Friday, September 16, 2011

புலிகளாவோம் .

.


புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.

புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.

புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.


.



.
மீள்வு

.
Download As PDF

24 comments:

Rathnavel said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

Rathi said...

ம்ம்ம்ம்... இந்திய அரசுக்கு, ஆளும்வர்கத்துக்கு பிடிக்காததை எல்லாம் சொல்லிக்கிட்ட்ருக்கீங்க யுவர் ஆனர் :)

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

நன்றாகச் சொல்லியிருக்கிறீங்க.

நாம் அனைவரும் பகுத்தறிவில் புலிகளானால் எம்மைப் பீடித்துள்ள தீயவைகள் விலகி ஓடிடுமே!

சசிகுமார் said...

உணர்ச்சி வரிகள் மிக்க கவிதை நீங்கள் சொல்வது உண்மை தான் நாம் ஆடுகளாக தான் இருக்கிறோம்

Nesan said...

இனிய உணர்வுகளைத் தட்டியெழுப்பும் கவிதை!

கும்மாச்சி said...

\\புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.//

ஆம் ஒன்றுபடுவோம் ஓரினமாக.

கோகுல் said...

புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.//

இனியாவது புரிந்து கொண்டு
பகுத்தறிவுப்புலிகலாவோம்!
ஒன்று சேர்வோம்!

மகேந்திரன் said...

ஆறென உண்டாம்
ஆறாம் அறிவை
சோர்வின்றி
செயல்படுத்த
அழகிய கவிதை.....

cheena (சீனா) said...

அன்பின் நண்டு - உணர்ச்சி கொப்பளிக்கிறது - நல்ல சிந்தனை - நடக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

உணர்வுகளை வெப்ப வார்த்தைகளாய் கொட்டி இருக்கிறீர்கள்

சூடு.......

Dhanalakshmi said...

superb lines.........

Ramani said...

மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.

அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம10

நிவாஸ் said...

கவிதை பிரமாதம் தோழரே

பாராட்டுகள்

MANO நாஞ்சில் மனோ said...

செமையான கவிதை வரிகள்...!!

முனைவர்.இரா.குணசீலன் said...

ஒன்றுசேர்வோம்..

சென்னை பித்தன் said...

ஆம்!புலிகளாவோம்!

சி.பி.செந்தில்குமார் said...

ஒன்று சேர்வோம்

Lakshmi said...

நல்ல கவிதை.

Jeyamaran $Nila Rasigan$ said...

அண்ணா நல்ல கவிதை வாழ்த்துகள்

id said...

அருமையான (மீள்) கவிதை....
வாழ்த்துக்கள்.... Reverie

ஜெரி ஈசானந்தன். said...

மீள்வோம்.

S.Menaga said...

மிக அருமையான கவிதை...

அப்பு said...

அதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம். வழமையான எழுத்துகள்.

Post a Comment

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com