சனி, 16 ஜனவரி, 2010

தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் காயப்படுத்தாதீர்கள்.

.

தமிழ் அனைவருக்கும் உயிர்.
தமிழுக்கு வளம் சேரப்பது நம் அனைவருக்கும் கடன் .
அதைவிடுத்து
இதில் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்வது வீணே .
என்னுடன் போட்டி போட நீனைப்பவருக்கு ...
நேரம் தான் வீணாகுமே தவிர
அவரால் ஒருபயனும் தமிழுக்கு விளையாது .
அவர் யாராக இருந்தாலும்
என்னிடம் இவ்விசயத்தில் தோல்வியோ கிடைக்கும்.
காரணம் தமிழுடன் நான் இருக்கின்றேன் என பொருமையுடன் சொல்லிக்கோள்கின்றேன் .
அனைவரும் தான் இருக்கின்றோம் எனக்கூறலாம்
ஆனால்
நான் ஆதித்தமிழ்தொட்டு இருக்கின்றேன் .

சரி விசயத்திற்கு வருகின்றேன் .
எனது வலைப்பூவில்...
திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றேன் .
மிக நீண்ட விளக்கத்துடன் எழுதினாலும்
வலைக்கு படிக்க வசதியாக அதில் ஒரு
குறிப்பிட்ட பகுதியை மட்டுமே,
வலையுலகினரும் எனதுரையை
வலையில் படிக்க
வெளியிட்டுக்கொண்டு வருகின்றேன் .
அதில் ஒரு சிக்கலுமில்லை ,
ஆனால் ,
அதனைப்படித்த சிலர்
அதுவும் தமிழ் கற்றறிந்த அன்பர்கள்
அதிலும் குறிப்பாக
நான் வள்ளுவரின் மழை பற்றி எழுதிய
குறள் 11 க்கான விளக்கத்தை படித்துப்பார்த்துவிட்டு
தாங்கள் அதற்கு உரிமைகொண்டாட முனைந்துள்ளதாக அறிந்தேன் .
அதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக இதனை வெளியிடுகின்றேன் .

முதலில் இதனை ஆரம்பித்த பொழுதே நண்பர்கள் சென்னார்கள் நிறையா பிரச்சனைகள் வரும்
என்று குறிப்பாக மதவாதிகளிடமிருந்து .
நான் வழக்கறிஞர் என்பதால் அதப்பத்தி கவலைப்படவில்லை .
மேலும் புத்தாகமாக வெளியிட திட்டம் இருப்பதாலும் ,
எழுதி வருவதில் சிலவற்றை மட்டுமே வெளியிடுவதாலும்
பெரிதாக என் எழுத்திலுள்ள முழுமையை
யாரும் வலைப்பூவில் படித்து தெரிந்துகொள்ளவே முடியாது
என்பதாலும் நான் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .
ஆனால் எனக்கு பிரச்சனை வந்ததோ மதவாதிகளிடமிருந்து அல்ல ,
தமிழ் வாத்திகளிடமிருந்து .

எனது வலைப்பூவில் கடந்த 15.1.2009 அன்று
தமிழ் வள்ளுவரின் மழையில் .
<http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_15.html>
என்ற தலைப்பில் 11 ம் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தேன் .

அதில்
''உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .
தமிழ் என்பதைஇக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .
இக்குறளின் சிறப்பே இது தான் .
இதனை
உலகிற்கு
முதல் முதலில்
கண்டுபிடித்து
அறிவிக்கின்றவன்
நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன் ''- என எழுதியிருந்தேன் .
இது உண்மையிலும் உண்மை .
இதில் எனக்கு பொருமையே .
ஏனெனில் ,
இது வரை ,
ஏன் இந்தக்கணம் வரைக்கும் கூட
யாரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கொண்டதில்லை .
மேலும்
எனக்கு முன் திருக்குறளுக்கு உரையொழுதிய யாரும்
எந்த உரையாசிரியரும்
இந்தக்கணம் வரைக்கும் இவ்வாறு பொருளும் கொண்டதில்லை .
உரையும் கொண்டதில்லை .
இதுவே உண்மை.
இதுவே வரலாறு .
வள்ளுவர் தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் .
அதைவிடுத்து
சிலர் இதற்கு தாங்கள் உரிமைகோர முயற்சிப்பதாக அறிந்தேன் .
மனம் மகிழ்ந்தேன் .இப்படியாவது வள்ளுவத்தை படிக்க ஆரம்பித்துவிட்டனரே என .
ஆனால் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கின்றேன் .
திருக்குறளில் புதையுண்டுள்ள உண்மைகள் அதிகம் .
அவசரப்படவேண்டாம் .
இன்னும் நிறையா செல்லுகின்றேன் .
அதில் இது 1000ல் ஒன்று தான்.
ஆதலால்
இது ஒன்றிற்கு மட்டும் உரிமைகோரி உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் .
இதற்கு ஆதரவாக இருந்து திருக்குறளை ஆழப்படுத்துங்கள் இதுவரை அகலப்படுத்தியது போதும் .
தமிழனாக இருந்து காயப்படுத்தாதீர்கள் .
அவ்வாறு நீங்கள் செய்தால் நான் எனது ஆக்கத்தை மறுபரிசிலனை செய்யவேண்டிவரும் . இதனால்
திருக்குறளுக்கு நீங்கள் மிகப்பெரிய தீங்கு செய்வதுடன் .
தமிழ் சமுதாயத்திற்கே
வரலாற்று ரீதியிலும் ,வாழ்வியல் ரீதியிலும் துரோகம் செய்தவராவீர் .

நிறுத்திக்கொள்ளுங்கள்
இத்துடன் .

நன்றி.


வாழ்க தமிழ் .

வாழ்க தமிழன் .

வாழ்க தமிழினம் .

வாழ்க வள்ளுவம் .

வீழ்ந்தது போதும் இனி வாழ்வோம் .

நன்றி.


வணக்கம் .


கடைசியாக :
இத்துடன் வலையில்
தினமும் வெளிவந்த
''வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ''
இனி மாதம் ஒருமுறை
வெளிவரும் என்பதனை
இது வரை ஆதரித்து வந்த
நல்லுள்ளங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் .
இத்தனை நாள் ஆதரவு தந்த
நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி .

வணக்கம் .


.

.

.

Download As PDF

9 கருத்துகள் :

வெற்றி சொன்னது…

தலைவா இதுக்கெல்லாமா பின் வாங்குறது..தினமும் எழுதுங்க..

Muniappan Pakkangal சொன்னது…

Continue your writings Nandu, & wishes for you.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
Muniappan Pakkangal
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
வெற்றி
நன்றி

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நானும் ஒரு தமிழாசிரியர்தான்.
நான் தங்களைப் பாராட்டவில்லையா.
யார் எந்தப் புதுமயான சிந்தனையைக் கூறினாலும் அதைப் போற்றுவதே மனித மாண்பு.
உங்களைக் காயப்படுத்தியது என்ன என்பதை
நீங்கள் குறிப்பிடவில்லையே.
அது எதுவாக இருப்பினும் உங்கள் முயற்சி தொடரட்டும்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

வணக்கம் அம்மா ,
முதலாவதாக
தங்களின் உயர்ந்த எண்ணங்கண்டு
புழகாங்கிதம் கொண்டேன் .
தாங்கள் தமிழாசிரியராக இருப்பது
தமிழுக்குச் சிறப்பே .

அம்மா ,
முதல் முதல் திருக்குறளை
திருக்குறள் புத்தகம் வைத்து
நான் திருக்குறள் பயின்ற இடம்
சமணப்பள்ளியாகும் .
அங்கு எனக்கு குறள் கற்றுத்தந்தவர்
ஒரு வாத்தியார் .

தம்பி எந்த மொழியில் எதைப்பயின்றாலும் நீ கிரகிப்பது உன் தாய்மொழியில் தான் நினைவினில் வை என அந்த வயதினிலேயே எனக்கு மொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் எனது தமிழாசிரியர் . அவர் ஒருபொழுதும் வாத்தியாக மாட்டார் .

இவைகள் 80 -களில் நான் 7ம் வகுப்பு படிக்கும் பொழுது
நடந்தது .

அம்மா ,
எனது இடுகையில்
//அதனைப்படித்த சிலர்
அதுவும் தமிழ் கற்றறிந்த அன்பர்கள் //
என்றும்
// மதவாதிகளிடமிருந்து அல்ல ,
தமிழ் வாத்திகளிடமிருந்து //
என்றும் எழுதியுள்ளேன் .

அதில்
தமிழ் வாதி என கூறிக்கொண்டு தமிழால் ஆதாயம்
பொற்று வாழ்ந்துவரும் சில சுயநலவாதிகள் தமிழை வாத்தியம் போல் தங்களின் பிழைப்பிற்கு வாசித்து வருவதால் அவர்களை தமிழ் வாத்திகள் என்று அழைத்தேன் மற்றும் மதவாதி- தமிழ் வாத்தி என அழகிற்காகவும் அவர்களை விட இவர்களின் வா...சிப்பு அதிகம் என உணர்த்த ஒரு அழுத்த நடைக்கும் பயன்பட்டது அவ்வளவே .

மற்றபடி யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை .

நண்டு @நொரண்டின் நோக்கமும் அதுவள்ள .
திருந்து@கத்துக்க என்பதே .
இது நண்டு @நொரண்டிற்கும் பொருந்தும்

தங்களின் பின்னுட்டத்திற்கும் ,
கருத்திற்கும் நன்றி
எம்.ஏ.சுசீலா
அவர்களே .

veerapandian சொன்னது…

//காரணம் தமிழுடன் நான் இருக்கின்றேன் என பொருமையுடன் சொல்லிக்கோள்கின்றேன்//

அடேங்கப்பா தமிழோடவா இருக்கீங்க?எங்க, கோபலபுரத்திலா அல்லது தமிழோட துணைவியின் வீட்டிலா;நாங்களெல்லாம் மஞ்ச துண்டு தான் "தமிழ்" என்று நம்புகின்றவர்கள்,வைர முத்து, வாலி போன்றவர்கள் மாதிரி.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

இப்பத்தான் இதக்கண்டு புடுச்சிங்களா
டூ-லேட் .பரவாயில்லை இன்னும் 2400000 கிலோமீட்டர் தூரம் ஓடிவாங்க உண்மை புரியும் .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

இப்பத்தான் இதக்கண்டு புடுச்சிங்களா
டூ-லேட் .பரவாயில்லை இன்னும் 2400000 கிலோமீட்டர் தூரம் ஓடிவாங்க உண்மை புரியும் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "