நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் .
அதற்காக தமிழை வளர்க்க
மிக அழகாக இனிமையாக நேர்த்தியாக அற்புதமாக சுவையாக
"புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று
பொருமை கொள்ளத்தக்க வகையில் எழுதப்பட்ட
செந்தமிழை போற்றாமல் இருப்பது
என் பகுத்தறிவிற்கு அடுக்குமா ? முறையா ? என சிந்தித்ததால் இந்தப்பதிவு .
கம்பரின் காப்பியம் மானுடம் பாடும் காவியம் .
கம்பர் தமிழை செலுமைப்படுத்தவே தனது காவியத்தை படைத்தார் .
மதத்தினை புகுத்தும் வண்மம் அவரின் காவியத்தில் இல்லை .
இது போன்று ஒரு சிறந்த உயர்ந்த காவியத்தை இனி தமிழில் படைக்கவேமுடியாது .
அவ்வளவு அற்புதமான காவியம் . இதற்கு ஈடு இணையான காப்பியம் தமிழ் இலக்கியத்தில் இதற்கு
முன்னும் பின்னும் இல்லை .
சங்க இலக்கியங்களைத்தவிர்த்து ,கம்பர் காவியத்திற்கு முன்னால் ஈரோட்டிலமர்ந்து ஒரு
சிற்றெரும்பு இமயமலையை எட்டிப்பார்க்க முயற்சிப்பது போல தான் மற்ற அனைத்து தமிழ்
இலக்கியங்களும் இருக்கிறது இதற்கு.
கம்பரை போற்றாத தமிழன் முதலில் தமிழனே அல்ல பிறகு மனிதனே அல்ல .
ஏனெனில் கம்பர் இல்லையேல் இன்றைய தமிழ் நமக்கில்லை என்பதுதான் வரலாறு .
வள்ளுவனுக்கு சிறப்புச்செய்வது தமிழுக்கு அழகென்றால்
கம்பருக்கு சிறப்புச்செய்வது தமிழுக்கு அணி .
கம்பரில்லாத தமிழை என்றும் யாரும் எண்ணிப்பார்க்கவே முடியாது .
அவரைத்திட்டும் அறிவாளிகளைக்கேட்கிறேன் ,
உங்களின் வாழ்நாளில் ஒரு வரி கம்பர் போல் எழுத முடியுமா உங்களால்?
எங்க பெரிய அப்பிச்சி இராமர் பத்தி பேச்சு வந்தபோது
இங்கு இருக்கிற ஒருத்தனுக்கும் இராமரைப்பத்தி பேச யோக்கியமில்லை .
ஏன்னா இவனுங்க எல்லாம் இராமரைப்போல் யோக்கியவான்கள் இல்ல .
அதனால இவன்களுக்கு இராமரை புடிக்காது .
இராமரை புடிக்கும்னூ சொன்னா கோவலனாக வாழ முடியாதே இவர்களால்.
அதனால் இராமரை திட்டிக்கிட்டே இருப்பாங்க .
நாங்கூட நினைச்சேன் இலங்கை இராவணர் இரத்தசம்பந்தப்பட்ட சொந்தமாக இருந்திருப்பார் போலனு. அதனால் தான் வரிந்து கட்டிக்கொண்டு புத்தக எரிப்பென்ன ,செருப்பில் விளையாட்டென்ன,போராட்டங்கள் என்ன ,எத்தனை எதிர் காவியங்கள் ,எத்தனை எத்தனை மேடைப்பேச்சுக்கள் ...தமிழ்மணக்க எழுதிய இராமாயணத்தை தமிழச்சியே சகிக்காத அளவிற்கு எத்தனை எத்தனை அசிங்கமான வசவுகள் ...ஏங் காலத்தில ஆடாத ஆட்டம் ஆடுநாங்க .
அதனாலா அவங்க சாதிச்சது என்னான நல்ல மனுசன் காமராசரை நோகடிச்சு காங்கிரச
தோக்கடிச்சதுதான் . அன்னைக்கு கெட்டுச்சு தமிழ்நாடு .
அவங்கெல்லாம் இருக்காங்கலா இப்ப .
அப்படியிருந்த நல்லெண்ணம் கொண்டவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் .
அப்ப இருந்த எல்லாருக்கும் வயசாயிருக்கும்
ஞாபகம் இருக்கவாபோகுதுனு நினாச்சு கோழி புடிப்பாங்க னு கூறி பொக்கவாயால
கிலுக்கிலுக்னு சிரித்தார் .
தண்ட காரண்யம் அந்த நட்டநடுங்காட்டில் தன்னந்தனியாக அமைதியாக வாழ புறப்பட்டுஅயரஎண்ணிய மிக உயரிய பண்புகொண்ட அந்த மனிதனுக்கு உரிய சொத்தை அடுத்தவன் அபகரிக்கின்றான் . அபகரித்தவன் சாமானியமானவன் அல்லன் .அவன் மிகப்பெரிய போரரசன் .இப்ப நிலத்த அபகரித்ததனால் தண்ட காரண்யத்தில் மக்கள் அவதிப்படுவதைப்போல் அன்று தனது மனைவியைஅதே தண்ட காரண்யத்தில் அபகரித்ததனால் அவஸ்தைப்பட்டான் இராமன் .யார் என்று தெரியாமல்.இப்பவும் மக்களுக்கு தண்ட காரண்யத்தில் அதே குழப்பம் தான் .
தனி ஒருவனாக இருந்து தனது தம்பியின் துணையுடன் தனது அறிவின் ஆற்றலினாலும்
,நற்குணத்தினால் பொற்ற அன்பு நிறைந்த மக்களின் உதவினாலும் ,தனது வீரத்தினாலும் தனி
ஒருவனாக முயன்று அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகின்றான் .மிகப்பெரிய அரசனான
இராவணரை வெல்கின்றான் .அதற்கு தனது அரசு செல்வத்தையோ ,சொல்வாக்கையோ அவன்
பயன்படுத்தவில்லை .அவ்வளவு நெஞ்சுரம் கொண்டவன் .வீரம் மட்டுமே அவன் சொத்து ,அரசியல்
தந்திரமே அவனின் ஆயுதம் . சென்றான் வென்றான் .
நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறதல்லவா ? தனது மனைவி ,ஒரே பிரஜைக்காக ஒரு
அரசனை தனி ஒருவன் அதுவும் நெறி தவறாமல் நின்று வீழ்த்தி வென்று உள்ளான் .
போற்றுவதற்கு உரிய காவியம் .
இப்படி காப்பியம் படைத்த கம்பரை அவரின் காப்பியம் அரங்கேற்றம் காண மன்னாராட்சி காலத்தில்
எங்வளவே எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தனி ஒருவராய் நின்று போரரசுகளையும் ,பொரும்
படைகளையும் கண்டு அஞ்சாது தனது ஒப்புயர்வற்ற காவியத்தை தமிழன்னைக்கு மட்டுமே
காணிக்கையாக்கியுள்ளார் எனில் ,
இந்தக்காலத்திலேயே ,அதுவும் மக்களாட்சிக்காலத்தாலே கொடுர ஆட்சியாளர்களால் எவ்வளவு கஸ்டம் கருத்துரிமை ,பேச்சுரிமை ,வாழ்வுரிமை இதுகளுக்கொள்ளாம் இதவிட மோசம் அப்ப இம் என்றால் வனவாசம் ,ஏன் என்றால் சிறைவாசம்னு எதுத்தா பிணவாசம் என்றிருந்த சமயத்தில அவரால் தனித்து இயங்கமுடிந்துள்ளது எனில்,
அந்த வீரம் .அந்த வெறி ,அந்த பக்குவம் அனைத்தையும் அவர் இராமகாவியம் படைத்ததினால்
இயல்பாக இராமருடைய அந்த குணம் அவரிடம் ஒட்டிக்கொண்டது என்பதோடு ,தமிழ் அவருடன்
வாழ்ந்தது அதனால் தான் அவரால் இவ்வளவு சிறப்பான காவியத்தை மங்கு மருவின்றி
அளிக்கமுடிந்ததுள்ளது .
இல்லாது போனால்,இன்று என்ன நடக்கிறது பல பேரின் சுயமரியாதைகள் அவமானப்படுத்தப்பட்டு
அசிங்கப்படுத்தப்பட்டு வருகிறது அரசியல் என்ற பெயரில் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.
மிகச்சிறந்த அந்த தமிழமுதத்தை அவர் காலத்தே ஆட்சிக்கும் மாட்சிக்கும் வணங்காமல்
தமிழன்னைக்கு மகுடம் சூட்டினாரே அவர் எங்கே.இன்று மேடை போட்டு தம்மைத் தாமை
பாராட்டிக்கொள்கின்றோமே நாம் எங்கே .
இத்தகைய தன்மானமுள்ள வீரமுள்ள விவேகமுள்ள தமிழரை நான் பாராட்டுகின்றேன் .
அவரைப்போலவே நாம் அனைவரும் எந்த வித அச்சமுமின்றி தமிழுக்காய் மட்டுமே வாழ்வோம் என
வேண்டுகிறேன் .
எனவே ,
''கவி கம்பராய் ''
''விழித்தெழு தமிழா ,தமிழால் விழித்தெழு ''
என்று கூறி
''வாருங்கள் தமிழ் நெஞ்சங்களே ''
''வாழ்வோம் தமிழ் நெஞ்சங்களில் ''.
என அழைக்கின்றேன் .
வாழ்க தமிழ் ,வாழ்க வாழ்கவே .
.............
அனைத்தையும் சந்தேகப்படு -2
தொடரும் .........
.
.
.
Download As PDFTweet |
|