வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மரணதண்டனை சரியா ?.




மேற்கு உலகில் அறியப்பட்ட முதல் சிந்தனைச்சூரியன்

சாக்கிரட்டீசு.

மேற்குலகு அவரிடம் பெற்ற சிந்தனைச்சுரம் இன்னும் தீரவில்லை.

அது இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது .

ஆனால் ,

அரசு  பற்றி சிந்திக்கவைத்த சிந்தனையாளருக்கு  அரசு கொடுத்த பரிசு என்ன?

மரணம்.




அன்பால் உருவான மாமனிதர்

இயேசு கிறித்து .

அனைவரின் மீதும் பாகுபாடின்றி பிதாவாக பாசம் காட்டிய பண்பாளர் .

இவர் விட்டுச்சென்ற அன்பின் பாதை இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது.

ஆனால்,

பண்பை போதித்த  அன்பாளருக்கு அதிகார உலகு  கொடுத்த பரிசு என்ன ?.

மரணம்.



அறிவை,அன்பை போதித்தவர்களுக்கு அதிகார வர்க்கம் கொடுக்கும்
பரிசு தான் மரணதண்டனை .

மரணதண்டனை கொடுக்குமளவிற்கு
அவர்கள் செய்ததென்ன என சிந்தித்தால்
அவர்கள் மனிதகுல உயர்வுக்காகவும் ,மனித குல உரிமைக்காகவும் போராடினார்கள்  .
அதற்கான தங்களின் கருத்துக்களை  மக்களிடையே எடுத்துவைத்தனர் .
இது தான் அவர்கள் செய்தது.

இதை குற்றம் என்றது அரசு , இது எப்படி குற்றமாகும் ?.
மக்கள் உரிமையில்லாதவர்களாகவே இருக்க விரும்பினர் ஆள்பவர்கள்.

அதற்கு எதற்கு மரணதண்டனை ?

அவர்களின் கருத்துரிமையை,அவர்களின் குரலை அடக்குவதன் மூலம்
மனித குலம் உரிமை பெறுவதை தடுத்துவிடலாம் என நினைத்தது அரசுகள்.
அதற்கு அவர்களை ஒரேயடியாக அழித்துஒழித்துவிட்டால்
அவர்களின் குரல் ஒழிக்காது என்ற தப்பான எண்ணத்தில்
கருத்துரிமையை கொல்ல தனிமனிதனின் உயிரைப்பறித்தலின் மூலம் சாத்தியமாகும் என்ற முட்டாள்தனமான நினைப்பில்  மனித உயிர்களின் மகத்துவம் தெரியாத மட அரசுகளால் செய்யப்பட்ட மனிதகுல படுகொலைகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை .


எங்கெல்லாம் பேச்சுரிமை,எழுத்துரிமை பறிக்கப்படுகிறதோ,
அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகிறது என்பதையும்,
அங்கு மிகப்பெரிய மனிதகுல மோசடிகள் நடந்துவருகிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம் .

எங்கெல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றதோ
அங்கு மரண தண்டனைகள் கட்டாயம் இருக்கும்.

எங்கெல்லாம் மனித உரிமைகளை மதிக்காதவர்களே உள்ளார்களே
அங்கெல்லாம் மரணதண்டனையை ஆதரிப்பவர்கள் இருப்பார்கள் .

மனிதகுல மோசடிகளை அரசுகள் செய்யாத பட்சத்தில்
தண்டனைகள் என்ற பேச்சுக்கே  அங்கு இடமிருக்காது .
குற்றங்களும் நிகழாது.


என்னைக்கேட்டால் ,

மரண தண்டனை என்பது முதலில் ஒரு தண்டனையே இல்லை என்பது தான்.

சாவே வராத நிலையில் சாவை கொடுத்தல் என்பதை ஒரு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு அப்படியா இருக்கிறது .

மரணத்திப்போகும் மனிதனுக்கு
அதனை தண்டனை எனக்கொடுத்தல் என்பது
மிகவும் முட்டால்தனமன ஒன்றல்லவா.

என்றோ சாகப்போரான்,
அது இன்றாயிருந்தால் என்ன ? .
நாளையாய் இருந்தால் என்ன ?.

மேலும்,
இது இயற்கை விதிகளுக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.

எனக்குத்தெரிந்து எந்த விலங்கினமும்
தங்களுக்குள் மரணத்தை தண்டனையாக தந்து கொள்வதில்லை .

ஆனால் ,படித்து ,பண்பேறிய,நாகரிக மனிதன் செய்வதென்ன ? .

















தொடரும் ...
.
Download As PDF

19 கருத்துகள் :

SURESH BABU சொன்னது…

என்னைப்பொறுத்தவரை மரணதண்டனை சரியானது.ஏன் என்றால் மரணதண்டனை ஒன்றுக்கு பலதடவை நன்றாக சிந்தித்து தவறாக இருக்குமென்றால் அப்பீல் செய்து அதிலும் குற்றவாளி என்று கண்டபிறகுதான் கொடுக்கப்படுகிறது.மேலும் மரண தண்டனை பெறுபவன் அந்த தண்டனை ஏற்கனவே நாட்டில் இருப்பதை அறிந்திருப்பான் .ஆகவே குற்றம் செய்யமுன் அவன் அதை தெரிந்து கொண்டுதான் செய்கின்றான்.எனவே மரண தண்டனை என்பது அவசியம் தேவை இல்லாவிட்டால் மனிதன் தான் விரும்பிய மாதிரியெல்லாம் நடக்க தலைப்படுவான்.........மனிதகுலமே அழிந்துவிடும் இவ்வாறானவர்களால்...........

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்களே சொல்லி விட்டீர்களே...

தனி மனித ஒழுக்கம் வளர்ந்து விட்டால் தண்டனைகள் என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது... குற்றங்களும் நிகழாது...

கும்மாச்சி சொன்னது…

எஸ்.ரா ஸார் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நல்ல பகிர்வு.

ADMIN சொன்னது…

////மரணத்திப்போகும் மனிதனுக்கு
அதனை தண்டனை எனக்கொடுத்தல் என்பது
மிகவும் முட்டால்தனமன ஒன்றல்லவா.//// நீங்கள் சொல்வதை ஒரு விதத்தில் ஏற்றக்கொள்ளக்கூடியதுதான்...

ஜனநாயக நாட்டில் இவ்வாறு கருணையால் அனைவரையும் விட்டுவிட்டால்.. அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கொலைக்கார்ர்களை என்ன செய்வதாம்.. அவர்களும் உயிருடன் இருந்தவர்கள்தானே..

ஒரு மனிதன் பல உயிர்களைக் கொல்கிறான்.. அவனை விட்டால் மேலும் பல அப்பாவி உயிர்களைக் கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி நாட்டில் நடமாடிக்கொண்டிருப்பான்...

அவ்வாறானவர்களை பிடிக்க முடியாத பட்டசத்தில் கொன்றுவிடலாம்.. அல்லது அத்தனை உயிர்களின் வலியையை அவன் அறிய வேண்டும் என்பதற்காக.. அவனுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஒரு கொலைவெறி பிடித்தவனை மனிதன் என்று எந்த வித்த்திலும் சொல்ல முடியாது.. அவனுக்கும் கொடிய மிருகத்திற்கும் வித்தியாசம் இருக்கவே முடியாது. எனவே அவன் மனிதனல்ல.. மிருகம்.. நம்மைத் தாக்குகிற மிருகத்தை அழிப்பதுபோல.. அவனையும் அழிப்பதே சிறந்த முறையென்று கருதுகிறேன்.


****மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால்.. உயிர்கொல்லுதல் பாவம்.. அந்த உயிர் மனிதனாகவும் இருக்கலாம்.. மற்ற விலங்குகளாகவும் இருக்கலாம். உங்களுடைய கருத்தின்படி.. எவர் ஒருவர் யாரையும் கொள்வதற்கான உரிமை இல்லை.. ****


பதிவில் நீங்கள் கூறிய மகான்களின் உயிரைப் பறித்தவர்களுக்கும் அத்தண்டனையே திருப்பித் தந்திருக்க வேண்டும்..

சமுதாயத்தில் நல்லது செய்ய புறப்பட்டுச் சென்றுவிட்டோமானால்,,, சாதாரண மனிதனுக்கும் இக்கதியே நிகழும்... இன்றும் கூட சில கொடூரங்கள் இப்படி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.. நாட்டில் சமுதாயத்தில் சில விஷ வேர்கள் இருக்கத்தான் செய்கின்றன.. வேரோடு இவர்கள் பிடுங்கி எரியும் வரை அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்..

நீங்கள் அறியாததா..?

பகிர்வுக்கு மிக்க நன்றி!

சசிகலா சொன்னது…

பிறப்பும் இறப்பும் இயற்கையானதாக இருக்க வேண்டும் என்பத என் கருத்தும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.நண்டு @நொரண்டு -ஈரோடு,
மிக சாமர்த்தியமாக இரண்டு அநியாய கொலைகளை 'மரண தண்டனை' என்று படம் போட்டு காட்டி அது வேண்டாம் என்று கூறுகிறீர்கள்..!

செய்த கொலைக்குற்றத்துக்கு ஏற்ப... கசாப், பஜ்ரங்கி, மாயா... இன்னபிற பயங்கரவாதிகளுக்கு மரணதண்டனை மட்டுமே சரியான தீர்ப்பு என்பதே எனது கருத்து.

கசாப் போன்றவர்களுக்கு தூக்குத்தண்டனை தரவில்லை என்றால் அது ஹிந்துத்துவா உட்பட ஏனைய பயங்கரவாதிகளுக்கு குற்றங்கள் புரிய உற்சாகத்தை அளித்துவிடக்கூடும். அது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து.

மரணதண்டனை வேண்டாம் எனில்... தமது வரிப்பணத்தை செலவழித்து கொலைகாரனுக்கு ஆயுள் முழுக்க வேளாவேளைக்கு சோறுபோட்டு வாழ்க்கை அளிக்க யார் தயார்..? நரோடா பாட்டியா கொலையாளிகளான மாயாவுக்கும், பாபு பஜ்ரங்கிக்கும் மற்றும் பலருக்கும் கூட 28 வருஷம், ஆயுள், 21 வருஷம் என நம் காசில் சோறு போடுவதை நான் விரும்பவில்லை. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் நிச்சயமாக விரும்பாது. இவர்களுக்கும் மரண தண்டனையையே நான் விரும்புகிறேன்.

இது ஒருபுறமிருக்க, மரண தண்டனை தவறு என்றால்............... "மணியடிச்சா சோறு மாமியார் வீடு" என்ற சிறை தண்டனை தவிர்த்து, 'வேறு என்ன சரியான தீர்ப்பு தருவது சரி' என்று நீங்களே சொல்லுங்களேன்..! இதை சொல்லாத வரை..................... படுகொலை குற்றங்களுக்கு 'மரணதண்டனை வேண்டாம்' என்ற உங்களின் 'வெற்றுக்கோஷம்' உளுத்துப்போகும்..!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///////
எங்கெல்லாம் பேச்சுரிமை,எழுத்துரிமை பறிக்கப்படுகிறதோ,
அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகிறது என்பதையும்,
அங்கு மிகப்பெரிய மனிதகுல மோசடிகள் நடந்துவருகிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம் .

எங்கெல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றதோ
அங்கு மரண தண்டனைகள் கட்டாயம் இருக்கும்.
/////////////


நானும் உடன் படுகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பெரிய விவாதத்திற்குரிய விஷயம்.....

தனிப்பட்ட முறையில் கருத்துச்சொல்ல விரும்பவில்லை

MARI The Great சொன்னது…

கற்பழிப்பு உட்பட கடுமையான குற்றத்திற்கு மரணதண்டனை தேவை என்பது என் கருத்து!

Unknown சொன்னது…

கொடூரனுக்கு அரசாங்கம் வழங்கும் தண்டனை அநாகரீகம் எனில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தண்டனை வழங்கலாமே - நாகரீகமாக!

suvanappiriyan சொன்னது…

மரண தண்டனை அவசியமே! ஆனால் வழக்குகள் நியாயமாக நடக்கும் உத்தரவாதம் வேண்டும்.

அடுத்து இவர்களை மன்னிக்கும் அதிகாரத்தை நமது ஜனாதிபதிக்கு கொடுத்டது மற்றொரு முட்டாள்தனமான காரியத்தை நமது அரசு செய்து வருகிறது. கொல்லப்பட்ட வாரிசுகளுக்கு அந்த உண்மையை கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும்.

சின்னப்பயல் சொன்னது…

சாவே வராத நிலையில் சாவை கொடுத்தல் என்பதை ஒரு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சுவனப் பிரியன் said...
//மரண தண்டனை அவசியமே! ஆனால் வழக்குகள் நியாயமாக நடக்கும் உத்தரவாதம் வேண்டும்.
அடுத்து இவர்களை மன்னிக்கும் அதிகாரத்தை நமது ஜனாதிபதிக்கு கொடுத்டது மற்றொரு முட்டாள்தனமான காரியத்தை நமது அரசு செய்து வருகிறது. கொல்லப்பட்ட வாரிசுகளுக்கு அந்த உண்மையை கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும்//.

கவனப் ப்ரியனின் கருத்து ஏற்புடையதாய் இருக்கிறது
.

துரைடேனியல் சொன்னது…

மரண தண்டனை நிச்சயம் தேவைதான் என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் உயிர்போகும் என்ற பயத்தில் கழியும் கைதியின் கடைசி நாட்களும் நிமிடங்களும்தான் நரக வேதனையின் உச்சம். இந்த உலகத்தை விட்டு துண்டாடப்படுவதை எவனும் விரும்ப மாட்டான். இதைக் குறித்து பெரிய விவாதம் ஒன்று நடத்தவேண்டும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லதொரு பகிர்வு! நன்றி!

ananthu சொன்னது…

உங்களின் கருத்துக்களை மறுப்பதற்கில்லை , ஆனால் நாட்டின் ,இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அவசியமே ...

G.M Balasubramaniam சொன்னது…


இந்தக் கருத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பது பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது. உருவாக்க முடியாத ஒன்றை அழிக்க உரிமை கூடாது. இத்தண்டனையால் குற்றங்கள் குறைந்து விட்டதா. எந்த ஒரு குற்றவாளியும் திருந்த ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும் உயிரைப் பறிப்பதால் அந்த வாய்ப்புக்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

Thozhirkalam Channel சொன்னது…

தவறுகள் குறைக்கப்பட தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - மரண தண்டனைகள் வேண்டும் - செய்த பாவத்திற்கு - பல் நீதி மன்றங்கள் வரிசையாக ஏறி இறங்கி - இறுதியாக மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் தவறு செய்தவன் சட்டப்படி சாகடிக்கப் படுகிறான். இது தவறல்ல.

நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "