வியாழன், 18 மார்ச், 2010

இந்த 3 நாட்களும் ...நாம் ஒதுக்குவோம் ...

.
.

நம் வீட்டு வாசலில் ,ஜன்னல் கம்பியில்
பள்ளி மரக்கிளையில் கிரிச்சிட்டுப் பறந்த
சிட்டுக் குருவிகள் இப்போது எங்கே ?
நம் வீட்டு நாய் போல் நன்றியுடன்
நம் வளர்ப்புப் பூனை போல் பாசத்துடன்
நம் தோட்டத்துப் பசு போல அன்புடன்
நம் வாசலில் குதித்துக் குதித்துப் பறந்த
அந்தக் குண்டு அழகிகள் எங்கே?


நம் வீட்டுக் கூரையில் குடியிருந்த சிட்டுகள்
காங்கிரீட் காடுகளில் கூடுகட்ட இடமின்றி ...
நாம் வயல்களில் கொட்டிய நச்சு ரசாயனத்தில்
மண் புழுக்கள் சாக -இரையின்றி...
நம் கார் புகையின் மீதைல் நைட்ரைட்
பூச்சிகளைக் கொல்ல பட்டினி கிடந்து ...
செல்போன் டவரின் நுண்ணலையால்
முட்டைகள் மலடாக...இனக் கொலையாகி ...
காணாமல் போனதற்குக் கவலைப்பட்டோமா?


ஆறுமுகத் தாத்தா போல் அரிசி போட ஆளில்லை .
அவசர உலகத்தில் அன்புக்கு இடமில்லை ...

வீட்டுக் குருவியில் துவங்கட்டும் அன்பின் பாடம் .
பாரதி போல் தானியம் இரைத்து மகிழ்வோம் .
மரக்கிளையில் சட்டி கட்டி வாழ்விடம் தருவோம் .
மாடியில் தட்டில் நீர் வைத்து தாகம் தீர்ப்போம்.
நம் கண்ணாடி முன் மீண்டும் குருவிகள் பாட்ட்டும் .
குருவிகள் தினம் காலை வணக்கம் சொல்ல வரட்டும் .
குருவிகள் வாழ்த்த ...வாழ்வோம் ...மகிழ்வோம் .

விட்டு விடுதலையாகிப் பறப்போம்
அந்த சிட்டுக் குரிவியைப்போல ...


============

உலக சிட்டுக்குருவிகள் தினம் -மார்ச் 20

WORLD HOUSE SPARROWS DAY -MARCH 20


=========

உலக வன நாள் - மார்ச் 21


==========

உலக நீர் நாள் - மார்ச் 22

==========


இந்த மூன்று நாட்களும் ... நாம் ஒதுக்குவோம் ... இயற்கைக்காக


இந்த நாள் தொட்டு .....
நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு சன்னலோரத்தில் அனுதினம் ஒரு பிடி தானியம்
பாசப்பறவைகளுக்காக வைப்போம் . அவைகளை உண்டு பறவைகள் பசியாரும்
மற்ற உயிரினங்களும் மகிழ்ந்து உண்ணும் .

அது போலவே ஒரு குடிநீர் தட்டு நம் வீட்டு மொட்டை மாடியிலும் ,நம் வீட்டு ஓரத்திலும்
வைப்போம் .இவைகளை பறவைகளும் ,தெருவில் இருக்கும் மற்ற உயிரினங்களும் வெயில் கால
வெப்பத்தைத் தனிக்க குடித்து மகிழட்டும் .
வெயில் காலங்களிலும் மற்ற பொழுதுகளிலும் இவைகள் உணவையும் ,நீரையும் தேடித்தேடி தங்களை
கொன்றுகொள்கின்றன .

அதலால் நாம் இந்த நாள் தொட்டு இவற்றை மேற்கொள்வோம் .
இந்த மூன்று நாட்களும் இதற்காக நாம் ஒதுக்குவோம் .

=========

இயற்கையை காக்க ,
காடு வாழ நாடு வாழும் எனும் நற்செய்தியுடன்.
'காவிரியைக் காசுக்காகக் களங்கப்படுத்தாதே '
என நன்னீர் காக்கும் விழிப்புணர்வுக்கோஷத்துடன் மார்ச்21 ஊட்டியிலிருந்து ஈரோட்டிற்கு
சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்

'உதகை லிம்கா பிரசாத்தை'

வாழ்த்தும்

=போதி இயற்கைக் குழு ,
=சித்தார்த்தாப் பள்ளி ,ஈரோடு ,
=கேர்&லவ் வெல்பர் டிரஸ்ட் ,ஈரோடு,
=சுடர் -சத்தியமங்கலம் ,
=NILGIRI WILDLIFE & ENVIRONMENT ASSOCIATION
=டாக்டர் ஜீவானந்தம் ,ஈரோடு
இவர்களுடன் இணைந்து
எஸ் .இராஐ சேகரன் (நண்டு@நொரண்டு),வழக்கறிஞர் ,ஈரோடு.


=====


.

.

.

.

Download As PDF

8 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் இராஜசேகரன்

இயறகையை மறந்தோம் - இயற்கையை அழித்தோம் = அல்லல் படுகிறோம்.

இந்த மூன்று தினங்களும் இய்ற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த சிறு செயல்களைச் செய்வோம். இயற்கையைப் பேணுவோம்

நல்ல செயல் செய்யும் இயற்கை ஆர்வலர்களுக்கு நன்றி

நல்வாழ்த்துகள்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
cheena (சீனா) அவர்களே
நன்றி

அண்ணாமலையான் சொன்னது…

இயறகையை மதிப்போம்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நன்றி
அண்ணாமலையான் அவர்களே
நன்றி

கமல் சொன்னது…

இயற்கையின் தினத்தை எம்மோடு பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றிகள்..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

இயற்கை வளம் காப்பது இயல்பான மானுடக் கடமை .
அதை மீட்டெடுக்கும் முயற்சி தழைக்கட்டும்,.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
கமல் அவர்களே
நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//இயற்கை வளம் காப்பது இயல்பான மானுடக் கடமை .//
உண்மை தான்
எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களே
மகிழ்ச்சி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "