சனி, 24 டிசம்பர், 2011

உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்
  அடர்ந்த மலையினுடே பயணத்திக்கொண்டிருந்தது கூட்டம் .
மலையின் அழகையும் அற்புதத்தையும் வியந்தபடி சென்றது.

பாதி மலை தான் இருக்கிறது,மீதி அழிந்துவிட்டது என ஆதங்கத்துடன் பேசிச்சென்ற கூட்டத்தின் கவனத்தை திருப்பியது காட்டுமலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு.

அதனைப்பார்த்து அதிசயத்தனர் கூட்டத்தார்.

அப்பொழுது கூட்டத்தின் சூத்திரதாரி ,என்ன அழகான பூக்கள் ,எவ்வளவு அழகு ,இவைகளின் பெயர்கள் தான் என்ன ? யாருக்கு தெரியும் ? என்ன  இருந்தாலும் இவைகளால் உலகிற்கு என்ன பயன் ? என ஆதங்கப்பட்டுக்கொண்டு கூட்டத்தினை தனது மாயவலையில் சுற்றிக்கொண்டிருந்தபொழுது,
திடுமென பள்ளத்தாக்கினின்று ஒரு பூ வெளிப்பட்டு ,
வந்தனங்கள் தங்களுக்கு ,வார்த்தைகளை கேட்பார்கள் இருப்பதற்காக சிந்தாதீர்.
முதலில் எமது பெயர் உமக்கு தேவையில்லை .உமது பெயரும் எமக்கு தேவையில்லை.
அடுத்து ,எங்களால் உலகிற்கு என்ன பயன் ?என்று எம்மைப்பார்த்து நகைக்கும் உம்மைப்பார்த்து கேட்கிறேன் .இங்கிருந்து நான் பார்க்கும் நகரில் பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும்  உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?சொல்லுங்கள்  என பல முறை கேட்டது .
யாரிடமும் பதில் வராததால் சிரித்துவிட்டு மறைந்துவிட்டது.

..........

நான் எங்க டோமியோட இன்று வாக்கிங் போன போது,என் பெயர் தெரியுமா ?என் பெயர் தெரியுமா ?
என பாதையோர  பூக்கள் கேள்விகள் கேட்பது போல ஒரு உணர்வு .
எனக்கு சரியா தெரியல.சிரித்தபடி,நம்மை சுற்றியுள்ளதையே அறியாமல் வாழும் ஒரு பிறவி என நொந்துகொண்டு வீட்டிற்கு வந்தேன்.


பிறகு வீட்டிற்கு வந்து எமக்கு இது நாள் வரை தெரிந்த மலர்களையும் அதன் தோற்றத்தையும் மனதினில் எண்ணிப்பார்த்தேன். ரோஜா,கனகாம்பரம்,மல்லிகை ,ஜாதி மல்லி ,நெருஞ்சி, சாமந்தி, செவ்வந்தி, செம்பருத்தி.....
                                                                 

                                                                   குறிஞ்சி
முல்லை
 மருதம்
 

                                                                   பாலை
                                                                 
                                                                   தேமா

                                                                  புளிமா 
                                                                     கூவிலம் 
                                                                  கருவிளம்
கரந்தை

 காஞ்சி
                                                                          வெட்சி
                                                                      வாகை


                                                                      கொன்றை  
                                                                         வாழை 
ஆம்பல்

                                                                   மணிக்குலை
                                                                           நாகப்பூ
 
 செங்கொடுவேரி
                                                                          டணக்கம்                                         தாழை 


                                         வழை 

                                                                    ஆவிரை 
                                                                   எருவை

                                                                 குறுநறுங்கண்ணி 
                                                 பாரம்
                                                                                பீரம்
   ஆரம்
 
காந்தள் 
 குவளை

புன்னை

 ஈங்கை 

 ஆத்தி

 சேடல் 

 செம்மல்

தளவம் 

 தில்லை 

 குளவி
  புழகு 


 தும்பை

இலவம் 


  அவரை
    
                                         சண்பகம்  
                                          செங்கருங்காலி   


                                         தாமரைஏன்,எனக்கு இப்படி ஒரு நினைவு தோன்றியது என எண்ணிப்பார்த்தேன்.மலைவாழ் மக்களிடமிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி தான் இத்தனைக்கும் காரணம் என்பதனை உணர்ந்துகொண்டேன்.ஆம்,2 ருபாய்க்கு மலையில் கிடைக்கும் தேன்ஆடை மெழுகினால் செய்த இயந்திரமில்லாமல் கையில் தயாரித்த மெழுகுவர்த்தி இத்தனை கற்பனைக்கும் வித்திடவைத்துவிட்டது.அதைவிட அதன் தயாரிப்பு நுணுக்கமும்,அதன் பயன்பாடும் நாம் இங்கு பயன்படுத்தும் மெழுகுவர்த்தியை விட மிகவும் உன்னதமாக இருந்ததை  நேற்றைய இருளில் அனுபவித்ததால் வந்துள்ளது என்பதனின்று அதன் உயர்வை சொல்லவும் வேண்டுமோ.  


இந்த மெழுகிற்கான எத்தனை தேனிகள் எத்தனை மலர்களை சுவைத்தனவையோ?.அவைகளின் பெயர்கள் தான் என்னென்னவோ ?.

இப்ப எனக்கு மாயப்பூ கேட்ட பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும்  உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ? . சொல்லுங்கள் ? 
 என்ற கேள்வி மீண்டும்  மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது . படங்கள் உதவி ; flowersofindia.in ,கூகுள் , விக்கிபீடியா மற்றும் பிற இணையதளங்கள் இவைகளுக்கு நன்றி
.   .
Download As PDF

55 கருத்துகள் :

Ramani சொன்னது…

அருமை

த.ம 2

Mahan.Thamesh சொன்னது…

சிந்திக்க வைத்துவிட்டீர்கள் சார் ; அருமையான படைப்பு ; சில பூக்களை பற்றி தெரிந்தும் கொண்டேன் ;

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமை அருமை - இத்தனை பூக்களுக்கும் பெயர் வைத்தீர்க்ளா ..... பலே பலே - சிந்தனை அருமை - ஆமாம் - ஈரோடு சங்கமத்தில பார்க்க இயலவில்லையே ......ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மகேந்திரன் சொன்னது…

ஆஹா சங்கத் தமிழ் மலர்களெல்லாம்
காணக் கிடைத்தது இங்கல்லவோ???

அரிய புகைப்படங்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.

chandrasekaran சொன்னது…

nandri nanpare

Palaniappan Kandaswamy சொன்னது…

வக்கீல் எப்போது கவிஞனானார்?

சசிகுமார் சொன்னது…

//பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும் உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?//

பயனா???? கார்பன் அது இதுன்னு உலகத்தை அழித்து கொண்டு தான் இருக்கிறோம்....

shanmugavel சொன்னது…

தாவரங்கள் நல்ல தொகுப்பு! தலைப்பு ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷய்மாக இருக்கிறது.

Rathnavel சொன்னது…

நல்ல தொகுப்பு. நல்ல முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணா,
கலக்கலான பதிவு, பூக்களினூடே புது அரசியல் சொல்லியிருக்கிறீங்க.

தங்கம் பழனி சொன்னது…

பதிவு பூப்பூவாய் மலர்ந்திருக்கிறது...!!!

சின்னப்பயல் சொன்னது…

வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எந்தப் பயனும் இல்லை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

நல்ல கேள்வி மட்டுமல்ல யாரும் பதில்
சொல்ல முடியாத கேள்வி!
படங்களும் அருமை பெயர் சூட்டியுள்ள
பாங்கும் மிகமிக அருமை!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இங்கிருந்து நான் பார்க்கும் நகரில் பல லட்சம் மனிதர்கள் உள்ளீர்கள் .இருந்தும் உங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா ? ,பதில் சொல்லுங்கள்,உங்களால் உலகிற்கு என்ன பயன் ?சொல்லுங்கள் என பல முறை கேட்டது .யாரிடமும் பதில் வராததால் சிரித்துவிட்டு மறைந்துவிட்டது.

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "தான்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பூக்களாய் பூத்து நிறைந்த பகிர்வுகளுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்த மெழுகிற்கான எத்தனை தேனிகள் எத்தனை மலர்களை சுவைத்தனவையோ?.அவைகளின் பெயர்கள் தான் என்னென்னவோ ?.

மாயப்பூ மனதில் நிறைந்து மணக்கிறது..

மெழுகாய் உருகி வெளிச்சமும் அளிக்கிறதே!

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் பாஸ் கலக்கலான பதிவு.அருமையாக இருக்கு