புதன், 18 மே, 2011

ஊமைகளின் ஓட்டுநொரண்டு :    வணக்கம்   நண்டு  .

நண்டு :   வாங்க   நொரண்டு .

நொரண்டு :   எங்க ரொம்ப நாளா ஆளையே காணேம் ?

நண்டு :   அதுவா... கொஞ்சம் தனிப்பட்ட வேலை மற்றும் கணினி கோளாறு ஆகியவற்றால் 2 மாதமாக சரியாக இயங்கவில்லை.இனி தினம் பார்க்கலாம் .

நொரண்டு :  ஓங்கத எனக்கெதுக்கு .தேர்தல் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லை ?.

நண்டு :
ஆளப்போகும் கூட்டணிக்கு 178+ இடங்கள் கிடைக்கும் என பிரதிநிதித்துவம் இல்லாத தேர்தல் .  என்பதில் மார்சு -4 லேயே சொல்லிட்டேனே .


நொரண்டு :    203 அல்லவா கிடைத்துள்ளது .

நண்டு :      அது 178+ தானே.

நொரண்டு :   ஆமாம்.

நண்டு :   ஆனால் , 203 விடவே அதிகம் கிடைத்திருக்கவேண்டும்.

நொரண்டு :   ஏன் ?

நண்டு :   ஆம்,இது போதாது ?.

நொரண்டு :   அவ்வளவு வெறுப்பு ஏன் ?

நண்டு :   வெறுப்பல்ல ...உண்மை.

நொரண்டு :   என்ன உண்மை ?

நண்டு :   அதற்கு ஒட்டு மொத்த தமிழனின் மனேநிலையை புரித்துகொள்ளவேண்டும் .

நொரண்டு : புரியல ..

நண்டு :  முதலில் இன்றுள்ள தமிழனின் நிலையை பார் .

நொரண்டு :   சொல்.

நண்டு :    இந்த கவிதைய படித்துப்பார் .

முன்னோர்களின்
வடு உடல்
நிறமாய்
நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்
காட்சி கலக்கமாய்
பளிங்கு செவியாய்

மடையனாய்
மூடனாய்
முட்டாளாய்
சமுதாயத்தில்
சமூகத்தில்

தமிழனாய்

எப்பொழுதும் எப்பொழுதும்
உடல் வெம்பி
நாக்கு உள் இழுத்து
மொழி பேசா வாய்
வெளிச்சொல்லா
பயத்தில்
தடிமனாய்
அச்சத்தில்
போதை மிதந்து
பிதற்றி
ஓலை சுவற்றுக்குள்
நித்தம் நித்தம்
தவம் தவம்
தேவகுமாரனை  எதிர் நோக்கி.நொரண்டு :   உன் கவிதை சற்று திருத்தத்துடன் ...என்ன சொல்ல வர ..

நண்டு :    இதை விடவே சதாரண தமிழன் முதல் படித்த தமிழன் வரை இன்று இருந்து வருகிறான் .ஈழப்பிரச்சனையில் .

நொரண்டு :   புரியல.

 நண்டு :   ஒவ்வொரு தமிழனின் மனதையும் உறுத்தி ,நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கும் விசயம் ஈழத்து அவலங்கள் .ஆனால் ,அவனால் அது பற்றி பேச,எழுத முடியாத படி...ஏன்  ஈழத்தமிழருக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசவே ஒவ்வொரு தமிழனும் அச்சப்படும்படியான நிலைமையே .ஆதாரவாக பேசினாலோ மோசமானவனாக ...தமிழனை தமிழனே தூற்றும் அவல நிலை.தன்னால் ஒன்றும் பேச முடியாத ஊமையாய்.ஈழ அவலங்களை கண்டு வெம்பி ,வெம்பி, தமிழினத்தலைவர்களாக ,தமிழ் இன அடையாளங்களாக தங்களை காட்டிக்கொண்ட போலி தமிழ் இன காவலர்களை கடைசி வரை நம்பி ,நம்பி ,ஏமாந்த இந்த ஊமையர்கள்.தமிழனின் ஓட்டுக்காக மட்டுமே இவர்கள் இருப்பதை உணர்ந்தனர்.தங்களால் லட்சக்கணக்காண தமிழர்களை சிங்க அரசு இனப்படுகொலை செய்துவருவதை கண்டு தடுக்க முடியாமல் தடுமாறிய பொழுது தேர்தல் வந்தது.மனிதாபிமான குரல்கள் கூட கொடுக்காத இவர்களுக்கு பாடம் புகுத்த எண்ணினர்.அமைதியாக தங்களின் கை மையினால் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்து விட்டனர் .

நொரண்டு :   தேர்தல் தோல்விக்குக் காரணம் ஈழப்பிரச்சினை என்கிறாயா ?

நண்டு :   ஆம் ....ஈழ துரோகம் ... 50% அது மட்டுமே தான் காரணம்.

நொரண்டு :   மீதி .

நண்டு :   உள்ளூர் அரசியல் அடாவடித்தனம் ,விலைவாசி உயர்வு,மின்வெட்டு ,ஊழல்,சந்தர்ப்பவாத கூட்டணி ,...

நொரண்டு :   பத்திரிக்கைகள் அப்படி சொல்லவில்லையே .

நண்டு :   தேர்தலுக்கு முன்பு பத்திரிக்கைகளும் ,தோற்ற கூட்டணி அரசியல் கட்சிகளும் ஊழலை பெரிதாக மக்கள் நினைக்கவில்லை என்றே கூறிவந்தனர் என்பதை நினைவில் கொள்.தோற்றவுடன் திடிரென ஈழ பிரச்சனை தான் முக்கிய காரணம் என்பதை மறைக்க ஊழலையும் மற்றவற்றையும் முன்நிறுத்தி பேசுகின்றனர்.

நொரண்டு :   ஏன் ?

நண்டு :   ஆளும் கட்சியை திசைதிருப்பி ...அடுத்து வரும் தேர்தல்களில் ...தோற்ற கூட்டணி ஆதாயம் தேடத்தான் .

நொரண்டு :   ஓ...

நண்டு :   இவர்கள் ஊமைகளின் ஓட்டை ஊமையாகவே ஆக்க முயற்சிக்கின்றனர்.ஆனால்,ஊமையர்களுக்கு அனைத்து கபட நாடகமும் தெரியும்,தங்களின் துரோகிகளை சரியான சமயத்தில் ஊனமாக்கவும் தெரியும் .
தொடரும் ....

இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள்  
.

 
நன்றி : youtube .
.
Download As PDF

10 கருத்துகள் :

நிரூபன் சொன்னது…

நீண்ட நாட்களின் பின்னர், யதார்த்த அரசியலினைப் பற்றிய அலசலோடு வந்திருக்கிறீர்கள். கூடவே முள்ளி வாய்க்கால் நினைவினைச் சோகங்களால் மீண்டும் ஒரு தரம் நிரம்ப வைத்து கண்ணீரை வர வைக்கும் கவிதையினையும் அழைத்து வந்துள்ளீர்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

லாயர் சார்ட்ட 3 கள்ள ஓட்டு இருக்கு போல.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க டபுள் ஆக்டா?

ceekee சொன்னது…

Well stated.
The mainstream media is, as usual, dishonest in their analysis of the recent elections and masquerading the rout of the Congress and DMK as the sole result of corruption. In other words, they are trying to sweep under carpet the common man's disgust and revulsion against the DMK and Congress for their role in the genocide of Eezham Thamizhs. Due to the tireless and perseverant efforts of leaders like Seeman, the common has come to know, for the first time, some of the grisly details of the horrendous and sadistic genocide of Eezham Thamizhs. The common man is thus disgusted at the supine and callous indifference of the DMK to the plight of Eezham Thamizhs. He/she is shocked and aghast at the covert and overt hand-in-glove role played by Congress in AIDING and ASSISTING the RACIST REGIME and armed forces of Srilanka. First and foremost, it is the Eezham issue which weighed heavily in the mind of the Voter. Of course, as you have rightly put it, other factors like corruption added to it.

The common man- the silent man in the street - the Voter who is often taken for granted has given his verdict in clear and unambiguous terms to the perpetrator and assistant of genocide in the most elegant and democratic way. He/she has meted out his/her punishment - it is evident and easily available for all eyes to see ...

பொன் மாலை பொழுது சொன்னது…

A reasonable and sensitive one. good post.
Mr. CeeKee's comments are mostly true.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

கலக்குங்க கலக்குங்க....

சசிகுமார் சொன்னது…

உண்மை தான் சார் இந்த வெற்றிக்கு காரணம் ஈழப் பிரச்சினையே முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மீடியாவில் கூட இதை பற்றி குறிப்பிட வில்லை. யதார்த்தமான பதிவு சார்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ஊமைகளின் ஓட்டை ஊமையாகவே ஆக்க முயற்சிக்கின்றனர்.ஆனால்,ஊமையர்களுக்கு அனைத்து கபட நாடகமும் தெரியும்,தங்களின் துரோகிகளை சரியான சமயத்தில் ஊனமாக்கவும் தெரியும் . //

சரியான நேரத்தில் சரியான விளக்கத்தோடான பதிவு..

சீக்கிரம் விடியட்டும்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - இதுவும் ஒரு முக்கிய காரணம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

சரியான நாளில் இடப்பட்ட உணர்வுபூர்வமான பதிவு!
துக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "