செவ்வாய், 6 மே, 2014

ராமருடன் மோடி உரையாற்றியது சரியா ?





நொரண்டு : வணக்கம் நண்டு.

நண்டு :வாங்க  நொரண்டு ,என்ன விசேசம். 

நொரண்டு : ஒன்னுமில்லை இப்ப ஒரு சின்ன சந்தேகம் ... 

நண்டு :  என்ன ?.

நொரண்டு : தேர்தல் ....

நண்டு :  அத விட்டுட்டு மத்தத பேசு .

நொரண்டு :இல்ல ,ஒரு சந்தேகம்.

நண்டு :விட மாட்டாயே, கேள்.

நொரண்டு :நீ  நாத்திகனா ஆத்திகனா ?.

நண்டு :இதைக்கேட்கும் உன்னைப்பற்றி நான் வருந்துகிறேன்.உனக்கு மனிதர்களை பிடிக்குமா ,பிடிக்காதா ,சொல்.. 

நொரண்டு :ஏன் ?. 

நண்டு :
மனிதர்களிடம் அன்பு செலுத்தும்  அன்பர்களிடம் இத்தகைய  கேள்விகள் வரவே வராது.

நொரண்டு :ம் ....

நண்டு : என்ன ?.

நொரண்டு : இல்ல ... 

நண்டு : சொல்லு .

நொரண்டு :வர வர நீ அதிகமா மோடிய ஆதரிக்கற . 

நண்டு :மோசடிகளை விட மோடி எவ்வளவோ  மேல்  .

நொரண்டு :சரி ,நான் என்னவோ நீ ... 

நண்டு :நான் எதா இருந்த...

நொரண்டு :சரி,ஒரு சின்ன சந்தேகம்.

நண்டு :  அடுத்ததா, கேள்.

நொரண்டு :
பொதுக்கூட்டத்தில் ராமருடன் மோடி உரையாற்றிய ....

நண்டு :  அதனால ,என்னப்பா.அதுக்குத்தான் ஆணையம் இருக்கே அவங்க பாத்துக்குவாங்க .பாஜக பாத்துக்கும் .உனக்கு என்ன ?.

நொரண்டு :இல்ல ,இது சரியா ?

நண்டு : ஏன் கேக்கர ?

நொரண்டு :இல்ல ,சும்மா ஒரு  புரிதலுக்கு.

 நண்டு : அப்படியா.என்னை கேட்டால்,
'' 
இராமர்  இந்தியர் அனைவருக்கும் ஆதர்ஷ புருஷன்

மற்றும்

இந்தியாவின்  சிற்பி

இராமரிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

மேலும்

இராமர்  இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .

இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை. ''

நொரண்டு :அதனால் ????

நண்டு :அனைவரும் அவரை எங்கு வேண்டுமானாலும் ,எப்பொழுதும்  , தங்களின் உயரிய விசயத்திற்கு பயன்படுத்தலாம்,காந்தி போல்,மோடி போல் .
யாரும் அதற்கு தடை போடவும் தேவையில்லை. அப்படி தடைபோடுவது ...

நொரண்டு :தடைபோடுவது ....

நண்டு :  WE, THE PEOPLE OF INDIA என்ற நமது அரசியலமைப்புக்கு ஒவ்வாத ஒன்றாகும்.

நொரண்டு :ம் ... 

நண்டு :பொதுவா ,அவர் அவர்கள் ,அவர்அவர்களுக்கு பிடித்த ஆதர்ஷ புருஷர்கள்,தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் படங்களை தங்களின் பரப்புரையின் போது பயன்படுத்திக்கொள்வதில் தப்பில்லை.அது அவர்களுக்கு தரும் மரியாதையும் கூட என்பது என் கருத்து.

கீழ்கண்ட படங்களை பார் ...








படங்கள் உதவி நன்றி கூகுள் மற்றும் இணையம்
Download As PDF

6 கருத்துகள் :

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

Unknown சொன்னது…

//இராமர் இந்தியர் அனைவருக்கும் ஆதர்ஷ புருஷன்//
//இராமர் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்//

இல்லை. அது சிறுபான்மியரான திராவிடரல்லாத இந்துக்களுக்கு மட்டும்தான்.
தமிழ் நாட்டில் இப்படி யாராவது பேசினால் சில கறுப்புச் செருப்பு பறக்கும்.
கோபாலன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தப்பில்லை தான்... ஆனால்...

பொன் மாலை பொழுது சொன்னது…

ராமர் படமென்ன? யார் படம் வேணாலும் மேடையில் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் மோடி அந்த மேடயில் இருந்ததுதான் தப்பு.மோடி எது செய்தாலும், என்ன பேசினாலும், எங்கே இருந்தாலும் தப்பு.ஒரு வேலை யார் படமும் இல்லாத/வைக்காத ஒரு மேடையில் மோடி இருந்து பேசினாலும் அதுவும் தப்பே. மோடிக்கு யாரையும் மதித்து போற்ற தெரியாது எனலாம்.

sujayasin சொன்னது…

Nalla vishayam

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பரே! தங்கள் இடுகைக்குப் பின்னூட்டம் இட நினைத்து எழுத சற்று பெரிதானதால் அதை நாங்கள் எங்கள் ஒரு சிறிய இடுகையாகக் கொடுத்துள்ளோம். ஒரு இடுகைக்கு வழிவைத்த இடுகையைத் தந்துதவிய தங்களுக்கு மிக்க நன்றி!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "