This Report for the year ended March 2010 has
been prepared for submission to the President
under Article 151 of the Constitution என்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் தணிக்கை குழு அறிக்கை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இங்கு நாம் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விசயம் எது எனில் Article 151 of the Constitution . நாம் முதலில் இதனை விரிவாக பார்ப்போம் .
Article 148 ன் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் இந்திய தலைமைத்தணிக்கையாளர் பதவி மிகவும் அதிகாரம் நிறைந்ததும் ,பொறுப்பு மிகவும் அதிகம் கொண்டதுமான ஒரு பதவி .அதனால் தான் இவரை எளிதில் பதவி நீக்கம் செய்யமுடியாத படி அரசியல் சாசனம் எழுதப்பட்டது . ஒரு தேர்தல் ஆணையர் , ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதோ அத்தகைய நடைமுறைகள் கடைப்பிடித்து தான் இவரை பதவி நீக்கம் செய்ய முடியும் .நாடாளுமன்றத்த கூட்டி 2 சபையிலும் விவாதம் செய்து 3ல் 2 பங்குக்கு மேல் வாக்களித்து பிறகு குடியரசுத்தலைவரால் நீக்கப்படுவார் .அவ்வளவு முக்கியமான பொறுப்புள்ள பதவி .
இவரின் வேலை என்னானா .மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் தணிக்கை செய்யவார் .Article 150 ன் படி மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகள் அனைத்தும் ,தலைமைத்தணிக்கையாளரைக் கலந்தாலோசித்துக் குடியரசுத்தலைவர் வகுத்துக்கொடுக்கும் படிவத்தில் வைத்து வரப்பட்டு அதனை Article 151 ன் படி குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தாக்கல் செய்யவேண்டும் .
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில் ஏதாவது முறைகேடுகளோ அல்லது தவறுகளே இருந்தால் அவைகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின் சம்மந்தப்பட்ட துறையினரிடமும் ,அதற்கு பொருப்பு வகிக்கும் அமைச்சரிடமும் விளக்கம் கேட்டு முறைகோடோ ,தவறோ இருந்தால் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க நாடாளுமன்றம் தகுந்த ஆவன செய்யவேண்டும் .அதில் பிரச்சனைக்குறிய அமைச்சர் ராஜினமா மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும் .
இது முழுக்க முழுக்க Article 77 கூறும் இந்திய அரசின் அலுவலக செயல்பாடுகளில் வரும் .Article 77(4) இந்திய அரசின் அலுவல்களைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தம் முன்னர் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேட்கும் அதிகாரம் ,எந்த நீதிமன்றத்துக்கும் மற்றும் வேறு எவருக்கும் கிடையாது என்கிறது .
இப்ப ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு வருவோம் ...
அரசியல் சாசன நெறிமுறைகள் இதில் கடைப்பிடிக்கப்படவேயில்லை என்பது தான் எனது வாதமே .
முதலில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் இது சம்பந்தமாக இந்திய தலைமைத்தணிக்கையாளர் வருடாவருடம் குடியரசுத்தலைவரிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும் .
இரண்டாவது அவைகள் நாடாளுமன்றத்தில் உடனே தாக்கல் செய்யப்பட்டு விவாத்த்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்
அதனை ஏன் 2003-04 இருந்து செய்யவில்லை .
நாட்டிற்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது தானே அவரின் அரசியல் சாசனப்படியான கடமை .அதற்குத்தானே அவ்வளவு கவுரவம் .எந்த நிமிடம் நாட்டிற்கு இழப்பு ஏற்படுகிறதோ அந்த நிமிடமே அவர் செயல் படவேண்டியது அவரின் ஜனநாயகப்பொறுப்பள்ளவா ? நாட்டை இழப்பின்றி கொண்டு செல்லவேண்டியது அவரின் அரசியல் சாசன கடமையல்லவா ?.
அதை செய்யாமல் விட்டதால் தானே இவ்வளவு இழப்பு
அதை விடுத்து 2010 ல் ராசா மீது குற்றம் சுமத்துவது எவ்வாறு ஏற்புடையது என்று எனக்குத்தெரியவில்லை.
உண்மையில் இந்த விசயத்தில் ஜனநாயகத்தூண்கள் அனைத்தும் இந்திய ஜனநாயகத்தையும் ,நமது அரசியலமைப்புச்சட்டத்தையும் கேலி செய்து அசிங்கப்படுத்தி வருகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது .
முறையான நடைமுறைகள் பின்பற்றமல் ஜனநாயக்க்கடமையை செய்யாமல் இழப்பு ஏற்பட காரணமாக இருந்துள்ளது இந்திய தணிக்கைத்துறை .அதனை சரிப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் நாடாளுமன்றத்தை முடக்கி... வேதனையாக உள்ளது .இது நிதி சம்பந்தப்பட்ட விசயம் பொறுப்புடன் அரசியல் வாதிகள் நடந்துகொள்ளவேண்டும் .
அல்லாது போனால் இதுவே முன்னுதரணமாகி ...
நஷ்டம் அரசியல்வாதிகளுக்கு அல்ல நாட்டிற்குத்தான் .
இங்கு அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது ஆனால் அது பற்றிய அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே எனது கேள்வியாக இப்பொழுது இருக்கிறது.
முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாத்தால் தான் இந்த இடுகை .
அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது .
முறையான நடைமுறையின்றி யாரும் தண்டிக்கப்படக்கூடாது .
. Download As PDF
Tweet |
|