சனி, 25 ஜனவரி, 2014

காங்கிரஸ்,பாஜக மற்றும் பிற கட்சிகளிடம் ஏழை இந்தியர்கள் சார்பில் ஒரு கேள்வி?





ஏழைகளுக்காகவும்,
ஏழ்மையை ஒழிப்பதாகவும் ,
ஏழைகளின் பங்காளனாகவும்
தங்களை கூறிவரும் காங்கிரஸ்,பாஜக மற்றும் தேர்தலில் மக்களை சந்திக்க உள்ள  கட்சிகளே
உங்களால் பகிரங்கமாக கூற முடியுமா ?.வருகின்ற பாராளுமன்ற தேர்தல்
ஏழை இந்தியர்களுக்கான தேர்தலாகத்தான் இருக்கும் ,
ஏழை இந்தியர்களின் உயர்விற்கானதாகத்தான் இருக்கும் என்று .

ஆம்,என்று நீங்கள்  சொல்வீர்கள் எனில்,

வருகின்ற தேர்தலில் ,உங்கள் கட்சியின்  சார்பில் ,
வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள எத்தனை ஏழை இந்தியர்களுக்கு உங்கள் கட்சி சீட் கொடுக்க உத்தேசித்து உள்ளது என்பதனை கூறுங்கள் பார்க்கலாம்.


வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை இந்தியர்களுக்கு  சீட் கொடுக்காமல்
ஏழ்மையை ஓழிப்பதாகவும் , 
ஏழைகளின் பக்கம் நீங்கள் இருப்பதாகவும்
காட்டு கூச்சல் போட்டாலும்
யாரும் உங்களை ஆதரிக்கபோவது  இல்லை என்பதனை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
இது தான் உண்மை.

ஏழை இந்தியர்கள் பற்றிய
உங்களின் நிலைப்பாட்டினை  முதலில்   மக்களிடம் தெள்ளத்தெளிவாக எடுத்து வையுங்கள்.
பிறகு 
ஏழ்மையை ஓழிப்பதாகவும் , 
ஏழைகளின் பக்கம் நீங்கள் இருப்பதாகவும்
கூச்சல் போடுங்கள்
மக்கள் நம்புவார்கள்.

இல்லையெனில்
இனி ஒருபோதும்
ஏழை இந்தியர்கள் உங்களுடையவர்களாக இருக்கமாட்டார்கள் . 



படங்கள் உபயம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

5 கருத்துகள் :

ராஜி சொன்னது…

கடைசி ஏழை இந்தியன் இருக்கும் வரை இவங்க ஆட்டம் தொடரும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏழை இந்தியர்கள் பற்றிய நினைப்புகள் எல்லாம் இவர்களுக்கு இருக்குமா என்ன...?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஏழைங்க பக்கம் இவங்க வராம இருந்தாலே அவங்க நல்லா இருப்பாங்க! நன்றி!

G.M Balasubramaniam சொன்னது…

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு சீட் கொடுத்தால் அவர்கள் எப்படி ஜெயிக்க முடியும். பணபலமில்லாமல் தேர்தலில் ஜெயிக்க முடியுமா. இவர்களுக்காக அவர்கள் செலவு செய்து தேர்தலில் நிறுத்தவும் ஜெயிக்க வைக்கவும் கனவுதான் காண முடியும்.

hindhustani site சொன்னது…

neengal solbavarku koduthal muthalil varumaanam paarka than ninaipaarkal

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "