வெள்ளி, 28 மே, 2010

அரசுக்கு எதிர்ப்பு மிகவும் நாகரிகமாக ஈரோட்டில் இன்று

.

.



நொரண்டு :வணக்கம் ,நண்டு .
நண்டு :வாங்க நொரண்டு
நொரண்டு :என்ன ரொம்ப நாளா ஆளை பாக்க முடியல ?
நண்டு :ம் ..இங்க தான் இருக்கேன் ஈரோட்ல .
நொரண்டு :ம் .என்ன சிறப்புச்செய்திகள் ஏதாவது உண்டா?
நண்டு :தெரிஞ்சுக்கிட்டே கேக்கிறயா ?
நொரண்டு : அப்ப சிறப்புச்செய்தி இருக்கா ? சொல்லு ...சொல்லு ரொம்ப நாளாச்சு .
நண்டு : இன்று நான் மக்களின் ஒற்றுமையைக்கண்டு மிகவும் மகிழ்ந்த நாள் .
நொரண்டு :என்ன ?
நண்டு :ஆம் ,இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்தியின் இறப்பிற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை இன்று என் வாழ்நாளில் நேரடியாக பார்த்து மிகவும் அகம் மகிழ்ந்தேன் .அதுவும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அனைவரும் ஒரே கூறையில் இருந்து அரசுக்கு தங்களின் எதிர்ப்பை மிகவும் நாகரிகமாக மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளதை நினைக்கும் பொழுது .மக்கள் விழிப்புணர்வுடன் தான் உள்ளனர் என்பதனை உணரமுடிந்தது .
நொரண்டு :விளக்கமாகச்சொல் .
நண்டு :ஈரோட்டில் இரண்டு மேம்பாலங்கள் கட்ட அரசு முடிவு செய்த்து .
நொரண்டு :அது நல்லது தானே .
நண்டு : ஈரோடு மிகவும் சிறிய ஊர் .இதற்குள் இரண்டு மேம்பாலங்கள் தேவையோ இல்லை .
நொரண்டு :அப்படியா .
நண்டு :ஆம் ,யாரோ கொடுத்த தவறான யோசனைகளினால் மேம்பாலங்கள் கட்ட 100 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கப்பட்டது .மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :ஏன்?
நண்டு :இலவசங்களில் மக்கள் மயங்கி இருக்கின்றனர் என்ற மமதை மக்களின் உணர்வினை கேட்கத்தேவையில்லை என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச்சென்றிருக்கலாம் .
நொரண்டு : ம் ..
நண்டு : அதனால் இவனுங்க கிட்ட என்ன கேக்கறது .நாம என்ன செஞ்சாலும் இவனுகளுக்கு கவலையில்ல .நாம அதச்செஞ்சேம் ,இதச்செஞ்சேம்னும் சொல்லி ஓட்டு வாங்கிறலாமுனு ஆரம்பிச்சாங்க மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :இப்ப என்னாச்சு .
நண்டு :ஈரோட்ல இருக்கற அத்தன பேரும் ஒன்னாசேந்து முழுக்கதவடைப்பு நடத்தி மிகவும் வெற்றிகரமா முடித்துள்ளனர் .
நொரண்டு :ம்..
நண்டு :ஆமா ,ஒரு சிங்கில் டீக்கடை கூட இன்னைக்கு திறக்கல . அனைத்துக்கட்சி ப்ந்தின் போது கூட அங்கொன்னும் ,இங்கொன்னுமா கடைகள் இருக்கும் .ஆனால் ,இன்னைக்கு ஈரோடு முழுக்கவும் கிட்டத்தட்ட 10 கிலோமிட்டர் சுற்றளவுக்கு ஒரு கடை கூட திறக்கப்படவில்லை.சூப்பர்.
நொரண்டு : அப்படியா ?
நண்டு :ஆமாம் .
நொரண்டு :அவ்வளவு ஒற்றுமைக்குக்காரணம் .
நண்டு :மக்களின் விருப்பங்களை கேட்காமலே தான் தோன்றித்தனமாக செயல்படுவதால் .
நொரண்டு :சரி ,பாலவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது அரசு கதவடைப்பு தானே செய்வ செஞ்சுட்டுப்போனு ,அவர்கள் பாலத்தை கட்டினார்கள் எனில் .
நண்டு :வரும் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது .
நொரண்டு :அப்ப போக்குவரத்து நெரிசலில மக்கள் அவஸ்தைப்படவேண்டியது தானா ?.
நண்டு :அட நீ ஒன்னு .ரிங் ரோடு போட்டு பஸ்டாண்ட தூக்கி அவுட்டர்ல போட்டாலே 50% டிராபிக் குறஞ்சிரும் .அப்புறம் டிராபிக்கோ யில்ல என்ற நிலை ஏற்பட்டுவிடும் .அதவிட்டுட்ட தேவையில்லாத வேலை .கெட்ட பேர் .மேலும் செலவும் கம்மி .
நொரண்டு :மாரியம்மன் கோயில் தான் பிரச்சனைக்கு காரணங்கராங்க ?.
நண்டு :பாலம் வேண்டாங்கரது தான் மெயின் பிரச்சனை .
நொரண்டு :அப்ப ...?
நண்டு :பாலங்கட்டறத விட்டுட்டு .மாற்று யோசனைகள் செஞ்சாலே பல பிரச்சனைகள் தானே அமிழ்ந்துவிடும் .
நொரண்டு :இல்லனா .
நண்டு :மதவாதிக மாரியம்மன எடுத்துக்குவாங்க .
நொரண்டு :ம் ..
நண்டு :மத்தவங்க MGR யை எடுத்துக்குவாங்க .
நொரண்டு :MGR ஆ?
நண்டு :ஆமாம்பா ஆமாம் ,இது புரியரவங்களுக்கு புரியும் .உனக்கு புரியாது .ஏன்ன இது அரசியல் .
நொரண்டு :என்னமே போப்பா .என்னமே சொல்ர .நான் டீக்குடிச்சுட்டு வரேன் .வரயா .
நண்டு :ம் ,,,போலாம் .


.



.



.



.


. Download As PDF

புதன், 26 மே, 2010

இன்று மலர்ந்தது
























.


.


நேற்றைய கனவு
இன்றைய தூக்கத்தில் .
என் கவிதை .


.



=======


.


.

பிரிவல்ல
பாடம் .
மரணம் .



.


.


=======
.



.

செப்பனிட்ட வேலி
பழைய செடிகள்
புத்தம் புதிய மலர்கள் .




.




. Download As PDF

செவ்வாய், 25 மே, 2010

ஒன்று

















.
.

.


ஒன்று
ஒன்றில் ஒன்று
ஒன்றால் ஒன்று
ஒன்றைக்கொன்று ஒன்று
ஒன்றுக்குள் ஒன்று
ஒன்றின் மேல் ஒன்று
ஒன்றின் கீழ் ஒன்று
கழிக்க ஒன்று
கூட்ட ஒன்று
வகுக்க பெருக்க ஒன்று
வினா ஒன்று
விடை ஒன்று
நானொன்று
நீயொன்று
நாம் சேர்ந்தால் ஒன்று
எப்படிப்பார்த்தாலும்
ஒன்று என்ற ஒன்று
ஒன்று


.

.


. Download As PDF

திங்கள், 24 மே, 2010

இடையன் கடிகாரம்


















.


.


அனிச்சைச்செயல் என்றால் அனைவருக்கும் உடனே அனிச்சைச்செயலாகவே தெரியும்.ஆனால் ,அதற்கு வேர் கொடுத்தது அனிச்சம். அனிச்சம் உணர்ச்சி மிக்க தாவரத்தில் ஒன்றாகும் (Sensitive Plant).மோப்பக்குழைவதால் இது நீர்மத்தால் வாடும் செடிகளில் (Hydronastic Plant) ஒன்றாகும் .நீண்ட காம்பு ,மென்மை,நெருஞ்சி போன்ற வடிவம்-இவை கொண்டு நோக்கின் அனிச்சம் (Anagallis arvensis) நம் முன் வந்து நிற்கிறது .மழை பொழிய மேகம் கருநிறம் பெற்றபோதே அனிச்சம் வாடுவதால் இதனை இடையன் கடிகாரம் (Shepherd Clock) என்பர் .மேனாட்டில் ,அனிச்சத்தின் தன்மைகளால் இலக்கிய உவமை உயிர் பெறுகிறது .நம் தமிழகத்தில் வெப்பநிலை மிகுந்து விட்டதால் இச்செடி மறைந்தது .எனினும், நீலகிரி மலைகளில் ஓரளவு காணப்படுகிறது .

விருந்து ....பொதுவாக இன்று விருந்து என்றால் என்னவென்றும், அதில் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் மற்றும் பக்குவம் என்னவென்றும் தெரியாமலேயே சிறப்பாக நடந்தது முடிந்ததாக சந்தோசப்பட்டு அங்கிகரிக்கப்பட்டு ஆகா ,ஓகோவென்று சிலரை சிழிர்ப்பூட்டி மகிழ்வித்த மழிவான வியாபார நோக்கிலமைந்தவையாகவே உள்ளன . இதனால் முகந்திரிந்து நோக்கும் பாங்கு ,இப்படிப்பட்ட பாசிச விருந்தில் நிகழக்கூடிய ஒன்றாக .
பொது நிகழ்விலோ முகந்திரிந்து நோக்கும் பாங்கு அதனை ஏற்பாடு செய்தவர்களின் பாசிச தன்மையை கண்ணாடிபோல் வெளிப்படுத்திவிடும் .
பொதுவாக நான் எந்த ஒரு பாசிச குழுக்களின் அழைப்பையும் ஏற்பதில்லை .ஆனால் சென்ற திசம்பர் என நினைக்கின்றேன் அப்படியிருக்காது என நண்பரின் உத்திரவாத்தில் சென்றபோது இன்னும் பாசிஸ்டுகள் திருந்தவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துவிட்டனர் . ஆனால் ஆகா ,ஓகோவென்று சிறப்பாக நடந்ததாக அங்கிகரிக்கப்பட்டது சிழிர்ப்படைந்த பாசிஸ்ட்களால் .பக்குவம் இல்லாத இவர்கள் ஏன் அனைவரையும் அழைக்கவேண்டும் .சிழிர்ப்படையும் பாசிஸ்ட்களை மட்டுமே இந்த பாசிஸ்டுகள் அழைத்து மகிழ்வித்து செல்லவேண்டியது தானே என பலரின் குரலும் பாசிச நாகரிகம் கொண்டு நசுக்கப்பட்டது பாசிச நக்கலுடன் பாசிஸ்டுகளால் .பாசிஸ்டுகள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்பதால் நான் அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் , இதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட மனச்சங்கடங்கள்....
உறவினர்களின் விருந்தில் சிலருக்கு இப்படிப்பட்ட முகந்திரிந்த நோக்கினால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும்படி ஆகி பல வழக்குகள் இந்த தவறான வழக்கத்தானால் இன்றும்....

இதனால் தான் நமது அய்யன்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என இடித்துரைக்கின்றார் அழகாக .


.


.

திருக்குறள் அறியப்படவேண்டிய உண்மைகள் .....தொடரும் ....

(சிழிர்ப்பு -அதித உபசரிப்பு,மழி-குறள் கூறும் பொருளே இதற்கும் )


.


.

Download As PDF

புதன், 19 மே, 2010

அவளின் இதயத்தில்...

.

.
நான்  கடந்ததொலைவை
எவனோ  எடுத்து

எனக்கிட்ட  கட்டளை
யாருக்கோ  சென்று

எனக்காக அளந்த அளவில்
எவனோ   உடைதைத்து

எனக்கான மீன்
யார் வலையிலோ சிக்கி

இருந்தாலும்

எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்

.
.

.
Download As PDF

சனி, 15 மே, 2010

என் கவிதை





.

கொக்கலிடும் குறலில்
சுவர்க்கோழியின் உருவம்
தெரிந்தது போன்று
வெழக்கமாத்துக்குச்சியின்
அடர்வில்
பீய்த்துக்கொண்டோடும்
நீச்சி போல
ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து
செல்லறித்துப்போன
சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .

.

.

Download As PDF

வெள்ளி, 14 மே, 2010

நத்தையின் நகர்

.


.


.

தூங்காத இரவுகள்
ஞாபகத்திற்கு வருகின்றன
அவர்களின் பிரிவு

.


.


.

======

.

.

.


நேற்றைய
பயணச்சீட்டு
அனுபவம்


.


.

.
=====


.


.

.

மெதுவாக ...மெதுவாக ...
வேகமாக கடக்க ஆசை
நத்தையின் நகர்

.


.

.

.


.

Download As PDF

செவ்வாய், 11 மே, 2010

என் ரோஜாத் தோட்டம்

.


.

.


என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.

.


.


.======

.

.


.

கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.


.


.

.======

.


.
மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை.

.


.


.

Download As PDF

ஞாயிறு, 9 மே, 2010

சிற்பங்களை என்ன செய்ய

.

.

.
என்ன செய்ய
என்
அன்பானவர்களே

அன்று
பாறைகளுடன்
வந்தீர்கள்
சிற்பங்களாக்கினேன்

இன்று
சிற்பங்களுடன்
அல்லவா
வருகின்றீர்கள்

வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்

என்ன செய்ய
என்
அன்பானவர்களே

.


.

.
.

Download As PDF