ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வசதிகள்


.

.

மொழியில்லா மொழி பேசி

மோதிச்செல்லும் மௌனங்கள்

ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவி

ஒன்றும் நிலைக்காது

கற்பனையாய் ஓடிச்செல்லும்

கலைந்து திரியும் பிம்பங்கள்

சிதறிக்கிடக்கும் முகங்கள்

திணறிச்செல்லும் மூச்சுகள்

ஏற்றத்தாழ்வுகள் தோன்றி தோன்றி

ஏற்றம் பெற்று நிற்கும் தாழ்வுகள்

ஏங்கித்தவிக்கும் மனதிற்கு

ஏராளமான வசதிகள்

எதைப்பற்றியும் சிந்திக்க

.
.

.
Download As PDF

19 கருத்துகள் :

Yaathoramani.blogspot.com சொன்னது…


ஏங்கித்தவிக்கும் மனதிற்கு
ஏராளமான வசதிகள்
எதைப்பற்றியும் சிந்திக்க//

நிச்சயமாக
இது கூட ஒரு வசதிதான்
ஆழமான கருத்துள்ள
அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 4

Unknown சொன்னது…

யோசிக்கத் தூண்டும் கவிதை..! வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கடைசி வரிகள் மொத்தத்தையும் விளக்கிவிடுகிறது.

ADMIN சொன்னது…

மேற்கண்டவர்களைவிட இந்தக் கவிதைக்கு என்னால் என்ன கருத்துச்சொல்ல முடியும். ? கவிதை நன்று. வாழ்த்துகள்...!

ADMIN சொன்னது…

பின்னணி இசையை எடுத்துவிடலாமே? அலுவலகம், மற்றும் பொதுஇடங்களில் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஒலியானது தொந்தரவாக இருக்கும் என்பது என் எண்ணம்.

Thozhirkalam Channel சொன்னது…

அருமையான வரிகள்.. முதல் முறை உங்கள் கவிதையை ரசித்து தித்தித்தேன்..

பூங்குழலி சொன்னது…

ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவி

ஒன்றும் நிலைக்காது

கற்பனையாய் ஓடிச்செல்லும்

கலைந்து திரியும் பிம்பங்கள்


அருமையான வர்ணனை ..அருமையான கவிதை

பெயரில்லா சொன்னது…

மிக ஆழ்ந்த வரிகள். தமிழ் மணத்தில் இவ் வரிகளைக்கண்டு வந்தேன்.
(வழக்கமாக அரசியல் ஏதும் தான் இருக்கம்)
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஹேமா சொன்னது…

ஆழமான வரிகள் கொண்ட கவிதை !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// ஏங்கித்தவிக்கும் மனதிற்கு

ஏராளமான வசதிகள்

எதைப்பற்றியும் சிந்திக்க ///

உண்மையான வரிகள் சார்... இதனின் அர்த்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...

வாழ்த்துக்கள்.... நன்றி... (TM 7)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்!

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

சென்னை பித்தன் சொன்னது…

நன்று.
த.ம.9

Doha Talkies சொன்னது…

மிக மிக அருமை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான தொரு கவிதை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

. அருமையான வரிகள்.. நிதர்சனமும்..

N.H. Narasimma Prasad சொன்னது…

அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - கவிதை அருமை - ஏற்றத் தாழ்வுகள் தோன்றத் தோன்ற ஏற்ரம் பெறும் தாழ்வுகள் - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "