நொரண்டு : படத்த பாரு ?
நண்டு :என்ன
எங்கோ இருட்ல எடுத்து இருக்க...செல்போனிலையா ?
நொரண்டு :ஆமாம் ,
நேத்து நானும் என் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருந்தேம் . திடிரென
என் மனைவி ஏங்க ஏங்க இங்க பாருங்க என்றாள் , பார்த்த எனக்கு ஒன்னும் புரியவில படத்துல
பாக்கர பையன் helmet போட்டுக்கிட்டு சைக்கிள ரோட்ட கிராஸ் செய்ய பாத்துக்குட்டு
இருந்தான் .நான் வண்டிய நிப்பாட்டி போட்டோ எடுத்தேன் . அவன் டிஸ்டப் ஆகல ,என்னாடா
வித்தியாசமா இருக்கானேனு அவங்கிட்டப்போய் ஏப்பா helmet போட்டுருக்கனேன்.அதுக்கு அவன்
நீங்க எதுக்கு போட்டுரிக்கீங்கனான்? தலைக்கு பாதுகாப்புக்கு என்றேன் .அவன் சொன்னான்
அதுக்குத்தான் நாங்களும் போட்டுருக்கு- னான்.இது எங்களமாதிரி வண்டிவச்சிருக்கிறவங்க
போடறது,சைக்கில் ஓட்டரவங்க போடறது வேறனு சொன்னேன் . போங்கடா...நீங்களும்...னு
செல்லிட்டு பரந்துட்டான் ..
நண்டு :அவன் கருத்தும் சரிதானே.
நொரண்டு :அதனால ...
நண்டு :நல்ல கருத்துக்களை அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் .
நொரண்டு :இல்லைனா ?
நண்டு : வாழ்க்கையே விபத்துத்தான் .
நொரண்டு :என் இப்படி சொல்ற...
நண்டு : நான் சொல்லவில்லை ...
நொரண்டு : வள்ளுவரா ...
நண்டு :ஆம்.
நொரண்டு :என்னானு ...
நண்டு :
''கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. ''
நொரண்டு :சரி ,அர்த்தம் சொல்லு .
நண்டு :
செவிடு என்பது காது என்ற கருத்தின் தவறு அல்ல,
குருடு என்பது கண்என்ற கருத்தின் தவறு அல்ல,
ஊமை என்பது வாய்என்ற கருத்தின்தவறுஅல்ல, அதுபோலவே
எண்குணத்தான் தாளை வணங்கா என்பது தலை என்ற கருத்தின் தவறு அல்ல .
நொரண்டு : இன்னும் .
நண்டு : தாளை வணங்கவேண்டும் என்ற கருத்து தான் தவறானது .
நொரண்டு : ம் ...மேலும் ...
நண்டு :
எளிமையான மனிதனுக்குத்தேவையான உயர்ந்த குண நலன்களை பெற்றவர் தலை தாளை வணங்கா.
நொரண்டு : சுருக்கமாக
நண்டு :
நல்ல கருத்துக்களை
அறிந்து
ஏற்றுக்கொண்டு
தேவையான குண நலன்களை பெற்றவர்
எளிய உயர்ந்த குறையில்லா மனிதர் .
.
.
வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.
.
.
Tweet |
|
12 கருத்துகள் :
நன்றாகவுள்ளது தொடருங்கள் நண்பரே..
அப்படியே ...
முனைவர்.இரா.குணசீலன்
நன்றி
குறள் விளக்கம் அருமை நண்டு நொரண்டு
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
நன்றி
cheena (சீனா) அவர்களே
இனிய நன்னாள் வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகுக
நன்றி
வணக்கம்
நல்ல அருமையான பதிவு
தொடரட்டும் தங்கள் பணி நண்டு நொரண்டு
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இனிய நன்னாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
Starjan ( ஸ்டார்ஜன் )
அவர்களே
தங்களுக்கும் உரித்தாகுக
நன்றி
வணக்கம்
அப்படியே ...
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
நன்றி
Nice
நன்றி
வால்பையன் அவர்களே
நன்றி
அனைவரும் வித்தியாசம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பர்.ஆனால் உண்மையிலே திருக்குறளுக்கு மிகவும் வித்தியாசமான விதத்தில் விளக்கம் கொடுப்பது மிகவும் நன்றாக உள்ளது.தொடரட்டும் தங்கள் தமிழ்ப் பணி
மகிழ்ச்சி
வெற்றிவேல்
மகிழ்ச்சி
நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "