திங்கள், 24 மே, 2010

இடையன் கடிகாரம்


















.


.


அனிச்சைச்செயல் என்றால் அனைவருக்கும் உடனே அனிச்சைச்செயலாகவே தெரியும்.ஆனால் ,அதற்கு வேர் கொடுத்தது அனிச்சம். அனிச்சம் உணர்ச்சி மிக்க தாவரத்தில் ஒன்றாகும் (Sensitive Plant).மோப்பக்குழைவதால் இது நீர்மத்தால் வாடும் செடிகளில் (Hydronastic Plant) ஒன்றாகும் .நீண்ட காம்பு ,மென்மை,நெருஞ்சி போன்ற வடிவம்-இவை கொண்டு நோக்கின் அனிச்சம் (Anagallis arvensis) நம் முன் வந்து நிற்கிறது .மழை பொழிய மேகம் கருநிறம் பெற்றபோதே அனிச்சம் வாடுவதால் இதனை இடையன் கடிகாரம் (Shepherd Clock) என்பர் .மேனாட்டில் ,அனிச்சத்தின் தன்மைகளால் இலக்கிய உவமை உயிர் பெறுகிறது .நம் தமிழகத்தில் வெப்பநிலை மிகுந்து விட்டதால் இச்செடி மறைந்தது .எனினும், நீலகிரி மலைகளில் ஓரளவு காணப்படுகிறது .

விருந்து ....பொதுவாக இன்று விருந்து என்றால் என்னவென்றும், அதில் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் மற்றும் பக்குவம் என்னவென்றும் தெரியாமலேயே சிறப்பாக நடந்தது முடிந்ததாக சந்தோசப்பட்டு அங்கிகரிக்கப்பட்டு ஆகா ,ஓகோவென்று சிலரை சிழிர்ப்பூட்டி மகிழ்வித்த மழிவான வியாபார நோக்கிலமைந்தவையாகவே உள்ளன . இதனால் முகந்திரிந்து நோக்கும் பாங்கு ,இப்படிப்பட்ட பாசிச விருந்தில் நிகழக்கூடிய ஒன்றாக .
பொது நிகழ்விலோ முகந்திரிந்து நோக்கும் பாங்கு அதனை ஏற்பாடு செய்தவர்களின் பாசிச தன்மையை கண்ணாடிபோல் வெளிப்படுத்திவிடும் .
பொதுவாக நான் எந்த ஒரு பாசிச குழுக்களின் அழைப்பையும் ஏற்பதில்லை .ஆனால் சென்ற திசம்பர் என நினைக்கின்றேன் அப்படியிருக்காது என நண்பரின் உத்திரவாத்தில் சென்றபோது இன்னும் பாசிஸ்டுகள் திருந்தவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துவிட்டனர் . ஆனால் ஆகா ,ஓகோவென்று சிறப்பாக நடந்ததாக அங்கிகரிக்கப்பட்டது சிழிர்ப்படைந்த பாசிஸ்ட்களால் .பக்குவம் இல்லாத இவர்கள் ஏன் அனைவரையும் அழைக்கவேண்டும் .சிழிர்ப்படையும் பாசிஸ்ட்களை மட்டுமே இந்த பாசிஸ்டுகள் அழைத்து மகிழ்வித்து செல்லவேண்டியது தானே என பலரின் குரலும் பாசிச நாகரிகம் கொண்டு நசுக்கப்பட்டது பாசிச நக்கலுடன் பாசிஸ்டுகளால் .பாசிஸ்டுகள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்பதால் நான் அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் , இதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட மனச்சங்கடங்கள்....
உறவினர்களின் விருந்தில் சிலருக்கு இப்படிப்பட்ட முகந்திரிந்த நோக்கினால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும்படி ஆகி பல வழக்குகள் இந்த தவறான வழக்கத்தானால் இன்றும்....

இதனால் தான் நமது அய்யன்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என இடித்துரைக்கின்றார் அழகாக .


.


.

திருக்குறள் அறியப்படவேண்டிய உண்மைகள் .....தொடரும் ....

(சிழிர்ப்பு -அதித உபசரிப்பு,மழி-குறள் கூறும் பொருளே இதற்கும் )


.


.

Download As PDF

4 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

ராஜ சேகர்,பழைய வலைப்பதிவை எடுக்க பாருங்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு
என்ன ஆயிற்று - எங்கே பழைய பதிவு - இதென்ன புதுப் பதிவு - ஏன் ? என்ன ஆயிற்று

மசக்கவுண்டன் சொன்னது…

ஜெரி ஈசானந்தன் சொன்னது:
//ராஜ சேகர்,பழைய வலைப்பதிவை எடுக்க பாருங்கள்.//
அதெப்படீங்க இந்தப்பதிவர் பேரி ராஜசேகர்னு கண்டுபிடிச்சீங்க?
இவரோட பழய பதிவுக்கு என்னாச்சு?

மசக்கவுண்டன் சொன்னது…

நண்டு நொரண்டு அவர்களே,
உங்கள் பதிவில் கமென்ட் மாடரேஷன் உடனே போடவும்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "