செவ்வாய், 24 மார்ச், 2009

கைதிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.

.

எனக்குத் தெரிந்து
சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர்கள் எந்தத்தேர்தலிலும்
ஓட்டுப்போட்டதாகத்தெரியவில்லை. தேர்தலில்
நிற்கஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்
அவர்களின்
ஜனநாயக உரிமையான ஓட்டுப்போடும் உரிமையானது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.
ஒரு வாக்கிற்காக
ஒரு வாக்குச் சாவடி அமைத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தேர்தல் ஆணையம்
லட்சக் கணக்கான நபர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பினை கொடுப்பதில்லை?
அவர்களும் பிரஜைகள் தானே. மற்றவர்களைப் போல் அவர்களுக்கும்
ஓட்டுப்போட உரிமையுள்ளதுதானே. அப்படியிருக்க
ஏன் அந்த வாய்ப்பினை
தேர்தல் ஆணையம் தருவதில்லை?

ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கூறும்
தேர்தல் ஆணையம்
ஓட்டுப்போடதயாராகஇருக்கும்அவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து பிரஜைகளையும் வாக்காளர்களாகச்சேர்க்க
கடும் நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம்,
எத்தனை கைதிகளை இன்றுவரை வாக்காளர்களாகச் சேர்த்துள்ளது. அதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளது.
அனைத்து பிரஜைகளுக்கும்
வாக்கு உத்தரவாதம்
தருவது
தேர்தல் ஆணையத்தின்
தலையான கடமையல்லவா?

வெளிநாட்டில் உள்ளவர்கள்கூட ஓட்டுப்போடும்போது,
உள் நாட்டில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க வைப்பது சரியான ஜனநாயக நெறிமுறையா?

எனவே,
இப்பதிவின் மூலம்
தேர்தல் ஆணையத்திடம்
நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,
இந்த தேர்தலாவது
சிறையில்அடைக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதனை கருத்தில் கொண்டு,
அவர்களுக்கும்
ஓட்டுப்போட வாய்ப்பினை ஏற்படுத்தி,
அவர்களையும்
தேர்தலில் பங்குபெற
வழி வகைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு நண்டு.

ஒரு ஜனநாயக நாட்டில்
தேர்தல் என்பது
அனைத்து தரப்பினரின் எண்ணங்களின்
பிரதிபலிப்பாகவே
இருக்கவேண்டும்.

இம்மண்ணில்
பிறந்த
எந்த குடிமகனுக்கும்
அவனின்
ஜனநாயக உரிமைகள்
எச்சூழலிலும்,
எப்பொழுதும்,
எங்கேனும்,
எவராலும்
பாதிக்கப்பட்டாலும், மறுக்கப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும்,
அதற்காக
ஜனநாயக வாதிகள் ஒருமித்து குரல் கொடுப்பர்
என்பது திண்ணம்.

எனவே,
இப்பதிவினைப் படிக்கும் ஒவ்வொருவரும்
தங்களின்
ஜனநாயக குரலினை
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பீர்கள்
என்ற உறுதியில்
நண்டு.

.

Download As PDF

செவ்வாய், 17 மார்ச், 2009

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.

ஏன் நிற்கக்கூடாது .
அரசியலமைப்பில்
கொடுக்கப்பட்ட உரிமைகள்
எதற்காகவும் ,எப்பொழுதும் ,
யாருக்கும் ,யாரும் தடுக்கக்கூடாது .
இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .
அது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
அதுதவிர்த்து
மற்ற சமுக குற்றங்களை காரணம் காட்டக்கூடாது .
ஆனால் ,
அவர் குற்றம் செய்தவர் .
சமுகத்திற்கு இவர் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் .
எனவே ,
இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே
தேர்தல் ஆணையம் தான் ஏற்படுத்தவேண்டும் .
அது அவர்களின் கடமை.
அதைத்தவிர்த்து
குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.
யார்,யார் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம் யார்,யாருக்கு
ஓட்டுப்போடக்கூடாது என்றும் மக்களுக்கு போதிக்கவேண்டும் ,
கூற வேண்டும்.
இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .
மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால்
எந்தக்கட்சியும்
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது
தவிர்க்கும் .
இது தவிர்த்து குற்றப்பிண்ணனியுள்ளவர்களுடைய தேர்தலில் நிற்கும் ஜனநாயக உரிமையை தேர்தல்
ஆணையம் தனது கடமையினின்று தவறி ,
தடுக்கக்கூடாது .
அவர்கள் நிற்பது சரிதான் ,
அவர்களை தேர்ந்தெடுப்பதுதான்
தவறு .
தேர்ந்தெடுக்க வைப்பது தான்தவறு .

.
Download As PDF