திங்கள், 12 மே, 2014

அடிமாட்டுக்கு விற்கப்படஉள்ள 60000 ஜல்லிகட்டுகாளைகள் அனைத்தையும் அரசே ஏற்கவேண்டும். .




நொரண்டு :வணக்கம் நண்டு.

நண்டு :வாங்க நொரண்டு.

நொரண்டு :ஜல்லிகட்டு ???

நண்டு : என்ன தெரிஞ்சுக்கவேண்டும்.

நொரண்டு :தடை பற்றி

நண்டு : முதலில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தடைவிதிக்கப்பட்டது.

நொரண்டு : ஓ அப்படியா .

நண்டு :ஆமாம்,பின் கொஞ்சம்கொஞ்சமா தளர்ந்தது .

நொரண்டு :ஓ...

நண்டு : தற்போழுது உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது .

நொரண்டு :ம் ...

நண்டு :  சரி அதப்பத்தி என்ன ?.

நொரண்டு :இல்ல,கிட்டத்தட்ட 60000 ஜல்லிகட்டு காளைகள் அடிமாட்டுக்கு விற்கப்பட உள்ளதாக செய்தி வருகிறதே அதப்பத்தி ,என்ன செய்தால் அவைகள் காப்பாற்றப்படும்?

நண்டு :  பிரச்சனை இல்ல ,அனைத்து காளைகளையும் அரசே ஏற்கவேண்டும்,அவ்வளவே.

நொரண்டு :சரி தான்,அடிமாட்டுக்கு விற்கப்பட உள்ள 60000 ஜல்லிகட்டு காளைகள் அனைத்தையும் அரசே ஏற்கவேண்டும் என்பது எனது கோரிக்கையாகவும் முன்மொழிகிறேன்.

நண்டு :  
ஜல்லிகட்டு காளைகளை காக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என  சமூக,விலங்கின ஆர்வளர்களை மிகவும் பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சமூக,விலங்கின ஆர்வளர்கள்  நடவடிக்கை எடுப்பர் எனவும் நம்புகிறேன்.



 படங்கள் உபயம் இணையம் நன்றி
Download As PDF

8 கருத்துகள் :

Unknown சொன்னது…

ஜல்லிக்கட்டுக்கு தவிர அந்த காளைகள் வேறு எதற்கும் பயன் படாதா ?விபரம் அறிந்தவர்கள் சொல்லலாமே !
த ம 2

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக இந்தக் கோரிக்கை நிறைவேற வேண்டும்... நிறைவேறும்...

Andichamy சொன்னது…

காளைகளை என்ன செய்வது?சுலபமான வழி.இந்த காளைகளனைத்தையும்,ஜல்லிகட்டுக்கு தடை வாங்கிய மஹானுபாவர்களுக்கு தானம் கொடுத்துவிடலாம்.அவர்கள் அதில் பால் பீச்சி குடிச்சி கொழுத்து,குதிரைப் பந்தயத்துக்கு தடை வாங்கி,குதிரைக்கறி சாப்பிடட்டும்

Unknown சொன்னது…

இதைப் படித்தபின் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது :
//இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே//

உச்ச நீதிமன்றம் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த சிறிது கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

எப்படியும் இதை ஒரு வீர விளையாட்டாகக் கருதமுடியவில்லை.

கோபாலன்

viyasan சொன்னது…

ஜல்லிக்கட்டு மாடுகள் அடிமாடுகளாக விற்கப்படுவதை தடுப்பதற்காகத் தான் ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள் அல்லது தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது. அந்தளவுக்கு மிருகங்களில் பரிவு அல்லது ஜீவகாருண்யம் இந்தியர்களுக்கு இருக்கிறதென்றால், மாடுகள், (மிருகங்கள்) உணவுக்காக கொல்லப்படுவதை முற்றாக தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே தனித்துவமாகக் கொண்டாடப்படும் ஒரு விளையாட்டை தடை செய்வது, தமிழர்களின் பாரம்பரியங்களை திட்டமிட்டு அழிக்கும் சதியாகக் கூட இருக்கலாம் என்பதையும் தமிழர்கள் மறந்து விடக் கூடாது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஜல்லிக் கட்டைத் த்டை செய்ய வேண்டும்! நல்லதொரு பதிவு அன்பரே!

ஜல்லிக் கட்டு காளைகள் என்று தனியாக எதுவும் இருப்பதாகத் தெரிய வில்லை! வழக்கமான காளைகளைத் தான் ஜல்லிக் கட்டிற்காக பயிற்சி கொடுப்பது! அனுப்புவது என்றுதான் தெரிகின்றது! பகவான் ஜி!

KILLERGEE Devakottai சொன்னது…

மனிதன் தன்னை வீரன் என, நிரூபிக்கவேண்டுமெனில் ஆபத்தில்லாத பண்டைகால மல்யுத்தத்தை தொடங்கலாமே,,,,
Killergee
www.killergee.blogspot.com

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "