மனிதனுக்கு பயன்படும் .-
நொரண்டு : மரங்கள் நட்டால் மழை வருமா?
நண்டு :முதலில் நடப்படும் மரக்கன்றுகளில் எத்தனை மரங்களாகின்றன ? ஆயிரத்தில் ,லட்சத்தில்
...ஒன்று ....
நொரண்டு :இது வரை மரக்கன்றுகள் நடப்படுவது மட்டும் விளம்பரமாக இருப்பதால் அதைப்பற்றிய
யாருக்கும் கவலை இல்லை ....
நண்டு :அப்படியே அவைகள் வளர்ந்தாலும் உண்மையில் பயன் தராது .
நொரண்டு : எப்படி ?
நண்டு : அவைகளால் மழைச்சூழலை ஏற்படுத்த முடியாது .
நொரண்டு :ஓ....அப்படியா !!!
அப்போ... மழைநீர் சேகரிப்பு ....
நண்டு : மனிதனுக்கு நல்ல பயன்தரும் ,அவைகள் மழைக்கு உதவாது .
நொரண்டு : ஓ...!!!
நண்டு : வள்ளுவர்
''விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி. ''
என்ற குறளில் கூறுகின்றார் .
நொரண்டு : விளக்கம்
நண்டு :
மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .
நொரண்டு :சற்று விளக்கமாக
நண்டு :
மழை பொய்த்தாலும் ,
பெய்த மழை
கடலினால்
மழையினால்
நிலத்தின் கண் வீழ்ந்த வடிந்த நீரானாது
நிலத்தினுள் சென்று
நிலத்தின் கண் நின்று
நிலத்தடி நீராகி
உணவுக்கு நீராகி
பசியை ஆற்றும் .
நொரண்டு :ம்...மழை நீர் நிலத்தடி நீராகி மனிதனுக்கு பயன்படும் அப்படித்தானே .
நண்டு : அப்படியும் தான் ...மழையில்லா காலங்களில் ...
நொரண்டு :நிலத்தடி நீர் பற்றி வள்ளுவர்.
நண்டு : ஆம் ,வள்ளுவரே தான் ...
..
வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....
..
.
.
Download As PDFTweet |
|
14 கருத்துகள் :
நல்ல கருத்து
Nice topic Nandu,but who cares?
நன்றி
Muniappan Pakkangal அவர்களே
நன்றி
நன்றி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி
Trees are the creators of the rain and the soil saves the rain. So we need both. Good post though (sorry for english)
உண்மை.. மரங்களை நடுவதால் நாம் தோப்பை தான் உருவாக்க முடியுமே தவிர, வனத்தை உருவாக்க முடியாது. நாம் வனத்தை அழித்து வெறுமனே மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேம்.
நன்றி
சந்தோஷ் = Santhosh அவர்களே
தங்களின் கருத்திற்கும் .
இயற்க்கையைப்பற்றிய சரியான புரிதலுக்கும் .
நன்றி
நன்றி
லோகு அவர்களே
மிகச்சரியாகச் சொன்னீர்கள்
மிக்க மகிழ்ச்சி
நன்றி
Good topic >>>"MARANGAL BUMIYIN VARANGAL"--You write more article like this useful subject..You could give more on this subject and topic ? Why dont you write part-2 >>??Vimalavidya
நன்றி
vimalavidya அவர்களே
நன்றி
கடல் நீரானது சூரிய வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு மேகங்களாக மாறி அந்த மேகங்கள் மலைமுகடுளால் தடுக்கப்படும்போது உயரே சென்று குளிர்ச்சியடைந்து மழையாகப் பொழிகிறது. அந்த மழைநீர் ஓடைகளாக உருவாகி ஆறாக மாறி அணையில் தடுக்கப்பட்டு கால்வாய்களாக விவசாயம், குடிநீர் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு இறுதியில் கடலை அடைகிறது.கடல்நீரானது.....
மரங்கள் அடர்ந்த வனப்பிரதேசங்களில் தான் எந்த கடுங்கோடையிலும் வற்றாத ஊற்றுக்கள் நிறைந்துள்ளன.
கடும்கோடைக்காலத்தில் இருபக்கமும் மரங்கள் உள்ள சாலையில் காரில் சென்றால் ஏ.சி.யே தேவையில்லை. மிக குளிர்ச்சியாக இருக்கும். மரங்கள் இல்லாத சாலையில் ஏ.சி. போட்டு கொண்டு சென்றால் கூட உடல் எரியத்தான் செய்யும்.
மரங்கள் அடர்ந்த நகரங்கள், மலைப்பிரதேசங்கள் கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாக இருப்பதை எல்லோருமே அனுபவித்து இருக்கிறோம்.
வெயிலின் அருமை (மர)நிழலில் தெரியும் என்பது பைந்தமிழ் பழமொழி.
சென்னை கிண்டிஆளுநர் மாளிகை (ராஜ்பவன்) அருகே சென்றவர்கள் சென்னையின் மிகப்பெரிய ஆக்சிஜன் தொழிற்சாலை இங்கு இயங்கி கொண்டு இருக்கிறது என்ற பிரமாண்ட அறிவிப்பு பலகை பார்த்திருப்போம்.
மரங்களினால் மழை பெய்கிறதா, இல்லையா என்ற விவாதம் கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று கேட்பது போலானது என்பது என் கருத்து.
இப்படியெல்லாம் விவாதித்து கொண்டு இருந்தால் வருங்கால சந்ததியினர் மரங்களை அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
தொடருங்கள்.தொடர்கிறோம்.
ம் ....
தவறான புரிதல் ,,,
நன்றாக படிக்கவும் .
நன்றி
துபாய் ராஜா அவர்கள
நன்றி .
நண்பருக்கு, எனக்கு தெரிந்தவரை தங்கள் பதிவின் சாராம்சம் மழைக்கும், மரத்திற்கும் சம்பந்தமில்லை என்பது.
இந்த பதிவின் ஆரம்பம் முதல் இறுதிவரை மரங்களைப் பற்றிய தவறான கருத்துகளாக எனக்கு பட்டவை.
//நண்டு :முதலில் நடப்படும் மரக்கன்றுகளில் எத்தனை மரங்களாகின்றன ? ஆயிரத்தில் ,லட்சத்தில்
...ஒன்று ....//
//அப்படியே அவைகள் வளர்ந்தாலும் உண்மையில் பயன் தராது . நொரண்டு : எப்படி ?நண்டு : அவைகளால் மழைச்சூழலை ஏற்படுத்த முடியாது .//
//நண்டு : மனிதனுக்கு நல்ல பயன்தரும் ,அவைகள் மழைக்கு உதவாது .//
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களைத்தான்...//மரங்களினால் மழை பெய்கிறதா, இல்லையா என்ற விவாதம் கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று கேட்பது போலானது என்பது என் கருத்து.
இப்படியெல்லாம் விவாதித்து கொண்டு இருந்தால் வருங்கால சந்ததியினர் மரங்களை அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்க முடியும்.// என்று கூறினேன்.
தொடருங்கள்.தொடர்கிறோம்.
ம்........
நன்றி
துபாய் ராஜா அவர்கள
நன்றி .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "