திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தேங்காய் .


மதுரையில் படித்துக்கொண்டிருந்த காலத்தே ,
எங்கள் கல்லூரி முதல்வர் ஐயா தமிழ்குடிமகன் அவர்கள்
தனது அந்தமான் அனுபவங்களைப் பகிர்ந்தார் .
மிகவும் சுவாரசியமான தகவல்களை அவர் கூறினாலும்
என்னை கவர்ந்தது அந்தமானைப்பாருங்களில்
மரம் ஏறி தேங்காய் போடும் நண்டுகள் பற்றிய செய்தி .

தேங்காய் நமது உணவில் ஒரு அங்கம் .

தேங்காயில்
நார்ச்சத்து இதில் அதிகம் இருக்கிறது .
இதை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
இதன் இளநீர் மிகவும் சுத்தமானது .அதனை இரத்த பிளாஸ்மாவிற்கு மாற்றாக அப்படியே உடலில் செலுத்தலாம் . . .

தென்னை , தேங்காய் மற்றும் இதன் பயன் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,இதன் விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் இதற்கான உலகலாவிய அமைப்பை ஏற்படுத்தவும் என உண்டான
''ASIAN AND PACIFIC COCONUT COMMUNITY '' உருவான செப்டம்பர் 2ம் தேதியை
''உலக தேங்காய் தினம்''-ஆக கொண்டாடப்பட்டு வருகிறது .

நம்ம ஊருல தான் இது பற்றி அதிக விழிப்புணர்வு வேண்டியிருக்குங்க .
இன்னைக்கு ஒரு தேங்க என்ன விலை ? .
தேங்கா எண்ணை என்ன விலை ? .
இதப்பத்தி யோசிக்கும் நாம் .
தேங்காய்களை செவ்வா, வெள்ளி மற்றும் விசேச நாட்கள் மற்றும் விசேசம் என வீணா தெருவில ,வாசலில ஒடைச்சு நாசம் செய்யரோம் .ரோட்டில அப்படியே அதன் சில்லுகளை விடுவதன் மூலம் எத்தனை பாதிப்பு .இவ்வாறு வீணாக்கும் தேங்காய்களை மதிப்பிட்டால் பல கோடி ருபாய் மதிப்பு பெறும் ஆண்டிற்கு.
இது பெருளாதாரம் சார்ந்த விசயம் என்பதால் நம்பிக்கைகள் தாண்டி சிந்திக்கவேண்டும் .

அதனால்
நாமும் இத்தகைய செயலை இனி செய்யாமலும்,
நமக்கு தெரிந்தவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ,அவர்களும் இவ்வாறு செய்யவேண்டாதபடி செய்தும்.
தேங்காயை நல்லபயனுள்ள பொருளாதாரமாகவும்
இந்த இனிய நாளிலிருந்தாவது மாற்றுவோம் .

2 நாளைக்கு முன்னே சொன்னாத்தான் நல்லாயிருக்குமுனூ சொல்ரேன் அவ்வளவே .

இதனால் ஒரு தேங்காவாவது தெருவில் வீணாவது தடுக்கப்பட்டுமானால் மகிழ்வேன் .

உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .

. Download As PDF

சனி, 28 ஆகஸ்ட், 2010

கவுரவக்கொலையும் ...அமர்வும்


எனது நண்பன் ரகுவின் வீட்டிற்கு இன்று காலை உணவுக்கு அழைத்திருந்ததால் சென்றிருந்தேன் .பொதுவா நான் வெளியே எங்கும் அதிகம் செல்வதில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,வேலைப்பளுவே முதன்மையானதாகும் . ஆனால் ,ரகு அழைத்தால் தட்டுவதில்லை மகிழ்வுடன் தலையாட்டிவிடுவேன் .
காரணம் ,வாருங்கள் தோழா என வரவேற்பதிலிருந்து வீடு திரும்பும் வரை தமிழின் இனிமையில் குளித்து, புதுப்புது வார்த்தைகளையும் தெரிந்துகொள்ளலாம் என்பதால்.
8 மணிக்கே சென்றுவிட்டோம் .பொதுவா 9.30க்குத்தான் காலைஉணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் அதுவரை அவரின் அறையில் பேசிக்கொண்டிருக்களாம் என அமர்ந்திருந்த பொழுது.அவரைக்காண சிலர் அப்பொழுது வந்தனர். அறைக்குள் வரும்படி அழைத்தார் அவர்களை.
வந்தவர்களின் எண்ணிக்கையோ 3 .இருந்த அதிகப்படியான இருக்கைகளோ 2 அதனால் ஒருவர் நின்றுகொண்டிருக்கவேண்டிய சூழல் .நான் எழுந்து ஒருவரை அமர அழைத்தேன் .அதற்கு ரகு இருக்கட்டும் தோழா என கையமர்த்தியதோடு , இளவலை அழைத்து ,தம்பி தோழருக்கு ஒரு ''அமர்வு ''கொண்டுவாருங்கள் என்றார். மற்றவர்களை நீங்கள் அமருங்கள் ''அமர்வு'' வருகிறது என்றார் .எனக்கு அந்த சொல்லை பயன்படுத்திய விதம்,இடம் ,இனிமை ,மிகவும் பிடித்திருந்தது .
சொல்லும் மிகவும் உயர்வாகவும் ,உன்னதமாகவும் இருந்தது .என்னை மிகவும் பரவசப்படுத்தியது .அமர்வாக ஒரு பிளாஸ்டிக்சேரை கொண்டுவந்து வைத்தான் தம்பி முகிழ் .

வந்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தை தெரிவித்தனர் .
தங்களின் உறவுப்பையன் ''விருப்பமணம்'' செய்துகொண்டதாகவும் .அதற்கு பெண் வீட்டில் அதிக எதிர்ப்பு இருப்பதால் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை வேண்டிவந்ததாகவும் .என்ன செய்தல் நலம் என்றும் வினாவனர் .
எனக்கு நான் ''விருப்பமணம்'' என்றால் என்ன ? என சற்றே குழம்பினேன் .
அவர்களின் பேச்சிலிருந்து காதல் திருமணத்தைத்தான் அவ்வாறு அழைக்கின்றார்கள் என்பதனை யூகித்துக்கொண்டேன் .கவுரவக்கொலைகள் செய்யும் சமூகத்தில் உழன்றுகொண்டிருக்கின்றோம். என்ன கொடுமையடா ? என மனம் வெம்பியது .
காவல் நிலையம் செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்

அவர்கள் சென்றதும் ,''விருப்பமணம்'' என்றால் ''காதல் திருமணம்''தானே என வினாவினேன் .
தோழா,''விருப்பமணம்'' என்பது ஒருவரை ஒருவர் விரும்பி மணம் ஒப்பி இல்லறத்தில் ஈடுபடுவது .இன்றைக்கு என்னதான் கல்வி மக்களுக்கு புகுத்தப்பட்டிருந்தாலும் ,அவர்கள் பழமையினின்று மீண்டுவர இன்னும் அதிக காலம் ஆகும் .காதல் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது . காதல் என்பது மிகவும் அசிங்கமானது என்றும் ,அது கூடாத ஒன்று என்றும். தவிர்க்கக்கூடியது என்றும்,தேவையில்லாதது என்றும், செய்யக்கூடாத செயல் என்றும் ,சமுதாயக்கோடு என்றும், பலவாறாக பலவிதத்தில் முன்பு காதலித்தவர்களே பேசி வருவதினின்று ,இது சமுதாயத்தில் ஒரு அவலச்சொல்லாக உலவுகிறது .காதலிப்பவர்களே கூட நாங்கள் காதலிக்கின்றோம் என கூற தயக்கம் காட்டுவதை உணர்ந்திருப்பீர்கள் . அந்த அளவிற்கு அந்த வார்த்தை காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படுகிறது . நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறுவதை விட நாங்கள் விருப்பமணம் செய்துகொண்டோம் என்ற பதத்தில் காதலில் உள்ள காமம் மறைந்து அவர்களின் அன்பும் ,தூயஉள்ளமும் அதிகம் தெரிகின்றது .கண்ணியம் தெரிகிறது .விருப்பமணம் என சொல்வதிலே பக்குவப்பட்ட தன்மை தெரிகிறது . மேரோஜ் என ஆங்கிலத்தில் பேசி ஒளியாது ,சுந்தரத்தமிழில் பேசி நிமிர முடிகிறது . எனது அனுபவத்தில் தனது மகளின் காதல் கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் விருப்பமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார் .அதற்கு காரணம் விருப்பமணத்தில் காமம் இல்லை,பணம் இல்லை, ஆசையில்லை ,அன்பும் ,தூய உள்ளமும் ,பாதுகாப்பும் உள்ளது என எண்ணியதால் .காதல் என்றாலே அதை கடந்து சென்றவர்கள் உட்பட அனைவருக்கும் கசப்பதால் இரு உள்ளங்களின் அன்பு சிதைக்கப்படுவது ,விருப்பம் என்னும் பதத்தால் களிம்பு போடப்படுகிறது என்பதால் நாங்கள் ''விருப்பமணம்''என்றே சொல்லுகின்றோம் .இப்பதம் மனிதர்களை பதப்படுத்தும் என நம்புகின்றோம் என்றார் .

எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது .
வார்த்தை மாற்றத்தால் மனங்களை மாற்றமுடியும் எனில் அதை நாமும் ஏன் செய்யக்கூடாது என தோன்றியது .
காதலின் மென்மையுடன் .

''அமர்வு '' ,''விருப்பமணம்'' இவ்விரண்டு வார்த்தைகளும் தமிழுக்கு அழகு சேர்க்கும் என நினைக்கின்றேன் .
அன்றாட வாழ்வில் அனைத்து வேலையிலும் இனிய தமிழில் பேசி வந்தாலே , புதுச்சொற்கள் தோன்றி,தோன்றி அன்னைத்தமிழை அழகுடன் வளப்படுத்தும் என்ற நினைப்புடன்

காலை உணவை கனிவுடன் சுவைத்து பறந்தோம் .

உங்கள் திருமணம்
நிச்சயிக்கப்பட்ட மணமா ? அல்லது விருப்பமணமா?


. Download As PDF

குன்னுமாயம்
குன்னுமாயம்

என்ன ஒரு அடர்வான வார்த்தை .
எனது வழக்கறிஞர் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது
அவர் தான் இதனை எனக்கு முதன்முறையாக உச்சரித்துக்காட்டினார் .
என் மனைவியிடம் 'குன்னுமாயம்' என்றால் என்னனு கேட்டேன் .
அவர் சரியான அர்த்தத்தைச்சொன்னத்தோடு
இது காளிங்கரையான் பாசனப்பகுதியில் பேசப்படும் வார்த்தை என்று கூறியதினின்று எனக்கு இது வட்டார வழக்குச்சொல் என்றும் அதுவும் குறுகிய பகுதியில் மட்டும் பேசப்படும் சொல் என்றும் அறிந்துகொண்டேன் .

உன்னுடைய குன்னுமாயம் எல்லாம் தெரியும் ? என்று இயல்பாக பேசுவார்களாம் இப்பகுதி கிராமத்தினர் .

கிராமத்து மக்களுக்கு குறைந்த சொற்களே தெரியும்.
அதனால் ,அதில் அடர்த்தியான அர்த்தங்களும் ,அதிக உள்ளீடுகளையும் வைத்து பொருள்கொள்ளுதல் வேண்டப்படுவதாக உள்ளது .

அப்படித்தான் இதுவும் .

இவ்வார்த்தைக்கு அர்த்தம் .

நல்லவன் போல் நடிக்கும் காரியவாதி .
நடிப்பு ,நெளிவு ,பல்லிளிப்பு ,பாசாங்கு ,மற்றும் இவற்றின் மூலம் பிறரை ஏமாற்றுபவன் .
சுயநலவாதி ,ஆனால் அதிக பொது நல அக்கரைவாதியாக காட்டிக்கொள்ளுபவன் .
இப்படி பல அர்த்தங்கள் நீண்டுகொண்டே செல்கிறது .


குசலம்

இதுவும் அதிகமாக கிராமத்தினரால் பேசப்படும் சொல் .

அகராதிகள் நலம் என பொருள்கூறினாலும் .

ஒருவரைப்பற்றி பிறரிடம் குறைகூறிவதை இவ்வாறு அழைக்கின்றனர் கிராமத்தில் .

இவ்வாறு பல வார்த்தைகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளன .

உ.வே.சா போல முடியாவிட்டாலும் ,
நம்மால் முடிந்தவரை சேகரித்து பாதுகாப்போமே .

பதிவுலகிற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் .
இங்க அதிகம் பயன்படும் என நினைக்கின்றேன் ,சரியா ?


. Download As PDF

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அன்னை - 100


நான் என் வாழ்நாளில் சந்திக்க விருப்பிய நபர்களில் மிகவும் முதன்மையானவர்
'அன்னை' என்ற வார்த்தைக்கே
அழகு சேர்த்த 'கோஞ்ஜா ' .
நினைத்துப்பார்க்கவேண்டிய அன்பு உள்ளம் .

யூகோஸ்லாவியாவில் 1910 ல் ஸ்காப்சி என்னும் ஊரில் வேளாண் அல்பேனிய தம்பதியினருக்கு பிறந்த 'ஆக்னஸ் கோஞ்ஜா பொயாஜியூ ' என்பவர் 'ஏழைகளுக்கும் ,நோயாளிகளுக்கும் ' செய்த ஒப்பற்ற தொண்டினால் என்னை மிகவும் கவர்ந்தார் .

20 ஆண்டுகள் புவியியல் , வரலாற்று ஆசிரியையாக கல்கத்தாவில் பணக்கார விட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பணியாற்றினார் .அந்த பள்ளிக்கு அருகில் 'மோதிஜில் 'என்ற சேரி இருந்தது .இங்குள்ள ஏழைகளின் அவலத்தை கண்டு வருந்தினார் . தான் இனி ஏழைகளுக்கு உதவி செய்தேயாகவேண்டும் என 1947 செப்டம்பர் 10 ல் உறுதிபூண்டார் .

ஏழைகளுக்குத் தொண்டு செய்ய தான் எடுத்த முடிவை தான் வேலைசெய்த பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவித்தார் . இவரின் வேண்டுகோளை கல்கத்தா 'ஆர்ச் பிஷப் ' இது தற்காலிக வேகம் காலப்போக்கில் நீங்கிவிடும் என நம்பினார்.
அதோடு மட்டுமல்லாமல் அவர்
அதிக கல்வி அறிவில்லாந அன்னிய நாட்டினல்,
இந்திய பின்னணியைப்பற்றி ஒன்றும் தெரியாத ,
அதுவும் பணவசதியின்றி ,
விடுதலை பெற்றிருந்த மக்களிடம் வெள்ளைக்கார வெறுப்பு மாறாத நிலையில் ,
நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களே சமூகப் பணியிலும் ஈடுபட்டிருந்த வேளையில் ,
பெண் துறவி
என்ன செய்து விடமுடியும் என ஆணித்தரமாக நம்பினார் .
'ஆர்ச் பிசப்' நிராகரித்ததால் நேரடியாகவே 'போப்'பிடம் விண்ணப்பம் செய்து அனுமதியை பெற்றார் .

'மோதிஜில் ' சேரியிலேயே 5 ருபாய் பணத்துடன் தனது தொண்டை ஆரம்பித்தார் அவருடன் பணியாற்ற முதலில் 'சுபாஷிணி தாஸ்' என்ற 19 வயது மாணவி வந்து சேர்ந்தார் .

இவ்வாறு ஆரம்பித்தது அவரின் பயணம் ...
அவர்தான்

தனது அன்பான உள்ளத்தால் உலகை அணைத்த

'அன்னை தெரசா'


இன்று அன்னையின் பிறந்த தினம் .

வணக்கத்துடன் நினைத்துப்பார்க்கின்றேன் ..
Download As PDF

சனி, 21 ஆகஸ்ட், 2010

ரோமா ஜிப்சி


பாட்டுக்கேட்டுட்டே நடந்துபோனவரின் பின்னாலே நானும்,ஜானும் சென்றோம் .
டே ,இதுக்குப் பேர்தான்டா டிரான்சிஸ்டர் என்றான் ஜான் .
முதன் முதலாக டிரான்சிஸ்டரை நான் பார்த்தேன்.
அப்ப ஒரு 4 ம் வகுப்பு படிச்சிட்டிருந்தேனு ஞாபகம் .
கூட்டம்பள்ளி கோயில்ல டெண்ட் அடிச்சு ஒரு குருப்பா இருந்தாங்க அவங்க .
காட கவுதாரி எல்லாம் புடிச்சு வச்சிருந்தாங்க .
எங்கள கண்டுக்கவேயில்ல .
எனக்கு ஏனோ அவங்கள உடனே புடிச்சுப்போச்சு .
தினமும் விசிட் கட்டாயம் .
10 நாள் இருக்கும் .
திடிரென அவர்களைக் காணவில்லை .
எங்கப்பாகிட்ட கேட்டேன் ,அவங்க நரிக்குறவர்களாம் ,இப்படித்தான் ஊர் சுத்தீட்டே இருப்பாங்கனு சொன்னார் .எனக்கு ஒன்னும் புரியல ,ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை பிடித்திருந்தது .அவர்களேடே போயிருக்கலாம் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது .


இப்படியே நம்ம ஊரில் சுத்திக்கிட்டு இருந்தவங்களில் ஐரோப்பா பக்கம் சென்றவர்களின் வாழ்க்கைதான் மனிதாபிமான ஐரோப்பா மனிதங்களால் மனிதத்தன்மையில்லாமல் வதைக்கப்படுவது
வாடிக்கையா இருக்கு .

பிரான்ஸ் என்னும் அறிஞர்கள் வாழும் நாட்டில் அறிஞர்களுக்கு இவர்கள் இடஞ்சலாக இருப்பாங்க போல .அதனால் நாடு கடத்தல் என்னும் ஆதி காலத்து நடவடிக்கையை அங்கு மேற்கொண்டுள்ளனர் .

இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.


எது எதுக்கோ குரல் கொடுக்குறோம் .
இந்த மனிதவதைக்கும் குரல் கொடுக்கலாமே .


நான் இதை வன்மையாக கண்டிக்கின்றேன் .
நீங்க ..?


(படம் உதவி. BBC . ..நன்றி)

. Download As PDF

புதன், 18 ஆகஸ்ட், 2010

கற்று விட்ட மனிதன்


.

.
..

.
ஆதரித்தோ எதிர்த்தோ பேச
கற்று விட்ட மனிதன்
சமூக நல்வழிஅறியா சமுதாயசகதி
.. Download As PDF

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

64

.


சுதந்திரத்திற்காக
போராடிய அனைவரையும்
வணக்கத்துடன் நினைத்துப்பார்க்கின்றேன் .


.
Download As PDF

சனி, 14 ஆகஸ்ட், 2010

நாடாடா இது ...தூ ...சுதந்திர நாடாடா இது ...


இந்த கட்டுரையைப்படிப்பவர்களின் கவனத்திற்கு .

முதலில் முன் முடிவுகளை கழற்றிவைத்துவிட்டு பின் படிக்கவும் .

இது யாரையும் ஆதரித்தோ,எதிர்த்தோ எழுதப்பட்டது அல்ல .

நேற்று என் நண்பர்களிடம் நான் எடுத்துவைத்த கருத்தை இங்கு பதிந்துள்ளேன் .

----------

இங்க எல்லாம் மாறக்கூடியது .
மாறாத எதுவும் உறைந்துவிடும் .

மாற்றத்தை உணராத இசங்கள் உறைந்து அழுகி பின் சிதைந்துவிடும் .சமூதாயத்தில்நோய்க்கிருமிகளாக .பின் அழிந்துவிடும் .
இதற்கு காந்தியிசமானாலும் சரி ,மார்க்சிசமானாலும் சரி இன்னும் உள்ள அனைத்து இசங்களுமானாலும் சரி விதிவிலக்கல்ல .

இசங்களை படித்து அதன்பால் ஈர்க்கப்பட்டு அதனை உருவாக்கியவர்களின் பால் உண்மையானமதிப்புவைத்து வாழ்பவர்கள் யாரும் அந்த இசத்தின் தன்மையில் உறைந்து விடுவார்களேயாயின் .அந்த இசமும் அழிவதோடு அவர்களும் அந்த இசத்தை அழித்தவர்களாவார்கள் .

எந்த ஒரு இசம் சமூதாயத்தில் ,சமுகத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ,ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டுமே மகிழ்வித்து ,முன்னிருத்தி ,அவர்களின் நலவாழ்வு மட்டுமேமுக்கியம் என்ற கோணத்தில் இயங்குமேயானால் ,அதனால் சமுதாயத்தில் என்றும் அமைதியே இருக்காது .
எப்பவும் சமுதாயத்தை அது துண்டாடவே செய்யும் .அதனால் மக்கள் அடையும் பயனைவிட பாதகமேஎன்றும் அதிகமாகவே இருக்கும் .அது எப்பவும் அதனை ஆதரிப்பவர்களையும் நிம்மதியில் விடாது,மற்றவர்களையும் நிம்மதியில் விடாது .

எந்த ஒரு இசமானாலும் சரி அது பொதுவான மக்களின் அமைதியான வாழ்விற்கு ,ஏதுமறியாதஅப்பாவி மக்களு சிறிதளவு ஊறு விளைவித்தாலும் ,அந்த இசம் மனித குலத்திற்கே அநீதியான,ஒதுக்கப்படவேண்டிய இசமாகவே இருக்கும் .


------------

காந்தி உண்மையான சுதந்திரம் வாங்கிக்கொடுக்கவில்லை .
இந்தியா பொற்றது உண்மையான சுதந்திரமே அன்று .

வெள்ளையனிடம் வாங்கி கொள்ளைக்கார பணியாக்களிடம் அடகுவைத்துவிட்டனர் .

நாடாடா இது ...தூ ...சுதந்திர நாடாடா இது ...

சுதந்திரம் இங்கு இல்லை , இங்கு இருப்பதும் சுதந்திரமில்லை .

இந்தியா ஒரு சுதந்திர நாடே கிடையாது .

என பலதரப்பட்ட கூக்குரல்கள் ...
காதில் கேட்கமுடியாத அளவிற்கு

அமைதியடைய ஒரு அரை மணிநேரம் ஆனது .

அமைதியான பின்
நான் அந்த தோழர்களைப்பார்த்து
தோழர்களே ,நீங்கள் சுதந்திரம் என்று எதைக்கூறுகின்றீர்கள் என எனக்குத்தெரியலில்லை .
இந்தியா ஒரு சுதந்திர நாடே கிடையாது என்பதில் அழுத்தம் ,திருத்தமாக இருக்கின்றீர்கள் என்றேன்.
ஆம் ,ஆம் ,உண்மை அது தான் என்ற பதில் அரங்கம் அதிர வந்தது .
சரி ,அப்படியெனில் ,
நீங்கள் சுதந்திர நாடு என உலகில் ஒரு நாட்டை எனக்கு அடையாளம் காட்டுங்கள் .
அந்த நாட்டின் உள்ள சுதந்திரத்தையும் இந்தியாவில் உள்ள சுதந்திரதிர கூறுகளையும் ஒப்பிட்டுப்பார்த்து பின் ஒரு முடிவுக்கு வரலாம் .
ஆதலால் தயவு செய்து கூறுங்கள் என்றேன் .
பதில் யாரிடமிருந்தும் வரலில்லை ....

இதைப்படிக்கும் யாராவது தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள் .


------

கொஞ்சமாவது சிந்திப்போமே .

.

.

Download As PDF

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காப்பாட்சியாளரின் காலாட்படையுடன் .

சிற்பங்கள் பேசும் மொழி கற்றவன் நான் .
நீண்ட நாட்கள் சிற்பங்களுடன் பேசி பயணப்பட்டு ஆகியிருந்தபடியால் காப்பாட்சியகத்திற்கு சிற்பங்களுடன் பேசிக் களிக்கச் சென்றபொழுது
அவைகள் ஏனோ பேச மறுத்தன .என் மொழி கடுமையாக இருந்திருக்குமோ அல்லது எனது அணுகுமுறை அவைகளுக்குப் பிடிக்கவில்லையா என்ற கேள்விகளை என்னுள்ளே எழுப்பிக்கொண்டே அருங்காட்சியகத்தை சுற்றிக்கொண்டிருந்தபொழுது வெட்டவெளியில் சிலர் தங்களின்
மூளையிலிருந்து கைகளின் மூலம் பறவைகள்,விலங்குகள்,மரங்கள்,காடுகள் என விதவிதமாக ,விதவிதமான நிறங்களில் தங்களுக்கு முன் இறக்கிக்கொண்டிருந்தனர் .அவற்றை ஆர்வத்துடன்
கவனித்துக்கொண்டிருந்தவர் தான் காப்பாட்சியாளர் என்பதை அருகிலிருந்த இருவரின் பேச்சுக்களிலிருந்து அறிந்து கொண்டேன் .அவர் தனது இளவர்களுக்கு பயிற்ச்சி கொண்டிருப்பதாகவும் அறிந்து கொண்டேன் .கூர்ந்து கவனித்ததில் அவர் மூளையிலிருந்து எவ்வாறு பிறவற்றிற்கு சிந்தனைகளை மாற்றுவது என்பது குறித்து மிகவும் சிரத்தையுடன் பொருமையாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன் . நான் மீண்டும் எனது பயணத்தின் ஆரம்பத்தை புதுப்பிக்க சிலைகளை அணுகினேன் .ஆனால்,அவைகள் மீண்டும் மௌனம் காட்டின .
சிலைகள் பற்றிய அறிவில் சிலைகள் அனைத்தும் பேசும் என்பது அடிப்படையான முதல் பாடமாகும் .இரண்டாவதாக சிலைகள் ஒரு சங்கோதத்தில் கட்டாயம் பேசும் .சிலைகள் தமக்குள் பேசிக்கொள்ளும் என்பதும் சிலைகள் பிற சிலைகளுடன் பேசும் என்பதும் ,முக்காலத்தையும் உணர்ந்தவைகள் என்பதோடு எதிர்காலத்தைப்பற்றி சரியான விடைகளுடன் விடுவிப்பையும் தரும்
என்பதும் ஆச்சரியப்படக்கூடிய பாடங்களாகும் .சிலைகள் தங்களுக்குள் பேசும் காலம் நடுஇரவு என்பதும் அதன் விழிப்பு நிலையில் நாம் அது தனக்குள் பேசிக்கொண்டவற்றை ஊகித்து உணரலாம் என்பதும்அறித்திருக்கவேண்டிய பாடங்களாகும் .
நான் அருங்காட்சியகத்தில் மற்றவர்கள் போலவே சும்மா சுற்றித்திரிந்து கொண்டிருந்தேன் .அவைகளின் மௌனம் எனக்கு புரிபடவில்லை .இவைகள் பேசாதா சிலைகளா ? ஊமைச்சிலைகள் இருக்கின்றதா ? என்ற ஐயப்பாடு எனக்கு சட் என்று ஏற்பட்டது .சிற்பசாஸ்திரத்திரப்படி அனைத்து சிலைகளும் சரியாகவே புடம் போடப்படுகின்றன என்பதுவே உண்மை .பேசும் கற்களில் இருந்தே சிலைகள் செய்யப்படுகின்றன .அதுவும் குறிப்பிட்ட சங்கோதமொழி தெரிந்த கற்களில் இருத்தே சிலைகள் செய்யப்படும் . குறிப்பிட்ட சங்கோதமொழி தெரிந்த கற்கள் மட்டுமே சிலைவடிக்க ஐயப்பாடு ஏனே அதிகரித்துக்கொண்டே வத்துகொண்டு வந்த வேளையில் சிற்பங்களின் கற்களுக்குள்
பயணிக்கும் சாம்பிரட் இரகசிய வாய்ப்பாட்டு முறையினை உபயோகித்து கற்களுடன் பயணப்பட முடிவுசெய்தேன் .

கற்கள் அனைத்தும் அதிர்ந்துகொண்டு உயிர்ப்புடன் இருந்தன .என்னால் பயணிக்கமுடியாத அளவு எதிர்வினைகளை தெரிவித்து என்னை மூர்ச்சையடையச்செய்தன. மீண்டு நான் வெளிவந்தபொழுது
காப்பாட்சியர் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார் .நான் அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்க அணுகியபொழுது சிந்து வெளி சிற்ப எழுத்துக்களுக்கு முன் அமர்த்திருப்பதை உணர்ந்தேன் .நான் எழுத்துக்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டே அவரை நெர்ங்கியதை கண்ட அவர் சிந்து வெளி எழுத்து
ஒன்றை என் மீது செலுத்தினார் .நான் அது தவறான பிரயோகம் எனக்கூறி அவரின் மீது அதையே மீண்டும் பிரயோகித்தபொழுது உடனே அதற்கு அவர் நர்தமா வனப்பகுதி ஆதிவாசிகளை போர்குறியுடன் என் முன் கொண்டுவந்து நிறுத்தினார் .எனக்கு பாகீரென்றது .அவருடன் போர்புரிய நான் வரவில்லை என அவருக்கு விளக்குவதற்குள் ஆதிவாசிகளின் தலைவன் தனது
மதகுருக்களின் மது வெறியாட்டத்தில் ஆண்டவனின் அருள்வாக்கு நர்மதையைக் கடந்து வெற்றி பெறு என்று இருக்கிறது என்பதைக்கொட்டு போருக்கு கிளம்பியிருத்ம்படியால் நான் போர் செய்யும்கட்டாயத்தில் தண்டகாரண்ய சதுப்புநில மாந்தர்கள் அருபதின்மறையும் ,மாயான்களையும் இணைத்து ஒரு மா லோகம் மாயமாய் தயாரித்து மிகப்பெரிய வெடிச்சத்தத்துடன் பிரவேசித்தேன் .தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட காப்பாட்சியர் போரை வேறு ஒரு பரப்பிற்குள் நுழைந்துஇப்பொழுது அவர் ஷென்றி ரென் என்பவருடன் தனது பாதுகாப்பு படையுடன் வந்து கொண்டிருந்தார் .நான் இப்பொழுது தனி மனிதனாய் இருந்து போரிட்ட பொழுதும் அவருடன் டார்வின் சேர்ந்துகொண்டார் .இப்பொழுது என் பக்கத்தில் முதன்முறையாக பிராய்டு அகப்பட எங்களமு போர் அறிவு சார்ந்ததானது .
அவர் புத்தகங்களினின்று காலாட்படைகளை ஆயுதங்களுடன் அனுப்பிக்கொண்டிருந்தார். நான் எனதுகபாலத்தைப்பிளந்து அவைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிக்கொண்டிருந்தேன் .அதை உணர்ந்து
அப்போரை நிறுத்திய அவர் தான் எப்படியும் வெற்றிபொற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எனதுஅடித்தளந்தின் அஸ்திவாரத்தை தகர்க்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருத்த பொழுது ,சிறைப்பிடிப்பது எப்படி என்று தனது படையாட்களுக்கு பயிற்சி கொடுக்க சென்றபொழுது ,பிரமாண்டகன் என்பவன் அவரின் தூதுவனாக என்னிடம் வந்தான் .அவரின் படைகளைப்பற்றியும்
,படைகளின் தன்மை ,வலிமை,எண்ணிக்கை முதலியவைகளைக்கூறினான் .
நீங்களும் காப்பாட்சியாரும் பலத்தில் சமமாக உள்ளதால் போர் தேவையில்லை என்ற முடிவுக்கு காப்பாட்சியர் வந்துள்ளார் என்றான் பிரமாண்டகன் .
போர் தேவை இல்லை என்பதனின்று என்ன கூறவருகின்றீர்கள் ? எப்படி சமபலம் என நினைப்பது ? இந்த கணிப்பு எப்படி வந்தது ? என்றேன் .
காப்பாட்சியர் அப்படி நினைக்கின்றார் . அதோடு சம்பலத்துடன் இருப்பதனால் சதுரங்கத்தின் மூலம் முடிவு செய்யலாம் என்றும் முடிவுக்கு வந்துள்ளார் என்றான் பிரமாண்டகன்.
எனக்கு உடன்பாடில்லை சதுரங்கத்தில் அரசனை கைப்பற்றுவதே விதி ,ஆனால் எனக்கு அரசன் தேவையில்லை ,அரசு தான் வேண்டும் .மேலும் ,சதுரங்க அரசன் ஒரு சோம்பேறி ,மனித நேயமற்ற கொடுரன் .என்னிடம் உங்களின் போர்யுத்தியை புகுத்தாதீர்கள் எனது வரையறை வேறு .போரில்
ஆயுத வெற்றியல்ல பங்கு ,பதவி அல்ல பாதுகாப்பு இவை தான்வேண்டும் .சமாதான பேச்சுக்கள் அனைத்தும் ஆதாயத்தை நோக்கியே என்பதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் .எந்த சமாதானப்பேச்சும் போரின் கொடூரத்தை பற்றி கவலைப்படுவதுவே .ஆதாயத்தை தேடும் மனிதவேடமே .போர் நிறுத்தம்
என்பதே ஆதாயத்தை வேறுவிதத்தில் தேடுவது என்பதை நீ காப்பாட்சியருக்கு உணர்த்து .எந்த போரிலும் வெற்றி என்பது ஒருவருக்கு மட்டுமே .சமாதானப்பேச்சு ஆதாயமே ,அது அனைவருக்கும் என்பதால் நான் ஆதாயத்தையே விரும்புகிறேன் .அதோடு இது மீது திணிக்கப்பட்ட
போர் .அதனால் நான் ஆதாயத்தை எதிர்பார்க்கின்றேன் .உங்களின் போர் யுக்தி பழமையானது .உங்களின் போர் பெரும் திருட்டைப்போன்றது .யாரும் விரும்பாதது .ஆனால் ,நீங்கள் யாருக்கும் செய்வது .என்னிடமிருந்து நீங்கள் பாடம் கற்றிவிட்டாத உணர்ந்தால் தான் மனித இனத்திற்கு நல்லது .இல்லையேல் உங்களுடைய அழிவு இந்த அருங்காட்சியகத்திற்குள்ளாகவே முடிந்துவிடும் . இங்குள்ள சிலைகளே உங்களை கொன்றுவிடும் என்பதனை உங்களின் தலைவனுக்கு விளக்கு என கூறினேன்.
இது கேட்டு பிரமாண்டகன் மறைந்தான் .
வெண்ணிற தூவல் மேவிய ,அழகிய நட்சத்திரம் தாங்கிய அந்த சிலை தனது சிலிர்ப்பால் என்னை அழைத்து ,திரும்பிக்கொண்டது .பின் என் இதயத்தை அடைந்தது,அதைத்தொடர்த்து ஒவ்வொரு சிலைகளாக என்னைப்பார்த்து புன்னகைத்தது .அதன் ஒவ்வொரு புன்னகையிலும் சுதந்திரத்தின்
மோனமும் ,விடுதலையடைந்த மொழியின் வீச்சும் இருந்தது.

.

.
Download As PDF

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பரிணாமத்தின் பாதை -புத்தகம்னா இப்படித்தாங்க இருக்கனும் .


இது வரையில் நாம் அறிந்திராத ஓர் உயிரினத்தை
கண்டுபிடிப்பதென்பது சிரம்மான காரியமல்ல ...
எனத்தொடங்கும்
'' வாழும் டார்வின் ''என்றும் ,
''நடமாடும் டார்வின்'' என்றும் புகழப்படும்
''டேவிட் அட்டன்பரோ'' அவர்களின்
''பரிணாமத்தின் பாதை '' என்னும்
படிக்கவேண்டிய பொக்கிஷத்தை நண்பர்களின் அதிதூண்டுதலால்
விலைகொடுத்து வாங்கினேன் .
ஏன்னா ? இதை வாங்கிய அவர்கள் தினமும் இது சம்பந்தமா நிறைய விசயங்கள் மணிக்கணக்கில் பேசிக்கிட்டே இருந்தனர் .புத்தகத்தை படித்துக்கொண்டே அவர்கள் விவாதத்தில் இருந்ததால் இரவல் வாங்கவும் வழியில்லை .அவர்கள் அதற்கு தயாராகவும் இல்லை. ஆனால் மிகவும் சுவாரசியமான தகவல்கள் அவர்களின் விவாத்த்தில் இருந்தது எனக்கு வியப்பு மேல் வியப்பை அளித்ததால் இவ்வளவு வியங்களை உள்ளடக்கி ஒரு புத்தகம் இருக்கிறதா ? சரி வாங்கிவிடலாம் என்று முடிவு செய்துவாங்கிவிட்டேன் .
நான் விலை கொடுத்து வாங்கிய சட்டம்சாரா புத்தகங்களில் இதுவும் ஒன்று .

பாத்த மாத்திரத்திலேயே வாங்கத்தூண்டியது விசயம்
கண்டபடிக்கு முன்னுரை ,என்னுரை,பின்னுரை ,
ஜல்ரா உரை,பதிப்புரை ,புகலுரை ,பக்தியுரை என இல்லாமல் இருந்ததுவே .

மற்றபடி முதல் பக்கத்திலிருந்து கடைசி 312ம் பக்கம் வரைக்கு எழுத்துக்கு எழுத்து அர்த்தங்கள் ''சிற்பா'' போல .
அவ்வளவு அடர்வு ,அவ்வளவு ஆழம் ,அவ்வளவு அகழ்வு,
அவ்வளவு செறிவு ,அவ்வளவு அறிவு ,
அவ்வளவு செய்திகள்,அவ்வளவும் உண்மை,
அவ்வளவும் அனுபவம் .
புத்தகம்னா இப்படித்தாங்க இருக்கனும் .

அவ்வளவு நேர்த்தி.''LIFE ON EARTH " என்னும் "DAVID ATTENBOROUGH" அவர்களின் புத்தகம் .

இதை தமிழில்'' டோரதி கிருஷ்ணமூர்த்தி '' அவர்கள்
மிகஅழகாக ,மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் .

''யுனைடெட் ரைட்டர்ஸ் '' ன் மிகநேர்த்தியான வெளியீடு .அருமை .

சரி புத்தகத்திருந்து சில துளிகள் ...

டார்வின் நாத்திகரல்ல,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழத்தில் இறையியல் பட்டம் வாங்கியவர் .ஆனால்,உயிரினங்களில் அபரிதமான வகைகளையும்,ரகங்களையும் கண்டு தீவிரமான குழப்பத்திற்கு உள்ளானார் ...

பெரும்பாலான உயிரினங்கள் தாம் வாழ்ந்திருந்ததற்கான எந்தவித அடையாள ஆதாரத்தையும் தமக்குப்பின் விட்டுச்செல்லவில்லை...

நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ நம்மீது கடினமான பொறுப்பெனும் சுமை ஏறிவிட்டது .நமது எதிர்காலம் மட்டுமன்றி நம்முடைய இப்பூமியைப் பகிர்ந்து கொள்ளும் சகல ஜீவராசிகளின் எதிர்காலமும் நம் கையில் அடங்கியுள்ளது .

. Download As PDF

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

விலங்குகளின் உலகம் .

தங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை ,
ஏன் பாதியை என்றுகூட சொல்லலாம் ,
தன்னைவிட பெரிய விலங்குகளிடமிருந்து
தங்களை பாதுகாத்துக்கொள்வதிலேயே
சிறிய விலங்குகள் கழித்துவிடுகின்றன .

சில விலங்குகளின் உலகைப்பற்றி இங்கு பார்க்கலாம் .

யானை :

1.18 மணி நேரம் உணவு தேடும் .
2.பன்றியின் உறுமலுக்கு மட்டும் பயப்படும் .
3.2 ஆண்டிற்கு ஒரு முறை கூடும் .
4.களிமண்ணை பந்து போல் உருட்டி விளையாடும் .
பார்ப்பதற்கு கால்பந்து விளையாடுவது போல் இருக்கும் .
5.மனிதனை பார்க்குப் பொழுது
அதன் அளவு தடியாகவும் ,உயரமாகவும் தெரியும் .
அதனால் தான் மனிதன் யானையை எளிதாக அடக்க முடிந்தது.
6.வெண்மை நிறம் பிடிக்காது .


நாய் :

1.உலகம் முழுதும் இருக்கும் உயிர் .
2.கறுப்பு ,வெள்ளை நிறங்களை மட்டுமே வேறுபடுத்திப் பார்க்க முடியும் .
3.5 நாட்கள் தூங்காமல் இருந்தால் இறந்துவிடும் .
அன்பான எஜமானர்கள் இறந்த பின் பிரிவு தாங்காத அன்பான நாய்கள் இறந்து போவது இப்படித்தான்.


சிங்கம் :

1.இதன் கர்ஜனை 10 கிலோமீட்டர் வரைக்குக்கூட கேட்குமாம் .
2.ஆண் 20 மணி நேரம் தூங்கும் .
3.வேட்டையில் குரல் வளையை பதம்பார்க்கும் .
4.இதன் பால் தங்கக் கிண்ணத்தைத் தவிர வேறு எதில் வைத்தாலும் கெட்டுப்போகும் .
அதனாலும் காட்டுக்கு ராஜா .


சிம்பன்சி:

1.மெத்தை படுக்கை அமைக்கும் .
2.சிறிய ஆடுகளை வேட்டையாடும் .
3.4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கருத்தறிக்கும் .
4.தரையில் இலை,தழைகளால் இல்லம் அமைக்கும் .


கழுதைப்புலி :

1.பிணம் தின்னும் .இரவில் இரை தேடும் .
2.மனிதன் உள்ள இடங்களுக்கும் வந்து
ஆடு,மாடு முதலியவற்றை கொல்வதோடு ,
மனிதர்களைத் தாக்கவும் செய்யும் .
3.இதன் சப்தம் பயங்கரமாக இருக்கும் .
4.மனிதனின் இரவச்சம் இது .


கஸ்கஸ் :

1.மரத்தில் வாழும்.
2.இரவில் இரைதேடும் .
3.மிகவும் சாதுவானது .
4.இதனை தொந்தரவு செய்தால் தனது மொழியில் திட்டிக்கொண்டே செல்லும் .


ஒப்போஸம் :

1.முட்டைகள் ,பூச்சிகள் இதன் உணவு .
2.இரவில் இரைதேடும் .
3.சும்மா அலைந்து கொண்டே இருக்கும் .
அலைவதில் இதற்கு அவ்வளவு பிரியம் .
இரை பக்கத்தில் இருந்தாலும் வெகுதூரம் சுற்றித்திரிந்து பின் உண்ணும் .


பூமா:

மனிதர்களைக்கண்டால் ஒடாது .
என்ன செய்கிறார்கள் என தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆவல் கொண்டது .மனிதர்கள் தங்கியுள்ள
இடத்திற்கு வந்து எட்டிப்பார்க்குமாம் .ஒன்றும் செய்யாதாம்.


வீஸல்:

1.சுத்தமான விலங்கு .
2.குளிர்காலத்தில் நிறம் மாறிவிடும்.
3.எதிரியின் கழுத்திலுள்ள இரத்தக்குழாயை கடித்து ,பீறிட்டெழும் இரத்தத்தை குடிப்பதில்
மகிழ்ச்சிகொள்ளும் .
4.தன்னைவிட 30 மடங்கு பெரிய விலங்குகளை கூட தாக்கி கொன்றுவிடும் .
5.முயல்கள் இதனைப்பார்த்த மாத்திரமே பயம்கொண்டு மடிந்துவிடும் .
6.உணர்ச்சிப்பெருக்கத்தை இதனால் தாங்கமுடியாது .போட்டோ எடுத்தால் இதற்கு ஏற்படும்
பரபரப்பையும்,மகிழ்ச்சியையும் தாங்கமுடியாமல் இது இறந்துவிடும் .
7.மிகக்கொடுமை மிகுந்த பாலூட்டி .


லிங்க்:

1.மலைப்பிரதேசத்தில் மிக உயரத்தில் வாழும் .
2.இரவில் நடமாட்டத்தை வைத்துக்கொள்ளும்.
3.முயலை மட்டுமே தின்னும் .
4.மனிதர்களை காரணமின்றி தாக்கும் .


ஸ்கங்க்:

1.பயமில்லாத விலங்கு .கரடிகூட பயப்படும்.
2.எதிரி மீது கோபம் வந்தால் ,எதிரியின் கண்ணில் குறிவைத்து மஞ்சள் நிற எண்ணெய் போன்ற
திரவத்தை பீச்சியடித்துவிடும் .
அது கண்ணில் பட்டால் பொறுக்கமுடியாத வலியும்,எரிச்சலும் ஏற்பட்டு கண்ணீர் கொட்ட
ஆரம்பித்துவிடும் .
அதன் நாற்றமும் தாங்கமுடியாதாம் .
மாதக்கணக்கிலும் போகாதாம் .
10முதல் 20 அடி தூரம் கூட பீய்ச்சியடிக்குமாம் .
இதப்பாத்துத்தான்
கூட்டத்த கலைக்க கண்ணீர் புகை வீச ஆரம்பித்தனர் போலும் .


படத்தில் எங்க பையன் டோமி .


.

Download As PDF

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

தாத்தாக்களை துரத்துவோம் .


வயதைக்கேட்டால் பெரும்பான்மையினர் சங்கடப்படுவதை பார்க்கலாம் . அந்தளவிற்கு இளமையாகவே எப்பொழுதும் இருக்க அனைவருக்கும் விரும்பம் . உடலால் இளமையாகவேயிருக்க விரும்பும் மனது சிந்தனையால் அவ்வாறு இல்லாமல் இருப்பதுதான் வருத்தத்தையளிக்கிறது .

வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தபொழுது
என்னிடம் தொழில் பற்றி சக தோழர்கள் கூறிய ஒரு கதை .இந்தக்கதை பொதுவா வழக்கறிஞர்களை கேலி செய்வதற்காகவே கூறப்பட்டு வருகிறது .

அது ..

பிரசித்திபெற்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனது பேரனுக்கு ,அவன் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த முதல் நாள் ஆசி கூறி ஒரு வழக்கை ஒப்படைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார் .பேரனின் முதல் நாள் ,முதல் வழக்கு ,முதல் நீதிமன்ற அனுபவம் ஆகியவற்றைக்கேட்க ஆவலோடு அலுவலகத்தில் காத்திருந்தார் .மிக விரைவாகவே நீதிமன்றத்தினின்று திரும்பிய பேரனைப்பார்த்து துணுக்குற்றார் .எப்படி இருந்தது நீதிமன்ற அனுபவம் என வினாவினார் .தாத்தாவை பணிவுடன் நோக்கி நன்றாக இருந்தது தாத்தா .ஆனா ஏன் ஒன்னுமில்லாத இந்த வழக்கை 40 ஆண்டுகளா நடத்தீட்டு இருந்தீங்க .நான் இன்னைக்கு முடிவுக்கு கொண்டுவந்துட்டேன் . மகிழ்ச்சியா இருக்கு என்றான் . அதைக்கேட்ட தாத்தாவான பிரசித்திபெற்ற மூத்தவழக்கறிஞர் அட பிழைக்கத்தெரியாதவனா இருக்கியே ,அந்த வழக்கை வச்சுத்தான் நான் கல்யாணம் பண்ணினேன் ,வீடு கட்டினேன்,உங்கப்பன படிக்கவச்சேன் ,உன்ன படிக்க வச்சேன் ...கொடுத்தீட்டியே என மனம் நொந்துகொண்டார்.

இதை தாத்தாவின் கோணத்திலிருந்தே அனைவரும் பார்ப்பதால் வழக்கறிஞர் தொழிலை கேலி செய்வதற்காக கூறப்பட்ட கதையாகவே இன்னும் உழல்கிறது .

இந்த கதையை கேட்பவர்கள் அனைவரும்
அந்த இளம் வழக்கறிஞரின் கண்ணியத்தை,நேர்மையை,சுறுசுறுப்பை பார்த்தில்லை.
அது எனக்கு ஏனென்று புரியவில்லை .

இன்று புதிதாக வரும் அனைவரும் இப்படித்தான்
எல்லா விசயங்களிலும் மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்கின்றனர் .ஆனால் ,அவைகள் மறைக்கப்பட்டு விடுகிறது .

ஏனென்று யோசித்துப்பார்த்தால் அனைவரும் தாத்தாக்களையே பின்பற்றி வாழ நினைக்கும் பிற்போக்கு குணம் கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.
இங்கு தாத்தாவும் ,அவர் தொழிலும் ஒரு எடுத்துக்காட்டு தான் அவ்வளவே .அவரவர் பார்க்கும் தொழிலில் முன்னோர்களை மூடத்தனமாக பின்பற்றும் இந்த வழிமுறையைத்தான் நான் இங்கு கேள்விக்குறியதாக்குகிறேன் .
அது மாறுபட்ட எந்தத்துறை என்றாலும் இதே நிலைதான் .

மேற்கூறிய கதை
இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மூத்தவர்களின் தவறுகள் தங்களின் அறிவுக்கு எட்டிய உடனே திருத்தி மிக நல்ல மனிதர்களாக சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.கேலிக்காக அன்று இளைஞர்களின் எழுச்சிக்காக கூறப்பட்டது என்பது தான் உண்மை என நினைக்கிறேன்.

நாம் அனைவரும் தாத்தா மனப்பான்மை கொண்டவர்கள்
அதனால் நாம் அனைவரிடமும் ஒரு கர்வம் இருக்கிறது . வயதைக்கேட்டால் மறைப்பதினின்று ...நிஜத்தில் தாத்தாவகவே . இந்த தாத்தாக்களை துரத்தினால் தான் நம்மிடம் புதிய சிந்தனைகள் ஊறும் .நிஜத்தில் நிஜமான இளைஞனாக இருக்கமுடியும் .இல்லையெனில் மேலே கேட்ட கதை வழக்கறிஞர்களை கேலி செய்வதற்காகவே கூறப்பட்டதாகவே தொன்றும் .


(படம் உதவி Jeeves. அவர்களுக்கு நன்றி )


. Download As PDF

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஆபாசமும் அவதூறும் வலைப்பதிவும் சட்டமும்


வலைப்பதிவு என்பது ஒரு திறந்த வெளி.
இங்கு நாம் சுதந்திரமாக செயல்பட்டாலும் சில விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

இதில் முக்கியமானதும் ,முதன்மையானதும் சட்டம் .
வலைப்பதிவில் ஆபாசம் ,அவதூறு, திருட்டு என்பது
நாம் அனுதினம் கேட்டும் செய்தியா இருக்கிறது.

இது பற்று சட்டம் என்ன சொல்கிறது
என்பதையும் பார்த்தல் நலம் என்பதால் இந்திய தண்டனைச் சட்டத்தினின்று சில சட்டப்பிரிவுகள்பார்வைக்கு .

.


.

Download As PDF

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பட்டுப்பூச்சியாக .

அதி தொலைவை நோக்கிய கண்கள் எதுவும் காணாமல் .எவ்வளவு நேரம் ,தூரம் இப்படியே என கணக்கிட என் குடுவையை முடிந்த அளவு திருகப்பட்ட நிலையில் .எப்பக்கத்திலிருந்தும் எனக்கான பதில் ஒலி இல்லாத சூனியத்தில் .என்னால் எதையும் யூகிக்க முடியவில்லை .இனி ஒன்றும் இல்லை, நாம் நமக்கான ஒதுக்கீட்டில் இருப்பது என்ற நிலையில் ...
என்னை மட்டும் விட்டுவிட்டு எப்படி எல்லோரும் என் குடுவைமொழிக்கு அப்பாற்பட்ட தூரத்திற்கு சென்றுவிட்டனர் ? .அப்படியெனில் என் குடுவைமொழிக்கான சமன்பாடு தீர்வு காணப்பட்டு விட்டதா ?.எப்படியிருந்தாலும் எங்கோ ஓரிடத்திற்கு சென்றிருக்க வேண்டும் அது மற்றவர்களா , நானா? . இங்கு எப்படி ஒதுக்கப்பட்டேன் அல்லது ஒதுங்கியிருக்கின்றேன் ? .குடுவை
வரைமுறையினின்று அவர்கள் விலகியவர்களாகவே இருக்கவேண்டும் .இன்னிலையில் எம் இருப்பிடத்திற்கான அபாயம் இன்னும் சில காலத்திற்கு தென்படாவிட்டாலும் அவை கண்ணில் படும் கணத்தினின்று அழிவு நிச்சயிக்கப்பட்டுவிடலாம் .அதற்காக , முன்னேற்பாடாக ,அனைவரும் வேறு
இடம் நோக்கி பயணப்பட்டுவிட்டனரா? .என்னால் மட்டும் ஏன் முடியவில்லை? மற்றவர்களைப்போல ஓடிவிட ? மனம் வராதது எதனால் , தனிமை கவ்வும் இக்கணம் வரை ? .
ஆபத்து ,ஆபத்து என பீதியுடன் அவர்கள் கூறும்பொழுது நான் மட்டும் பைத்தியக்காரத்தனம் என கூறியதான நினைவிலிருந்து போக உத்தேசித்தேன் .இருப்பினும் அவ்வாறு கூறியதற்கு எனது இயலாமையும் அதில் உண்டு .எனது மூதாதையர்கள் எமக்கு அதிக தூரம் பயணப்படும்படி எதையும் செய்யவில்லை என்பதுவே முழு உண்மை .எப்படி அவர்கள் மற்றவர்கள் போலில்லாமல் இப்படி ஒரு ஒன்றுக்கும் ஆகாத வழிமுறைகளை தங்களின் ஜீன்களுக்கு பழக்கப்படுத்தினர் என தெரியவில்லை.
தூரத்தே தெரியும் ஒரு உரு ஆங்காங்கே அமர்ந்து அமர்ந்து மெதுவாகவந்துகொண்டிருக்கிறது .அதன் நகர்வு மட்டும் மிகவும் மெதுவாக மெதுவாக நளினமான .மிக நீண்ட தேடலுக்குப்பின் என் கண்ணில் படும் கணம் வரை எனக்குள் எரிமலை என்னை எரித்துக்கொண்டு .
ஓ , மலர்களில் அமர்ந்து அமர்த்து அது . உடனே நான் எனது தோட்டத்தை என் அருகில் அமைத்துக்கொண்டேன் ஆயிரம் கோடி மலர்களுடன் .அதன் பாதையில் என் தோட்டமிருந்தால் அது என் அருகில் வரும் என்ற நம்பிக்கையில் .அதனை என் கண்கள் உருப்பெருக்கிக்கொண்டிருந்தன .அது என்னவாக இருக்கும் என என்னால் உறுதியாக யூகிக்கமுடியவில்லை .அது மட்டும் எனக்கு இப்பொழுது ஆதரவாக இருந்தாலும் அதன் இயக்கம் மட்டும் மிகவும் அதிசயமாகவும் ,அதிர்ச்சியாகவும் இருந்தது .ஒருவேளை என் அழிவிற்கு நெருங்கிவரும் ஆபத்தாக நினைத்த மாத்திரம் இதயம் அதிகம் துடிப்பதாக குடுவையினின்று ஒளி வந்தது.கட்டுப்படுத்த கட்டளையிட்டுவிட்டு எனது மூதாதையர்களின் பழம்பெரும் பொருளங்காடிக்குச்சென்றேன் .

அவ்வுருவைப்பற்றி ஏதாவது சிறிய சமிக்சை கிடைக்கின்றதா என்பதே எனது இப்பொழுதைய வேலை .அவ்வுருவின் பிம்பத்தை எனது மூதாதையரின் நிகழ் பிம்பத்தில் பதித்துவிட்டு அதுபற்றிய விவரங்கள் கேட்டேன் .ஆரம்பத்தில் அதன் பெயர் வண்ண ஒலி வடிவத்திலிருந்து இருக்கின்றது என்ற உண்மை எனக்குப்பட்டது .ஒலி வடிவத்திலும் அதற்கு பிறகு வந்தவர்கள் ஒளி வடிவத்திலும் ,வரிவடிவத்திலும் எழுதிச்சென்றிருக்கின்றனர் .அப்படியென்றால் அவ்வுரு ஒரு ஆதி கால உரு . அதனால் நமக்கு ஆபத்தில்லை .

நமது மூதாதையர்கள் அதைப்பற்றி நல்ல விசயங்களே கூறிவிட்டிருக்கின்றனர்
.ஆனால்,மூதாதையர்களின் நிகழ் பதிவேட்டில் விலங்குகள்,பறவைகள் பற்றி மட்டுமே அதிகப்படியாக இருந்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது . எனது வளர்ச்சிக்கும் என் போன்ற என்பிறரின் வளர்ச்சிக்கும் உள்ள அதீத வித்தியாசம் பற்றி இப்பொழுது எனக்கு அதிகமாக கவலை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஏன் எனது மூதாதையர்கள் மட்டும் பிறர் போல் இல்லாமல் தாங்கள் மட்டும் தனிப்பாணியில் பயணம் செய்திருக்கின்றனர் ? .
எது எப்படி இருப்பினும் என் கண்களுக்கு மட்டும் அவர்கள் அளித்த தொலைதூரம் பார்க்கும் சக்திமட்டும் ஏதோ ஒன்றை இனம் காண உதவியிருக்கின்றது. அதனுடன் எப்படியும் தொடர்புகொள்ளவேண்டும் என எண்ணி அதன் இயங்கும் பக்கம் எனது பார்வையை அதிகம் கூர்மையாக்கினேன் .

சரி,அது நம் இனம் அல்ல .நம்மை தொந்தரவு செய்யும் இனம் இல்லை .பயப்படத்தேவையில்லை என்றிருந்த நிலையில் அட அருகில் வந்துவிட்டது .அழகாக தனது இறக்கைகளை விரித்து விரித்து பூவிற்குள் பூவாய் தாவி எதையோ நினைத்தபடி என்னை நோக்கி .எனது குடுவை தோல்வியை கொடுத்த பொழுதும் அதன் தொடர்பு பாதை இறக்கையை அசைப்பதில் இருக்கலாம் என என் மனம் சொல்லியது .தவறு செய்துவிட்டோம் அதன் பெயரை தெரித்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே ? அதற்குள் அருகில் வந்துவிட்டதே .
மெல்லிய இழைகள் பிரித்து, அழகிய மலர்களின் அடியினின்று ,மெல்லமெல்ல கைகளை விரித்து, செவ்வாய் கிரகத்தினின்று கொட்டப்படும் மஞ்சள் மக்குகளை கடக்க ,புவியினை தாண்ட, சன்னல் ஒளியின் வழியே பயணப்பட ,எத்தனிக்கும் ஏதுமற்ற எனக்கு, துணை பட்டுப்பூச்சியாக அது .நான் யார் ,அது என்ன என அறிய .

.

.

.
Download As PDF

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

மத உணர்வுகளை அவமதித்தலும் இந்திய தண்டனை சட்டமும் -2
சமயச் சுதந்திரம் என்பது எந்த ஒரு சமயம் தொடர்பாக நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கு, வழிபடுவதற்கு, சடங்குகளை நடத்துவதற்கு ஆன சுதந்திரம் ஆகும்.

சர்வதேச மனித உரிமை சாசனம்
உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது என்கிறது .

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 295-A: வாய்மொழியிலான அல்லது எழுத்தாலான சொற்களால்,அல்லது சைகைகளால் ,அல்லது தெரியக்கூடிய உருவ அமைப்புகளால் ,இல்லது வேறுவிதமாக இந்தியக் குடிமக்களின் ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளைத் திடுக்கிடும் வகையில் புண்படுத்தும் பொருட்டு,வேண்டுமென்றே குரோதமான கருத்துடன் ,அந்த வகுப்பினரின் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ நிந்திக்கிற அல்லது நிந்திக்க முயலுகிற எவரொருவருக்கும் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் .

இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 298 :ஒருவருடைய மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் கருத்துடன் ,அவரின் காதில்படும்படி ஒரு சொல்லை உபயோகித்தாலும் அல்லது ஒலியை உண்டாக்கினாலும் அல்லது அவர் பார்க்குப்படியாக சைகை காட்டினாலும் அவர் கண்முன் ஒரு பொருளை வைத்தாலும் குற்றமாகும் . அப்படிச் செய்கிற எவரொருவருக்கும் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என கூறுகிறது .


கருத்துரிமையும் தண்டனையும் -3.
தொடரும் ...

.
.. Download As PDF