திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இந்தியாவின் தோல்வியும்,இந்தியர்களின் எதிர்பார்ப்பும்,சுதந்திர தினமும்.
சுதந்திரம் என்றால் என்ன?,.அதனை ஏன் பாதுகாக்கவேண்டும்?.நமக்கு அது என்ன தந்துள்ளது என்பது பற்றி 80 வயதிற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு இந்திய சுதந்திர தீரர்களுக்கும்,  அதன் தேவை அதன் அவசியம் பற்றி முள்வேலிகளிலும்,புலம்பெயர்ந்துள்ள சகோக்களுக்கும் மற்றும் அதற்காக போராடிவரும் உயர்ந்தோருக்கு மட்டுமே தெரியும்.மற்றபடி பெரும்பான்மையினருக்கு  அது பற்றி பேசவும்,எழுதவும் மட்டுமே முடியும் அவ்வளவே,அதனை மிகப்பெரிய வெளிப்பாடு என்று கூறுவதோடு ,அடுத்த நிலைக்குச்செல்  என்று கூறுவதை உரிமை மீறல் என மட்டும்கூறத்தெரியும் அது பேசியதை எழுதியதை கேட்டு படித்த மனன வெளிப்பாடு என்பதால்  இந்த நிலை.

சுதந்திரத்தைப்பற்றியும் ,அதன் தன்மைபற்றியும் ,இன்று நம் நாடு இப்படியாகிவிட்ட துரதிஷ்டமான சூழலுக்கு காரணம் பற்றியும் எத்தனை பேருக்கு சரியாக தெரியும.எனக்கு தெரிந்து அப்படிப்பட்டவர்கள் அரிதிலும் அரிதே.ஆனால், இதைப்பற்றி தங்களுக்கு தெரிந்தது போல காட்டிக்கொண்டு தமக்கும்,சமூகத்திற்கும்,ஏன் தனது சொந்த குடும்பத்தின் எதிர்காலத்திற்கே குழிதோண்டி புதைத்துவரும் அறிவுஜிவிகள் தான் இங்கு  அதிகம் . இவர்கள் யாரோ எழுதியதை படித்து ,கேட்டு யாவும் தமக்கு தெரிந்தது போல பேசியும், எழுதியும் வருவதோடு  தமக்கு தமக்கே சாவுமணி அடித்துக் கொண்டு  வாழ்ந்துவருபவர்கள்.இவர்களை தலைவானாக ,கருத்தாளன ஏற்று தங்களையும்,தங்களின் அறிவையும்,வாழ்வையும் மலுங்கடிக்கவிட்டுவிட்ட   பரிதாபத்திற்குரிய பாமரர்கள் இந்தியாவில் மிகமிக அதிகம்.

இன்றைய இந்தியாவின் இழிநிலைக்கான காரணத்தைப் பற்றி பார்த்தோமானால், இங்கு  கருத்துரிமை என்ற ஒன்று முற்றிலும் இல்லை , அதனால் தான் இந்தியா தனது வளர்ச்சியில் பின் தங்குகிறது, தேவையில்லாத  பல சிக்கல்களில் ஆட்படுது ,பல சிக்கல்களை உருவாக்குகிறது.

எந்த நாட்டில் பேச்சு சுதந்திரம்,எழுத்து சுதந்திரம் ,வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் பொதுவெளியில் சுதந்திரமாக செயல்படும் சுதந்திரம் ஆகியவைகள் தடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு தகுதியில்லாத அரசு செயல்படுகிறது என்பதுவே உண்மையிலும் உண்மை.அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்று இந்தியாவில் நிலவுவது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது . இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாகும்.அரசியல்கட்சிகள் தங்களை வளர்க்கும் சுயநலத்தில் நாட்டின் சுதந்திரத்தையும்  , ஜனநாயக மாண்பையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டதே இதற்கு காரணம் .அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளும் இதில் அடங்கும்.

இவர்களை மக்களாட்சியின் காவலனாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் மக்கள் . ஆனால் அரசியல்வாதிகள் அனைவரும் மன்னராட்சியின் நீட்சியாக மாறிவிட்ட கொடுமை இன்றைய இந்தியாவில். அதனால் தான் எங்கும் ஊழல், அதனால் தான் எங்கும் சுரண்டல்.அதனால்  தான் இங்கு கருத்துரிமை முடக்கப்படுகிறது .

அதனால் தான் மக்களுக்கு எங்கும் , எவரிடமும்  நம்பிக்கையில்லை , அதனால் தான் எங்கும் எவ்விடத்திலும் ஏமாற்றம்.அதனால் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது இந்தியா.வருமையையும் , ஊழலையும் அனுமதிக்கிற அரசியல் கட்சிகள்  இந்தியாவிற்கு கேடு .


நமது இந்தியா மிகவும்  அற்புதமான நாடு.இந்தியர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள்.ஆனால்,பாதையின்றி  பயணிக்கின்றனர் பரிதாபமாக.

இன்று இந்தியர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் ஒரு உண்மையான தன்னலமற்ற தலைவனும்,சுதந்திர அரசுமேயாகும்  .

தன்னலமற்ற தலைவர் என யாரும் இந்திய அளவில் உருவாகவில்லை , இனி உருவாவார்கள் என்ற நம்பிக்கையில்  தனது பயணத்தை நடத்திவருகிறது  நமது பாரதம் .


இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன சாதிக்கப்போகிறார்கள் ?.அரசு , அரசியல், அரசாட்சி, மக்களாட்சி ,பொதுநலன் ,கண்ணியம் ,சேவை ,மனித நேயம் , போன்றவைகளைப்பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் ?. இவர்கள் அதனை சுதந்திரம் பெற்றால் பெறத்தான் போகிறார்களா ? .இவர்களுக்கு அந்த தகுதியும் இல்லை, தகுதியடையும் தகுதியும் இல்லை என்றும் ,இவர்கள் திருந்தப்போவதே இல்லை.அதனால் இவர்களுக்கு எதற்கு சுதந்திரம் ,வீண் என்ற உட்பொருள் பொதித்து பேசியவரை நாங்கள் உங்களின் நாட்டிற்கு அடிமையாக இருப்பதை விட எங்களின் சுதந்திர நாட்டில் நாங்கள் தகுதியில்லாதவர்களாகவே வாழ்ந்து மடிகிறோம்.தகுதி ,  தகுதியடையும் தகுதி பற்றி கவலைப்படவேண்டியது நாங்கள் தான் என பதிலடி கொடுத்து தனது பக்குவமான அரசியல் நடவடிக்கையினால் நமக்கு சுதந்திரத்தை பொற்றுக்கொடுத்துச்சென்ற அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்றுவோம்.


இது நமது இந்தியா 
நமது தாய் நாடு 
நாமனைவரும் இந்தியர்கள் என பெருமைப்படுவோம்                                          
.
Download As PDF

24 கருத்துகள் :

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
ஒன்று படுவோம்.
உயர்வோம்.
வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாப்பா ஃபோட்டோ கலக்கல்

Mohamed Faaique சொன்னது…

///
இன்றைய இந்தியாவின் இழிநிலைக்கான காரணத்தைப் பற்றி பார்த்தோமானால், இங்கு கருத்துரிமை என்ற ஒன்று முற்றிலும் இல்லை////

எனக்கென்னவோ, இந்த கருத்துரிமை இருப்பதால் தான் இந்தியா முன்னேர முறுக்கிரதோ`னு தோணுது.. பேசுரதுக்கு நிறைய பேரு இருக்காங்க.. சாதிக்கிரவங்கதான் குறைவு...

நாம் உரிமையை பாவித்து உருப்படியாக என்ன செய்திருக்கிறோம்??? எதாவது ஒரு திரைப்படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது, யாராவது ஒரு நடிகனுக்கு பாலாபிசேகம் செய்வது, எவனாவது ஒருவனின் கொடும்பாவி எரிப்பது, கள்ள சாமியாருக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் கூடுவது, அடுத்தவனை பற்றி கிசு கிசு எழுதுவது....etc...

ஒரு முறை பார்த்தேன்... இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டுமென்று இந்தியாவில் போராட்டம் நடத்துகிறார்கள்..அதில் ஒருவன் பாதையில் போகும் வண்டிகளின் கண்ணாடிகளை உடைக்கிறான். இதனால் இலங்கைக்கு என்ன நஷ்டம் வந்தது??? எங்களுக்கு எல்லா சுதந்திரமும் இருக்கு..அதை சுயனலத்துக்காகவன்றி வேறு எதற்கும் அதை சரியாக, முறையாக பாவிக்கத் தெரியாத மடையர்கள் நாம்.

Jeyamaran $Nila Rasigan$ சொன்னது…

இன்று இந்தியர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் ஒரு உண்மையான தன்னலமற்ற தலைவனும்,சுதந்திர அரசுமேயாகும் .

இந்தியனின் உணர்வு அண்ணா
நிலாரசிகன்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நமது இந்தியா மிகவும் அற்புதமான நாடு.இந்தியர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள்.ஆனால்,பாதையின்றி பயணிக்கின்றனர் பரிதாபமாக.//

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

கவி அழகன் சொன்னது…

அருமையான சிந்தனை தோழரே

Thennavan சொன்னது…

பாலுக்காக அழும் குழந்தை ,
கல்விக்காக ஏங்கும் சிறுவன் .
வேலைக்காக அலையும் இளைஞ்சன் ,
வறுமையில் வாடும் தாய் ,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுந்தந்திர இந்தியா.

- மாவீரன் பகத் சிங்க்

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

/////////
தன்னலமற்ற தலைவர் என யாரும் இந்திய அளவில் உருவாகவில்லை , இனி உருவாவார்கள் என்ற நம்பிக்கையில் தனது பயணத்தை நடத்திவருகிறது நமது பாரதம் .
/////////


இந்த ஏக்கம் என்று தீருமோ...
எதிர்ப்பாத்துக் கொண்டிருக்கிறது எதிர்காலம்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

!! அய்யம்மாள் !! சொன்னது…

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ !!!

FARHAN சொன்னது…

சுகந்திர தின வாழ்த்துக்கள்

M.R சொன்னது…

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

பாரத்... பாரதி... சொன்னது…

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

பெயரில்லா சொன்னது…

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

தன்னலம் அற்ற தலைவன் எதோ ஒரு காலத்தில் பிறப்பான் என்ற நம்பிக்கையுடன்....

koodal bala சொன்னது…

சுதந்திர தின வாழ்த்துக்கள் !

JOTHIG ஜோதிஜி சொன்னது…

இன்றைய சுதந்திர தின கொண்டாட்டத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நீங்கள் சொன்னது போலவே எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் வந்து கொண்டு இருப்பதால் அப்படியே நிறுத்தி விட்டேன். பார்க்கலாம். நிச்சயம் ஒரு நாள் மாறும்.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்றுவோம்.

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

சுதந்திரத்தைப்பற்றியும் ,அதன் தன்மைபற்றியும் ,இன்று நம் நாடு இப்படியாகிவிட்ட துரதிஷ்டமான சூழலுக்கு காரணம் பற்றியும் எத்தனை பேருக்கு சரியாக தெரியும.எனக்கு தெரிந்து அப்படிப்பட்டவர்கள் அரிதிலும் அரிதே.

தங்கள் கருத்து முற்றிலும் சரி !!!!!!!!!

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

பெயரில்லா சொன்னது…

என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

மாய உலகம் சொன்னது…

//அதனால் தான் மக்களுக்கு எங்கும் , எவரிடமும் நம்பிக்கையில்லை , அதனால் தான் எங்கும் எவ்விடத்திலும் ஏமாற்றம்.அதனால் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது இந்தியா.வருமையையும் , ஊழலையும் அனுமதிக்கிற அரசியல் கட்சிகள் இந்தியாவிற்கு கேடு .//

உண்மை தான் சகோ....இது மாறும் என்ற நம்பிக்கையில்(அவ நம்பிக்கையில்) மக்கள்...

சுதந்திரத்திற்காக எத்தனையோ பேர் தனது உயிரை தியாகம் செய்தார்கள்..அவர்களையும் போற்றுவோம்.... நன்றி சகோ

அம்பாளடியாள் சொன்னது…

அடிமையாக இருப்பதை விட எங்களின் சுதந்திர நாட்டில் நாங்கள் தகுதியில்லாதவர்களாகவே வாழ்ந்து மடிகிறோம்.தகுதி , தகுதியடையும் தகுதி பற்றி கவலைப்படவேண்டியது நாங்கள் தான் என பதிலடி கொடுத்து தனது பக்குவமான அரசியல் நடவடிக்கையினால் நமக்கு சுதந்திரத்தை பொற்றுக்கொடுத்துச்சென்ற அண்ணல் காந்திஜியை இந்த இனிய நாளில் அனைவரும் போற்றுவோம்.

அண்ணல் காந்தியடிகள் பெற்றுத்தந்த சுதந்திரம் மீண்டும் மலர
வாழ்த்துகள்......நன்றி சகோ பகிர்வுக்கு.........

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "