருக்கும்வரை முயற்ச்சிபார்கள்.

இதன் காரணமாகத்தான் விடுதலை கிடைத்த நாளை கருப்பு தினமாக கொண்டாடும்படி சொன்னார் பெரியார்
அது எவ்வளவு பெரிய உண்மை என்று இன்று விளங்குகிறது

இந்தியாவையும், தமிழையும் இங்கு நம்மில் பலபேர் போட்டு குழப்பிகொள்கிறோம்,
இந்தியா என்பது தோராயாமாக ஒரு 100வருடத்துக்கு முன்பு உண்டான ஒரு உறவு
ஆனால் நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உண்டான உறவு
இந்தியா என்பது பலமொழிகளால் ஆன ஒரு கலவை அதில் இந்திக்காக மற்றவர்கள் விட்டுகொடுக்க வேண்டும் என்று சொல்வது மடத்தனம் ஆகும்.
இந்திமொழி எந்த துறையிலும் வளர்ச்சி பெறாத, இலக்கணவளம் இல்லாத ஒரு தற்குறி மொழி இது எப்படி தமிழ்மொழிக்கு ஒப்பாகும்
இப்படி இந்தியை அனைத்து மொழியின் திணிப்பதால் அதீத பயன் அடைவது இந்தி மக்கள்தான்
அவர்கள் முதல் குடிமகனாகவும் மற்றவர்கள் இரண்டாவது குடிமகனாகவும் மாறிவிடுவார்கள்.

இப்படி நேற்று வந்த உறவுக்காக தமிழ்மொழியை புறக்கணிப்பது எந்தவிதத்தில் நியாயம்,
இங்கு தமிழ் மொழியை பற்றி பேசினாலே அவன் மேல் பிரிவினைவாதம்,
இந்திய இறையாண்மைக்கு எதிரானவன், குறுகிய மனம் உள்ளவர்கள் என்று சொல்லி தமிழை வளரவிடாமல் முடக்கிறார்கள் இந்த மூடர்கள்

Unknown சொன்னது…

அருமை

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "